புதன், 10 அக்டோபர், 2018

இயற்பியல்: லேசர் சிகிச்சை முன்னோடிகள் மூவருக்கு நோபல் பரிசுஸ்டால்க்ஹோம், அக்.3 லேசர் சிகிச்சை முறைகளுக்கு முன் னோடியாகத் திகழும் மூன்று விஞ்ஞானிகள், இயற்பியல் பிரிவில் நிகழாண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்சைச் சேர்ந்த ஜெனார்டு மோரூ, கனடா வைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக் லாண்ட் ஆகிய அந்த மூவரும், லேசர் சிகிச்சைகளுக்குப் பயன் படும் ஒளியியல் (ஆப்டிகல்) லேசர்களைக் கண்டுபிடித்தமைக் காக அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் குழு தெரிவித்ததாவது: அணுத் துகள்கள், வைரஸ்கள் மற்றும் உயிரணுக் களை அள்ளியெடுக்கும் ஒளி யியல் லேசரை கடந்த 1987-ஆம் ஆண்டு கண்டுபிடித்தமைக்காக, ஆர்தர் ஆஷ்கினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வெறும் கதிர்வீச்சை பயன் படுத்தி, பொருள்களை நகரச் செய்யும் அறிவியல் கனவை, அவரது அந்தக் கண்டுபிடிப்பு நனவாக்கியிருக்கிறது.

மேலும், அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த லேசர் அதிர்வுகளை உருவாக்கிய மோரூ மற்றும் ஸ்ட்ரிக்லாண் டுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவர்கள் இருவரும் உருவாக்கிய ஒளியியல் லேசர் கதிகள், கண் குறைபாடுகளை சரி செய்வதற் கான லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

ஆர்தர் ஆஷ்கின் (96)


பெல் லேபரட்ரீஸ், லூ ஸென்ட் டெக்னாலஜிஸ் ஆகிய வற்றில் பணியாற்றிய ஆர்தர் ஆஷ்கின், நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களி லேயே மிகவும் அதிக வயது டையவர் ஆவார். இதற்கு முன்னர், 90 வயதான லியோனிட் ஹுர்விச் கடந்த 2007-ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றதே சாதனை யாக இருந்து வந்தது.

ஜெனார்டு மோரூ (74)


பிரான்ஸில் உள்ள எகோல் பாலிடெக்னிக் மற்றும் அமெரிக் காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தில் பணியாற்றும் மோரூ, உலகின் மிக சக்தி வாய்ந்த ஈஎல்அய் லேசர் உருவாக்கத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

டோனா ஸ்ட்ரிக்லாண்ட் (59)

கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் டோனா ஸ்ட்ரிக்லாண்ட், ஜெனார்டு மோரூவின் மாணவி ஆவார். இயற்பியல் துறையில் கடந்த 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப் பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 3.10.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக