வியாழன், 26 அக்டோபர், 2017

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் உணவு என்ன?இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது உயிரிழக்கும் முன்பு கடைசி யாக உண்ட உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இக்தியோசார்  என்று அழைக்கப்படும் அந்த உயிரினம் கடைசியாக சிப்பி மீன்களை உணவாக உட்கொண்டிருந்ததை, அதன் இரைப்பை பகுதியில் இருந்த எச்சங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தபோது அது வயது மூப்பு அடையாத இளம் ஊர்வனவாகவே இருந்துள்ளது.

இந்த வகை ஊர்வனவற்றுள் ஒரு இளம் உயிரினத்தின், தனித்துவம் மிக்க படிமம் ஒன்று கண்டெடுக்கப்படுவது இதுவே முதன் முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“அந்தப் படிமத்தின் விலா எலும்புகளுக்கு மத்தியில் கொக்கி போன்ற சிறிய அமைப் புகள் பாதுகாப்பாக இருந்தது,” என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டீன் லோமக்ஸ் கூறுகிறார்.

“இவை வரலாற்றுக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த சிப்பி மீன்களின் துடுப்புகள். எனவே அந்த இளம் இக்தியோசார் இறக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு சிப்பி மீன்களே,” என்கிறார் அவர்.

இக்தியோசார்களின் சுமார் 1000 படிமங்கள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், இளம் மற்றும் புதிதாக பிறந்த இக்தியோசார்களின் படிமங்கள் மிகவும் அரிதானவையாகவே உள்ளன.

படிமமாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த இளம் இக்தி யோசார் 70 செ.மீ நீளம் உள்ளது. டோர்செட் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் படிமத்தின் மண்டை ஓட்டை வைத்து அது இளம் வயதிலேயே உயிரிழந்தது என்று கண்டறியப்பட்டது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நைஜல் லார்க்கின், பிரிட்டனின் பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள லேப்வொர்த் அருங்காட்சியகத்தில் இருந்த இந்த இளம் உயிரினத்தின் படிமத்தின் முக்கியத்துவத்தை ஒரு ஆய்வின்போது அறிந்துள்ளார்.

ஆனால், அதுவரை அது எங்கு கண் டெடுக்கப்பட்டது மற்றும் அதன் வயது ஆகியன பற்றிய தரவுகள் ஆவணப் படுத்தப் படாமல் இருந்தன.

பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய் வாளர்கள் அந்தப் புதை படிமத்துடன் ஒட்டியிருந்த சிறிய பாறைத் துகளை ஆய்வு செய்ததில், அது 19.9 கோடி முதல் 19.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று கண்டுபிடித்தனர்.

“பாறை இடுக்குகளில் மறைந்து கிடக்கும் நுண்ணிய புதை படிமங்களைக் கண்டறிந்து ஆராய்வதன் மூலம் பல பல உயிரினங்களின் மர்மங்களை அறிய முடியும்,” என்கிறார் நைஜல் லார்க்கின்.

‘ஹிஸ்டோரிகல் பையாலஜி’ எனும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட் டுள்ளது.
-விடுதலை நாளேடு, 26.10.17

வியாழன், 5 அக்டோபர், 2017

மூன்று அமெரிக்கர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு


நியூயார்க், அக்.3 அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி ஹால், மைக் கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக் கேல் டபிள்யூ யங் ஆகிய மூன்று மரபியல் (ஜெனடிக்ஸ்) விஞ்ஞானிகளுக்கு நிகழாண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளன.

மனிதர்கள் உள்பட உயிரினங் களின் உடலுக்குள், நேரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் ‘உயிரி கடிகாரம்‘, எவ்வாறு செயல்படுகிறது என் பதை தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்தமைக்காக, அந்த மூவ ருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் குழு நேற்று கூறியதாவது:

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரது உடல்களும், புவியின் சுழற்சிக்கு ஏற்ற வகையில் தங்களை தகவ மைத்துக் கொண்டே இயங்குகின் றன. இவ்வாறு பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை உயிரினங் களின் உடலில் தினந்தோறும் நேரம் தவறாமல் தூண்டுவதற்கு, உடலில் தானாகவே அமைந்துள்ள ஒரு ‘உயிரி கடிகாரம்‘தான் உதவு கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாகவே தெரியும்.

அந்த உயிரி கடிகாரத்தின் செயல்பாட்டில் ஏற்படும் குறை பாடுகளால் மன அழுத்தம், ‘பைபோலார்’ எனப்படும் மிகை யுணர்வு மனநோய், மறதி நோய், நரம்பியல் நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன. புவியின் சுழற் சிக்கும், உடலின் இயக்கத்துக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் இந்த உயிரி கடிகாரம் பழுதடைந் தால், புற்று நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுவதற் கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனி னும், இந்த உயிரி கடிகாரத்தை இயக்குவது எது என்பது இது வரை புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், பழ வண்டுகளின் உடல் இயக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு, அந்த உயிரி கடிகாரத்தை இயக்கும் மரபணுவை ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய மூவரும் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர்.

அந்த மரபணுதான் இரவு நேரங்களின்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலில் உருவாகும் ஒரு வகையான புரதங்களை தனக்குள் கிரகித்துக் கொண்டு, பகல் நேரங்களில் அவற்றை வெளியிடுகிறது என் பதை அவர்கள் கண்டறிந்துள்ள னர்.

அவர்களது இந்தக் கண்டு பிடிப்பின் மூலம், நேரம் தவறிய உடலியக்கத்தினால் ஏற்படும் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காண மருத்துவ உலகத்துக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
- விடுதலை,3.10.17

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு


சுவீடன், அக்.4 2017ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந் தளிக்கப்பட்டது.

கடந்த 1901-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

மருத்துவம், விஞ்ஞானம், இலக்கியம், அமைதி ஆகியவற் றுக்காக தனித்தனி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மருத்துவ நோபல் பரிசுதான் முதலில் அறிவிக்கப் படுவது வழக்கம்.

அந்த அடிப்படையில், இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந் தளிக்கப்பட்டு உள்ளது. ஆல்ர்பர் அய்ன்ஸ்டினின் ஈர்ப்பு விசை அலைகள் பற்றிய கண்டு பிடிப்புகாக இந்த 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கபட்டு உள்ளது.

100 ஆண்டுகளுக்கு பிறகு  ஈர்ப்பு அலைகள் இருப்பதை 3 விஞ்ஞானிகளும்  உறுதி செய் தனர்.

ஜெர்மனியை சேர்ந்த ரைனர் வெயிஸ், அமெரிக்காவை சேர்ந்த பரிசி பேரிஸ் மற்றும் கிப் எஸ் தோர்ன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு பெற்றனர். இவர்கள் லிகொ என்ற கருவி மூலம் புவிஈர்ப்பு விசை அலைகளை   கண்டு பிடித்துள்ளனர்.

சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நேற்று அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு குழு தலைவர் தாமஸ் பெர்ல் மேன் இதனை அறிவித்தார்.
- விடுதலை,4.10 17