மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜூன், 2019

அறிவியல் இயக்க மேனாள் தலைவர் மறைவு



வேலூர், ஜூன் 16- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் அறிவொளி இயக்கம், தமிழ் நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கத் தின் மாநில மாவட்ட நிர் வாகியாக செயலாற்றியவர் முகில் பரமானந்தம் அவர் கள்.  பொய்கை சடையமுத்து வாத்தியார் அவர்களின் மக னும், ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டப்பமைப்பின் கவுரவத் தலைவருமாவார். இராணிப் பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முகில் பரமானந்தம்.

அன்னார் 14.06.2019 அன்று பிற்பகல் சி.எம்.சி மருத்துவமனையில் மறைந் தார். அன்னாரின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்துவற்காக 16.06.2019 அன்று காலை 11 மணிவரை வேலூர் அடுத்த பொய்கை எம்.சி.சாலையில் உள்ள மனோன்மணியம் இலவச இரவு பள்ளி, 3/160, வி.சி. சாலை, பொய்கை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

உடற் கொடை


16.06.2019 அன்று பிற்பகல் 12 மணியளவில் அன்னாரின் உடல் வேலூர் சி.எம்.சி. மருத் துவமனைக்கு கொடையாக குடும்பத்தினர் வழங்கினர்.

கவிஞர்,மக்களிசை பாடகர்,எழுத்தாளர், நாடக வியலாளர், வீதிநாடக கலை ஞர்,நாட்டுப்புற பாடகர், இசையமைப்பாளர், கலைப் பயண வித்தகர், அறிவியல் இயக்க,அறிவொளி இயக்க, தமுஎச இயக்க முன்னோடி, மக்களோடு மக்களாக வாழ்ந் தவர், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்,சிறந்த நிர்வா கத்திறனுடையவர், ஆளு மைத்திறனாளர், இலக்கிய வாதி,சமூகப்போராளி இப்படி பன்முகத்திறனுடைய கலைஞனின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப் பாகும். அவரோடு இணைந்து பழகிய நினைவுகள் காலத் தால் அழியாதவை.

ஆழ்ந்த இரங்கலை வருத் தத்துடன் நேரில் பதிவு செய் தவர்கள் விவரம் வருமாறு:

வேலூர் மாவட்ட ஆட் சியரின் நேர்முக உதவியாளர் எம்.சிலுப்பன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க செயலாளர் செ.நா. ஜனார்த்தனன், செயற்குழு உறுப்பினர் எம்.பிரபு, தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாநில பொருளாளர் கு.செந்தமிழ் செல்வன், மாநில செயலாளர் எஸ்.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் க.பூபாலன், ந.கருணாநிதி, அ.கலைநேசன், பி.ராஜேந்திரன், சி.குண சேகரன், எ.முத்துகிருஷ்ணன், பி.ராமு, கே.விஸ்வநாதன், ச.குமரன்,  தி. சாந்தி மனோகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல் வன், மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பெல் தொழி லாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் உள்ளிட்ட ஏராளமா னோர் மரியாதை செலுத் தினர்.

-  விடுதலை நாளேடு, 16.6.19

ஞாயிறு, 18 மார்ச், 2018

அந்தோ, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாரே!



உலகம் போற்றும் வியத்தகு விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) அவர்கள் இன்று (14.3.2018) காலமானார் என்ற செய்தி அறிவியல் உலகத்திற்கும், அறிவு உலகத்தவர்களுக்கும் மிகவும் துன்பம் தரும் பெரும் செய்தியாகும்!

அவரது வாழ்வே பல விந்தைகளை உள்ளடக்கிய வாழ்க்கையாகும்!

சில மாதங்கள்கூட உயிருடன் இருக்கமாட்டார் என்று மருத்துவர்களால் கூறப்பட்ட அவரது வாழ்வு, இவ்வளவு காலம்வரை நீண்டதனால் மனித குலம், அறிவியல் ஆராய்ச்சித் துறை பெற்ற நன்மைகள் - சமூக நலன்கள் ஏராளம்! ஏராளம்!!

அத்துணை ஆபத்தான ‘விசித்திர' நோய் பாதிப் பினால் முடக்கப்பட்டு, சக்கர நாற்காலி வாழ்வினராகி, மணமுடித்து, குழந்தை பெற்ற வாழ்க்கையை வாழ்ந் தவர். அறிவியல் - மருத்துவவியலின் வியக்கத்தகுந்த வளர்ச்சியினால் கிடைத்த விழுமிய பயன் எத்த கையது என்பதை உலகுக்கு நீண்ட அவரது வாழ்வும், ஆயுளும் புகட்டின!

உலகம் என்பது படைக்கப்பட்டதல்ல என்ற அறிவியல் கருத்தின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள்மூலம் நிகழ்ந்ததன் விளைவு என்று எழுதிய அவர், முதலில் பெருவெடிப்பு (Big Bang) என்ற தத்துவத்தின் அடிப்படையில் உலகம் வளர்ந்து கிளைத்தது என்று கூறி,  பிறகு ‘கடவுள்' என்பதே கற்பனை என்பதை நான் முழுமையாக ஏற்பதோடு, கடவுள் நம்பிக்கை அறிவியலின் அடிப்படையில் ஆதாரமற்றது என்று தானும், மற்றொரு ஆய்வாளரும் இணைந்து எழுதிய ‘தி கிராண்ட் டிசைன்'  (The Grand Design)  என்ற நூலில் தெளிவாக எழுதினார்.

76 வயது வரை வாழ்ந்த அவரது வாழ்வு, எண் ணற்ற ஆய்வுகள் உலகுக்கும், எதிர்கால அறிவியல் தளத்திற்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படக் கூடியவை; அவர் தனது பாரம்பரிய ஆய்வுச் செல் வங்களை விட்டுவிட்டு  (Legacy)  விடை பெற்றுள்ளார்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தின ருக்கும், அறிவியல் உலகக் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

கி.வீரமணி
தலைவர் ,    திராவிடர் கழகம்.

சென்னை 
14.3.2018

-விடுதலை நாளேடு, 14.3.18