ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஸ்டெம்செல் மூலம் குழந்தை பிறக்கச் செய்யலாம்!


இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவ தாகக்  கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. அதை பற்றி  விளக்கமாகப் பேசுகிறார் குழந்தை யின்மை சிகிச்சை மருத்துவர் மகா லட்சுமி.
நமது உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகிற இடங்கள் இரண்டு. 2 மார்பகங்களுக்கும் இடையில் உள்ள எலும்பிலும், இடுப்பெலும்பிலும்தான்  உற்பத்தியாகும். அந்த இடங்களில் ஊசியைச் செலுத்தி, திசுக்களை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க வேண்டும். அப்படி எடுத்த  செல்களை, உடலின் எந்த உறுப்பில் செலுத்தினாலும், அந்த உறுப்புக்குரிய செல்களாக உருமாறிக் கொள்ளும்.
உதாரணத்துக்கு ஒருவருக்கு கல்லீரல் பழுதடைந்து விட்டது என வைத்துக் கொள்வோம். வேலை செய்யாத கல்லீரல் பகுதியில் அவரது ஸ்டெம்  செல்களை செலுத்தினால், அந்த செல்கள் கல்லீரல் செல்களாகவே மாறி, ஊட்டம் கிடைத்து, அந்த உறுப்பின் வளர்ச்சிக்கு உதவும். இப்படி இன்று  சிறுநீரகம், இதயம், நுரையீரல் என எல்லா உறுப்பு மாற்று சிகிச்சை களுக்கும் ஸ்டெம் செல் பயன்படுகிறது. அதே டெக்னிக்தான் குழந்தையின்மை  சிகிச்சையிலும் பயன்பட ஆரம்பித் திருக்கிறது.
பெண்களின் கருப்பையின் உள் சுவர் என்டோமெட்ரியம் எனப்படும். மாதவிலக்கின் போது அது உறைந்து, ரத்தப் போக்காக வெளியேறும்.  மாதவிடாய் நின்றதும், மறுபடி அந்தச் சுவர் வளர ஆரம்பிக்கும். கருத்தரித்து விட்டால், அது உறையாது. அதில்தான் கருவானது ஒட்டி வளர  ஆரம்பிக்கும். பெண்களுக்கு வயது கூடக் கூட, அதாவது, மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் போது, இந்த என்டோ மெட்ரியம் வளர்ச்சியும் குறைய  ஆரம்பிக்கும்.
30 பிளஸ்சிலேயே சில பெண்களுக்கு திசுக்களின் பாதிப்பினால், இந்த என்டோமெட்ரியம், ப்ரீ மெச்சூர் ஏஜிங் எனப்படுகிற முன்கூட்டிய முதுமை  நிலையை அடையும். உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை என இதற்கு எத்தனையோ கார ணங்கள்... அதன் தொடர்ச்சியாக,  குழந்தையின்மைக்காக ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும், கடைசியில் கருவானது, ஒட்டாமலேயே  போகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தவிர இவர் களுக்கு வேறு வழியில்லை.
ஸ்கேன் மூலம் இதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலி லிருந்தே ஸ்டெம் செல்களை எடுத்து, உடனடியாக கருப்பையின் உள்ளே  செலுத்தி, என்டோமெட்ரியத்தை வளரச் செய்யலாம். அதன் பிறகு ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருவானது ஒட்டி, நன்கு வளரும் என  நிரூபிக்கப்பட்டு வரு கிறது.
ஸ்டெம் செல்களை செலுத்திய பிறகு, அடுத்த மாதவிலக்கு வரும் வரை காத்திருந்து, என்டோமெட்ரியம் வளர்ச்சியடைகிறதா எனப் பார்த்து, பிறகு  குழந்தையின்மைக்கான சிகிச் சையைத் தொடரலாம். குழந்தை யில்லாத தம்பதியருக்கு இது நிச்சயம் இனிப்பான செய்தியாக அமையும்... என்கிறார்  குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் மகாலட்சுமி.
-விடுதலை ஞா.ம.,12.10.13