ஞாயிறு, 27 நவம்பர், 2016

செயற்கை முறையில் விந்து உற்பத்தி

உலகில் முதல் முறையாக
செயற்கை முறையில் விந்து உற்பத்தி பிரெஞ்சு விஞ்ஞானிகள் சாதனை
டன், மே 10- ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் வகையில் உலகிலேயே முதல் முறையாக செயற்கை முறையில் விந்து உற்பத்தி செய்து பிரெஞ்சு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ள கேல்லிஸ்டெம் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த விஞ் ஞானிகள், இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த அளப்பரிய சாதனை குறித்து, ஆய்வுக் கூடத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இசபெல் குவோக் கூறியதாவது;
ஆண் இனப்பெருக்க திசு எனப்படும் ஸ்பெர்ம டோகோனியாவை எடுத்து, ஆய்வுக்கூடத்தில் சிக்கலான செயல்முறையை கையாண்டு 72 நாட் களுக்கு பின் டெஸ்ட் டியூபில் இந்த விந்து உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் முலம் மலட்டுத்தன்மை யால் பாதிக்கப்பட்டு தங்கள் சொந்த விந்துவை உற்பத்தி செய்யமுடியாத லட்சக்கணக்கான ஆண்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இனி மலட்டுத்தன்மை உள்ள ஆண்களும் இம்முறையில் உருவாக்கப்பட்டுள்ள தங்களது செயற்கை விந்தை கொண்டே, அய்.வி.எப். முறையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார்.
எனினும் வரும் ஜூன் 23-ஆம் தேதியன்றுதான், ஆர்டிசெம்(செயற்கை விந்து) என்ற இந்த செயற்கை விந்தணு குறித்த அறிவிப்பை பிரெஞ்சு நிறுவனம் வெளியிட உள்ளது. அதுவரை இம்முறையினால் ஏற்பட்ட தீர்வு குறித்து அந்நிறுவனம் வாய் திறக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,10.5.15

வியாழன், 10 நவம்பர், 2016

அச்சு இயந்திரம் வார்த்தெடுத்த எலும்பு!


விபத்துகளில் சேதாரம் அடைந்த எலும்புப் பகுதியை சகஜ நிலைக்கு கொண்டுவர நவீன மருத்துவம் சில வழிகளை உருவாக்கியிருக்கிறது. உலோகத் துண்டுகளை வைத்து கட்டமைப்பது போன்ற இந்த வழிகள், வலிமை மிக்கவை.இயற் கையில் எலும்பு வளர்வது போலவே, செயற்கை முறையில் எலும்பை வளரச் செய்ய முடியுமா என்று மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியின் மருத்து வர்கள் அத்தகைய ஒரு புதிய முறையில் முதல் கட்ட வெற்றி கண்டுள்ளனர்.

குழந்தையாக இருக்கும்போது எலும்புகள் சிறிய அளவில் உருவாகி, பின் மெல்ல வளர்ந்து, எலும் புகள் கடினமாகின்றன. அதே போல ஆய்வுக் கூடத்திலும் உருவாக்க ட்ரினிட்டியின் பேராசிரியர் டேனியல் கெல்லி குழுவினர் முயன்று வருகின் றனர்.

இதற்கென, அவர்கள் விலங்குகளின் எலும்பு திசுக்களை உயிரி திரவங்களில் கரைத்து, முப் பரிமாண அச்சு இயந்திரத்தின் மூலம் அடுக் கடுக்காக அத்திரவத்தை செலுத்துகின்றனர்.

எலும்பின் வடிவம் போலவே ஒரு சட்டகத்தை உருவாக்கி, அவற்றுக்கு இடையே உயிரி திரவம் செலுத்தப்படுகிறது.

முப்பரிமாண அச்சு இயந்திரம், எலும்பின் வடிவை உருவாக்கிய பிறகு, அதை ஆய்வுக் கூடத்தில் வைத்து விஞ்ஞானிகள் கவனித்தனர். பல வாரங்களில் விலங்கு எலும்பு செல்கள் வளர ஆரம்பித்தன.

இந்த வளர்ச்சி தொடருமானால் தானாகவே வளரும் தன்மை கொண்ட எலும்பை முப்பரிமாண அச்சு இயந்திரம் மூலம் வார்த்தெடுத்த பெருமை ட்ரினிட்டி விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கும்.

உயிருள்ள, வளரும் எலும்புகளை முப்பரிமாண அச்சு இயந்திரம் மூலம் உருவாக்க முடியும் என்பது மட்டும் தெரியவந்திருக்கிறது என்று டேனியல் கெல்லி தெரிவித்தி ருக்கிறார்.
மனித எலும்புகளையும் இதேபோல உருவாக்கும் ஆராய்ச்சி தொடர்கிறது.

கேக்கை அச்சிடும் 3டி இயந்திரம்!

‘ஸ்டார் டிரெக்‘ என்ற அறிவியல் புனை கதைத் தொடரில், விரும்பிய உணவு வகைகளை வார்த்தெடுக்கும் இயந்திரம் அடிக்கடி வரும். அதே போல, ஒரு இயந்திரத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த, உணவு கலை நிபுணர் ரேனால்ட் பொயர்னோமோ உருவாக்கி யிருக்கிறார். முப்பரிமாண அச்சியந்திர வகையை சேர்ந்த இந்த இயந்திரம், பிரான்ஸ் நாட்டு திருமணங்கள் மற்றும் விழாக்களில் பரிமாறப்படும், ‘குரோக்வெம்போச்‘ என்ற உணவு வகையை மட்டுமே அச்சு அசலாக அச்சிட்டுத் தருகிறது.

அடுமனையில் தயாராகும் குரோக்வெம்போச், குட்டி, குட்டி பன்களை ஒன்றின் மேல் ஒன்றாக கூம்பு வடிவில் அடுக்கியது போல் இருக்கும். ஏற்கனவே, பிட்சா, கேக், மிட்டாய்கள் போன்ற வகை உணவுகளை தயாரிக்கும் முப்பரிமாண அச்சியந்திரங்கள் வந்திருக்கின்றன.

ஆனால், அவை முழுக்க முழுக்க முப்பரிமாண அச்சியந்திரத் திலேயே தயாரிக்கப்படுபவை அல்ல. ஆனால், ஆஸ்திரேலியர் உருவாக்கிய இந்த இயந்திரம், அடுமனையில் சுடுவது, இனிப்பை சேர்ப்பது உட்பட, முழுமையாக குரோக்வெம்போச்சினை முப்பரிமாண அச்சியந்திரத்திலேயே அச்சிட்டு தருவதுதான் சிறப்பு. இதன் வீடி யோவை, ‘யூ டியூபி’ல் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர்.ஆஸ்திரேலிய சமையல் போட்டி நிகழ்ச்சியான, ‘மாஸ்டர் செப்’ போட்டியில் பங்கேற்றவரான ரேனால்ட், முப்பரிமாண உணவு அச்சியந்திரங்களால் ஈர்க்கப்பட்டதால், சிக்கலான பிரான் வகை அடுமனை உணவை தயாரிக்க முடியுமா என்று நீண்ட பரிசோதனையில் ஈடுபட்டார். கடைசியில் வெற்றி கிடைத்தது.

இன்று அதிசயமானதாகவும், செயற்கையானதாகவும் கருதப்படும் முப்பரிமாண உணவு அச்சியந்திரங்கள், இன்னும் 10 ஆண்டுகளில் பரவலாகிவிடும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர். ரேனால்ட்சின் கண்டுபிடிப்பு அதை உறுதி செய்துள்ளது.
-விடுதலை10.11.16

ஆய்வுச்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள இறைச்சி.

சோதனைக் குழாய் முறையில் முதல் முறையாக ஆய்வுச்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள இறைச்சி.


பசு மற்றும் பன்றியின் செல்களைக் கொண்டு செயற்கை முறையில் இறைச்சியை வளர்த்து, உற்பத்தி செய்ய முடியும் என அறிவியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இறைச்சி ஆய்வுச்சாலைகளில் உருவாக்கப்படுவதன்மூலமாக  மூன்று ஆண்டுகளுக்குள்ளாக  விலங்குகளை உண்பது என்பதை நினைத்து பார்க்க முடியாததாகிவிடும் என்று ஆய்வா ளர்கள் கூறுகிறார்கள்.
உமா வெலெட்டி என்கிற அறிவி லாளர் மேயோ மருத்துவமைனையில் பயிற்சி பெற்ற இருதய நோய் நிபுணரும், மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரும் ஆவார். இரட்டை நகரங்களின் அமெரிக்க இருதய சங்கத் தின் தலைவருமாவார். அவர் ஸ்டெம் செல் உயிரியல் வல்லுநர் முனைவர் நிக்கோல¢ஸ் ஜெனோவெஸ், உயிர் மருத்துவ இயல் பொறியாளர் முனைவர் வில் கிளெம் ஆகிய இருவருடன் இணைந்து இறைச்சிகுறித்த ஆய்வை மெம்பிஸ் உணவு விடுதியில் இணைந்து தொடர் ஆய்வு மேற்கொண்டார்.
மாட்டின் கருவிலிருந்து வெளியா கின்ற சீரத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் அதற்கு பதிலாக தாவரங்களை வளர்ப்பதைப் போன்று உருவாக்கப்படுகிறது.
சோதனைக்குழாயிலிருந்து பெறப்படும் இறைச்சியை ஆய்வகத்தி லிருந்து நேரடியாக உணவுத்தட்டுக்கு கொண்டு வரும் நிலை உள்ளது.
உயிரற்ற இறைச்சியிலிருந்து விலங்கு களின் செல்லைப்பிரித்தெடுத்து, விலங் குகள் தொடர்பில்லாத உற்பத்திப் பொருள்களாக சந்தைப்படுத்தும் வாய்ப்பு மூன்று முதல் நான்கு ஆண்டு களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்பதை, ஆய்வகத்தில் வளர்த்து எடுக் கப்பட்ட Ôஇறைச்சி பந்துÕ (னீமீணீtதீணீறீறீ) மூலமாக இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேம்பிஸ் மீட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் உமா வேலட்டி கூறும்போது, “இதுதான் முற்றிலும் இறைச்சியின் எதிர்காலமாக இருக்கும். குதிரை மற்றும் குதிரை வண் டிகளுக்கு மாற்றாக கார் வந்ததுபோல இறைச்சி தொழிலில் செய்திட திட்ட மிட்டுள்ளோம். இறைச்சியை உரு வாக்கி வளர்ப்பதன்மூலமாக இப்போ துள்ள நிலையை முற்றிலும் மாற்றிட முடியும்.  விலங்குகளை உண்பது என்ப தையே எண்ணிப்பார்க்க முடியாத அள வுக்கு ஆகிவிடும். பசு மாடு, பன்றி, கோழி ஆகியவற்றின் செல்களைக் கொண்டு இந்நிறுவனம் சிறிய அளவில் இறைச்சியை வளர்த்து வருகிறது’’ என்று குறிப்பிட்டார்.
அந்நிறுவனத்தின் இணையத்தில் குறிப்பிடும்போது, Òஅமெரிக்கர்களாக உள்ள நாங்கள் இறைச்சியை மிகவும் விரும்புகிறோம். பழைய முறையில் உள்ள இறைச்சி உற்பத்தியில் எதிராக உள்ள பக்கவிளைவு,  சுற்று சூழல் பாதிப்பு, உடல்நலத்துக்கு கேடு, நுண்ணு யிர்க்கொல்லிகள், மலம் மற்றும் நோய்க் கிருமிகள் மற்றும் இதர அசுத்தங்கள் உள்ள நாங்கள் விரும்பவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
-விடுதலை ஞா.ம.,13.2.16

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ராஜஸ்தானில் 15 கோடி ஆண்டு பழமை வாய்ந்த டைனோசர் காலடி கண்டுபிடிப்பு


ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் காலடித்தடம் ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டைனோசர்.

இயற்கைப் பேரழிவு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட  காரணங்களால் டைனோசர் இனம் உலகில் அழிந்து விட்டது. ஆனால் அவை வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்னும் மறைந்துவிடவில்லை. உலகில்  வாழ்ந்து மடிந்த டைனோசரசின் படிமங்கள் பல நாடுகளிலும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் 15 கோடி  ஆண்டு பழமைவாய்ந்த டைனோசரின் காலடி தடத்தை ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வியாஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை குழுவினர் ஜெய்சல்மார்  மாவட்டத்தில் கடற்கரை சூழலில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது டைனோசரின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.  இவை டைனோசரின்  கால் தடங்களாக இருக்கலாம் என  ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவை சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையானது. இந்த டைனோசர்கள் ஒன்று  முதல் மூன்று மீட்டர் உயரம் கொண்டவையாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. டைனோசரின் படிமங்கள் ஏற்கெனவே பிரான்ஸ், போலந்து, சுலோவாகியா, இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் தற்போதுதான் முதல் முறையாக டைனோசரின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த படிமம் அடிப்படையில் டைனோசரின் கால்தடம் 30 செமீ நீளம் கொண்டவையாக உள்ளது. இதன் மூலம் அவை வலிமையான  கால்களை பெற்றிருந்து இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது . இதன் உடல் சுமார் 1 முதல் 3 மீ உயரம்  மற்றும் 5 முதல் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும்  இருந்திருக்கலாம் எனவும் ஆய்வு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
-விடுதலை ஞா.ம.,18.6.16