சனி, 26 அக்டோபர், 2019

860 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் மீன்!

அமேசான் காடு ஒரு பக்கம் எரிந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குறைவில்லை. அங்கிருக்கும் பல்லுயிர்கள் பற்றிய வியப்புகள் அறிவியலுக்கே எட்டாக்கனியாக இருந்து வருகிறது. அப்படியான வியப்பும்தான் இது.

ஆம்; இப்போது இரண்டு வகையிலான விலாங்கு மீன்களைக் கண்டு பிடித்துள்ளனர். அதில் ஒன்று 860 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் திறன் வாய்ந்தது. உலகிலேயே அதிகளவில் மின்சாரத்தை வெளியிடும் உயிரினம் இதுதான். இதன் டி.என்.ஏ.வை ஆராய்ச்சி செய்ததில், சுமார் 70 லட்சம் ஆண்டுகளாக இந்த மீன் பூமியில் வாழ்ந்து வரலாம் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவர் உயிரியல் வல்லுநரான சி டேவிட் டே சண்டானா. சில வருங்களுக்கு முன் மின்சாரத்தை வெளியிடும் விலாங்கு மீனை அடையாளம் கண்டனர். ஆனால், அதன் திறன் 650 வோல்ட்ஸ் மட்டுமே.

- உண்மை இதழ் 16- 31 .10 .19

சனி, 19 அக்டோபர், 2019

மூன்று வேதியியலாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு



ஸ்டாக்ஹோம்,அக்.10, வேதியியலுக்கான நோபல் பரிசு, இந்தாண்டு மூன்று பேருக்கு அறிவிக் கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள் ளது. உலகின் மிக உயரிய விருதுகளில் நோபல் பரிசுக்கான, இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நாட்களில் மருத்துவம், இயற்பியலுக்கான விரு துகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் விருதை தேர்வுக்குழு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவித்தது.

இவ்விருது, வேதியியல் பேராசிரி யர்களான அமெரிக்காவின் டெக் சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்டெனப், நியூயார்க் பல்கலைக் கழகத்தின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் மிஜோ பல்கலைக்கழகத் தின் அகிரா யோசினோ ஆகியோ ருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்றையக் காலக்கட்டத்தில் செல்போன் முதல் எலக்ட்ரிக் வாக னங்கள் வரை அனைத்து எலக்ட் ரானிக் சாதனங்களையும் நீடித்து செயல்பட வைக்கும் லித்தியம் அயன்பேட்டரிகளை மேம்படுத்திய வர்கள் இவர்கள்தான்.

1970ஆம் ஆண்டு கச்சா எண் ணெய் தட்டுப்பாடு நிலவிய சமயத் தில், விட்டிங்ஹாம் முதல் முதலில் பெரிய அளவிலான லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கினார். அவருடன் ஜான் குட்டெனப், யோசினோ ஆகியோர் இணைந்து சிறிய வடிவிலான செயல்திறன் மிகுந்த லித்தியம் பேட்டரிகளை மேம்படுத்தினர். இவர்களின் பங் களிப்பை கவுரவிக்கும் வகையில் டிசம்பர் 10ஆம் தேதி வேதியிய லுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அப்போது மூவருக்கும் தங்கப்பதக்கத்துடன், சுமார் ரூ.6.5 கோடி பகிர்ந்தளிக்கப்படும்.

- விடுதலை நாளேடு 10 10 19

இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் மூவர் தேர்வு



ஸ்டாக்ஹோம், அக்.10 2019-ஆம் ஆண்டு இயற்பிய லுக்கான நோபல் பரிசுக்கு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகி யோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பவுதிக அண்டவியல் கண்டுபிடிப் புகளூக்காக ஜேம்ஸ் பீபிள்ஸ் என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங் கப்பட, மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகிய இருவருக்கும் நம் சூரியக்குடும்பத்துக்கு வெளியே சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிவரும் கோள்கள் பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மைக்கேல் மெயர், திதியர் குவெ லோஸ் இருவரும் வானியல் ஆய்வில் புரட்சி செய்துள்ளனர். இவர்களது ஆய்வு மூலம் பால்வெளியில் நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே சுமார் 4000 கோள்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இன் னும் விசித்திர உலகங்கள், நம்ப முடி யாத அளவுகளிலும் வடிவங்களிலும் நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ளன இவையும் கண்டு பிடிப்புக் குரியவை என்பதை இவர்கள் நிரூபித் தனர். பிரபஞ்சத்தின் புதிரான தோற் றம் பற்றிய அதைவிடப் புதிரான கோட்பாடுகளின் வரலாற்றில் ஜேம்ஸ் பீபிள்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற் கொண்டு வரும் ஆய்வுகள் பெருவெ டிப்புக் கோட்பாடு முதல் இன்றைய கோட்பாடுகள் வரை நமது நவீனப் புரிதல்களின் அடிப்படைகளை வழங் கும் பேராய்வு ஆகும்.

அதாவது இந்த மூவரது ஆய்வும் பிரபஞ்சம் பற்றிய புரிதலையும் அதில் மனிதன், பூமியின் இடம்பற்றிய புரிதலையும் மேலும் விரிவும் ஆழமும் படுத்துவதாகும். பால்வெளி மண்டலங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் ஜேம்ஸ் பீபிள்ஸ் ஸ்வீடன் அகாடெமிக்கு அளித்த நேர்காணலில், “எவ்வளவு கண்டுபிடிப்பு மேற்கொண் டாலும் டார்க் மேட்டர், டார்க் எனெர்ஜி பற்றி நமக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இன்னும் நிறைய கேள்விகள் உள்ளது, பிரபஞ்சத்தின் இந்த ‘டார்க் மேட்டர்’ என்பது என்ன? என்ற கேள்வி இன் னமும் இருந்தே வருகிறது” என்றார்.

மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப் புள்ளதா என்ற கேள்விக்கு பீபிள்ஸ் கூறும்போது, “பூவுலகில் இருப்பது போன்ற உயிரினமா என்பது குறித்து எனக்கு அய்யமாகவே உள்ளது, ரசா£ன விஞ்ஞானிகள் அந்த அய்யத்தைப் போக்க வாய்ப்புள்ளது, அங்கு உயிரி னங்கள் இருந்தாலும் நாம் ஒருக்கா லும் அதைப் பார்க்க முடியாது என்பதே உண்மை” என்றார்.

- விடுதலை நாளேடு 10 10 19

வியாழன், 10 அக்டோபர், 2019

சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு



பாரீஸ், அக். 9- சூரியக் குடும் பத்தைச் சேர்ந்த சனி கிரகத் தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்து டன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண் ணிக்கை 82-ஆக உயர்ந்துள் ளது. இதையடுத்து, அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபி டரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.

இதுகுறித்து பிரான்சி லுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களின் அமைப் பில் விஞ்ஞானிகள் சமர்ப் பித்துள்ள அறிக்கையில், புதிதாகக் கண்டறியப்பட்ட 1 நிலா சனி கிரகத்தைச் சுற்றி வர 3 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 9.10. 19

வியாழன், 3 அக்டோபர், 2019

பறக்கும் டைனோசர்!

பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சீனக் காடுகளில் வேட்டையாடும் பிராணி ஒன்று வாழ்ந்து வந்தது.

விநோதமான, சிறிய உருவமுள்ள அந்த உயிரினத்துக்கு வவ்வாலைப் போல பறக்கும் திறன் உண்டு!

ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்துக்கு அதனால் சுலபமாகத் தாண்ட முடியும். சமீபத்தில் அந்தப் பிராணியின் புராதன எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த எலும்புக்கூடுகள் டைனோசரின் குடும்பத் தைச் சேர்ந்தது என்று தெரிய வந்திருக்கிறது.

சுமார் 20 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிற டைனோ சர்களின் முதல் எலும்புக்கூடே பத்தொன் பதாம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப் பட்டது. தவிர, டைனோசர்களில் ஆயிரத் துக்கு மேற் பட்ட வகைகள் இருந்திருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் இது என்று விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

 - விடுதலை நாளேடு, 3.10.19

 


பருவநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்



கடந்த வாரம் காலநிலை எப்படியிருந்தது என்று அறிய வேண்டுமானால் கூகுளில் தட்டினால் போதும். கடந்த மாதம், கடந்த ஆண்டும் இந்த தேதி காலநிலையைக் கூட கூகுள் தேடிக்கண்டுபிடித்துத் தந்துவிடும்.

ஆனால், 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் கால நிலை எப்படியிருந்தது என்பதை அறிய கூகுளால் முடியாது.  மரத்தால் முடியும். ஆம்; 800 ஆண்டுகளாக இங்கிலாந்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் ஓக் மரம் பருவநிலை எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதன் வளையங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலமாக பருவநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை துல்லியமாக சொல்லிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆராய்ச்சி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த போராடும் போ ராளிகள் மத்தியில் பெரும் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. இந்த மரம் எனக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத் திருக்கிறது... என்கின்றனர் ஆய்வாளர்கள்.

- விடுதலை நாளேடு, 3.10.19