செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இன்று (பிப்ரவரி 28) தேசிய அறிவியல் தினம்

தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள்மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல, அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டா டப்படுகிறது.2013-ஆம்ஆண் டிற்காக,“மரபணுமாற்றப் பட்டபயிர்களும்உணவுப் பாதுகாப்பும்“  குறித்த கொள் கையை வலியுறுத்தப்படுகிறது.

இந்த தினம் கொண்டாடப் படும் வரலாறு மற்றைய தினங் களைப்போல அல்லாமல் வழக்கத்துக்குமாறானதுஆகும். பொதுவாக தேசத் தலைவர் களின்பிறந்தமற்றும் நினைவு நாள்களே சிறப்பு நாள்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற் றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் மிகச் சிறந்த இயற்பியல் மேதையுமான சர்.சி.வி.இராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.

சர்.சி.வி.இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை இந்நாளிலேயே கண்டுபிடித்தார்.இந்தக்கண்டு பிடிப்பு உலகளாவிய பெரு மையை இந்தியாவிற்குப் பெற் றுத் தந்ததுடன் மிக உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

எந்த ஒரு நாகரிகத்திற்கும் அடிப்படையானஅறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகை யிலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்பலபுதியஅறி வியல் சிந்தனைகளைக் கண் டறிவதும், அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உண ரச் செய்வதே இந்நாளின் நோக் கமாகும்.

-விடுதலை,28.2.17

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமான ஜீன்கள்!


உயர் ரத்த அழுத்தத்தோடு தொடர்புடைய, 107 மரபணுக் களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பிரிட்டனில் செயல்படும், ‘பயோபேங்’ என்ற திட்டத்தில் பங்கேற்ற, நான்கு லட்சம் பேருக்கு மேற்பட்டோரிடம் மேற்கொண்ட மரபணு முடிவில் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரபணுக்கள், மனித ரத்த நாளங்கள் மற்றும் இதயத் திசுக்களில் செயல்படுபவை. லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி மற்றும் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள இந்த மரபணுக்களின் அடிப் படையில், புதிய மற்றும் செம்மையான உயர் ரத்த அழுத்த மருந்துகளை உருவாக்க முடியும்.மேலும், ஒருவருக்கு பரம்பரையாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்கவும் இந்த கண்டுபிடிப்புகள் உதவும் என்று இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்களை பரிந்துரைக்கவும் இக்கண்டுபிடிப்புகளை மருத்துவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


-விடுதலை,9.2.17

மலையுச்சி ஏன் வெப்பமாக இல்லை?


மலையுச்சிகளுக்குப் போகும்போது நாம் சூரியனுக்கு நெருக்கமாவும் செல்கிறோம். ஆனால், வெப்பம் அதிகரிப்பதற்கு பதிலாக, குளிர் அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள இடைவெளி 15 கோடி கி.மீ. அப்படிப் பார்த்தால் எவரெஸ்ட் உச்சியில் நாம் ஏறி நின்றாலும் இந்த 15 கோடி கிலோ மீட்டர் இடைவெளில் வெறும் 9 கி.மீ. மட்டுமே குறைந்திருக்கும். எனவே, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான இடைவெளியில் எந்த முக்கியமான மாற்றமும் இருக்காது.
மலையுச்சிகளில் நாம் ஏற ஏற, தட்பவெப்பநிலை மாறுவதற்கு முதன்மைக் காரணம் வளிமண்டல அழுத்தம் குறைந்துகொண்டே வருவதுதான். வளி மண்டல அழுத்தம் குறையக் குறைய வெப்பநிலையும் குறைந்துகொண்டே வரும். இப்படிக் குறையும் விகிதம் நாம் எதிர்பார்ப்பதைவிட மிக அதிகம். ஒவ்வொரு 100 மீட்டர் மேலே ஏறினால் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சட்டென்று குறைந்துவிடுகிறது.
வளிமண்டல அழுத்தம் குறைவு என்பது வேறொன்று மில்லை. காற்று மூலக்கூறுகளின் அளவு குறைந்து கொண்டே போவதுதான் வளிமண்டல அழுத்தம் குறைவு. அதனால்தான் மலையுச்சிகளில் போகும்போது மக்கள் சுவாசிக்கக் கஷ்டப்படுகிறார்கள்.
வளிமண்டலத்தில் டிராபோபாஸ்  எனப்படும் பகுதி இருக்கிறது. இதுவே டிராபோஸ்பியர், ஸ்டிராட்டோஸ் பியர் ஆகிய வளிமண்டல அடுக்குகளுக்கு இடையிலான எல்லைப் பகுதி. பூமிக்கு 12 கி.மீக்கு மேல் உள்ள இந்தப் பகுதியில் மிக மிகக் குறைந்த அளவே வளி மண்டலம் இருக்கிறது. இந்த இடங்களில் எஞ்சியிருக்கும் வளிமண்டலத்தின் அளவு வெறும் 10 சதவீதம்தான். அதனால் இந்த இடங்களில் காற்றழுத்தம் மிக மோசமாகக் குறைந்துவிடுகிறது. அதனால் வெப்பநிலையும் கடுமையாகக் குறைகிறது. எவ்வளவு என்றால், மைனஸ் 55 டிகிரி செல்சியஸ்வரை.
அப்படியானால், இந்த உயரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி விமானத்தில் பயணிக்கிறார்களே, அவர்களுக்கு என்ன ஆகும்? நவீனத் தொழில்நுட்ப உதவி காரணமாக அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. விமான இன்ஜின்களில் காற்றழுத்தத்தை உருவாக்கும் இயந்திரம் வெளியிடும் காற்று, எரிபொருளுடன் கலப்பதற்கு முன்னதாக பயணிகளையும் விமானப் பணி யாளர்களையும் சுற்றியுள்ள காற்றை வெப்பப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெப்பக் காற்று, விமானச் சுவர்களிடையே செய்யப்பட்டுள்ள வெப்பம் கடத்தும் திறன் தடுப்பு, மனித உடல் வெளிவிடும் வெப்பம் ஆகியவற்றின் மூலம் விமானத்துக்குள் மனிதர் களுக்கு உகந்த வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.


-விடுதலை,9.2.17

வியாழன், 23 பிப்ரவரி, 2017

விண்வெளியில் எப்படித் தூங்குவார்கள்?எப்படி சிந்திப்பார்கள்?

விண்வெளியில் புவியீர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் விண்வெளி வீரர்-வீராங்கனைகளால் நிற்கவோ, நடக்கவோ முடியாது.  சர்வதேச விண்வெளி நிலையத்திலும் விண்கலங்களிலும் ஈர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் அங்கே வாழும் விண்வெளி வீரர்-வீராங்கனைகள் தினசரி தூங்க வேண்டுமென நினைத்தால் உறங்கும் பைகளில்  உள்ளே நுழைந்து, தங்களைத் தாங்களே கட்டிப் போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தூக்கத்திலும் அவர்கள் அலைபாய்ந்துகொண்டே இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் பூமியில் உறங்குவதைப் போல, விண்வெளியில் இடைத் தொந்தரவு இல்லாமல் தொடர்ச்சியாக உறங்குவது சாத்திய மில்லை.

இதற்கு ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பது முதன்மைக் காரணமாக இருக்கலாம். அல்லது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் இயந் திரங்களின் ஓசை, மனம் கிளர்ச்சியடைந்த நிலை, மன அழுத்தம், காலக் குழப்பம் போன்றவை காரணமாக இருக்கலாம். ஏனென்றால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 15 சூரிய உதயம், 15 சூரிய மறைவு நிகழும். விண்ணில் அதிகபட்சமாக ஆறு மணி நேரம்தான் ஒருவரால் தூங்க முடிந்திருக்கிறது. அதேநேரம் இந்தத் தூக்கமே ஒருவருடைய உடல்நிலைக்குப் போதும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பதால் உடல் அதிகக் களைப்பை உணராது.
எப்படி சிந்திப்பார்கள்?

விண்வெளிப் பயணம் என்பது நிச்சயமாகக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான். ஏனென்றால், பூமியில் நிலவும் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இருக்காது. நம்முடைய உள்காதில் உள்ள புலனுணர்வு அமைப்பு, புவியீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய உடலைச் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த அமைப்பு விண்வெளியில் செயல்படாது. அதன் காரணமாக விண் கலங்களுக்குள் எது நேராக இருக்கிறது, எது தலைகீழாக இருக்கிறது என்பதை மூளையால் உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். தனக்கும் ஒரு பொருளுக்கும் இடையே உள்ள தொலைவைக் கணிக்கும் திறன் விண்வெளி வீரர்களுக்குப் பாதிக்கப்படும். ஒரு பொருளின் பருண்மையை மூளை உணர்ந்து கொள்ளும் திறனும் பாதிக்கப்படும். விசித்திரமான புலனுணர்வு அனுபவங்கள் ஏற்படும்.

எப்படியென்றால், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே திடீரென்று தலைகீழாகக் கவிழ்ந்து விட்டதைப் போன்ற பிரமை ஏற்படும். சில நேரம், தாங்களே தலைகீழாகத் தொங்குவது போன்ற எண்ணமும் எட்டி பார்க்கும்.

இதனால்  நம்மைப்போல் இயல்பாகச் சிந்திப்பது, நிச்சயம் அவர்களுக்குக் கடினமாகவே இருக்கும். அதன் காரணமாகவே, விண்வெளி வீரர்-வீராங்கனைகள் விண்வெளிப் பித்து அல்லது விண்வெளி மந்தநிலையால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

விண்வெளியில் சதம் அடித்த இஸ்ரோ!

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி பொங்க கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, இஸ்ரோவும் சதம் அடிக்கும் என அறிவித்தார். அதற்கு ஏற்ப பி.எஸ்.எல்.வி.யின் எக்ஸ் எல் மாடல் 37 ராக்கெட்டில் இந்தியாவின் மூன்று செயற்கைக்கோள் மற்றும் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ் ரோ கடந்த வாரம் விண்ணில் ஏவியது. இதன் மூலம் இதுவரை ஒரே ராக்கெட்டில் 37 விண்கலங்களை விண் ணில் செலுத்திய ரஷ்யாவின் சாதனையை முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளது இந்தியா.

இஸ்ரோவின் இந்த முயற்சியின் முக்கியத்துவம் 104 விண்கலங்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது மட்டுமல்ல. அத்தனை செயற்கைக்கோள்களைக் கிட்டத் தட்ட ஒரே உயரத்தில் ஒரே சமயத்தில் ஒன்றோடொன்று மோதிவிடாமல் விண்ணில் செலுத்தப் புது யுக்தியை வடிவமைத்ததுதான்.

மோதாமல் ஓடு!

செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விடாமல் 104 செயற்கைக்கோள்களையும், ஒவ்வொன்றாக 510 முதல் 524 கி.மீ. உயரத்தில் வெறும் 12 நிமிடக் கால அளவில் விண்ணில் ஏவ வேண்டும் என்பதுதான் இஸ்ரோ முன் இருந்த சவால்.

அடுத்தடுத்த சவால்கள்!

அய்க்கிய அரபு எமிரேட்ஸ், சுவிஸ், அமெரிக்கா எனப் பல நாடுகளின் செயற்கைக்கோள்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துப் பொதியாகக் கட்டுவது ஒரு சவால். கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் அவ்வளவு செயற்கைக் கோள்களையும் செலுத்துவது மற்றொரு சவால். இரண்டு பக்கமும் இரு வேறு எடையுடைய பையைக் கட்டி செல்லும்போது அதிலிருந்து ஒரு பை கழன்று கீழே விழுந்துவிட்டால் பேலன்ஸ் செய்வது எப்படிச் சிரமமோ, அவ்வாறு பல்வேறு எடைகளுடைய செயற்கைக் கோள்களை ஓன்றாக ராக்கெட்டிலிருந்து விடுவிப்பது மூன்றாவது சவால். வெறும் பத்து நிமிடத்தில் எல்லாச் செயற்கைக்கோள்களும் விடுபட்டு விண்ணில் செல்லும் பாதைகளைக் கண்காணித்து, அதனைப் பூமியில் உள்ள கட்டுப்பட்டு அறைக்குத் தெரிவித்து அந்தச் செயற்கைக் கோள்களைச் சரியான பாதைக்கு இயக்குவது பெரும் சவால்.

இந்தச் சாதனையைப் படிப்பினையாகக் கொண்டு மேலும் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் எட்டு வீடியோ கேமராக்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டன. இவை ராக்கெட் விண்ணில் செல்வது, பொதிகள் அவிழ்ந்து முறையாக விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்படுகிறதா என்பதையெல்லாம் செல்ஃபி எடுத்துக் கண்காணித்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. இந்தத் தரவுகளை வைத்து மேலும் நுட்பமாக அடுத்த முறை செயல்படுத்தப் பாடம் கற்கலாம்.

நூற்றுக்கும் அதிகமான செயற்கைக் கோள்களை விண்ணில் முறையாக ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் முதலில், மூன்றிலிருந்து நான்கு நானோசெயற்கைக் கோள்களைப் பொதிந்து குவாட்ராபேக் பொதியாகச் செய்தனர். இவ்வாறு 101 நானோசெயற்கைக்கோள்கள் 25 குவாட்ராபேக் பொதியாகப் பொதியப்பட்டன. முதலில் இந்திய விண்கலங்கள் மூன்றையும் விண்ணில் செலுத்திய பிறகு, இந்த 25 குவாட்ராபேக் பொதிகள் ஒவ்வொன்றாக விண்ணில் செலுத்தப்பட்டன.

விண்வெளியில் ஒரு குவாட்ராபேக் செலுத்தியதும், அந்தப் பொதியில் உள்ள ஒரு கதவு திறந்து அதில் உள்ள பொறி உள்ளே பொதியப்பட்ட நானோசெயற்கைக் கோள்களை விண்ணில் வெவ்வேறு கோணத்தில் தள்ளிவிடும். மொத்தம் 12 நிமிடக் கால இடைவெளியில் பதினான்கு கிலோமீட்டர் ராக்கெட் பயணத்துக்குள் அனைத்துக் குவாட்ராபேக் பொதிகளும் விண்ணில் செலுத்துவது கத்தி மீது நடப்பது போன்ற சவால்.

2013இல் அமெரிக்கா ஒரே ராக்கெட்டில் 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்தச் சாதனையை முறியடிக்க 2014இல் ரஷ்யா 37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. அணுகுண்டு ஒப்பந்தத்தின் காரணமாக வீணாகிப்போன பழைய ஏவுகணைகளைப் புதுப்பித்து அமெரிக்காவும் ரஷ் யாவும் இந்தச் சாதனைகளைப் புரிந்தன. 2014-ல் 34 கியூப்சாட் செயற்கைக்கோள்களைச் சர்வதேச விண் வெளிக்குடில் பூமியைச் சுற்றிவரும்போது ஒவ்வொன் றாக விண்ணில் செலுத்தியது. ஆனால், ஒரே ராக்கெட் தனது ஒரே பயணத்தில் செலுத்தவில்லை என்பதால், இது சாதனையாகக் கருதப்படுவதில்லை.

இதற்கு முன்னர் இஸ்ரோ 2008இல் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. அதன் பின்னர் 2016இல் 20 செயற்கைக்கோள்களைச் செலுத்திச் சாதனை படைத்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல இப்போது ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

பயன்கள் பல: புவியியல் ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழலைக் கண்காணித்து விபத்து ஏற்படும்போது அவசரத் தகவல்தொடர்பு தருவது உள்ளிட்ட பயன்கள் இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் உண்டு.

-விடுதலை,23.2.17

திங்கள், 20 பிப்ரவரி, 2017

சர் அய்சக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (1727)
காலம் காலமாக நாம் பார்க்கும் மிகச்சாதாரணமான ஒரு செயல் மேலி ருந்து ஒரு பொருள் கீழே விழுகிறது, பொதுவான ஒரு மனிதர் என்றால் அதை சாதாரணமாக கடந்து விடுவார்கள், ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஒரு அறிவியல் ஆய்வாளர் இந்தச் செயலை கண்டு எப்படி நடக்கிறது என்று நீண்ட ஆய்வு நடத்தினார்

விளைவு புவி ஈர்ப்புவிசை கண்டறியப்பட்டது

நியூட்டன் இங்கிலாந்தின் கிராம்டன் பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வி பயின்றார்.ஆரம்ப காலத்தில் அவருக்கு கல்வியில் அதிக ஈடுபாடு இல்லை, அவரை பள்ளி ஆசிரியர்கள் தினசரி பாதிவகுப்பிலேயே வெளியேற்றிவிடு வார்கள்.இதனால் சகமாணவர்கள் முன் னிலையில் அவமானப்பட்டார் இதனால் அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவிய லில் ஈடுபாடு இருந்தது, தண்ணிரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவ ருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள் ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிரிஷ் மதகோட்பாட்டை கற்பிக்கும் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டி லைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப் ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்க விரும்பினார்

1665 இல், பரிமாண தேற்றத்தைக் கண்டு பிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட் பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார் 1665 இல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக் கழகம் மூடப்பட்டது அடுத்த இரண்டு வருடங்கள் விட்டிலிருந்தபடியே, நுண் கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன் அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டு களில் அவரது அறிவியல் மூளை அபரிமித மாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார்.  Generalized binomial theorem, infinite decimal calculusபோன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டு பிடித்தவைதான் வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறை கள் அவர் வகுத்துத் தந்தவையே, நியூ ராயல் சோசைட்டி என்னும் அறிவியல் ஆய்வாளர்கள் பொதுக்கூட்டத்தில் புலால் உணவும் சைவ உணவும் பற்றிய ஒரு விவாதம் நடந்தது, அந்த விவாததின் போது நியூட்டன் கூறியது. நான் புலால் உணவு சாப்பிடாமல் சைவ உணவை மட்டும் உண்பவனாக இருந்தால், இந்நேரம் இத் தாலியில் உள்ள எங்கள் மூதாதையார்கள் அடிமையாக வேலைபார்த்த பண்ணை ஊழியனாக இருந்திருப்பேன் என்று கூறி னார்.

இவர் கருத்துகளில் முக்கியமானவைகள்

*              தேவாலயங்களில் முழங்காலிட்டு செலவிடும் நேரத்தை ஆய்வாலயங் களில் சிந்தனையை கிளறி புதிய கண்டுபிடிப்புகளுக்காக செலவிடுங் கள்

*              கடவுள் என்று உண்டு என்றால் என் னால் இந்த கண்டுபிடிப்புகளை கண் டறிய தேவையில்லாமல் போயிருக் கும்

*              ஈர்ப்புவிசையை எதிர்த்து புவியை விட்டு வெளியே செல்வது கூட கடவுள் படைத்த உலகம் என்று சிலர் கூறும் பொய்யை உடைப்பது போன் றதாகும்

(நீல் டைகிரீஸ் டைசன் எழுதிய ‘‘அறிவியலாளர்களின் வாழ்க்கை’’ என்ற நூலிலிருந்து)

 -விடுதலை ஞா.ம.18.2.17

கடலுக்கு அடியில்  புதிய கண்டம் கண்டுபிடிப்பு 


சிட்னி, பிப்.19 கடலுக்கு அடியில் ஷிலாண்டியா என்ற புதிய கண்டம் கண்டு பிடிக்கப்பட்டது. இப்புதிய கண்டம் உருவானது எப்படி என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

உலகில் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா என 6 கண்டங்கள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு கண்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது தென்பசிபிக் கடலுக்கு அடியில் உள்ளது. அதாவது தற்போதுள்ள நியூசிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டத்துக்கு ஷிலாண்டியா என்று பெயரிடப் பட்டுள்ளது. இது அண்டை கண்டமான ஆஸ்திரேலியாவின் மூன்றில் 2 மடங்கு அளவு கொண்டது.

அதாவது 50 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஷிலாண்டியா கண்டம் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கிறது. அதன் அளவு 94 சதவீதம் என கணக் கிடப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்தை போன்று 3 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கூறு கின்றனர். புவியியல் அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற் கொண்டுள்ளனர். இப்புதிய கண்டம் உருவானது எப்படி என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் இத்தகவல் அமெரிக்க ஆராய்ச்சியியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

-விடுதலை19.2.17

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வேறு நபரிடம் முகம் பெற்ற இளைஞர்
வாஷிங்டன், பிப்.19 அமெரிக்கா வில் மின்னெ சோட்டா மாகாணத் தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ஆம் ஆண்டு இவர் துப்பாக்கி யால் சுட்டு தற் கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது.

அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கலாம் என தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார். இந்த நிலை யில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண் டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் கொடையாக பெறப்பட்டது. 
அதைத் தொடர்ந்து ரோஸ் என்பவரின் முகத்தில் இருந்து மூக்கு, தாடைகள், வாய், உதடுகள், நாடி, மற்றும் பற்கள் ஆபரேசன் மூலம் அகற்றி ஆன்டி சான்ட்னெசுக்கு பொருத்தப் பட்டது. இந்த ஆபரேசன் மின் னெ சாட்டாவில் ரோஸ்செய்டர் நகரில் உள்ள மாபேயி கிளினிக் கில் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சை முக சீரமைப்பு சிறப்பு நிபுணர் டாக்டர் சமீர் மார்தானி நடத்தினார். ஆபரேசன் முடிந்து 3 வாரங்கள் கழித்து கண் ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தை பார்த்தார். அப்போது தனது முகம் முழுவதும் அழகாக மாறி இருப்பதை பார்த்து அதிசயித்தார். முக மாற்று ஆபரேசனை 60 பேர் கொண்ட மருத்துவ குழு நடத்தியது. மொத்தம் 56 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்காக மருத் துவர்களுக்கு சான்ட்னெஸ் பாராட்டு தெரிவித்தார்.  

-விடுதலை,19.2.17

என்னே அறிவியலின் சாதனை! 60 வயது பாட்டிக்கு குழந்தை பிறப்பு


காந்திநகர், பிப். 18- செயற்கை கருத்தரித்தல் முறையில், 60 வயது பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தை சேர்ந்த, பிர வீன் - சுசீலா, 60, தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை.

இந்நிலையில், அவர்களது கிராமத்தை சேர்ந்த, 60 வயது பெண் ஒருவர், செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றதை அறிந்து, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் சென் றனர்.

சுசீலா தம்பதியை பரிசோ தித்த மருத்துவர்கள், சுசீலா வுக்கு மாத விலக்கு சுழற்சி மீண்டும் வருவதற்கான சிகிச் சையளித்தனர். பின், அவ ருக்கு செயற்கை கருவூட்டல் முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

முதல் முறை, இரண்டு கரு உருவாகி, சில மாதங் களில் கலைந்துவிட்டது. இரண் டாவது முறை கருத்தரித்த சுசீலாவுக்கு, அறுவை சிகிச்சை மூலம், அழகான பெண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து சுசீலாவுக்கு சிகிச் சையளித்த மருத்துவர் தாமினி கூறியதாவது:

ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக் கப்பட்ட சுசீலா, வயது காரணமாக, கர்ப்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டார். எட் டாவது மாதம் முடிந்த பின், அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ள னர். இவ்வாறு அவர் கூறி னார்.
-விடுதலை,18.2.17

விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டைகோஸ் அறுவடை


நியூயார்க், பிப்.20 விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டை கோஸ் அறுவடை செய்யப்பட்டது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அங்கு தங்கியிருக்கும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத விண்வெளியில் நவீன தொழில்நுட்ப முறையில் இவை பயிரிடப் பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை பயிரிட்டார். தற்போது அது சிறந்த முறையில் விளைந்துள்ளது.

அதை தொடர்ந்து சமீபத்தில் முட்டைகோஸ் அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம் சீன முட்டை கோஸ் விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ள 5-ஆவது பயிர் ஆகும். மேலும் விண்வெளி ஆய்வகத்தில் தற்போதுதான் முட்டை கோஸ் முதன் முறையாக அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை நாசா விண்வெளி மய்யம் தெரிவித்துள்ளது. அது குறித்து அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கிவிட்சன் டுவிட்டரில் கூறும் போது எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் விண்வெளியில் வேடிக்கையாக நான் தோட்டம் அமைத்தேன். இது போன்று அதிக தோட்டம் போட நிறைய அறைகள் தேவை என தெரிவித்துள்ளார்.

-விடுதலை,20.2.17