கோள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 பிப்ரவரி, 2022

உயிர்கள் வாழத் தகுதியான கோள் கண்டுபிடிப்பு


லண்டன், பிப். 14-- உயிர்கள் வாழக் கூடிய வேறு, கோள்கள் இருக் கின்றனவா என்று விஞ்ஞானி கள் தொடர்ந்து ஆராய்ச்சி களை மேற்கொண்டு வருகின்ற னர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தாக விஞ்ஞானிகள் தெரிவித் தனர்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட் டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

“ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ் நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப் படுவது இதுவே முதல் முறை யாகும்.

இந்தக் கோள் நட்சத்திரத் தில் உயிர்கள் வாழக் கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக் காது.

பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 60 மடங்கு குறைவாகும்.

உயிர்கள் வாழக்கூடிய மண் டலம் என்பது ஒரு நட்சத் திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழ் நிலையை கொண்டிருக்கும். எனவே உயிர்கள் வாழ இது உதவும்.

நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள கோள் இருக்கும் மண்ட லம் உயிர்கள் வாழ மிக சரியாக இருக்கும் பகுதியில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஜேபரிகி கூறும்போது, “இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது” என்றார் பேராசிரியர் ஜேபரிகி.

வியாழன், 5 மார்ச், 2020

மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு

பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 2-18  என்றழைக்கபடும் எக்சோபிளானட் கிரகமானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது.

இது பூமியை விட கணிசத்தில் பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது. இதன் ஆரம் 2.6 மடங்கு மற்றும் பூமியின் நிறை 8.6 மடங்கு ஆகும். 2-18 கிரகமானது 2-18 என்ற சிவப்பு விண்மீனை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிப்பகுதி நிலை களும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண் டறிந்துள்ளனர்.

எக்சோபிளானட் கிரகத்தில் ஹைட்ரஜன் உறைகளின் தடிமன் மற்றும் ஆழத்தினை கண்டறிந்ததில் அதன் அதிகபட்ச அளவு 6 சதவீதமாகும் என்று உறுதி செய்துள்ளனர். வளிமண்டலத்தில் கணிசமான அளவு  நீராவியுடன் ஹைட்ரஜன் அதிகம் இருப்பதால் அம்மோனியா,மீத்தேன் போன்ற வேதிப்பொருட்களின் அளவு குறைவாகவே இருக்கும்.

இதற்கு உயிரியல் செயல்பாடுகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர். வளிமண்டலத்தின் கலவை மற்றும் கட்டமைப்பை விரிவுபடுத்தி கட்டுப்படுத்து வதற்கு வளிமண்டல கலவை, அளவு மற்றும் நிறையை அவதானித்து வந்துள்ளனர்.

எண் மாடலிங் மற்றும் புள்ளிவிவர முறைகளை பயன்படுத்தி வளிமண்டலத்தின் உள் அமைப்பு மற்றும் வெப்ப இயக்கவியலை கட்டுபடுத்தினர்.

எக்சோபிளானட் 2-18 கிரகமானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு 5 .3.20