திங்கள், 10 அக்டோபர், 2016

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள
பெரும் உயிரினங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கண் டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.
அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பனியுக காலம் முடிவடைந்தவுடன், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால், இந்த தீவு தன் அளவிலிருந்து சுருங்கி, அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டது.
இவ்வாறான சூழல் நிலவிய போதிலும், செயின்ட் பால் தீவினில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினங்கள், பெருநிலப்பரப்பில் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு முற்றிலும் அழிந்து விட்ட, தங்களை போன்ற மிகப் பெரும் உயிரினங்களை விட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்ந்துள்ளன.

மலேரியா கொசுக்களை தடுக்கும் கோழிகள்

மலேரியாவை சுமந்துவரும் கொசுக்கள் சில விலங்குகளின் வாசனையால் அதிலும் குறிப்பாக கோழிகளின் வாசனையால் தடுக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அனோபிலிஸ் அராபியென்சிஸ் கொசு, விலங்குகளின் ரத்தத்தை காட்டிலும், மனித ரத்தத்தையே பெரிதும் விரும்புவதாக எத்தி யோப்பியாவில் பணி செய்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கண்ட றிந்துள்ளனர்.
மேலும், இது கால்நடைகளான ஆடு  மற்றும்  வெள்ளாடு களிலிருந்து ரத்தத்தை அவ்வப்போது உறிஞ்சுகிறது.
ஆனால், கோழிகளை மட்டும் தவிர்த்து விடுகிறது.
இந்த கண்டுபிடிப்பானது மலேரியா நோய் மிக அதிகமாக தொற்றிப் பரவியுள்ள பகுதிகளிலும், பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராக கொசுக்களின் எதிர்ப்பு திறன் வளர்ந்து வரும் பகுதிகளிலும், பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த ஸ்வீடிஷ் - எத்தியோப்பிய குழு தெரிவித்துள்ளது.
-விடுதலை,4.8.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக