நீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மே, 2022

பூமிக்குத் தண்ணீர் வந்த வழி

 

நமது பால்வெளி மண்டலத்தில் உயிர் உள்ள ஒரே கோளாக நமது பூமி மட்டுமே திகழ்கிறதுஇந்த பூமிக் கோளின் சிறப்பே இதில் உயிர்கள் உள்ளது என்று பலர் கூறினாலும்,உண்மையில் எந்த கோளிலும் இல்லாத ஒரு சிறந்த பொருளை இந்த பூமி கொண்டுள்ளதுஅது தான் தண்ணீர்தண்ணீர் இருந்தால் மட்டுமே அந்தக் கோளில் உயிர்கள் உருவாகவும்உயிர் வாழவும் முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனால் தான் நமது பூமி சிறப்பானதாக இருக்கிறதுசரிபூமி எப்படி உருவாகியது என்பது தெரியும்ஆனால்பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது இது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இரண்டு மட்டுமே உறுதியாகி உள்ளனஒன்று எரிநட்சத்திரங்களின் மோதல்மற்றொன்று பூமியில் இருந்த வாயுக்கள் வெப்பத்தால் இணைந்து நீராவியாகி பிறகுநீராக மாறியது

ஆனால் இரண்டு கருத்துக்களை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தியிருந்தாலும்அது எதுவும் உறுதிசெய்ய முடியாமல் இருந்தது என்பதே உண்மைஆனால்நீண்ட நாட்களுக்குப் பிறகுஇப்போது அறிவியலாளர்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டனர்பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதற்கான பின்னணியை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கோள்களில் பிரமிக்க வைக்கும் கோளாக இதுவரை பூமி திகழ்ந்துவருகிறதுநமது பூமி நீரின் அளவு காரணமாகத் தனித்து நிற்கிறதுபூமி பெரும்பாலும் “தி ப்ளூ பிளானட்” என்று இதனால் தான் குறிப்பிடப்படுகிறதுபூமியில் நீர் உருவாகியதற்குச் சூரியன் முக்கிய காரணமாக இருந்துள்ளதுபூமியின் மேற்பரப்பில் சுமார் 70 சதவீதம் நீரால் ஆனது என்பதை நாம் பள்ளிக்கூடப் பாடங்களில் இருந்தே படித்து வருகிறோம்இந்த 70 சதவீத தண்ணீர் பூமியில் உருவாக முதல் காரணமாகக் கூறப்படுவது கார்பனேசியஸ் அல்லது வெறுமனே “சி-வகை சிறுகோள்கள்” என்று அழைக்கப்படும் சிறுகோள்களின் தாக்குதல் காரணமாக உருவாகியிருக்கலாம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறுகோள் குழுவிலிருந்து தான் பூமிக்கு நீர் வந்திருக்க வாய்ப்புள்ளதாக முன்னர் இருந்தே விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇருப்பினும்இது மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அறிவியலாளர்கள்  தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுபூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதை நிரூபிக்க முயன்று வந்தனர்இறுதியாக,  நீர் குறித்த முடிவிற்கு வந்துள்ளனர்.

பூமியின் நீர் டியூட்டீரியத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்இது “சி” டைப் சிறுகோள் தாக்குதல் காரணமாக - பூமியில் இருக்கும் நீரின் ஒரே ஆதாரமாக மாறியிருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்அடிப்படையில் இவை ஹைட்ரஜனின் கனமான பதிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.பூமியில் நீரை உருவாக்குவதில் நமது சூரியன் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளால் விஞ்ஞானிகளுக்குச் சாதமான பதில் கிடைத்துள்ளது.

சூரியக் காற்றுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அயனிகளால் சார்ஜ் செய்யப்படுகின்றனஅவை சிறுகோள்கள் அல்லது சிறுகோள் தூசியுடன் தொடர்பு கொண்டால்காற்றில் உள்ள ஹைட்ரஜன் அயனிகள் சிறுகோளில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுடன் தொடர்புகொண்டு பூமியில் மூலக்கூறை உருவாக்கி இருக்கும் என்பதை இது குறிக்கிறதுபூமியின் பரந்த நீர்நிலைகளில் சூரியனின் பங்குக்கான முதல் சான்று ஜப்பானிய விண்வெளி ஏஜென்சியின் ஹயபுசா விண்வெளி ஆய்வு மூலம் 2010 இல் பூமிக்கு வாங்கப்பட்ட இடோகாவா என்ற சிறுகோள் மாதிரிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதுஇது பூமியில் எப்படி நீர் உருவாகியது என்ற ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேச்சர் வானியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில்,

விஞ்ஞானிகள் பூமியில் தண்ணீருக்குப் பங்களிப்பவைகளில் முக்கிய காரணிகளில் ஒன்றாகச் சூரியனை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளதுசூரியக் காற்றிலிருந்து வரும் ஹைட்ரஜனும் சிறுகோள்களில் இருந்து வெளியான டியூட்டீரியமும் இணைந்து தான் பூமியில் இன்று நாம் உயிர் வாழ முக்கிய காரணமாக அமைந்துள்ள நீரை உருவாக்க முக்கிய முதுகெலும்பாகச் செயல்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதன், 29 மே, 2019

விண்கல்லில் தண்ணீர்



ஜப்பானிய   விண்கலனான, 'ஹயபுசா' 2010ஆம் ஆண்டில், 'இடோகா' என்ற விண் கல்லின் மாதிரிகளை சேக ரித்து, பூமிக்கு அனுப்பியது. அந்த மாதிரிகளை ஆராய்ந்து, விண்கற்களில் ஏதாவது புதிய உலோகங்கள், தாதுக்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதும், பிர பஞ்சத்தில் கிரகங்கள் உரு வான விதம் குறித்து அறி வதும் தான், அந்த ஆய்வின் நோக்கம்.

ஆனால், இடோகா விண் கல் மாதிரிகளை ஆராய்ந்த, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள்,  அந்த விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டறிந்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளனர்.பூமியில் தண்ணீர் இருப்பதற்குக் காரணமே, பல கோடி ஆண்டுகளுக்கு முன், பல மைல் அகல முள்ள விண்கற்கள் தாக்கியதால் தான் என்று சொல்லும் விஞ்ஞானிகளும் உண்டு. இடோகாவில் இருப்ப தாக சொல்லப்படும் தண் ணீர் தடயம், அந்தக் கருத் துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

- விடுதலை நாளேடு 23 .5 .2019

நிலவு உருவானபோதுதான் பூமிக்கு நீர் கிடைத்தது ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வில் தகவல்



பிராங்போர்ட், மே 23- நிலவு உருவானபோதுதான் பூமியின் உயிர் ஆதாரமான நீர் கிடைத் ததாக, ஜெர்மனி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவு கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, நேச்சர் அஸ்ட் ரானமி அறிவியல் இதழில் வெளியான, அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:

அண்டவெளியில் இதுவரை அறியப்பட்ட கிரகங்களிலேயே பூமியில் மட்டும்தான் உயிரி னங்கள் இருக்கின்றன. பூமி யில் உயிரினங்கள் தோன்றிய தற்கு, இந்த கிரகத்தில் மிக அதிக அளவில் நீர் இருப்பது தான் முக்கியக் காரணம் ஆகும்.

சூரியக் குடும்பத்தில் சூரி யனுக்கு பக்கத்தில் இருக்கும் பிற கிரகங்களைப் போல் பூமியும் உலர்ந்த கிரகமாகவே இருந்திருக்க வேண்டும்.

எனினும், 440 கோடி ஆண் டுகளுக்கு முன்னர், செவ்வாய் கிரகத்தின் அளவு கொண்ட தெயியா என்ற பொருள் பூமி மீது மோதியதால்தான் பூமிக்கு நீர் கிடைத்ததாக ஜெர்மனியின் மன்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

பூமியில் தெயியா மோதிய போது ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்றாகத்தான் நிலவு உருவா னது. மற்ற கிரகங்களுக்கு உள்ள நிலவுகளை விட தெயியா மோதலால் ஏற்பட்ட பூமியின் நிலவு பெரிய அளவில் இருந்த தால், அது பூமியின் சுழற்சியை உறுதிப்படுத்தி வருகிறது.

இதுவரை, நிலவு உருவாக் கத்துக்குக் காரணமான தெயியா பொருள், சூரியனுக்கு அருகி லிருந்து வந்தது என்று கருதப் பட்டது.

எனினும், மன்ஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சூரிய னுக்கு அப்பால் உள்ள, நீர் நிறைந்த கோள்கள் கொண்ட பகுதியிலிருந்து வந்த பொரு ளாக இருக்கும் என்று கண்ட றியப்பட்டுள்ளது.

இதன் மூலம், பூமிக்கு அதிக  அளவு நீர் கிடைப்பதற் குக் காரணமாக, நிலவை உரு வாக்கிய தெயியா விளங்கியது.

அந்த வகையில், பூமிக்கு நிலவுதான் உயிரூட்டியதாகக் கூற முடியும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- விடுதலை நாளேடு 23. 5 .2019

செவ்வாய், 5 மார்ச், 2019

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

புதுடில்லி, மார்ச் 5 செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஏரியாக இருந்தவை காலப் போக்கில் நிலத்தடி நீராக மாறியுள்ளதாகவும், அவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான கனிமங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் மிகப்பெரிய ஏரி இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்ய ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு தெரிவித்தனர்.

நெதர்லாந்தில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, செவ்வாய் கிரகம் வறண்ட தன்மை கொண்டது. எனினும் நீர் ஆதாரங்கள் இருந்ததற்கான தடங்கள் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், இப்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில்  ஏரி, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன. அந்த கிரகத்தின் காலநிலை மாற்றத்தால் அவை நிலத்தடி நீராக மாறியுள்ளன. எங்களது ஆய்வில், நிலத்தடி நீர் இருப்பதற்கான தடயம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. அதன் அளவு மற்றும் தன்மை குறித்து இப்போது கூற இயலாது. எனினும் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்றார்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து  4000- - 4500 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நீர் இருப்பதற்கான அறிகுறி கிடைத்துள்ளது. அதில் கார்பனேட்ஸ், சிலிக்கேட்ஸ் உள்ளிட்ட கனிம வளங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகை யில், செவ்வாய் கிரகத்தின் வரலாறு இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா? என இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை.  3-4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பெருங்கடல் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த பெருங்கடல் கிரகம் முழுவதும் உள்ள ஏரிகளுடன் இணைந்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பயனுள்ளவை. இவை செவ்வாய் கிரகம் குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றனர்.

- விடுதலை நாளேடு, 5.3.19