வெள்ளி, 30 மார்ச், 2018

செவ்வாய் கிரகத்தில் விலங்குகளின் மந்தை! அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம்


செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான உயிரி னங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரி னங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 2 ஆண்டுகளுக்கு முன்பு, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், மாஸ்ட்கேம் என்ற கேம ராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோவர் விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி  பல்வேறு விதமான யூகங்களையும்  வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள்  மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது

இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது,  இது செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதரா மாகும். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க் கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன். என கூறினார்.

இந்த படத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆராய்ந் தேன், பூமியின் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளுடன் அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த படங்கள் அனைத்தும் குறைந்த ரிசுலேசன் கொண்டதாகும். இருந்தாலும் இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகள் பார்க்க முடியும்,   ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள் நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்.

-  விடுதலை நாளேடு, 30.3.18

புதன், 21 மார்ச், 2018

ஸ்டீபன் ஹாக்கிங் - புரட்சிகர விஞ்ஞானி

பேரா. சோ.மோகனா

மாநிலத் தலைவர்,



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிரபஞ்சம் பற்றிய புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்த 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானி - முற்போக்கு சிந்தனையாளர். தமது அறிவியல் கருத்துக்களை ஆதாரத்தோடு ஆணித்தரமாகக் கூறிய மாற்றுத் திறனாளி - முனைவர் ஸ்டீபன் ஹாக்கிங், இப்போது நம்மிடையே இல்லை. அவரது புரட்சிகர அறிவியல் மூளை, 2018, மார்ச் 14 அன்றோடு தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டது.

அவருக்கு உலகத்தின் சார்பில் வீரவணக்கம்.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். இவர் இங்கிலாந்தின் மிகப் பெரிய கோட்பாட்டியல்/கருத்தியல் இயற்பியல் விஞ்ஞானியும், பிரபஞ்சவியல் விஞ்ஞானியுமாவார். அவரது அறிவியல் புத்தகங்கள் மற்றும் அவர் பொது இடங்களில் பேசும் தன்மை அவரைப் பெரிய புகழ் பெற்ற கல்வியியலாளராக்கிவிட்டது. அவரது கல்வித் தகுதிகள் சிபி, சிஙிணி, திஸிஷி, திஸிஷிகி   என்பதாகும். கலை களுக்கான ராயல் சங்கத்தின் கவுரவ உறுப்பினராக (பிஷீஸீஷீக்ஷீணீக்ஷீஹ் திமீறீறீஷீஷ் ஷீயீ லீமீ ஸிஷீஹ்ணீறீ ஷிஷீநீவீமீஹ் ஷீயீ கிக்ஷீ) இருக் கிறார். அமெரிக்க அய்க்கிய நாட்டின் மிகப்பெரிய குடியுரிமை விருதான சுதந்திரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் 2009இல் பெற்றுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியராக (லிநீணீவீணீஸீ றிக்ஷீஷீயீமீஷீக்ஷீ ஷீயீ விணீலீமீனீணீவீநீ)  பணிபுரிந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் 1979இல் பணிக்கு சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், அங்கு சுமார் 30 ஆண்டுக்காலம் பணியாற்றினார். பின்னர் தனது 67ஆம் வயதில், 2009இல் பணி மூப்பு பெற்றார். சர் அய்சக் நியூட்டனுக்குப் பின், பெருமைமிக்க இந்தப் பொறுப்பு வகிப்பவர் இவரே. இப்போதும் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் செயல்முறைக் கணிதவியல் மற்றும் கோட்பாட்டியல்/கருத்தியல் இயற்பியல் துறையின் கோட்பாட்டியல்/கருத்தியல் பிரபஞ்சவியல் மய்யத்தின் ஆராய்ச்சி இயக்குநராக பதவி வகித்து வந்தார். உலகின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மய்யங்களின் கவுரவ விஞ்ஞான பதவிகளை வகித்து வந்தார்.

'ஹாக்கிங் கதிர்வீச்சு'

பிரபஞ்சவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்புவிசை துறைகளில் ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். குறிப்பாக, புரிந்து கொள்ளவே கடினமான கருந்துளை பற்றிய தகவல்களைச் சொன்னவரும் ஸ்டீபன் ஹாக்கிங்தான். "காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் " (கி ஙிக்ஷீவீமீயீ பிவீஷீக்ஷீஹ் ஷீயீ ஜிவீனீமீ) என்ற உலகப்புகழ்பெற்ற நூலை, பலரும் வியக்கும் வண்ணம் பலருக்கும் புரியும்படி மிக எளிமையாக எழுதியதும் இவரே.

கருந்துளையிலிருந்து கதிர்வீச்சு வருகிறது என அறுதியிட்டு தகவல் தந்தவரும் ஹாக்கிங்தான். எனவே அது "ஹாக்கிங் கதிர்வீச்சு" என்றே அழைக்கப்படுகிறது.

கல்வியில் மோசம் என்று கணிக்கப்பட்ட மாணவர்

இத்தனை பெருமைகளையும் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்த தினம் 1942, ஜனவரி 8ஆம் நாள். ஹாக்கிங்கின் பிறப்பில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா? கலிலியோவின் 300ஆவது நினைவு தினத்தன்று பிறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். ஹாக்கிங்கின் தந்தை டாக்டர் பிரான்க் ஹாக்கிங் ஓர் உயிரியல் ஆராய்ச்சியா ளர். தாயின் பெயர் இசபெல் ஹாக்கிங். ஸ்டீபன் ஹாக்கிங் இவர்களின் முதல் குழந்தை. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலம். எனவே ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றோர் ஜெர்மனியின் குண்டு வீச்சுக்குப் பயந்து வட லண்டனிலிருந்து, கேம்பிரிட்ஜுக்கு இடம் பெயர்ந்தனர். ஹாக்கிங்குக்கு இரு சகோதரிகளும், ஒரு தத்து சகோதரரும் இருந்தனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் தனது பத்தாவது வயதுவரை பெண்கள் பள்ளியிலேயே படித்தார். அவருக்கு அறிவியலில் அதீத ஈடுபாடு இருந்தது. அவரின் ஈர்ப்பு சக்தியாய் இருந்தவர் ஹாக்கிங்கின் கணித ஆசிரியர் டீக்ரன் தாஹ்த (ஞிவீளீக்ஷீணீஸீ ஜிணீலீணீ) என்ற அர்மீனிய ஆசிரியரே. துவக்கத்தில் அரசின் உதவித் தொகையில் உயிரியல் படித்தார். பின்னர் இயற்பியல் படித்தார். ஆக்ஸ்போர்டில் பி.ஏ பட்டம் 1962இல் பெற்றதும், அங்கேயே தங்கி வானவியல் படித்தார். பின்னர் சூரியப் புள்ளிகள் பற்றியும், கோட்பாட்டியல் வானவியல் மற்றும் பிரபஞ்சவியல் பற்றிப் படித்தும் ஆராய்ச்சியும் செய்தார்.

இங்கே ஒரு ஆச்சரியமான தகவலை குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங், 9ஆவது வயது வரை மிக மோசமான மாணவராக கணிக்கப்பட்டார். ஆனாலும் கூட அவரின் சில ஆசிரியர்கள், அவர் மிகப்பெரிய மேதையாக வரலாம் என்றும் கணித்தனர். அது உலகை வியப்பில் ஆழ்த்தும் என்றும் கூறினர். ஹாக்கிங்கின் இளமைக் காலத்தில் அவரது பட்டப் பெயர் அய்ன்ஸ்டீன் என்பதாகும். இது கொஞ்சம் வியப்பான தகவல்தான்.

மூளை மட்டுமே மிஞ்சியது

ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு 21 வயதாகும்போது, அவருக்கு நரம்பியல் நோய் பாதித்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக கை, கால் மற்றும் குரலை செயலிழக்கச் செய்தது. மூளையைத்தவிர வேறு எதுவும் பெரிதாக செயல்படவில்லை. அந்த நோயின் பெயர்   கினீஹ்ஷீக்ஷீஷீஜீலீவீநீ லிணீமீக்ஷீணீறீ ஷிநீறீமீக்ஷீஷீவீ (கிலிஷி).  அதன் பின் அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்தனர். அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி, அதன்பின் ஸ்டீபன் ஹாக்கிங் இன்னும் 50 ஆண்டுகள் வாழ்ந்தது மட்டுமின்றி பல உலக சாதனைகளையும் சாதித்து பெருமை தேடினார்.

ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இந்த நோய் வரும் முன்பு இளம்வயதில், மிகவும் தைரியம் மிக்க சவால் குணம் நிறைந்தவர். ஆக்ஸ்போர்டு படகுக் குழுவின் மிக முக்கிய உறுப்பினராக இருந்தார்; அதில் பெருமை யும், புகழும் பெற்றவர்.

"நான் இறப்பைப் பற்றி கவலைப்படவில்லை.கடந்த 55 ஆண்டுகளாக அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் சீக்கிரம் சாக விரும்பவில்லை. எதிலும் முதன்மையானவனாக இருக்கவே விரும்பு கிறேன்" என்று சமீபத்தில் சொல்லியிருந்தார் ஹாக்கிங். அதன்பின் அவருக்கு நிமோனியா நோய் தாக்கி, மிகவும் அபாய கட்டத்தில் இருந்தார். பிறகு அவருக்கு குரல்வளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் பேசும் திறனை இழந்தார். அதன் பின்னர், அவருக்காக பேசும் குரல் உருவாக்கி  (ழிமீஷீஷிஜீமீமீநீலீ க்ஷிஷீவீநீமீஜிமீஜ் ஜீமீமீநீலீ ஹ்ஸீலீமீவீமீக்ஷீ) அதன்  மூலம்தான் கடைசித் தருணம் வரை அற்புதமாக, முன்பைவிட நன்றாக பேசிக் கொண்டிருந்தார். நிமிடத்திற்கு 15 வார்த்தைகள் அவரால் பேசமுடியும்.

ஸ்டீபன் ஹாக்கிங் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகத்தின் பெயர் "பிரபஞ்சத்துக்கான ஜார்ஜின் ரகசிய சாவி" (நிமீஷீக்ஷீரீமீ ஷிமீநீக்ஷீமீ ரிமீஹ் ஷீ லீமீ ஹிஸீவீஸ்மீக்ஷீமீ).

ஸ்டீபன் ஹாக்கிங் இருமுறை மணமுடித்து விவா கரத்து ஆகிவிட்டது. அவரது மறைவு தினத்திலும்கூட ஓர் அதிசயம்தான். மார்ச் 14, அறிவியலில் - கணிதத்தில்   றிமிணி பீணீஹ்  என்பதன் 30ஆவது  ஆண்டு ஆகும்.

எங்கே அந்தக் கடவுள்?

"புவிஈர்ப்பு விசை என்ற ஒன்று இருக்கும்போது, ஒன்றும் இல்லாததில் இருந்துதானே பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியும்" என்ற பிரபஞ்சம் உருவானது பற்றிய விளக்கத்துடன் கூடிய கருத்தைக் கூறி, கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை என ஆணித் தரமாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங் என்ற தீவிர கடவுள் மறுப்பாளர் இன்று நம்மிடையே இல்லை.

புரட்சிகர இயற்பியல் விஞ்ஞானியும், பிரபஞ்சத்தை கடவுள் உருவாக்கவில்லை என்ற உண்மையை மேலும் உறுதியாக நிறுவியவருமான 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76ஆம் வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறை வினை அறிவியல் உலகம் எப்படி ஈடு கட்டப் போகிறதோ தெரியவில்லை. அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு, அவரின் அறிவியல் கொள்கையை நாம் கடைபிடிப்பதே அவருக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.

நன்றி: 'தீக்கதிர்' 15.3.2018

- விடுதலை நாளேடு, 17.3.18

ஞாயிறு, 18 மார்ச், 2018

அந்தோ, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாரே!



உலகம் போற்றும் வியத்தகு விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) அவர்கள் இன்று (14.3.2018) காலமானார் என்ற செய்தி அறிவியல் உலகத்திற்கும், அறிவு உலகத்தவர்களுக்கும் மிகவும் துன்பம் தரும் பெரும் செய்தியாகும்!

அவரது வாழ்வே பல விந்தைகளை உள்ளடக்கிய வாழ்க்கையாகும்!

சில மாதங்கள்கூட உயிருடன் இருக்கமாட்டார் என்று மருத்துவர்களால் கூறப்பட்ட அவரது வாழ்வு, இவ்வளவு காலம்வரை நீண்டதனால் மனித குலம், அறிவியல் ஆராய்ச்சித் துறை பெற்ற நன்மைகள் - சமூக நலன்கள் ஏராளம்! ஏராளம்!!

அத்துணை ஆபத்தான ‘விசித்திர' நோய் பாதிப் பினால் முடக்கப்பட்டு, சக்கர நாற்காலி வாழ்வினராகி, மணமுடித்து, குழந்தை பெற்ற வாழ்க்கையை வாழ்ந் தவர். அறிவியல் - மருத்துவவியலின் வியக்கத்தகுந்த வளர்ச்சியினால் கிடைத்த விழுமிய பயன் எத்த கையது என்பதை உலகுக்கு நீண்ட அவரது வாழ்வும், ஆயுளும் புகட்டின!

உலகம் என்பது படைக்கப்பட்டதல்ல என்ற அறிவியல் கருத்தின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள்மூலம் நிகழ்ந்ததன் விளைவு என்று எழுதிய அவர், முதலில் பெருவெடிப்பு (Big Bang) என்ற தத்துவத்தின் அடிப்படையில் உலகம் வளர்ந்து கிளைத்தது என்று கூறி,  பிறகு ‘கடவுள்' என்பதே கற்பனை என்பதை நான் முழுமையாக ஏற்பதோடு, கடவுள் நம்பிக்கை அறிவியலின் அடிப்படையில் ஆதாரமற்றது என்று தானும், மற்றொரு ஆய்வாளரும் இணைந்து எழுதிய ‘தி கிராண்ட் டிசைன்'  (The Grand Design)  என்ற நூலில் தெளிவாக எழுதினார்.

76 வயது வரை வாழ்ந்த அவரது வாழ்வு, எண் ணற்ற ஆய்வுகள் உலகுக்கும், எதிர்கால அறிவியல் தளத்திற்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படக் கூடியவை; அவர் தனது பாரம்பரிய ஆய்வுச் செல் வங்களை விட்டுவிட்டு  (Legacy)  விடை பெற்றுள்ளார்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தின ருக்கும், அறிவியல் உலகக் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

கி.வீரமணி
தலைவர் ,    திராவிடர் கழகம்.

சென்னை 
14.3.2018

-விடுதலை நாளேடு, 14.3.18