பாக்டீரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாக்டீரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பருமனான உடலை குறைக்கும் பாக்டீரியாக்கள்!

மனிதர்களின் உடல் நலமாக இருக்க, வயிற்றில் வாழும் பல்லாயிரம் வகை நல்ல நுண்ணுயிரிகள் உதவுகின்றன. அவற்றில், சில பாக்டீரியா வகைகள் இருந்தால், உடல் பருமன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை இருக்கும் என்பதை, சமீபத்தில், 'சயின்ஸ்' இதழில் வெளியான ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள யூடா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், சோதனைக்குள்ளாகும் ஆய்வக எலிகள், பருமனாக இருப்பதை கவனித்தனர். இது ஏன் என்று ஆராய்ந்த போது, அவற்றின் வயிற்றில், 'குளோஸ்ட் ரிடியா' என்ற வகை பாக்டீரியாக்கள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த வகை பாக்டீரியாக்கள் வயிற்றில் இருக்கும் எலிகள், ஆரோக்கியமான எடை யுடன் இருப்பதையும் அவர்கள் உறுதிப் படுத்தினர்.குளோஸ்ட்ரிடியா பாக்டீரி யாக்கள், எலிகளின் வயிற்றில் வினைபுரிந்து, கொழுப்பை நன்கு செரிமானம் ஆகும்படி செய்கின்றன. இதனால், அவை இருக்கும் எலிகள் பருமனாவதில்லை என்பதோடு, எலிகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அவை வலுவாக்குகின்றன.
அதேபோல, பருமனாக இருக்கும் மனிதர்களின் வயிற்றிலும் குளோஸ்ட்ரிடியா பாக்டீரியாக்கள் இருப்பதை, மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதற்காக, குளோஸ்ட் ரிடியா பாக்டீரியாக்களை மனிதர்கள் வயிற் றில் செலுத்துவதை விட, அவை கொழுப்பை எப்படி கையாள்கின்றன, என்ன வினை புரிந்து நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகின்றன என்பதை கண்டறிந்தால், அந்த வினைகளை உண்டாக்கும் மருந்துகளை தந்து, மனிதப் பருமனை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பை அதிகரிக்க முடியும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- விடுதலை நாளேடு, 15.8.19

புதன், 1 மே, 2019

காற்று மாசுகளை தின்னும் பாக்டீரியா!

பலவித ஆலைக் கழிவுகள், இயற்கைக் கழிவு களிலிருந்து கசியும் மீத்தேன், காற்று மண்டலத்தில் கலந்து திரண்டு, பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தை தடுத்து நிறுத்துகிறது.
இதனால் புவி வெப்பமாதல் அதிகரிக்கிறது.
வளி மண்டல மீத்தேனை அப்படியே கபளீகரம் செய்யும் ஒரு பேக்டீரியாவை அய்ரோப்பிய விஞ்ஞானிகள் அண்மையில் அடையாளம் கண்டுள் ளனர்.
காற்றை உண்டு, காற்றிலேயே வாழும், ‘மெதை லோகேப்சா கோர்கோனா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேக்டீரியாக்கள், மீத்தேன், நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன.
இந்த புதுவித பேக்டீரியாவை வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆய்வகத்திலேயே வைத்து வளர்க்கும் உத்தியையும் கண்டறிந்துள்ள னர்.
புவி வெப்பமாதலுக்கு காரணமான மாசுகளை உணவாக உட்கொள்ளும் இதுபோன்ற வேறு நுண்ணுயிரிகள் உள்ளனவா என்பதையும் வியன்னா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
சில ஆண்டுகளில் அவற்றை ஏராளமான அளவில் காற்றில் கலந்துவிட்டு, மாசுபாட்டை வேகமாகக் குறைக்க முடியும் என, அந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- விடுதலை நாளேடு, 25.4.19