வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தாவரவியலின் முன்னோடி!

மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் உணர் வுகள் உண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மதிப்பவர்கள் வள்ளலார் போன்ற சிலரே!
மனிதர்கள் தங்களது ஆரம்ப காலத்திலிருந்து தாவரங் களைச் சார்ந்திருக்கிறார்கள். உணவாகவும் மருந்தாகவும் உடலை மறைக்கவும் எனத் தாவரங்கள் பலவிதங்களில் மனிதர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன.

உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற, மருத்துவக் குணங்களைக் கொண்ட தாவரங்கள் பலவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பாதுகாக்க, இந்தியாவில் ஒரு பெண் பெருமுயற்சிகளை மேற்கொண்டார். அதுவும் நாடு விடுதலை அடைந்து சுதந்திர இந்தியாவாகத் திகழ்ந்த 
50-களில்! அவர் ஜானகி அம்மாள். 

அவருடைய தந்தை இ.கே.கிருஷ்ணன் தலசேரியில் துணை நீதிபதியாகப் பணியாற்றினார். இயற்கை மீது அவருக்கிருந்த காதலால், தன்னுடைய வீட்டில் பல வகையான தாவரங்களைக் கொண்ட தோட்டம் ஒன்றைப் பராமரித்துவந்தார். அவர் மூலமாகவே ஜானகிக்கும் தாவரங்கள் மீது ஈர்ப்பு வந்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்றார் ஜானகி. பிறகு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சில காலம் அங்கேயே ஆசிரிய ராகவும் பணியாற்றினார். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து, தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில், தாவரவியல் துறையில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற இந்தியப் பெண், அநேகமாக ஜானகியாகவே இருப்பார்! 

இன்று நாம் உண்ணும் இந்திய கரும்பில் இனிப்பு இருப்பதற்குக் காரணம் ஜானகி அம்மாள்தான். 1934 முதல் 1939-ஆம் ஆண்டுவரை கோவையில் உள்ள கரும்பு நிறுவனத்தில் மரபணுவியலாளராகப் பணியாற்றினார். ஹைபிரிட் வகைக் கரும்புப் பயிர்களை அவர் உருவாக்கினார். அதற்கு முன்புவரை இனிப்புச் சுவையுள்ள கரும்புகளை இந்தியா, ஜாவா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்துவந்தது.

ஒரு பெண்ணாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவராகவும் இருந்த ஜானகிக்கு அந்த நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் துன்பங்கள் நேரிட்டன. எனவே அங்கிருந்து விலகி, 1940 முதல் 1945-ம் ஆண்டுவரை லண்டனில் உள்ள ஜான் இன்னேஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் உயிரணுவியலாளராகப் பணியாற்றினார். பிறகு இங்கிலாந்தின் விஸ்லி பகுதியில் இருந்த ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் மக்னோலியா எனும் ஒருவகைத் தேயிலைத் தாவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் காரணமாக, அந்தத் தாவரத்தின் இன்னொரு வகைக்கு மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தான், சி.டி.டார்லிங்டன் எனும் பிரபல உயிரியலாளருடன் இணைந்து தி குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டி வேடட் பிளாண்ட்ஸ் எனும் புத்தகத்தை எழுதினார்.

ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஜானகி அம்மாளுக்கு, அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் (பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா) அமைப்பைத் திருத்தி அமைக்க அழைப்பு விடுத்தார். 1951-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த அவர், மரபுசார் தாவரவியல் அல்லது இனக்குழு தாவரவியல் என்று பொருள்படும் எத்னோபாட்டனி ஆய்வுகளை முதன்முதலாக முன்னெடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக 1956-ம் ஆண்டு சிகாகோவில் நடந்த பூமியில் ஏற்படும் மாற்றத்தில் மனிதனின் பங்கு எனும் மாநாட்டில், பழங்குடி மக்களின் மரபு அறிவைப் பற்றிக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

1970-ம் ஆண்டு சென்னைக்குத் திரும்பிய அவர், தனது இறுதிக் காலத்தை மதுரவாயலில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மய்யத்தின் கள ஆய்வுக்கூடத்தில் கழித்தார். அங்கு, மருத்துவக் குணங்கள் கொண்ட தாவ ரங்களை உடைய தோட்டம் ஒன்றை அவர் பராமரித்து வந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது 1984-ம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று இயற்கை எய்தினார். தாவரவியல் ஆராய்ச்சியுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல், கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட் டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர். 

அவரின் நினைவாக 2000-ஆம் ஆண்டிலிருந்து தாவரவியல், விலங்கியல் வகைப்பாட்டியலில் சிறந்து விளங்குபவர்களுக்கு, இ.கே.ஜானகி அம்மாள் வகைப் பாட்டியல் தேசிய விருது வழங்கப்படுகிறது. அதைச் சிரத்தையாகச் செய்த அரசு, அவரின் கடைசி காலத்தில் அவர் பணியாற்றிய மதுரவாயல் ஆய்வுக்கூடத்தை மறந்துவிட்டது. அங்கு அவர் வளர்த்த தோட்டம் இன்று பராமரிப்பின்றிப் புல்லும் பூண்டும் மண்டிப் புதராகக் காட்சியளிக் கிறது. அந்த ஆய்வுக்கூடக் கட்டிடங்கள் பாழடைந்துகிடக்கின்றன. ஆனால் அதே நேரம், ஜம்முவில் அவரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜானகி அம்மாள் மூலிகைப் பூங்கா போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. வடக்கில் வாழ்கிறது தெற்கில் அழிகிறது!

-விடுதலை,17.8.17

புதன், 16 ஆகஸ்ட், 2017

உயிரின படிம வளர்ச்சி

ஒரு பகிர்வுப் பதிவு
********************
உலகில் உள்ள சுமார் 2 கோடி உயிர் இனங் களில் ஒரே யொரு ஒற்றை இனம் தான் ஹோமோ சேபி யன்ஸ் எனப்படும் நமது மனித இனம் என்பது உண்மை. எனவே உலகில் உள்ள சுமார் 700 கோடி மனிதர் களும் ஒருவரே.

இன்றைய உலகில் விஞ்ஞானம்மிக மிக வளர்ந்திருக்கிறது. சரி! விஞ்ஞானப்பூர்வ மனோ பாவம் அதே அளவு வளர்ந்திருக்கிறதா? இல்லை! அதுவும் இந்தியா போன்ற பழம்பிரதேசங்களில் மூட நம்பிக்கைகள் கொடிகட்டி பறப்பதை கண்கூடாகவே காண முடிகிறது. நமது நாட்டில் மெத்தப் படித்த பலமேதாவிகள் கூட சூரியனையும் சேர்த்துத்தான் “நவக்கிரகம்” என்று நம்புகிறார்கள்! வழிபடுகிறார்கள்! ஆனால் உண்மை அதுவா? இல்லை! சூரியன் ஒரு நட்சத்திரம்! அதேபோல “ராகுகால” நம்பிக்கை! பூமத்திய ரேகையையொட்டி பூமியின் சுற்றளவு சுமார் 40ஆயிரம் கிலோ மீட்டர். அந்த தூரத்தை 24 மணி நேரத்தில் பூமிதன்னைத்தானே சுற்றுவதன் மூலமாக கடக்கிறது என்றால், ஒரு நிமிடத்தில் அது கடக்கும் தூரம் சுமார் 27 கி.மீ.மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழல்வதால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் கொல்கத்தாவிற்கும் தொடர்ந்து வரும் மும்பைக்கும் உள்ளகால வித்தியாசம் ஒரு மணி நேரம்.அதே போல் சென்னைக்கும் நீலகிரிக்கும்உள்ள நேர வித்தியாசம் 15 நிமிடங்கள். இதில் ராகுகாலம் என்று நாம் குறிப்பிடும் ஒன்றரை மணி நேர காலவரம்பு சென்னைக்கும் நீலகிரிக்கும் எப்படி ஒரு சேரப் பொருந்தும்?

அதே போல நட்சத்திரங்கள் பற்றிநம்முடைய பஞ்சாங்கங்கள் குறிப்பிடும்செய்தியும் கணிப்பும் அறிவியல் பூர்வமற்ற அப்பட்டமான கேலிக்கூத்துகளே! “அம்மாவின் புடவையை மடிக்க முடியாது அப்பாவின் சில்லறையை எண்ணமுடியாது! அது என்ன?” என்ற விடு கதைக்கு விடையாக “வானத்தையும் நட்சத்திரத்தையும்” குறிப்பிடுவார்கள். அதையேஇன்றைய விண்ணியற்பியல் விஞ்ஞானம்பொய்யாக்கிவிடும் போலும்! பிர பஞ்சத்திலுள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1019 (லட்சம் கோடி கோடி)என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக் கிறார்கள். அதில் ஒரு 27 நட்சத்திரங் களையும் இல்லாத ராகு, கேது உள்ளிட்ட சில கிரகங்களையும் வைத்துக்கொண்டு நம்முடைய பிறப்புக்கும் அவைகளுக்கும் ஒரு முடிச்சு போடுகிறார்கள் நம் ‘‘பெரியவர்கள்’’ “விண்வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் இவற்றுக்கும் மனித வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

ஆகவே ஜோதிடம் என்பது விஞ்ஞான பூர்வமற்ற ஒரு அபத்தமே!” என்றுஆணி அடித்தாற்போல தெளிவுபடுத்தி யவர்தான் அண்மையில் நோபல் பரிசுபெற்ற அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டும்! அந்த ஜோதிடத்தை, விஞ்ஞானப் பூர்வமானது என்று நிரூபிப்பதற்கும் பல்கலைக்கழகங்களில் ஒருபாடமாக வைப்பதற்கும் வளர்ப்பதற்கும் இன்று  எவ்வளவு போராட்டங்கள் என்ப என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.பூமியிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனிடமிருந்து வெளிச்சம் நமக்கு வந்து சேர எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் 8 நிமிடங்கள். அப்படியென்றால் நம்மை அடைய சுமார் 4 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் வெளிச்சத்தை தரும் “பிராக்சிமா சென்டூரி” என்ற நட்சத்திரம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்.

இத்தனைக்கும் அந்த நட்சத்திரம்தான் சூரிய குடும்பத்துக்கு மிகமிக அருகில் இருக்கும் நட்சத்திரம். இதுபோன்ற விஷய ஞானமோ, நட்சத்திரம் என்பது அடிப்படையில் ஒரு நெருப்புக்கோளம் என்ற தெளிவோஇல்லாமல், நமது முன்னோர்களில் சிலர், அவர்களுக்கு வாய்த்த அரைகுறையான அறிவைக் கொண்டு கற்பிதம் செய்து வைத்ததை இந்த விஞ்ஞான யுகத்தில் நாம் ஏற்பது எப்படி சரியாகும்?இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் படிக்காதவர்களிடம் மட்டுமல்ல படித்தவர்களிடமும் இருக்கிறது. படிப்புக்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு கல்வி முறைதான் நமது நாட்டில் நடப்பிலுள்ளது. ஆன்மீகக்கருத்துகளுக்கு இடம் தருகிற பாட நூல்கள் ஏன் நாத்திகக் கருத்துகளுக்கு இடம்தரக்கூடாது? அப்படி இடம் தந்தால்ஒரு இருபதே ஆண்டுகளில் இந்த சமுதாயத்தை விஞ்ஞானப் பூர்வமாகச்சிந்திக்கிறமனித நேயப் பொதுவுடைமைச் சமுதாயமாக மாற்றிக்காட்ட முடியும். அந்த அடிப்படையில் இருபத் தோராம் நூற்றாண்டில் பயணம் செய்யும் மனித சமுதாயத்துக்கு ஒரு பத்து கேள்வி பதில்கள் தேவையான சிந்தனைத் தெளிவைத் தரக்கூடும்.

1. நாம் வாழும் இந்த பூமியின் வயது என்ன? 460 கோடி ஆண்டுகள்.

2. முதல் உயிரினம் முதன் முதலாக பூமியில் எப்போது தோன்றியது?(சைனோ பைட்டா பாசி போன்றது) 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக.

3. கடவுள் தான் மனிதனை படைத்தார்என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.மனிதன் திடீரென்று படைக்கப்பட்ட வனல்ல பரிணாம வளர்ச்சிப்படி உருவானவன் என்று டார்வின் கொள்கை கூறுகிறது! இரண்டில் எது சரி?டார்வின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையே சரி. சைனோ பைட்டா பாசி போன்ற முதல் உயிரிலிருந்து“நீர்வாழ் உயிர்கள்” தோன்றின.நீர்வாழ் உயிரினங்களிலிருந்து “நில நீர் வாழ்வன” தோன்றின. நிலநீர் வாழ்வன உயிரினத்திலிருந்து “ஊர்வன” தோன்றின. இவ்விரண்டுஇனங்களுக்கும் இணைப்பாக தண்ணீர்ப்பாம்பு, ஆமை போன்றவற்றை குறிப்பிட லாம். ஊர்வன உயிரினங்கள் “பறப்பன” வாக பரிணாம வளர்ச்சி அடைய இணைப்பாக உருவான உயிரினம் பறக்கும் பல்லி!

அதேபோல் “பறப்பன” உயிரினம்“பாலூட்டி” இனமாக வளர்ச்சியுற்ற போதுஇணைப்பாகத் தோன்றிய உயிரினம் வவ்வால்கள் எனலாம். ஏனென்றால் வவ்வால்கள் பறக்கவும் செய்யும் குட்டிபோட்டு பால் கொடுக்கவும் செய்யும்;அந்த பாலூட்டிகள் இனத்தில் பலப் பல உயிர்கள்தோன்றிய பிறகு நாம் “ஹோமோ சேபியன்ஸ்” தோன்றினோம். இப்படி டார்வின் முன்வைத்த“பரிணாம வளர்ச்சிக் கொள்கை” நிரூபணமானதொரு உண்மை. ஆனால் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று மதங்கள் காலங்காலமாகச் சொல்லி வருவது விஞ்ஞானப்பூர்வமாக எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படாத அப்பட்டமான கற்பனையே!

4)டார்வின், வாலஸ் போன்றோர் முன்வைத்த பரிணாம வளர்ச்சிக் கொள்கைப்படி நம்மிலிருந்து (ஹோமா சேபியன்ஸ்) ஏன் புதிதாக ஒரு இனம் தற்காலத்தில் தோன்றவே இல்லை?

பரிணாம வளர்ச்சி மாற்றம்என்பது நீண்டகால இடைவெளியில் தேவைகளின் நிர்ப்பந்தத்தால் நிகழ்வது! உதாரணமாக 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியகொரில்லா இனத்திலிருந்து உயிரியல் ரீதி யாக கொஞ்சமே வேறுபடும்சிம்பன்சி இனம் தோன்ற காலம்எடுத்துக் கொண்ட இடைவெளி ஆண்டுகள் 25 லட்சம்! ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனத்தின் முன்னோடி இனமான “ஹோமோ எபிலிஸ்” 17.5 லட்சம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய“ஹோமோ எரக்டஸ்” - அந்த இனத்திலிருந்து பரிணாமம் பெற்ற நாம் அதாவது “ஹோமோ சேபியன்ஸ்” தோன்றி5 லட்சம் ஆண்டுகள் கூட முடியவில்லை. ஆகவே “ஹோமோசே பியன்ஸ்” எனப்படும் நமது மனிதஇனத்திலிருந்து புதிதாக ஒரு வளர்ந்த இனம் பரிணாமம் பெறசில லட்சம் ஆண்டுகள் ஆகக் கூடும்.

ஆனால் பாலின செல்களில் (செக்ஸ் செல்கள்) இருந்து உயிர்கள் தோன்றுவதற்கு மாறாக உடல் செல்களிலிருந்தே (சோமாடிக் செல்கள்) உயிர்களை இனப் பெருக்கம் செய்யும் “குளோனிங் முறை” போன்ற மரபணுவியல் விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சி இயல்பாக நடக்க வேண்டிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை அதன் போக்கில் விடாமல், மனிதஇனமாகிய நாமே வெகு வேகமாக முந்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதை மறந்து விடக்கூடாது!

5) சுமார் 360 கோடி ஆண்டுக்கு முன்னால் தோன்றியது போல் புதிதாக ஒரு உயிரினம் பூமியில்இன்று ஏன் தானாகத் தோன்ற வில்லை? (இனப்பெருக்க முறை யில் மட்டும்தானே தோன்றுகிறது?)இந்த பூமியில் முதல் உயிரி தானாக தோன்றிய போது காற்று மண்டலத்தில் ஹைட்ரஜன், நைட் ரஜன், கரியமில வாயு, மீத்தேன் போன்ற வாயுக்கள் இருந்தன. ஆக்சிஜன் மட்டும் கொஞ்சம் கூட கிடையாது. ஆனால் இப்போது ஆக்சிஜன் இருக்கிறது.

அது உயிரி தோற்றத்தை முற்று முழுதாகத்தடுத்து விடுவதால் புதிய உயிரினம் தானாகத் தோன்றவில்லை. (அல்டேன்/ஒபரின், மில்லர்/ஊரே ஆய்வுகள்) இனப்பெருக்க முறையில் மட்டுமே தோன்றுகிறது!

6. சூரியன் என்பது யாது?13 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கிவிடும் விஸ்தாரமான பரும அளவு கொண்ட ஒரு நட்சத்திரம். ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்கள்கொண்ட நெருப்புக்கோளம். உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கு மான மூலசக்தி! அதன் உட்புற வெப்பநிலை லட்சம் டிகிரி சென்டி கிரேடு. வெளிப்புற வெப்ப நிலை 6000. இந்த மாபெரும் நெருப்புக்கோளமான சூரியனை பகவானாக்கிசூரிய வாகனத்தை குதிரைகள் இழுத்து செல்லும் புராண அபத்தத்தை என்னவென்று சொல்ல?

7.விண்வெளியிலுள்ள மொத்த நட்சத்திரம் எத்தனை?10இன் மடங்கு 19 நட்சத்திர ங்கள். (லட்சம் கோடி கோடி நட்சத்திரம்) எண்ணிப் பார்க்கவே நமக்கு தலை சுற்றவில்லையா? 8. பூமியில் உள்ளது போல் வேறுகிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா?வாழலாம்.

கோடி நட்சத்திர த்திற்கு ஒரு கிரகம் இருந்து, அதில்உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால் கூட லட்சம் கோடி கிரகங்களில் (10ன் மடங்கு 12) பூமியைப் போல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதைக் கண்டறிய நமது விஞ்ஞானம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.

9. பிரபஞ்சத்திற்கு எல்லை கண்டறியப்பட்டுள்ளதா? ஏறக்குறைய 1250 கோடி ஒளிஆண்டுகள் தூரம் பிரபஞ்சத்தின் எல்லை என்று டாஃப்ளர் விளை வின்படி கணித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். அதாவது பூமி தோன்று வதற்கும் (460 கோடி ஆண்டுகள்) முன்னால் பிரபஞ்சத்தின் ஒரு முனையிலிருந்து புறப்பட்ட வெளிச்சம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் பயணம் செய்துகூடஇன்னும் நம்மை வந்தடைய வில்லை. அதாவது ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 10 லட்சம் கோடி கி.மீ. அப்படியென்றால் பிரபஞ்சத்தின் எல்லை சுமார் 1250 கோடி ஒளி ஆண்டுகள் தூரம்.

அதாவது சுமார் 125 கோடி கோடி கோடி கி.மீ. இதைவிட நமக்கு ஆச்சரியம் தரும் விஷயம் வேறெது? சிந்தித்து பாருங்கள்! அந்த பிரபஞ்சத்திற்கும் அப்பால்என்ன என்று ஒரு கேள்வி போட்டால் தலை சுற்றலைத் தவிர எதுவுமே மிஞ்சாது!

10. மறுபிறப்பு என்பது உண்டா?இதயம், கார்னியா (கண்), சிறுநீரகம், கல்லீரல் போன்ற மாற்றக் கூடிய உடல் உறுப்புகளை - இல்லாதவர்களுக்கு, பழுதடைந்தவர் களுக்கு தானம் செய்பவர்கள்தான் மறுபிறப்பு அடைபவர்கள் எனச்சொல்லலாம். மற்றபடி மறுபிறப்புஎன்பதெல்லாம் வெறும் கற்பனை தான்!இவை போன்ற அடிப்படை யான, தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகளை ஒவ் வொரு மனிதனும் கட்டாயம் அறியச்செய்ய வேண்டும். ஆனால், இன்று விஞ்ஞானப்பூர்வ மனோபாவத்துக்கு நேர் எதிரான புராணக் குப்பைகளை பாடத் திட்டங்களில் புகுத்தும் ” கல்வித்திட்டத்தை யல்லவா நடைமுறைப்படுத்த எத்தனிக்கிறது?

நமது மனித இனம் “ஹோமோ சேபியன்ஸ்” மிகச் சரியாக 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக் காவில் தோன்றி 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் குடிபெயர்ந்தது என்பதை மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் இவைகளை “ஐசோடோப் டேடிங்” முறையில் ஆய்வு செய்து தெளிவாக கணக்கிடுகிறது இன்றைய நவீன விஞ்ஞானம்! ?

நன்றி

அம்மாவின் புடவையும், அப்பாவின் சில்லறையும்!

ஆரணி மு. பாண்டியன் நெடுஞ்செழியன்

-முகநூல் பதிவு(இராமன் சம்பத்,16.8.17)