வெள்ளி, 19 அக்டோபர், 2018

வேற்றுக்கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா?நீரை கொண்டிருக்கும் அளவுக்கு அதிக வெப்பமில்லாத அல்லது அதிக குளிரில்லாத “கோல்டிலாக்ஸ் மண்டலத்தை” தேடி கண்டறிவதன் மூலம் விஞ்ஞானிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

வேற்றுக்கிரகங்களில் வாழுகின்ற நம்மைப் போன்ற உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வேற்றுக்கிரவாசிகளை கணக் கெடுப் பது முதல் சூரிய சக்தியால் இயங்குகின்ற விண்கலம் வரை நாம் அறிந்திருக்க வேண்டும்.

வேற்றுக்கிரகங்களில் யாராவது வாழ் கிறார்களா? பல நூற்றாண்டுகளாக மனிதர் களால் இந்த கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

இதற்கு சிறந்த விடையை சொல்ல விஞ்ஞானிகள் துணிந்திருக்கின்றனர் அல்லது ஏதாவது விடையை கூற முனைந்துள்ளனர்.

இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவல் உள்ளது. இது தொடர்பாக முக்கிய வானியல் திருப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் சில எதிர்பார்க்காத கோட்பாடுகள் மற்றும் முழுவதும் விசித்திரங்கள் நிறைந்த உண் மைகள் காணப்படுகின்றன.

வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதாக இருந் தால், அவர்கள் கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் தான் வாழ முடியும் என்று தெரிகிறது. வேற்றுக் கிரகங்களில் உயிர்கள் வாழ்வது பற்றி விஞ்ஞானிகள் எவ்வாறு கண்டுபிடிக்க முயல் கின்றனர்?

கலிலியோவின் புரட்சிகர தொலைநோக்கி மூலம் சந்திரனை முன்பைவிட மிகவும் தெளிவாக மனிதர்களால் பார்க்க முடிந்தது.

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வானில் வெகு தொலைவில் இருப்பவற்றை உற்று பார்ப்பதற்கு கலிலியோ கண்டுபிடித்த புதிய தொலைநோக்கி உதவியதை தொடர்ந்து வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் பற்றி அறியும் ஆவல் நம்மிடம் அதிகரித்தது.

நிலவில் கறுப்பாக தெரிந்த இடங்கள் நீர் நிறைந்த பெருங்கடல்கள் என்று நம்பப்பட்டு, லத்தீன் மொழியில் ‘கடல்கள்’ என்று பொருள் படும் “மரியா” என்று அழைக்கப்பட்டன.

நம்முடைய கடல்களில உயிரினங்கள் வாழ்வதுபோல அங்கும் இருக்கலாமா?

நிலவிலுள்ள இந்த கறுப்பு இடங்கள் முற்காலத்தில் எரிமலை சீற்றங்களால் உரு வான கருங்கல் சமவெளிகள் என்று இப்போது நாம் அறிய வந்துள்ளோம்.

2. சக்தி வாய்ந்த செவ்வாய் கிரகவாசிகள்

சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் வாழ்வோர் சராசரியாக மனிதர் களைவிட உயரமானவர்களாக இருப்பர் என்று 1870ஆம் ஆண்டு வானியலாளர் வில்லியம் எர்ச்செல் தெரிவித்தார்.

அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தை அளவிட்ட அவர், அதன் பருவகால அளவையும், நாட் களையும் கவனமாக அளவிட்டுள்ளார்.

நமது பூமியை விட செவ்வாய் கிரகம் சிறியதாக இருப்பதால், அதிலுள்ள ஈர்ப்பு விசை குறைவாக உள்ளது என்று அவர் கூறி னார். செவ்வாய் கிரகவாசிகள் அதிக உயரம் கொண்டி ருப்பர் என இதனால் பொருள் படுகிறது.

3. மேல்நிலையான சனிக்கிரகவாசிகள்

புத்திசாலிகள் அல்லாத புதன்கிரக வாசிகளில் இருந்து புத்திக்கூர்மையுடைய சனிக்கிரகவாசிகள் வரை புவிக்கு அப் பாலுள்ளவை பற்றிய அறிவு சூரியனிடம் இருந்து காணப்படும் தொலைவை போல எட்டாத ஒன்றாகவே இருந்தது என்று தத்துவயியலாளர் இம்மானுவேல் கான்ட் கூறி யுள்ளார்.

4. வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கணக்கெடுப்பு

1848ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து திருச் சபை அமைச்சரும், அறிவியல் ஆசிரியரு மான தபமஸ் டிக், சூரிய கும்பத்திற்குள் வாழுகின்ற வேற்றுக்கிரகவாசிகளின் எண்ணிக்கையை கணக்கிட தொடங்கினார்.

புவிக்கு அப்பால் வாழுகின்ற உயிரினங் களின் செறிவு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 280 பேர் வாழுகின்ற இங்கிலாந்துக்கு ஒத்தாக இருந்தால், சூரிய குடும்பத்திற்குள் 22 டிரில்லியன் வேற்றுக்கிரகவாசிகள் வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

5. சந்திரனில் உயிர் வாழ்க்கை

உயிர் வாழ்வதை ஆய்வு செய்ய சிறந்த இடம் புதன் கிரகம் போன்ற அருகிலுள்ள சூரிய குடும்பமல்ல. வியாழன் கிரகத்தை சுற்றிவருகின்ற யுரோப்பா மற்றும் சனிக் கிரகத்தின் ஒரு செயற்கைக்கோளான என் சிலாடுஸ் போன்ற தொலைதூர சந்திரன்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவை இரண்டும் அடர்த்தியானதொரு பனிக்கட்டி அடுக்குக்கு அடியில் நீர்நிலை பெருங்கடலை கொண்டுள்ளன.

இந்த சந்திரன்களின் பெருங்கடல்கள் பனியாக உறைந்து விடுவதை தடுப்பதற்கு உள்ளக வெப்ப ஆதாரம் ஒன்று இருக்குமென நம்பப்படுகிறது. இந்த சந்திரன்களின் மய்யப் பகுதியில் வெப்பம் உருவாகி, பெருங்கடல் தரையிலுள்ள வெப்பநீர் துளைகள் வழியாக வெளியாகலாம்.

பூமியில் வெப்பநீர் துளைகள் ரசாயன எதிர்வினையை உருவாக்கி, விறுவிறுப்பாக உள்ள நீர்நிலையிலுள்ள சூழலியல் அமைப்பு களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்கிறது.

6. விண்வெளி மீன் வகை உயிரினங்கள்

இத்தகைய நீர்நிலையுடைய சந்திரன்களில் உயிரினங்கள் வாழ்வதாக இருந்தால், அவை எவ்வாறு தோன்றும் என்பதற்கு எளிமையான இயற்பியல் துப்புகளை வழங்கும்.

பெரிய நீர்வாழ் வேற்றுக்கிரக உயிரி னங்கள் வாழ்ந்தால், இரையை பிடிப்பதற்கு அல்லது இரையாகுவதில் இருந்து தப்பிக்க அவை வேகமாக செல்ல வேண்டியிருக்கும்.

எனவே, மீன் வகைகள், டால்பின்கள் மற்றும் சுறாக்கள் போன்ற வடிவங்களில் அந்த உயிரினங்கள் இருக்கலாம். மீன் வகை உயிரினங்களை தேடுகின்ற படலம் இங்குதான் தொடங்குகிறது.

-  விடுதலை நாளேடு, 18.10.18

புதன், 10 அக்டோபர், 2018

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜப்பானை சேர்ந்த 2 மருத்துவர்கள் தேர்வுஸ்டாக் ஹோல்ம், அக்.2 அமெரிக்கா, ஜப் பானை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் ஆலிசனுக்கும், ஜப்பானை சேர்ந்த மருத்துவர் தசுகு ஹோன்ஜோவுக்கும் அளிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்பு மருத்துவ நிபுணர்களான ஆலிசனும், ஹோன்ஜோவும் நோய் எதிர்ப்பு கட்டுப்படுத்துதலை தடுக்கும் புற்றுநோய் சிகிச்சையை கண்டுபிடித்தவர்கள். நோய் எதிர்ப்பு செல்கள், சில புற்றுநோய் செல்களிலிருந்து புரதத்தை உருவாக்கி அதன் மூலமாக புற்றுநோய் செல்களின் வீரியத்தை தடுத்து, அவற்றை அழிப்பதே இந்த மருத்துவ சிகிச்சையின் முறையாகும்.

இவர்களுக்கு 7.5 கோடி பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப் படும். வரும் டிசம்பர் 10இல் ஸ்டாக்ஹோல்மில் நடக்கும் விழாவில் நோபல் பரிசு வழங்கப்படும்.

- விடுதலை நாளேடு, 2.10.18

இயற்பியல்: லேசர் சிகிச்சை முன்னோடிகள் மூவருக்கு நோபல் பரிசுஸ்டால்க்ஹோம், அக்.3 லேசர் சிகிச்சை முறைகளுக்கு முன் னோடியாகத் திகழும் மூன்று விஞ்ஞானிகள், இயற்பியல் பிரிவில் நிகழாண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்சைச் சேர்ந்த ஜெனார்டு மோரூ, கனடா வைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக் லாண்ட் ஆகிய அந்த மூவரும், லேசர் சிகிச்சைகளுக்குப் பயன் படும் ஒளியியல் (ஆப்டிகல்) லேசர்களைக் கண்டுபிடித்தமைக் காக அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் குழு தெரிவித்ததாவது: அணுத் துகள்கள், வைரஸ்கள் மற்றும் உயிரணுக் களை அள்ளியெடுக்கும் ஒளி யியல் லேசரை கடந்த 1987-ஆம் ஆண்டு கண்டுபிடித்தமைக்காக, ஆர்தர் ஆஷ்கினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வெறும் கதிர்வீச்சை பயன் படுத்தி, பொருள்களை நகரச் செய்யும் அறிவியல் கனவை, அவரது அந்தக் கண்டுபிடிப்பு நனவாக்கியிருக்கிறது.

மேலும், அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த லேசர் அதிர்வுகளை உருவாக்கிய மோரூ மற்றும் ஸ்ட்ரிக்லாண் டுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவர்கள் இருவரும் உருவாக்கிய ஒளியியல் லேசர் கதிகள், கண் குறைபாடுகளை சரி செய்வதற் கான லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

ஆர்தர் ஆஷ்கின் (96)


பெல் லேபரட்ரீஸ், லூ ஸென்ட் டெக்னாலஜிஸ் ஆகிய வற்றில் பணியாற்றிய ஆர்தர் ஆஷ்கின், நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களி லேயே மிகவும் அதிக வயது டையவர் ஆவார். இதற்கு முன்னர், 90 வயதான லியோனிட் ஹுர்விச் கடந்த 2007-ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றதே சாதனை யாக இருந்து வந்தது.

ஜெனார்டு மோரூ (74)


பிரான்ஸில் உள்ள எகோல் பாலிடெக்னிக் மற்றும் அமெரிக் காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தில் பணியாற்றும் மோரூ, உலகின் மிக சக்தி வாய்ந்த ஈஎல்அய் லேசர் உருவாக்கத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

டோனா ஸ்ட்ரிக்லாண்ட் (59)

கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் டோனா ஸ்ட்ரிக்லாண்ட், ஜெனார்டு மோரூவின் மாணவி ஆவார். இயற்பியல் துறையில் கடந்த 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப் பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 3.10.18

காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றால்?வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம் என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று பரவியுள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத் தில் காற்றழுத்தம் மிக அதிகமாக இருக்கும். வேறி டத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம். காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக முக்கியம்.

வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவலகளை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு  Isobar என்று பெயர்.அருகே உள்ள படத்தில்  L என்ற Low எழுத்து   என்பதைக் குறிப்பதாகும். H என்பது  high என் பதைக் குறிப்பதாகும். ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை  என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கிய வையாக வருகின்றன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.

குரல் மூலம் கட்டுப்படும் கருவிகள்


அமேசான், தன் அலெக்சா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்து, பல கருவிகளை விற்பனை செய்து வருகிறது.

ஸ்மார்ட் ஸ்பீக்கர் வகை கருவிகளான, எக்கோ, டாட், ஷோ போன்ற கருவிகளுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள அமேசான், மேலும் சில சிறிய கருவிகளையும் வெளியிட்டுள்ளது.

வீட்டில் இருப்போரின் குரல் உத்தரவுகளை நிறைவேற்றும் அலெக்சா மென் பொருள் தான் இந்த கருவிகளின் அடிப்படை. வீட்டாரின் குரலுக்கு கட்டுப்படும், ஸ்மார்ட் பிளக்குடன் இணைந்துள்ள எந்த கருவியையும் முடுக்கவோ, அணைக்கவோ முடியும்.

- விடுதலை நாளேடு, 4.10.18