வியாழன், 25 மார்ச், 2021

துண்டான தலையில் இருந்து இதயம், உடலை வளர்க்கும் கடல் அட்டை டோக்கியா, மார்ச் 24- சிட்னி  துண்டான தலையில் இருந்து இதயம்,உடலை வளர்க்கும் கடல் அட்டைகளை பார்த்து விஞ்ஞானிகள் வியப்படைந் தனர்

ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாயகா மிட்டோ மற்றும் யோயிச்சி யூசா  ஆகியோர் சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்பேது ஒரு நாள், தங்கள் ஆய்வுகூடத்தில்  இருந்த கண் ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டை யின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட் டது.

ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக் கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட் டைக்கு, இதயம் உள்பட உட லின் அனைத்து உள் அங்கங் களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது.

அட்டைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரி யத்தை ஏற்படுத்தி விட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி கள் கூறும் போது . பச்சை நத்தைகள் அவற்றின் சருமத் தில் ஆல்கா செல்களைக் கொண்டுள்ளன, எனவே அவை ஒரு புதிய உடலை உருவாக்கும் வரை ஒரு செடியைப் போன்ற ஒளியை உண்ணலாம், இதற்கு  சுமார் 20 நாட்கள் ஆகும்.

மற்ற விலங்குகள் வேண்டு மென்றே உடல் பாகங்களை பிரித்து மீண்டும் வளர்க்கின் றன, இது ஆட்டோடொமி எனப்படும் ஒரு பொறிமுறை யாகும், ஆனால் இது போன்று முன்னர் அறியப்பட வில்லை என்று ஆராய்ச்சியா ளர்கள் தெரிவித்தனர்.

« வட்டையாடுபவர்களிட மிருந்து தப்பிப்பதற்கான ஒரு முறை இது என்று  ஆரம்பத் தில் நினைத்தோம்  ஆனால் இப்போது இனப்பெருக்கத் தைத் தடுக்கும் ஒட்டுண்ணி களை அகற்றுவதற்காக இருக் கலாம் என கூறினார்கள்.

இதுகுறித்து விஞ்ஞானி மிட்டோ கூறியதாவது:-

நான் ஆச்சரியப்பட்டேன், கடல் அட்டை இறந்துவிடும் என்று தான் நான் முதலில் நினைத்தேன், ஆனால் அது தொடர்ந்து நகர்ந்து மிகவும் ஆற்றலுடன் சாப்பிட்டது, நான் சிறிது நேரம் அதைக் கவனித்தேன், அது அதன் இதயத்தையும் உடலையும் மீண்டும் உருவாக்கியது.

ஸ்டெம் செல்களைப் பற் றிய ஆச்சரியமான விஷயங் களில் ஒன்று, அவை விலங்கு களின் தலையின் விளிம்பி லிருந்து ஒரு இதயத்தையும் உடலையும் மீளுருவாக்கம் செய்ய பயன்படுத்தப்படலாம். மேலதிக ஆய்வின் மூலம், இந்த கண்டுபிடிப்புகளை மீளுருவாக்கம் செய்யும் மருத் துவத்திற்குப் பயன்படுத்த லாம், ஆனால் இது இந்த கட்டத்தில் ஒரு  தொலைதூர நம்பிக்கையாகும்.

செவ்வாய், 23 மார்ச், 2021

செவ்வாய் தோஷ நம்பிக்கை தகர்ப்பு! விண்கலம் இறக்கி பெண் சாதனை!செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்னும் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் (19.2.2021) தரையிறக்கியது.


இந்த திட்டத்தில் இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்தத் திட்டம், 2013இல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி மோகன்.


‘ஜி.என். அண்ட் சி’ எனப்படும் வழி காட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார். ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கினார் சுவாதி மோகன். மேலும் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதிலிருந்து அதன் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறார்.


நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.


ஸ்வாதி மோகன் ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிவிட்டார். வடக்கு வெர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் டி.சி. மெட்ரோ பகுதிகளில்தான் வளர்ந்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பின் எம்.அய்.டியில் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பிரிவில் முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.


குழந்தை மருத்துவராக வேண்டும் என்றிருந்த விருப்பம்


மார்ஸ் 2020 திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் (Guidance & Controls Operation Lead) என்கிற முக்கிய பொறுப்பை ஸ்வாதி மோகன் தலைமை ஏற்று கலிஃபோர்னியாவில் இருக்கும் நாசாவின் ஜெட் ப்ரொபல்சன் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார்.


மருத்துவராக விரும்பிய ஸ்வாதிக்கு விண்வெளி மீது எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது?


ஸ்வாதி ஒன்பது வயது சிறுமியாக இருக்கும் போது ‘ஸ்டார் டிரெக்‘ என்ற அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியானது. அதில் விரிந்து கிடக்கும் பேரண்டத்தில் புதிய புதிய பகுதிகளைக் கண்டு பிடிப்பார்கள். அதைக் கண்ட போது தான் அவருக்கும் விண்வெளி மீது ஈர்ப்பு ஏற்பட்டது.


“நானும் அது போல செய்ய விரும்பினேன். இந்த பேரண்டத்தில் புதிய, அழகான இடங்களைக் கண்டுபிடிக்க விரும்பினேன். இந்த பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளி தனக்குள் நிறைய ஞானத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. நாம் இப்போது தான் அதைக் கற்கத் தொடங்கி இருக்கிறோம்,” என நாசா வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்வாதி மோகன்.


மார்ஸ் 2020 விண்கலம் விண்வெளியில் சரியான திசையில் பயணமாவதை உறுதி செய்வது, மார்ஸ் 2020 விண்கலத்தை தேவையான இடத்துக்குக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்பு தான்.குறிப்பாக மார்ஸ் 2020 விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் எல்லைக்குள் நுழையச் செல்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது.


நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் தரையிறங்கியது - இது என்ன செய்யும்?


அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர்  (Perseverance Rover) இயந்திரம் வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.


ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.


செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.


பெர்சவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20:55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது. இந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்குள்ளேயே, குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது பெர்சவரன்ஸ் ரோவர்.


“இப்போதுவரை ரோவர் சமதளத்தில் தான் இருகிறது. இதுவரை 1.2 டிகிரி தான் சாய்ந்திருக்கிறது” என ரோவரின் தரையிறங்கும் அணியின் தலைவர் ஆலென் சென் குறிப்பிட்டார்.


கடந்த 2012ஆ-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கோளின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போதைய பெர்சவரன்ஸ் ரோவரின் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், அடுத்த சில வாரங்களில் ரோவர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள்.


இனி வருங்காலத்தில், பெர்சவரன்ஸ் ரோவர் நிறைய படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.


பெர்சவரன்ஸ் ரோவர் தன்னோடு ஒரு சிறிய ஹெலிகாப்டரை எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் செவ்வாய் கோளில் ஹெலிகாப்டர் பறக்க விடும் சோதனை நடைபெறும். இப்படி வேறொரு கோளில் மனிதர்கள் ஹெலிகாப்டரை பறக்கவிட முயற்சிப்பது இதுவே முதல் முறை. அதன் பிறகு தான் பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியப் பணிகள் தொடங்கும்.


பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கோளில் உள்ள டெல்டா பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேமிக்கும், அதன் பின், பெரிய பள்ளத்தின் விளிம்பை நோக்கி நகரும். இந்தப் பெரிய பள்ளத்தின் விளிம்பில் தான் கார்பனேட் பாறைகள் இருப்பதாகச் செயற்கைக் கோள்கள் கண்டுபிடித்துள்ளன. இந்த பாறைகளைக் கொண்டு பூமியில் உயிரியல் ரீதியிலான நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்கலாம்.


பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் உபகரணங்களை வைத்து, இந்த விவரங்கள் அனைத்தையும் மிக நுண்ணிய அளவு வரை ஆராயும்.


ஏன் ஜெசெரோ பள்ளம்?


45 கிலோமீட்டர் அகலம் கொண்ட செவ்வாயின் பள்ளத்துக்கு ஜெசெரோ எனப் பெயர் வைக்கப்பட்டது. ஜெசெரோ என்றால் ஏரி என்று அர்த்தம். நீர் இருக்கும் இடத்தில் தானே உயிரினங்கள் இருக்கும்? அது தான் இந்த இடத்தைத் தேர்வு செய்யக் காரணம்.


ஜெசெரோ பகுதியில் பல தரப்பட்ட பாறை வகைகள், களி மண் வகைகள், கார்பனேட்டுகள் என உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளைக் காட்டக் கூடிய பொருள்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக பாத் டப் ரிங் பகுதி. இந்தப் பகுதி ஏரியின் கரையாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


பூமியில் ஸ்ட்ரொமடொலைட்ஸ் (Stromatolites) என்றழைக்கப்படும் ஒரு வகையான நுண்ணுயிரிப் பாறையை, பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் கண்டுபிடிக்கலாம்.


பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கும் வித்தியாசமான மற்றும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய பாறை மாதிரிகளை தனியாக சிறிய குழாய்களில், செவ்வாயின் மேற்பரப்பிலேயே வைக்கும். நாசா மற்றும் அய்ரோப்பிய விண்வெளி முகமை இணைந்து, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அந்த பாறை மாதிரிகள் வைக்கப்படும் சிலிண்டர்களைச் சேகரித்துக் கொண்டுவர, பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


செவ்வாய் கோள் தொடர்பான ஆராய்ச்சியில், செவ்வாயில் இருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவது தான் அடுத்த சரியான மற்றும் தேவையான நடவடிக்கையாக இருக்கும். இதன் மூலம் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்தனவா? வாழ்கின்றனவா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அது மட்டுமல்ல. இதன்மூலம் செவ்வாய் கோளும் பூமியைப் போலவே ஒரு கோள் என்பதும் உறுதி செய்யப்படும்.


எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆய்வின் மூலம் விண்கலம் செவ்வாயில் இறங்கியதன் மூலம், செவ்வாய் தோஷம் என்ற மூடநம்பிக்கை முற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டது என்பதை நாம் முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி.


எத்தனையோ பெண்களின் வாழ்வைக் கெடுத்த செவ்வாய் தோஷ நம்பிக்கை ஒரு பெண்ணின் அறிவுத் திறத்தால், ஆய்வுத் திறத்தால், அறவே தகர்க்கப்பட்டது சிறப்புக்குரிய சாதனையாகும்.


- மஞ்சை வசந்தன்

- உண்மை இதழ், 1-15.3.21


திங்கள், 15 மார்ச், 2021

வேறு உலகத்தில் குடியேற வழிபிறந்தது டைட்டன் நிலவில் கரிம மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு
சனியின் துணைக்கோளான  டைட்ட னில்,  கரிம  மூலக்கூற்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய மண் டலத்தில் அடர்த்தியான வளிமண்டலத் தைக் கொண்ட ஒரே நிலவு டைட்டன் மட்டும் தான். டைட்டனின் வளிமண்டலம் பூமியை விட நான்கு மடங்கு அடர்த்தி யானது. இப்போது, விஞ்ஞானிகள் அதில் ஒரு கரிம மூலக்கூற்றைக் கண்டுபிடித்து உள்ளனர். இது வேறுந்த வளிமண்ட லத்திலும் இதுவரை காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாகக் கண்டறியப்பட்ட கரிமச் சேர் மங்கள், டைட்டனில் உயிர் உரு வாக்கத் திற்கு அடிப்படையாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். சிலியில்  உள்ள விண்வெளி தொலைநோக்கி ஆய்வு நிலையத்தில் இருந்து அங்கிருந்து வெளி வரும் கதிர்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த கரிம மூலக்கூற்றைக் கண்டு பிடித்து உள்ளனர். 2003 இல் டைட்டனில் பென்சீன் கண்டு பிடிப்பு இதே முறையில் கண்டறியப் பட்டது ஆகும். இது டைட்டனின் வளிமண்டலத் தின் தனித்துவமான வேதியியலில் மூலக் கூறுகளை உள்ளதை நமக்குக் கண்டறிந்து கொடுத்தது. . டைட்டனில் கண்டறியப்பட்ட இரண்டாவது கரிம மூலக்கூறு இதுவாகும்.  டைட்டனில் உள்ள கரிம மூலக்கூறு, உயிரினத்தின் கட்டுமானத் தொகுதியாக இருக்கலாம் என்றும், இவை  டைட்டனில் உயிர் வாழ்க்கையை உருவாக்க ஒரு முன்னோடியாகச் செயல்பட உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலவை இதற்கு முன்னர் சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த கோள்களிலும் காணப்படவில்லை. அதே போல், எந்த இதர நிலவுகளிலும் வளிமண் டலம் காணப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

சைக்ளோப்ரோபெனிலிடின் மூலக் கூறு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைக்கப்பட்ட ஒரு வளையத்தில் மூன்று கார்பன் அணுக்களால் ஆனது. மேரிலாந் தில் உள்ள நாசாவின் கோடார்ட் விண் வெளி விமான நிலையத்தில் உள்ள வானியல் அறிவியலாளர் கோனார் நிக்சன், டைட்டானில் இந்த மூலக்கூற்றைக் கண்டுபிடித்தது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதும்  பல சாத்திய தகவல்களை வழங்கக்கூடியது என்றும் கூறியுள்ளார்.

இந்த மூலக்கூறு மிகவும் வினைத்திறன் வாய்ந்தது, இது வேறு எந்த துகள்களிலும் மோதினால், அது வேதியியல் ரீதியாக அவற்றுடன் விரைவாகச் சேர்ந்து புதிய சேர்மங்களை உருவாக்கும் திறன் கொண் டது. இதன் காரணமாக, இது முன்னர் விண்மீன் விண்வெளியில் வாயு மற்றும் தூசியின் மெல்லிய மேகங்களில் மட்டுமே காணப்பட்டது. தற்போது இது டைட்டன் வானத்தின் மேல் அடுக்குகளில் உள்ள வளிமண்டலத்திலும் உள்ளது

இது போன்ற வளைய வடிவ மூலக் கூறுகள் டி.என்.ஏ (ஞிழிகி) மற்றும் ஆர்.என்.ஏ (ஸிழிகி) போன்ற உயிர் அணுக்களுக்குத் தேவையான மூலக்கூறுகளின் கட்டுமானத் தொகுதிகளாகச் செயல்படுகின்றது. "இது மிகவும் சிறிய கட்டுமான தொகுதி, ஆனால் இதனுடன் பெரிய -பெரிய உண்மைகளை நாம் வெளிகொண்டு வர முடியும்" என்று நிக்சன் கூறுகிறார். இன்னும் சொல்லப் போனால் இது பூமி எப்படி உருவானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

"டைட்டனில் நுண்ணுயிரிகள் இருப்ப தாக யாரும் நம்புவதாக நான் நினைக்க வில்லை, ஆனால் டைட்டனில் இது போன்ற சிக்கலான மூலக்கூறுகளை உரு வாகுவதை நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு பூமியில் உயிர் எவ்வாறு தொடங்கியது என்பது போன்றவற்றை நாம் புரிந்து அறிந்துகொள்ள உதவும்." என்று நிக்சன் உறுதியுடன் கூறியுள்ளார்.

டைட்டானின் நிலைமைகள் இப்போது நமது பூமியின்  தொடக்கத்தில்  எப்படி இருந்ததோ, அதைப் போலவே இருக்கிறது. இங்குள்ள ஒரே ஒரு வேறுபாடு ஆக்சிஜ னுக்கு பதிலாக மீத்தேன் வாயுவின் ஆதிக் கம் டைட்டனில் அதிகமாக உள்ளது.

இந்த நிலைமை உயிர்கள் உருவாகும் திறனைப் படிப்பதற்கும் உதவும். இப் பொழுது, பூமியிலிருந்து மட்டுமே நாம் இதைக் கண்காணிக்க முடியும், ஆனால் 2027 ஆம் ஆண்டில், டிராகன்பிளை விண் கலம் மூலம் டைட்டனின் மேற்பரப்பை நெருக்கமாக ஆராய நம்மால் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கோளைச் சுற்றிலும் இதுவரை 62 நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் மிகவும் பெரிய பூமியைப் போன்றே அடத்தியான வளிமண்டலம் கொண்டது டைட்டன் என்பது குறிப்பிடத் தக்கது. எதிர்காலத்தில் புவி அதிக வெப்பமாதல் ஏற்பட்டு வாழத் தகுதி இல்லாத நிலை உருவாகும் போது மனித இனம் டைட்டனில் குடியேறும் என்று வானியல் அறிஞர்களால் கணக்கிடப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது ஆகும்.

மின் ஆற்றல் தீவு!


உலகின் முதல், 'ஆற்றல் தீவு' ஒன்றை டென்மார்க் உருவாக்கி வருகிறது. மனித முயற்சியால் கட்டப்படும் தீவான இதில், பெரிய காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன.இந்த காற்றாலைகள் மட்டும், 30 லட்சம் வீடுகளுக்கு தேவையான மின் சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட வையாக இருக்கும் என, டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.

டென்மார்க் அரசு, 51 சதவீதமும், தனியார் நிறுவனங்கள், 49 சதவீதமும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றன. வரும், 2030இல் நிறைவடையவுள்ள, ஆற்றல் தீவின் பரப்பளவு, 30 ஏக்கராக இருக்கும். டென்மார்க் அரசு, அதன் வரலாற்றிலேயே இத்தனை பெரிய திட்டத்தை மேற்கொண்ட தில்லை.

கடலுக்கு நடுவே மிதக்கும் காற்றாலை களை அமைப்பது, அய்ரோப்பிய நாடு களின் பிரியத்திற்குரிய திட்டமாக இருந்து வருகிறது.

பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் மிதக்கும் காற்றாலைகளை பெரு மளவில் அமைத்து வருகின்றன.

ஆனால், ஒரு பெரிய செயற்கை தீவினை இதற்கென அமைப்பது இதுவே முதல் முறை.ஆற்றல் தீவு முழுமையாக செயல்படும்போது, 12 ஜிகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

உபரி மின்சாரத்தை, டென்மார்க் தன் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்ய விருக்கிறது.

கனியின் நிலையை அளக்கும் கருவி


கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ள னவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த, 21ஆம் நுற்றாண்டில் கூட, ஒவ்வொரு சுளையையும், ஒவ்வொரு குலை யையும், பழுத் திருக்கின்றனவா என்று சோதிக்க, நம்பகமான தொழில்நுட்பங்கள், இன்னும் பரவலாகவில்லை.

அண்மையில் தான், ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இதற்கு தீர்வினை கண்டறிந் துள்ளனர். மாங்காய், வாழை போன்ற கனிகளை, கையால் தொடாமல், லேசர் மற்றும் பிளாஸ்மா அதிர்வலைகள் மூலம், துல்லியமாக பழுத்திருப் பதை கண்டறிய முடியும் என, அவர்கள் நிரூபித்துள்ளனர்.

மாம்பழத்தின் மீது, அதிதிறன் லேசர் கதிரை பாய்ச்சினால், தோலுக்கு அடியில் பிளாஸ்மா குமிழ்கள் உருவாகும். அக்குமிழ்களின் மீது, 'லேசர் டோப்ளர் வைப்ரோமீட்டர்' கருவியின் அதிர்வலைகள் பட்டுத் திரும்பும்போது, பழத்தின் காய் மற்றும் கனிந்த தன்மையை தெரிந்துகொள்ள முடியும்.

ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு, இது ஆரம்ப கட்ட வெற்றி தான். மாங்கனி, உள்ளே கெட்டிருந் தாலோ, வண்டு துளைத்திருந்தாலோ, லேசர் கதிர்களின் கணிப்பு தவறாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, இக்கருவியின் துல்லியத்தை மேலும் கூட்ட, ஆய்வுகள் தொடர்கின்றன.