பாறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 செப்டம்பர், 2019

படிவுப்பாறையும் புதை படிமங்களும்

இனிபடிவப்பாறைகளைப் பற்றி ‌காண்போம்#
சில சமயங்களில் வெள்ளக் காலங்களில் நதிகள் அடித்து வரும் பெருமணல்,சிறுமணல், வண்டல் மண் ஆகியன எடைக்கேற்ப படிப்படியாக கீழேபடியும் பொழுது சில உயிரினங்கள் உயிருடனோ இறந்தபிறகோ இத்துகள்களுக்கிடையே அகப்பட்டு கொள்கின்றன.
அவற்றின்‌மீது மண்துகள்கள் படிவதால் எடை கூடுதலாகிறது.
எடைகூடுவதால் அழுத்தம் அதிகரிக்கின்றது.வெப்பமும் அதிகரிக்கிறது‌
வேதியல் மாற்றத்தால் ஒருபொருள் பண்பில் முற்றிலும் வேறுபட்ட பொருளாகிறது.(விறகை எரித்தால் கிடைப்பது கரி.கரிகாகும் விறகுக்கும் பெரும் வேறுபாடு).
மண்துகள்கள் பாறைகளாகின்றன.
இப்பாறைக்கு படிவப்பாறைகள்(Sedimentary) என்று பெயர்.

இந்நிலையில் இப்பாதையில் சிக்குண்ட உயிரினங்களின் உடல்களும் வேதியல் மாற்றத்திற்கும் மாகி பாறைகளில் புதைபடிவங்களாக ஆகின்றன.

மண்ணுக்குள் புதையுண்டு மடிந்து போகும் உயிரினங்கள் அனைத்தும் புதைபடிவங்களாக ஆகிவிடுவதில்லை.
சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் இடங்களில் தான் புதைபடிவங்கள் உருவாகும்.மற்ற இடங்களில் உருவாக.

உயிரினங்களின் கடினப்பாகமாகிய எலும்பு,பல்,ஓடு,மரக்கிளை போன்றவைதான் புதைபடிவங்களாகும்‌.எளிய உயிரினங்கள் புதைபடிவங்களாவது அரிது‌.

1950ஆம் ஆண்டு கணக்கில், அறிவியலாளர்கள் வட அமெரிக்காவின் கொலராடோ நதிப்பகுதியில் பேக்டீரியா,ஆல்கோ போன்றவற்றின் புதைபடிவங்களைத் தோண்டி எடுத்துள்ளனர்.

300கோடிஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பேக்டீரியா,ஆல்கோ ஆகியன போன்ற நுண்ணுயிர்களின் புதைபடிவங்களை(Microscopic Fossils) ஆஸ்திரேலியா,தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்து 60கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒட்டுடலி வகையை சேர்ந்த டிரிலோபைட் (Trilobite) என்னும் கடல்வாழ் உயிரியின் புதைபடிவங்களும் கிடைத்துள்ளன.
ஆய்வின்படி 300கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பேக்டீரியா,ஆல்கே போன்ற எளிய உயிரினங்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும்.

பாறைகளின்வயது#
பூமியிலுள்ள பாறைகளின் அடுக்குகளை நிலவியல் வல்லுநர்கள் பல பிரிவுகளாக பிரித்து அந்தந்த அடுக்குகளின் வயதினை துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர்‌
பூமியின் ஓட்டுப்பகுதியின் அடிப்பகுதியில் காணப்படும் அடுக்குதான் மிகவும் தொன்மையான அடுக்காகும்.முதலில் உண்டான அடுக்காகும்.
அடிஅடுக்கிலிருந்து மேல் நோக்கிப் படிப்படியாக வயதுதான் மிகவும் குறைவு.‌.
மேல்அடுக்குதான் அண்மைக்காலத்தில் தோன்றியதாகும்,இளமையான தாகும்.
அண்மைக்காலத்தில் என்றால் 10ஆண்டுகளுக்கு முன்னர் என்றோ கணக்கிட்டு விடல் கூடாது.
பலகோடி ஆண்டு கணக்கில்தான் கணக்கியல் வேண்டும்.

(அடுத்து பாறைகளின் வயதினைக் கணக்கிடல்).
தொடரும்.........
-  ராஜமோகன் முகநூல் பதிவு, 30.8.19

பாறைகளின் வயதினைக் கணக்கிடல்

பாறைகளின் வயதினைக் கணக்கிடல்#
எலிமெண்ட்(Element)மூலகம்,தனிமம்,என்பது ஒருவகை அணுக்களால் ஆனது.
ஒரு தனிமத்தில் வேறுவகை அணுக்கள் இரா.
வெள்ளி,தங்கம், இரும்பு, யுரேனியம், பொட்டாசியம்,ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்றவை தனிமங்களாகும்.இதுபோன்று நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் உள.

தனிமங்களில் சில,முறையாக கூடுதல் குறைதல் இன்றி எப்பொழுதும் ஒரே சீராக,அளவான கதிர்களை வீசிக்கொண்டே இருக்கின்றன.
இத்தகைய தானியங்களுக்கு'கதிரியக்கத் தனிமங்கள்'(Radio Active Elements) என்று பெயர்.
கதிர்களை வீசும் இந்நிகழ்ச்சி சாதாரண வெப்பநிலை மாற்றத்தாலோ அழுத்தமாற்றத்தாலோ காந்த அலைகளாலோ மின்அலைகளாலோ பாதிக்கபடா.

கதிர்கள் என்பது துகள்களேயாகும்.துகள்களுக்கு எடையுண்டு.எனவே கதர்களை வீசிக்கொண்டே இருக்கும் ஒரு தனிமத்தின் எடை காலப்போக்கில் குறைகின்றது.
சூரியன் கதிர்களை வீசிக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு நொடியும் அது பல லட்சம் டன் எடையை இழந்து கொண்டே இருக்கின்றது.

பாறைகளிலுள்ள கதிரியக்கத் தனிமங்களை(Radio Active Elements)நிலவியல் கடிகாரம்(Geological Clocks)என்றே கூறலாம்.
யூரேனியம்,தோரியம்,பொடாடாசியரூபிடியம்,கார்பன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் கதிரியக்க தனிமங்களாகும்‌.
கதிரியக்கத்தினால் தனிமங்கள் தங்கள் எடையை இழந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு தனிமம் கதிர்வீச்சு முறையால் எடையை இழப்பதால் அது வேறு தனிமமாக மாறுகிறது.
ஆக,ஒரு தனிமத்தின் தற்போதைய எடை,அத்தனிமம் இழந்த எடை ஆகியவற்றை கணக்கிட்டு அந்தத் தனிமம் இருந்த பாறையின் வயதைக் கணக்கிடுகின்றனர்.

யூரேனியம்--ஈயம் முறை#
யூரேனியம்--ஈயம்( Uranium-Lead Method.)என்ற ஒருமுறை இருக்கின்றது.
பாறையில் படிந்துள்ள ஒரு குறிப்பிட்ட எடையுடைய யூரேனியம்,அதன் எடையில் பாதியை இழக்க 450கோடி ஆண்டுகளாகும்.
கனமான யூரேனியம்(U238) கதிர்களை வீசுகின்றது. வீசப்பட்ட கதிர்கள் ஈயமாக ஆகின்றது.
அதாவது கதிரியக்க யுரேனியம் இழக்கும் எடை முழுமனமையாக ஈயமாக உருப்பெற்று பாறையில் இருக்கின்றது.

ஆக,
இப்பொழுது பாறையில் இருக்கும் யூரேனியத்தின் எடையையும் ஈயத்தின் எடையையும் கூட்டினால் தொடக்கத்தில் பாறையிலிருந்த யூரேனியத்தின் எடை கிடைக்கின்றது‌
எனவே,
பாறையில் இப்பொழுது இருக்கும் யூரேனியம்,ஈயம் ஆகிய இரண்டின் எடைகளையும் ஒப்பிட்டு அந்தப் பாறையின் வயதினை துல்லியமாகக் கணக்கிடுகின்றனர்.

ஒரு பாறையில் யூரேனியம் மட்டும் இருந்து ஈயமே இல்லாமல் இருந்தால் அப்பாறை அண்மைக்காலத்தில் தோன்றியது என்று அறிந்து கொள்ளலாம்.

ஒருபாறையின் வயதினைக் கணக்கிட்டுவிட்டால் அப்பாறையிலுள்ள ஃபாசில்களின் வயதினைக் கணக்கிட்டு விட்டதாகவே பொருள்.

எடைகுறைவான யூரேனியம் (U235Light Uranium)தன் எடையில் பாதியை இழக்க 71,30,00000ஆண்டுகளும்

தேரியம் தன் எடையில் பாதியை இழக்க 1,39,00000ஆண்டுகளும்

பொட்டாசியம் (K40)தன் எடையில் பாதியை இழக்க 120கோடி ஆண்டுகளும்

கரி(K14) தன் எடையில் பாதியை இழக்க 5600ஆண்டுகளும் ஆகின்றன எனக் கணக்கிட்டுள்ளனர்.

பொட்டாசியம்-40கதிர்களை வீசும் பொழுது இழக்கும் எடையில் 88சதவீதம் கால்சியமாகவும் 12சதவீதம் ஆர்கான் ஆகவும் மாற்றுகின்றது.

பாறைகளில் பல தனிமங்கள் இருக்கின்றன.
அவை ஒவ்வொன்றும் காலத்தை,பாறையின் வயதைக் காட்டுகின்றன.
இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து சரி செய்து கொள்வதால் காலத்தைக் கணக்கிடுவதில் தவறு ஏற்படாது.

தொடரும் ‌.......

- ராஜமோகன் முகநூல் பதிவு, 30.8.19