புதிய கோள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய கோள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மார்ச், 2020

விண்வெளியில் புதியகோள் கண்டுபிடிப்பு

வாசிங்டன்,மார்ச் 2, பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான புதிய கோளை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  பூமியிலிருந்து 124 ஆண்டுகள் தொலைவில் உள்ள ரி2-18தீ  என்றழைக்கப்படும் எக்ஸோபிளானட் கோளானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது. இது பூமியை விட  பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது.

இந்த கோளானது ரி2-18 என்ற சிவப்பு நடசத்திரத்தை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிபகுதி நிலைகளும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் அய்ட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எக்ஸோபிளானட் ரி2-18தீ கோளானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 2.3. 20

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

73 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போலவே உள்ள 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு



பூமியை போலவே உள்ள 3 புதிய கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத் தகுந்த அளவிற்கு இந்த 3 கிரகங்களிலும் தட்பவெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரியனை நேரடியாக சுற்றி வரும் புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய 4 கோள்களை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, அய்ரோப்பியா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மய்யங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சூரிய குடும்பத்திற்கு வெளியே மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்ட நாசா அதற்காக டெஸ் எனப்படும் வெளிக்கோள்களை ஆய்வு செய்யும் செயற்கைக் கோளை கடந்த ஆண்டு விண்ணிற்கு அனுப்பியது. ஓராண்டு ஆய்விற்கு பிறகு பூமியை போன்று புதிதாக 3 கிரகங்கள் இருப்பதை இந்த செயற்கை கோள்கள் கண்டு பிடித்துள்ளது.  -

TOI-270 B, C,D என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகங்கள் பூமியின் அளவை விட 3. 5 எடை அளவு அதிகம் கொண்டது என தெரியவந்துள்ளது.

மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத்தகுந்த  அள விற்கு இந்த 3 கிரகங் களிலும் தட்ப வெப்பம் உள்ளதாகவும் தெரியவந்துள் ளது. இந்த செயற்கைகோள் மூலம் வானம் போன்ற படலங்கள் தென்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் 3 கிரகங்களில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை காண முடிகிறது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிரகங்களின் மேற்பரப்பு தண்ணீர் இருக்கும் அளவிற்கு குளிர்ச்சியாக இருப்பதாகவும், அய்ட்ரொஜன், அமோ னியா, ஹீலியம் போன்ற வாயுக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன.

வழக்கமாக பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என கணக்கிடப்பட்டு வரும் நிலையில், பூமியை இந்த புதிய 3 கிரகங்கள் 3 முதல் 11 நாட்களில் சுற்றி வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த 3 கிரகங்கள் இருப் பதாகவும் இது குறித்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 1.8.19