வியாழன், 22 பிப்ரவரி, 2018

மனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை


முதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மய்யத்தில் உருவாக்கப்பட்டுள்ள தாக இங்கிலாந் திலுள்ள எடின்பர்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வழிமுறையானது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் கருவுறுதலை பாது காப்பதற்கான முறையாக இருக்குமென்று இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இதுவரை அறிவியலுலகம் விடைகாண முடியாத கேள்வியாக இருக்கும், மனித கரு முட்டை வளர்ச்சி குறித்து அறிவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பை மிகப் பெரிய உற்சாக மளிக்கக்கூடிய முன்னேற்றமாக பாராட்டும் வல் லுநர்கள், இம்முறை மருத்துவரீதியாக பயன் பாட்டுக்கு வருவதற்கு முன்னர் இன்னும் பலகட்ட ஆராய்ச்சிகளை கடக்க வேண்டியுள்ள தாக கூறியுள்ளனர்.

பெண்கள் பிறக்கும்போதே அவர்களின் கருப்பையில் முதிர்ச்சியடையாத கருமுட்டை களுடன் பிறந்தாலும் அவர்கள் பூப்படைந்த பின்னரே அவை வளர்ச்சியுற ஆரம்பிக்கும்.

இந்த முயற்சியில் முற்றிலும் வெற்றியடை வதற்கு பல பத்தாண்டுகள் ஆகுமென்றாலும், இப்போது கருப்பைக்கு வெளியே கருமுட் டையை வளர்ச்சியுற செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இதை செய்வதற்கு ஆக்சிஜன் அளவுகள், ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் புரதங்களுடன் கருமுட்டைகளை வளர்ச்சியுறச் செய்யும் செயல்பாட்டை நிர்வகிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சிறந்த ஆய்வக கட்டுமானம் தேவைப்படுகிறது.
இந்த ஆராய்ச்சிமுறை பயன்பாட்டளவில் சாத்தியமென்பதை விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டியிருந்தாலும், “மாலிகுலர் ஹியூமன் ரீபுருடக்சன்” என்ற சஞ்சிகையில் வெளியாகி யுள்ள கட்டுரையின் அணுகுமுறையை செம் மைப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது.

வெறும் பத்து சதவீத முட்டைகளே வளர்ச்சி யுறுதல் என்ற நிலையை எட்டுவது என்பது மிகவும் திறனற்ற விடயமாக பார்க்கப்படுகிறது.

அந்த முட்டைகள் கருவுற்றிருக்கவில்லை என்பதால் அவை எவ்வளவு காலம் பயன் படுத்தத்தக்கதாக இருக்கும் என்பது நிச்சயமற்றது.

“மனிதர்களின் திசுக்களில் இதுபோன்ற நிலையை எட்டுவது சாத்தியமானது”  என்ற கொள்கைக்கான ஆதாரத்தை அடைந்தது மிகவும் உற்சாகமூட்டுவதாக இந்த ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரான எவ்லின் டெல்பர் தெரிவித்தார்.

“இதை மென்மேலும் மேம்படுத்துவதற்கு இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகள் தேவைப் படுகிறது என்றாலும், மனித கருமுட்டை வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொள்வதில் இந்த ஆராய்ச்சி ஒரு மிகப் பெரிய மைல்கல்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

- விடுதலை நாளேடு, 22.2.18

வியாழன், 1 பிப்ரவரி, 2018

குளோனிங் முறையில் குரங்குகள்!


விஞ்ஞானிகள் சாதனைசீன விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டுக்குட்டி எப்படி குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டதோ, அதே முறையில் தற்போது குரங்குக்குட்டிகளை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம், மனிதனை குளோனிங் முறையில் உருவாக்கும் முயற்சியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள மக்காக் வகை குரங்குகளுக்கு, ஷோங், ஷோங் மற்றும் ஹுவா ஹுவா என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 6 வாரங்களுக்கு முன்பு பிறந்த இந்த இரண்டு குட்டிகளும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன. இந்த சோதனை மருத்துவத்துறையிலும் சீனாவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும் என்றும் அந்நாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

-விடுதலை, 1.2.18