செவ்வாய், 27 நவம்பர், 2018

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ?

யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள்.

இல்லை...! அவர் ஒரு தமிழர். அதுவும் தனது 14வயதில் கண்டுபிடித்து சாதனை செய்த சிவா அய்யாதுரை.

ஒரு வீடியோ, போட்டோ, கடிதமாகவோ இருக்கட்டும் உடனே ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் (Email) லில் அனுப்பினால் அனுப்பிய மறு நிமிடம் அவருக்கு கிடைத்துவிடும்.

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே (Email) இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரில் வசித்துவருபவர்.

அவருடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி, அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர்.

பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்து,

1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி’யில்கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தார் அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர் மயமாக்க முடியுமா? என்று அவர்கள் கேட்ட போது இவருக்கு 14 வயது.

தொடர்ந்து பலநாட்கள் கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினார். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தார்.

இந்த E MAIL-ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

இவர்தான் FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவர், இது DATABASE, LAN உடன் தொடர்புடையதாக இருந்தது.

இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் இவர் உருவாக்கியவை.

அதற்குப் பிறகு “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றார்,

மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் இவரும் ஒருவர்.

1982 ஆகஸ்ட் 30 இல் இ-மெயிலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை பெற்றார்.

வியாழன், 22 நவம்பர், 2018

பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி, கூகுள் செல்போனில் அறிமுகம்

இரவு நேரத்திலோ அல்லது குறைந்த ஒளி கொண்ட இடத்திலோ புகைப்படங்களை எடுக்கும்போது இருக்கும் சிரமத்தை பெருமளவில் நீக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில்முறை கேமராக்களில் மட்டுமே எடுக்க முடிந்த தரமான புகைப்படங்கள்/ காணொலிகளை தற்போது கைபேசிகளிலேயே எடுக்குமளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இருந்தபோதிலும், இரவு அல்லது ஒளி குறைந்த இடங்களில் புகைப்படங்களை எடுக்கும்போது தெளிவான புகைப்படங்களை பெறுவதில் சிரமம் நீடித்து வருகிறது. கைபேசியிலுள்ள ஃபிளாஷை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களும் செயற்கையான தோற்றத்தையே அளிக்கின்றன.

இந்நிலையில், தமது பிக்சல் கைபேசிகளில் இருக்கும் கேமராக் களுக்கென ‘நைட் சைட்’ என்னும் பிரத்யேக வசதியை அறிமுகப்ப டுத்தியுள்ளது கூகுள். அதாவது, இயந்திர நுண்ணறிவு தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த வசதியின் மூலம் அனைத்து விதமான ஒளியிலும் பளிச்சென வண்ணமயமான புகைப்படங்களை எடுக்கமுடியுமென்று கூகுள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 22.11.18

வியாழன், 15 நவம்பர், 2018

செல்பேசி உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல - ஆய்வு

செல்பேசிகள் வெளிப்படுத்தும் அலைவரிசை களால் நோய்கள் வருமா? இந்த கேள்விக்கு விடை காண, 10 ஆண்டுகளாக, 218 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட விரிவான ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.


அமெரிக்கா அரசின் தேசிய நச்சியல் திட்டப் பிரிவு, மொபைல்கள் வெளியிடும் ரேடியோ அலைவரிசை கதிர் வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை, எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தது.


அந்த ஆய்வின் முடிவில், விலங்குகள் தொடர்ந்து ரேடியோ அலைவரிசைக்கு ஆளாகும் போது, சில விலங்குகளுக்கு புற்றுநோய் துண்டப் படலாம் என்றும், இந்த விளைவு மனிதர்களுக்கு ஏற்படுவதற்கான ஆதாரம் மிக மிக பலகீனமாக இருப்பதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


ஆய்வகத்தில் சராசரி மொபைல் வெளியிடும் கதிர்வீச்சை விட, நான்கு மடங்கு அதிகமான கதிர்வீச்சு பயன்படுத்தப்பட்டது. எனவே அதைவிட குறைவான கதிர்வீச்சையே சந்திக்கும் மனிதர் களுக்குள், அத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சொல்ல முடியாது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த, 10 ஆண்டுகளில், ‘2ஜி’ மற்றும் ‘3ஜி’ அலைவரிசை, மொபைல்கள் வெளியிடும் கதிர்வீச்சு மட்டுமே அந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது. இத்தொழில்நுட்பங்கள் குறைந்த, ‘மெகாஹெர்ட்ஸ்’ அலைவரிசைகளையே பயன்படுத்துகின்றன. இவை விலங்குகளின் உடல்களை துளைக்க வல்லவை.


ஆனால், தற்போது வேகமாக, 4ஜி மற்றும் 5ஜி அலைவரிசை போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த உயர் அலைவரிசைகளுக்கு, விலங்குகளின் உடல்களுக்குள் ஊடுருவும் திறன் கிடையாது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அப்படியென்றால், ‘4ஜி, 5ஜி’யால் ஆபத்து இருக்காதா?


புதிய அலைவரிசைகள் பாதுகாப்பானவை என, உத்தரவாதம் தர முடியாது என்றும், அவை ஏற்படுத்தும் தாக்கம், ஆய்வுக்குள்ளான, 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட மாறுபட்டவையாக இருக்கும் என்றும், ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.


- விடுதலை நாளேடு, 15.11.18

புதன், 7 நவம்பர், 2018

விண்வெளியில் நாசா கண்டறிந்த சிரிக்கும் முகம் தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டம்



வாசிங்டன், நவ.6  விண்வெளியில் நிறுவப் பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா சிரிக்கும் முகம் போன்ற தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நாசா அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ் டாக்ராம் பக்கத்தில் குறிப்பிட்ட விண்மீன் தொகுப்பின் புகைப் படத்தோடு வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:

ஹப்பிள் தொலைநோக்கி கேமராவின் இதற்கு முன் இல்லாத அளவிலான உருப்பெருக்கும் திறனைப் பயன்படுத்தி இத்தகைய நட்சத்திர கூட்டங்களின் இருப்பிடம் மற்றும் அமைப்பு பற்றியெல்லாம் கண்காணிக்க முடிகிறது.  படத்தில் வில் போன்று காணப்படும் ஒளியானது ஒரு விண்மீனாகும். அதன் வடிவமானது உருமாற்றம் அடைந்தும், கொஞ்சம் இழுக்கப்பட்டது போலும் தோற்றமளிப் பதற்கு காரணம், அதன் ஒளியானது நம்மை வந்தடையும் வழியில் ஒரு வலிமையான ஈர்ப்பு விசையினைக் கடந்து வருவதுதான். அதனால்தான் சிதறடிக்கப்பட்டு இவ்வாறு தோற்றமளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தடைகளை ஈரான் மீது விதிக்க அமெரிக்கா முடிவு


வாசிங்டன், நவ.6 அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது. ஈரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது. இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும். நேற்று ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர். தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இடைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் பேசிய டிரம்ப், ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள் மிகவும் கடுமையானது. இதுதான் இதுவரை விதித்த தி லேயே கடுமையான தடைகள். இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது  விதிக்கவுள்ளது.

- விடுதலை நாளேடு, 6.11.18