தாவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 ஜூலை, 2022

உலகின் மிகப் பெரிய தாவரம் கண்டுபிடிப்பு!


ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கடலடியில் முளைத்து செழிக்கும் கடற்புல் தாவரத்தை ஆராய்ந்து வந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில், கடலின் ஆழத்தில் பல சதுர கி.மீ வளர்ந்து நிற்கும் ஒரு வகை புல் புதரின் பல்வேறு பகுதிகளை மாதிரி எடுத்து, மரபணு சோதனை செய்தனர். அபோது தான் அந்த அரிய உண்மை தெரிந்தது.

ஷார்க் வளைகுடா பகுதி என்ற பகுதியில், 200 சதுர கி.மீ., அளவுக்கு கடற்புல் வெளியாக படர்ந்திருக்கும் அத்தனை புல்லுமே, ஒரே விதையிலிருந்து முளைத்தவை. இதனால் தான், உலகின் மிகப் பெரிய தாவரம் என்று விஞ்ஞானிகள் அதை அழைத்தனர். மேலும், இந்த கடற்புல் புதரின் வயது 4,500 ஆண்டுகள் என்பது ஆய்வில் தெரியவந்தது.

வெள்ளி, 20 மே, 2022

நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!

         • Viduthalai


நாம் இருக்கும் இந்த புவியில் உயிரினங்களும், தாவர இனங்களும் செழித்து பெருகி இருக்க இயற்கை சூழ்நிலையே காரணமாகும். 

இதில் முதன்மையாக தாவர இனங்கள் வளர்வதற்கு அடிப்படையாக மண் தேவைப்படுகிறது.

புவியில் 118 வகையான தனிமங்களும் மற்றும் அதனால் உண்டான கலவைகளும், சேர்மங்களும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உயிரினங்களா லும், தாவரங்களாலும் உண்டான கரிம சேர்மங்களும் (அமினோ அமிலங்கள்) உள்ளன. இவற்றிற்கு பொது வான அறிவியல் பெயரும் இடப்பட்டுள்ளன.

இவற்றில் நம் புவியில் உள்ள மண்ணும் ஒரு தனிமம் தான். 

தாவரங்கள் வளர்வதற்கு மண் ஏதுவாக  இருக்கிறது. 

நிலவின் மண்ணை எடுத்து அதில் தாவரங்களை 'நாசா' அறிவியலாளர்கள் வளர்த்து உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

உண்மையில் தாவரங்கள் வளர மண் தேவையா?

தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மையாகும்.

தாவரங்கள் வளர ஊட்டச்சத்தும் நீரும், காற்றும் சூரிய ஒளியும் மட்டுமே இருந்தாலே போதும். மண் தேவையில்லை.

புவி மண்ணில் மேற்கண்ட அனைத்தும் கிடைப்பதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.

மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்) முறை என்றே ஒரு வேளாண்மை முறை உள்ளது. 

இதில் மண்ணை பயன்படுத்துவதில்லை, பெரும் பான்மையாக நீர் தான் பயன்படுகிறது.

அப்படி இருக்கும்போது நிலவில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த 'ரெகோலித்' என்ற ஊட்டச் சத்து இல்லாததாக சொல்லக்கூடும் மண்ணில், தாவரத்தை வளர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.

நிலவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த மண்ணில் ஊட்டச்சத்தும் நீரும் விட்டுதான் நாசா அறிவியலாளர்கள்  'அரபிடோப்சிஸ் தலியானா' என்ற கடுகு வகை செடியை வளர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த வகையான வியப்புக் குரிய செய்தியும் இருப்பதாக தெரியவில்லை! மண் ஒரு பிடிமானப் பொருள் அவ்வளவுதான்! தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மை!

-செ.ர.பார்த்தசாரதி, சென்னை

வெள்ளி, 6 மார்ச், 2020

சூழலியல் : இமயமலையில் தாவரங்களின் வளர்ச்சி விரிவடைந்துள்ளது - புதிய ஆராய்ச்சி


எவரெஸ்ட் மலைப்பகுதி உட்பட இமயமலையின் பல பகுதிகளில் தாவரங் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக் காட்டுகிறது.முன்பு தாவரங்கள் வளராத பகுதிகளில் கூட தற்போது செடிகள் நன்கு வளர்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்தி 1993இல் இருந்து 2018 வரை, தாவரங்களின் வளர்ச்சி பசுமையான பகுதிகளிலும் பனி படர்ந்த பகுதிகளிலும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஓர் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.இந்த ஆராய்ச்சி முடிவுகள் "குளோபல் சேஞ்ச் பயாலஜி" என்ற இதழில் வெளி யிடப்பட்டுள்ளன.நாசாவின் லேண்ட் சாட் செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து, நிலப்பகுதியின் பசுமை தன்மையை மதிப்பிட்டனர்.

இது குறித்து இமயமலையின் பனிப்பாறைகள் மற்றும் நீர் அமைப்புகள் தொடர்பாக பணிபுரியும் பிற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் தாவரங்களின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

''வெப்பமான மற்றும் ஈரமான பருவ நிலையில் என்ன நடக்குமோ அவ்வாறே இந்த ஆராய்ச்சியின் முடிவுகளும் உள்ளன. இயற்கையாக நிகழும் பருவநிலை மாற்றங்களும் ஆராய்ச்சி முடிவுகளும் பொருந்துகின்றன'' என இந்த ஆராய்ச்சி யில் ஈடுபடாத நெதர்லாந்தை சேர்ந்த பேராசிரியர் வால்டர் இம்மர்சீல் கூறுகிறார்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் பனிப் பொழிவு இல்லாத மாதங்களில் தாவரங்கள் வளர நல்ல சூழல் அமைகிறது. மேலும் பனிபொழிவு ஏற்படும் மிக முக்கியமான உயரத்தில் தாவரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த மாற்றத்திற்கான காரணங்கள் ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை. இமய மலையின் சுற்றுசூழல் அமைப்பை பொறுத்தவரை பருவநிலை மாற்றத்தால் அங்கு தாவரங்கள் பாதிக்கப்படும் என வேறு ஆராய்ச்சிகள் சில கூறுகின்றன.'' வெப்பநிலை அதிகரிக்கும் போது நேபாளம் மற்றும் சீனாவின் நிலப்பகுதிகளில் மரங்கள் வளர்ச்சி விரிவடைவதைக் காணமுடியும்'' என நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை பேராசிரியர் அச்யூத் திவாரி கூறுகிறார்.

குறைந்த உயரத்தில் உள்ள மரங்களுக்கு என்ன நடக்கிறதோ, அதேதான் வெப்பநிலை அதிகரிக்கும்போது உயரத்தில் உள்ள மரங்களுக்கும் நிகழும்.இமய மலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வேறு சில விஞ்ஞானிகளும் தாவரங்களின் பரவல் விரிவடைந்திருப்பதைக் காட்டும் இந்த புகைப்படத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இமயமலையில் ஒரு காலத்தில் பனிப்பாறைகள் நிறைந்த இடங்களில் கூட தற்போது பசுமையாக செடிகள் வளர்ந்துள்ளன என தாவர சூழலியலாளர் எலிசபெத் பெயர் தெரிவித்துள்ளார்.பல ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த பனிப் பாறைகள் இருந்த சில இடங்களில், இப்போது குப்பைகள் மூடப்பட்ட நிலையில் கற்பாறைகள் உள்ளன, அவற்றில் பாசிகள் மற்றும் பூக்கள் கூட காணப்படு கின்றன.இந்த ஆராய்ச்சியின் மூலம் , பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவது தாமதமாகுமா அல்லது பனிப்பாறைகள் மிக விரைவாக உருகுமா என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது? " என்று ஆண்டர்சன் கூறுகிறார்.ஆனால் எட்டு நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் ஹிந்து குஷ் இமயமலையை, 140 கோடி மக்கள் தண்ணீர் தேவைக்காக சார்ந்து வாழ்கின்றனர்.

- விடுதலை ஞாயிறு மலர் 22 2 20

வியாழன், 5 மார்ச், 2020

பூச்சிகளை உட்கொள்ளும் தாவரம்!

பூச்சியுண்ணும் தாவரங்கள் ஊனுண்ணித் தாவரங்கள்  என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சிறு விலங்குகள், பூச்சிகள் அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள் வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன. இத்தா வரங்கள் பெரும்பாலும்  பூச்சிகளையும் கணுக் காலிகளையுமே குறிவைக்கின்றன. பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏற்றபடி இத்தாவரங்கள் சிறப் பான வடிவங்கள் மற்றும் பாகங்களைப் பெற்றுள்ளன.

இத்தாவரங்களின் இலைகள் அல்லது இலைகளின் பகுதிகள் இந்த சிறப்பு அமைப்பு களைப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒரு வகையான செரிப்பு நீர் சுரந்து பூச்சிகளைச் செரித்துவிடுகிறது.

ஜாடிச் செடிகளில் ஒரு வகையான திரவம், தண்ணீர் உள்ளது. இதில் விழும் பூச்சிகளைத் தாவரம் சீரணித்துக்கொள்கிறது. பொதுவாக ஊட்டச்சத்துகள் (குறிப்பாக நைட்ரஜன்) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் வளர்கின்றன.

எனவே, பூச்சிகளின் உடலிலுள்ள புரதத்திலிருந்து நைட்ரஜனை  பெறுகின்றன.

ஹூக்கர் என்ற தாவரவியல்  அறிஞர் பூச்சிகளைச் செரிப்பது என்பது  விலங்குகளைப் போல தாவரங்களிலும் நடக்கிறது.

மனிதனில் வயிற்றில் சுரக்கும் நொதிகள் போல தாவரங் களிலும் சுரக்கிறது என்றார்.

பூச்சி உண்ணும் தாவரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவ்வகைத் தாவரங்கள் ஆறு குடும்பங்களை உள்ளடக்கி 16 பேரினத் துடன் சுமார் 450 வகைச் செடிகளையும், 30-க்கு மேற்பட்ட கலப்பினச் செடிகளையும் கொண் டுள்ளது.

இந்தியாவில் மூன்று குடும்பங்களும், நான்கு பேரினங்களும் 39 வகைச் செடிகளும் உள்ளன. இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிகவும் வியப்பானவை.

செரிக்க வைக்கும் நொதி அல்லது பாக்டீரியா ஆகியவற்றைக்கொண்ட உருண்டை இலைகள் மூலம் பிடித்தல்; பசை போன்ற நீர்மத்தை இலையில் கொண்டிருப்பதன் மூலம் இலையின் மீது அமரும் உயிரைப் பிடித்தல்; இலைகளை வேகமாக அசைத்துப் பிடித்தல்; வெற்றிடத்தை ஏற்படுத்தி இரையை உறிஞ்சிப் பிடித்தல்; செரிமான உறுப்புக்கு இரையைச் செலுத்தும் வண்ணம் உள்

நோக்கிய முட்களைப் பயன்படுத்திப் பிடித்தல் போன்ற வகைகளில் பூச்சிகளை உண்ணுகின்றன.

- விடுதலை நாளேடு 5.3.20