ஞாயிறு, 30 அக்டோபர், 2016

சந்திர மண்ணில் மனித சுவடுகள்

சந்திர மண்ணில் மனித சுவடுகள், ஆதி மனிதனின் அழியாத சுவடுகள்

சந்திர மண்ணில் மனித சுவடுகள், 
ஆதி மனிதனின் அழியாத சுவடுகள்

மனிதன், நிலாவில் கால் பதித்தான் என்பதற்குள்ள சாதனை அடையாளம், நீல் ஆர்ம்ஸ்ட்ராங், 1969 ஜூலை 20 அன்று, அங்கு பதித்த காலடித் தடங்கள் தான்.

பூமியை சுற்றி வரும் சந்திரனில் காற் றோட்டம், நீரோட்டம், குமுறும் எரிமலைகள் இல்லை என்பதால் அந்தத் தடங்கள், அச்சு மாறாமல் அப்படியே இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டு களாக நிலாவின் மீது சிறுசிறு விண்கற்கள் மோதும் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. இந்த நிகழ்வுகள், விண்வெளி விஞ்ஞானிகளின் கணிப்பை விட அதிகமாகியுள்ளன.

கடந்த, 2012 - 2013 கால கட்டத்தில், நிலா மீது மிகச்சிறிய விண்கல் விழுந்ததில், 40 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. தவிர, நிலாவின் மேற்பரப்பில், கடந்த, 30 ஆண்டுகளில் குறைந்தது, 47,000 மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

எனவே, நிலாவில் மனிதனின் காலடித் தடங்கள் அழிவதற்கு எந்த அளவுக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்று, ‘நிகழ் தகவு’க் கணிப்புகளை, விஞ்ஞானிகள் சமீபத்தில் செய்துள்ளனர். அதன்படி, நிலாவின் ஒட்டு மொத்த மேற் பரப்பிலுள்ள மண், 2 சென்டி மீட்டர் அளவுக்கு புரள்வதற்கு, 81,000 ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிகிறது.

ஆக, ஆம்ஸ்ட்ராங்கின் வரி வரியான காலடித் தடங்கள் இப்போதைக்கு, ‘ஸ்ட்ராங்’காகவே இருக்கும். தான்சானியாவின் எரிமலைப் பகுதி ஒன்றில் களப்பணியில் இருந்த சூழியல் காப்பாளர் ஜிம் பிரெட் மற்றும் சிந்தியா லியுட்கஸ் பியர்ஸ் ஆகிய இருவரும், வினோதமான காலடித் தடங்களை கண்டனர்.

எரிமலைக் குழம்புச் சகதியில் பதிந்து, இன்னும் காலத்தால் அழியாமல் இருக்கும் அந்த காலடித் தடங்கள், ஒரு டென்னிஸ் மைதானம் அளவுக்கு அங்கும் இங்குமாக பதிந்திருந்தன.

அவற்றை ஒரு ஸ்கேனர் மூலம் பதிவு செய்து, முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் அச்சிட்டு எடுத்து இருவரும் ஆராய்ந்தனர்.கடந்த, 2008ல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த காலடித் தடங்கள், 19,000 ஆண்டுகளுக்கு முந் தைய வையாக இருக்கலாம் என்று அவர்கள் இப்போது கணித்துள்ளனர். அதுமட்டுமல்ல அந்த கால் சுவடுகளில் பெரும்பாலானவை குழுவாக நடந்து சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகளினுடையவை என்றும் அவர்கள் ஊகித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் உள்ள ஏரி நீர், மனித பயன்பாட்டுக்கு உதாவது என்ப தாலும், அருகேயுள்ள எரிமலை குமுறியதாலும், பாதுகாப்பான இடத்திற்கு ஆதி மனிதர்கள் இடம்பெயர்ந்த போது இந்த தடங்கள் பதிந்தி ருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதே தான்சானியாவின் வேறு ஒரு பகுதியில், 36 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால் தடங்கள் கண்டுபிடிக்கப்படுள்ளன.

தென் னாப்ரிக்காவில் இரு இடங்களில், 1.2 லட்சம் ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவில் ஒரு இடத்தில், 20,000 ஆண்டுகளுக்கு முந் தைய தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளன. வரலாற்றுக்கு முந்தைய மனித காலடிச் சுவடுகள், அக்காலகட்டத்து நிழற்படங் களைப் போல என்கின்றனர், ஜிம்மும் பியர்சும்.

இப்போது தான்சானியா அரசு அந்த இடத்தை சுற்றி முள் கம்பி வேலிகள் அமைத்து பாது காக்கிறது.
-விடுதலை,27.10.16

மூளைக்குள் என்ன நடக்கிறது

இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்.
இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத் தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்து வருவது கவலையளிக்கிறது.
பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறி குறிகளைக் கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத் தினர் மது அல்லது போதைப்பொருளை நாடு கின்றனர்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையைக் கொண்டிருக்கின்றனர். 17 சதவீதத்தினர் தற் கொலைக்கு முயற்சிக்கவும் செய்கிறார்கள்.
இந்தியாவில் 2001-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மன அழுத்தத்துக்கு எதிரான சிகிச்சை - மருந்து உள்ளிட்டவற்றின் சந்தை 528 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் இப்போது 3,500 உளவியல் நிபுணர்களே இருக்கிறார்கள்.  ஆனால், நம்முடைய மக்கள்தொகைக்கு 11,500 உளவியல் நிபுணர்கள் தேவை.
மன அழுத்தம் முக்கிய அறிகுறிகள்:
எதைப் பார்த்தாலும் எதிர்மறை
மனோ பாவத்தை வெளிப்படுத்துவது
சோக உணர்வில் மூழ்கிக் கிடப்பது
எப்போதும் அதிக எரிச்சலுடன் இருப்பது
எல்லாவற்றின் மீதும் திடீர் ஆர்வக் குறைவு
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை
குழு, கூட்டமாக இருக்கும்போதும்கூட,
தனித்திருப்பதாக உணர்வது
மன அழுத்தம்
மூளைக்குள் என்ன நடக்கிறது?
மூளை பின்மேடு: மூளையின் இந்தப் பகுதி தான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்ற வற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளி களிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது.
உச்சந்தலை : உணர்வுகளையும் பார்வை தகவல்கள், மொழி, கணிதம் போன்றவற்றை இப் பகுதியே செயல்படுத்துகிறது. மன அழுத்தத்தால் வளர்சிதை மாற்றத்தின் அளவு குறைவதால், உணர்வுகளை உணர்ந்துகொள்ளும் திறன் பாதிக்கப்படும்.
நார்எபிநெப்ரின்: இது ஒரு நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோஃ பிரெனியாவும் (மனச்சிதைவு), குறைவாக இருந் தால் மன அழுத்தமும் ஏற்படும்.
செரடோனின்: மன அழுத்தம் சம்பந்தப்பட்ட முக்கிய ஹார்மோன். இது மிகக் குறைவாக இருந் தால்  மன அழுத்தம், மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.
டோபமைன்: இதுவும் ஒரு நரம்பு கடத்தி (ஒரு நரம்பணுவில் இருந்து மற்றொரு நரம்பணுவுக்கு சமிக்ஞைகளைக் கடத்தும் வேதிப்பொருட்கள்). இது அதிகமானால்  மனச்சிதைவு. குறைந்தால்  மன அழுத்தம்.
முன்தலைப் பெருமூளை : மூளையின் முன்பகுதியில் உள்ள இது கருத்து, திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்றவற்றில் பங்களிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது இயல் புக்கு மாறாக மிகவும் சோர்வடைந்துவிடுகிறது. முன்தலைப் பெருமூளையின் வலது பாதி, எதிர் மறை உணர்ச்சியை உருவாக்கக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது மிகவும் பலவீனமாக இருக்கிறது.
அமிக்டாலா: மூளையின் உணர்ச்சிக் கேந்திர மான இது, அளவுக்கு அதிகச் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது


-விடுதலை,24.10.18

சனி, 29 அக்டோபர், 2016

மூலக்கூறு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசுஸ்டாக்ஹோம், அக்.6 மூலக்கூறு பற்றிய கண்டு பிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக் கான நோபல் பரிசு அறிவிக் கப்பட்டுள்ளது.

ரூ.6 கோடி பரிசுத் தொகையை இவர்கள் 3 பேரும் பகிர்ந்து கொள்வார்கள். இயற் பியல், மருத்துவம், பொரு ளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங் கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப் பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப் பட்ட நிலையில், நேற்று வேதி யியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வேதியியல் நோபல் பரிசினை பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் பியர் சாவேஜ், ஸ்காட்லாந்து விஞ்ஞானி பிரேசர் மற்றும் நெதர்லாந்து விஞ்ஞானி பெர்னாட் பெரிங்கா ஆகியோர் இணைந்து பெறுவார்கள் என நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித் துள்ளது. ரூ.6 கோடி பரிசை இவர்கள் 3 பேரும் பகிர்ந்து கொள்வார்கள். மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.  மூலக்கூறு இயக்கத்தை திறன் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் இவர்கள் புதிய மூலக்கூறு இயந்திரத்தை தயா ரித்து இருக்கிறார்கள்.  1830இல் கண்டுபிடிக்கப்பட்ட மின் மோட்டார் போன்று இந்த மூலக்கூறு இயந்திரம் பயன் படும். மின்ரயில்கள், வாஷிங் மெஷின், மின்விசிறி, உணவு தயாரிப்பு ஆகியவற்றில் இது பயன்படும்.  இவர்கள் கண்டு பிடித்த இந்த மூலக்கூறு இயந் திரங்கள் உலகிலேயே மிகச் சிறிய இயந்திரங்கள் என்ற  பெயரை பெற்றுள்ளது. இதன் மூலம் புதிய உபகரணங்கள் தயாரிக்கவும், ஆற்றம் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கவும், பரிசோதனை செய்யும் இயந்தி ரங்களிலும் அதிகம் பயன் படுத்த முடியும் என்று நோபல் பரிசுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.

விஞ்ஞானி பிரேசர், அமெரிக் காவின் நார்த்வெஸ்டர்ன் பல் கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். ஜீன் பியர் சாவேஜ், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத் திலும், பெர்னாட் பெரிங்கா, குரோனிங்கன் பல்கலைக் கழகத்திலும் பணிபுரிகின்றனர். நாளை அமைதிக்கான நோபல் பரிசும், 10ஆம் தேதி பொருளா தாரத்துக்கான நோபல் பரிசும், 13ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப் படுகிறது.
-விடுதலை,6.10.18

நிலவு தோன்றியது எப்படி?: ஆய்வில் புதிய தகவல்பிரபஞ்சத்தில் பூமி தோன்றிய புதிதில் ஒரு கிரகத்தின் அளவு கொண்ட ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமி தோன்றிய புதிதில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன், வேறு ஒரு கிரகம் பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்றும், அப்போது சிதறிய பொருட்கள் விண்வெளியில் ஒன்றிணைந்து நிலவாக உருவானது என்றும் விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டு பிடித்தனர். ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்றபோது அங்கிருந்து தோண்டி எடுத்து வந்த பாறை படிமங்களையும், பூமியின் தரைமட்டத்துக்கு கீழே 2,900 கி.மீ ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட படிமங் களையும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்தனர். இதில் பூமியில் இருக்கும் இரும்பு, ஆக்சிஜன் போன்ற கலவைகள், நிலவின் பாறைகளிலும் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வேறு ஒரு கிரகத்தின் மோதலால் சிதறிய பொருட்களில் இருந்து நிலவு தோன்றியது என்ற கோட்பாடு ஓரளவுக்கு பொருந்துவதாக தெரிய வந்துள் ளது. அதே சமயம் மோதல் நிகழ்வினால் தான் நிலவு உருவானதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திரவ பொருட்களை மோத வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைத்த முடிவை கொண்டு, இளம் பூமியில் வேறு ஒரு கிரகம் மோதி நிலவு உண்டானது என்பதை தோராயமாகவே கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-விடுதலை,6.10.16