சனி, 29 அக்டோபர், 2016

மூலக்கூறு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு



ஸ்டாக்ஹோம், அக்.6 மூலக்கூறு பற்றிய கண்டு பிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக் கான நோபல் பரிசு அறிவிக் கப்பட்டுள்ளது.

ரூ.6 கோடி பரிசுத் தொகையை இவர்கள் 3 பேரும் பகிர்ந்து கொள்வார்கள். இயற் பியல், மருத்துவம், பொரு ளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங் கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப் பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப் பட்ட நிலையில், நேற்று வேதி யியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வேதியியல் நோபல் பரிசினை பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் பியர் சாவேஜ், ஸ்காட்லாந்து விஞ்ஞானி பிரேசர் மற்றும் நெதர்லாந்து விஞ்ஞானி பெர்னாட் பெரிங்கா ஆகியோர் இணைந்து பெறுவார்கள் என நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித் துள்ளது. ரூ.6 கோடி பரிசை இவர்கள் 3 பேரும் பகிர்ந்து கொள்வார்கள். மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.  மூலக்கூறு இயக்கத்தை திறன் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் இவர்கள் புதிய மூலக்கூறு இயந்திரத்தை தயா ரித்து இருக்கிறார்கள்.  1830இல் கண்டுபிடிக்கப்பட்ட மின் மோட்டார் போன்று இந்த மூலக்கூறு இயந்திரம் பயன் படும். மின்ரயில்கள், வாஷிங் மெஷின், மின்விசிறி, உணவு தயாரிப்பு ஆகியவற்றில் இது பயன்படும்.  இவர்கள் கண்டு பிடித்த இந்த மூலக்கூறு இயந் திரங்கள் உலகிலேயே மிகச் சிறிய இயந்திரங்கள் என்ற  பெயரை பெற்றுள்ளது. இதன் மூலம் புதிய உபகரணங்கள் தயாரிக்கவும், ஆற்றம் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கவும், பரிசோதனை செய்யும் இயந்தி ரங்களிலும் அதிகம் பயன் படுத்த முடியும் என்று நோபல் பரிசுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.

விஞ்ஞானி பிரேசர், அமெரிக் காவின் நார்த்வெஸ்டர்ன் பல் கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். ஜீன் பியர் சாவேஜ், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத் திலும், பெர்னாட் பெரிங்கா, குரோனிங்கன் பல்கலைக் கழகத்திலும் பணிபுரிகின்றனர். நாளை அமைதிக்கான நோபல் பரிசும், 10ஆம் தேதி பொருளா தாரத்துக்கான நோபல் பரிசும், 13ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப் படுகிறது.
-விடுதலை,6.10.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக