வியாழன், 15 நவம்பர், 2018

செல்பேசி உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல - ஆய்வு

செல்பேசிகள் வெளிப்படுத்தும் அலைவரிசை களால் நோய்கள் வருமா? இந்த கேள்விக்கு விடை காண, 10 ஆண்டுகளாக, 218 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட விரிவான ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.


அமெரிக்கா அரசின் தேசிய நச்சியல் திட்டப் பிரிவு, மொபைல்கள் வெளியிடும் ரேடியோ அலைவரிசை கதிர் வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை, எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தது.


அந்த ஆய்வின் முடிவில், விலங்குகள் தொடர்ந்து ரேடியோ அலைவரிசைக்கு ஆளாகும் போது, சில விலங்குகளுக்கு புற்றுநோய் துண்டப் படலாம் என்றும், இந்த விளைவு மனிதர்களுக்கு ஏற்படுவதற்கான ஆதாரம் மிக மிக பலகீனமாக இருப்பதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


ஆய்வகத்தில் சராசரி மொபைல் வெளியிடும் கதிர்வீச்சை விட, நான்கு மடங்கு அதிகமான கதிர்வீச்சு பயன்படுத்தப்பட்டது. எனவே அதைவிட குறைவான கதிர்வீச்சையே சந்திக்கும் மனிதர் களுக்குள், அத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சொல்ல முடியாது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த, 10 ஆண்டுகளில், ‘2ஜி’ மற்றும் ‘3ஜி’ அலைவரிசை, மொபைல்கள் வெளியிடும் கதிர்வீச்சு மட்டுமே அந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது. இத்தொழில்நுட்பங்கள் குறைந்த, ‘மெகாஹெர்ட்ஸ்’ அலைவரிசைகளையே பயன்படுத்துகின்றன. இவை விலங்குகளின் உடல்களை துளைக்க வல்லவை.


ஆனால், தற்போது வேகமாக, 4ஜி மற்றும் 5ஜி அலைவரிசை போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த உயர் அலைவரிசைகளுக்கு, விலங்குகளின் உடல்களுக்குள் ஊடுருவும் திறன் கிடையாது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அப்படியென்றால், ‘4ஜி, 5ஜி’யால் ஆபத்து இருக்காதா?


புதிய அலைவரிசைகள் பாதுகாப்பானவை என, உத்தரவாதம் தர முடியாது என்றும், அவை ஏற்படுத்தும் தாக்கம், ஆய்வுக்குள்ளான, 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட மாறுபட்டவையாக இருக்கும் என்றும், ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.


- விடுதலை நாளேடு, 15.11.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக