சனி, 15 ஆகஸ்ட், 2015

சந்திரனின் மறுபக்கம்: இருட்டான பகுதியைப் படம்பிடித்த நாசா


வெளிச்சம் நிறைந்த ஒரு பக்கம் மட்டுமே மனிதர்களால் பார்க்கப்பட்டு வந்த நிலையில், நாசாவின் டிஸ்கவரி செயற்கைக்கோளில் உள்ள கேமரா, சந்திரனின் மறுபக்கத்தில் உள்ள இருட்டான பகுதியை படம்பிடித்துள்ளது.
பூமியிலிருந்து 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்து வரும் இந்த செயற்கைக்கோளில் எபிக் என்ற கேமரா உள்ளது. இந்த நிழற்படக் கருவி சோதனைக்காக பல நிழற்படங்களை படம்பிடித்து அனுப்புவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி மதியம் 1.20 மணி முதல் 6.15 மணி வரை எடுக்கப்பட்ட காட்சிகளில் சந்திரனின் இருட்டான பகுதி படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை பூமியிலிருந்து பார்க்கவே முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காரணம் 'டைட்லி லாக்டு', அதாவது நிலவு தனது சுய அச்சில் சுழல்வதால் எப்போதும் அது பூமிக்கு  தன்னுடைய ஒரு பகுதியை மட்டுமே காட்டியபடி இருக்கிறது.  இதற்கு முன்னதாக, 1959 ஆம் ஆண்டு சென்ற சோவியத்தின் லூனா-3 விண்கலம் மட்டுமே நிலவின் மறு பக்கத்தை நிழற்படம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,7.8.15