வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ஒருவகை குரங்கின் வம்சாவழி எப்படி மனிதனாக மாறியது இதில் இயற்கை தேர்வின் பங்கு என்ன ? (படிமவளர்ச்சி) -9

தோழர்களே விலங்கியல் குறித்த ஒன்பதாவது பதிவு


பெருங்கடல்கள் கடல்வாழ் உயிரிகளும் ,பனிப்பிரதேசங்களில் வாழும் விலங்குகள் உருவாக பனிப்பிரதேசங்களும், பாலைவன உயிர்கள் உருவாக காரணமான பாலவனங்களும்நமக்கு இயற்கை தேர்வு முறை இருப்பதை உணர்த்துகின்றன இதுவே டார்வினின் இயற்கை தேர்வு குறித்த அவரின் கருத்தின் அடிப்படையாகும்
ஒருவகை குரங்கின் வம்சாவழி எப்படி மனிதனாக மாறியது இதில் இயற்கை தேர்வின் பங்கு என்ன ?
இதுவரை மரங்களில் வாழ்ந்த குரங்குகள் தரைக்கு வந்து வேர்கள் கிழங்குகள் பூச்சி புழுக்களை தோண்டி உண்ண ஆரம்பித்ததால் அவை முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தி படிப்படியாக ம் இன்றைய மனிதனாக மாறியது என்பதே பொதுவாக அனைவரும் கூறும் கருத்து
சரி காடுகளில் மரங்களில் வாழ்ந்த குரங்குகள் ஏன் தரைக்கு வர வேண்டும் இதில் இயற்கை தேர்வின்பங்கு என்ன என்பது குறித்து யாரும் ஒரு தெளிவானமுடிவை முன் வைக்க வில்லை.
ஆனால் குரங்கு மனிதனாக மாறிய அம்சத்தில் இயற்கை தேர்வின் பாத்திரம் சிறப்பாக பங்காற்றி இருக்கிறது என்பதை நாம் மனிதக்குரங்கில் இருந்து மனிதன் உருவான காலத்தை ஆய்வு செய்தால் அதை கண்டு பிடித்து விடலாம்
பொதுவாக நாம் பாலை வனங்களை பற்றி ஓரளவுதெரிந்து வைத்து இருக்கிறோம். சகாரா,கோபி, தார், நபீப்,அர்சோனா, அரேபிய பாலவனங்களை பற்றி எல்லாம் ஓரளவு நமக்கு தெரியும்
ஆனால் இப்பாலைவனங்கள் எப்படி வந்தன இவ்வளவு பெரிய மணல் மேடுகள் எப்படி உருவாகின என நாம் யோசிக்க மாட்டோம் யோசித்தாலும் விடை தெரியாது
சகாரா பாலவனம் ஏறத்தாழ ஒரு கோடி சதுர கிலோ மீட்டரை கொண்டதாகும் உலகின் பாலைவங்கள் அனைத்திலும் இதுதான் பெரியது
சமீபத்திய ஆய்வுகள் இப்பாலைவனம் ஒருகாலத்தில் கடலாக இருந்ததையும் அதில் ஆறு அடி நீளமுள்ள கேட் பிஸ் எனும் கெழுத்தி மீன்களும் ,35 அடி நீளமுள்ள கடல் பாம்புகளும் இன்னும்பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கிடைத்து இருக்கிறது
சுமார் ஒரு கோடி ஆண்டுகளில் இருந்து 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இக்கடல் பரப்பு கண்ட திட்ட நகர்வுகளினால் மாற்றம் அடைந்து பாலவனங்களாக மாறியதை சமிபத்திய ஆய்வுகள் உறுதி செய்கிறது
இந்த மாற்றங்கள் சகாராவில் மட்டும் அல்லாமல் அரேபிய சீன பகுதிகளிலும் பெரும் சுற்று சூழல் மாற்றங்களை ஏற்படுத்தியது
இக்காலத்தில் தாவரங்கள் விலங்குகள் போன்றவை பழைய முறையில் இல்லாமல் பெரும் சிக்கல்களை சந்தித்தன
கடல்கள் பாலையாகவும் , நிலப்பரப்புக்கள் கடலாகவும் , காடுகள் இருந்த இடம் சமவெளிகளாவும் மாறியது
இதமாக ,குளிராக இருந்த பகுதிகள் வெப்பமாகவும் வெப்பமான புவியியல் பகுதிகளில் குளிருமாக மாறியது
இந்த சூழல் மாற்றம்தான் பழைய உலக விலங்குகளை புதிதாக மாற வேண்டும் அல்லது அழிய வேண்டும் எனும் புறநிலை நிர்பந்தம் ஏற்பட்ட காலத்தில்தான் சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் முதல் மனிதனின் மூதாதை உருவானான்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஆப்பிரிக்காவில் இருந்து நவீன மனிதன் உலகம் எங்கும் பரவ ஆரம்பித்தான் எனும் பாதி உண்மையை கொண்ட கதைகளை திருத்தி நான் ஒரு புதிய கதையை உங்கள் முன் வைப்பேன்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக