செவ்வாய், 16 ஜூன், 2026

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள் அடுத்து நடந்த ஆச்சரியம்

 


மாஸ்கோ, ஏப். 27- வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை சுமார் -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் திடமாக உறைந்த நிலையில் வைத் திருந்தது.

ஆய்வாளர்கள் அதை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று, அந்த புழுவை சுற்றியிருந்த பனிப்படலத்தை உருக் கினர். அப்போது அந்த புழு மீண்டும் உயிர்ப்பித்து எழுந்தது விஞ்ஞானி களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அது நகரவும், உணவு உட்கொள்ளவும் ஆரம்பித்தது.

ஆனால், அதன் பிறகு மற்றொரு ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்த புழு துணை இல்லாமல் இனப்பெருக்கம்(Asexual Repriduction) செய்யத் தொடங்கியது. மேலும், குட்டிப் புழுக்களும் அதன் தாயைப் போலவே எந்தவித குறைபாடுகளும் இல்லாத உடல் அமைப்பைக் கொண்டிருந்தன. இது விஞ்ஞான உலகில் இதுவரை கண்டிராத அரிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

ரேடியோ கார்பன் முறைப்படி ஆய்வு செய்ததில், இந்த புழு சுமார் 23 முதல் 24 ஆயிரம் ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறி யுள்ளனர். சில உயிரி னங்கள் பொதுவாக குளிர் காலத்தை சமாளிக்க ‘கிரிப்டோபயாசிஸ்’ (Cryptobiosis) என்ற நிலைக்குச் செல்கின்றன.

அந்த சமயத்தில், அந்த உயிரி னங்களின் உடல் செயல்பாடுகள் கிட்டத்தட்ட நின்று போய்விடும். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பனியில் உறைந்திருந் தாலும், ஒரு உயிரினம் மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து இனப் பெருக்கம் செய்ய முடியும் என்பதற்கு முதன் முறையாக பதிவு செய்யப்பட்ட ஆதாரம் கிடைத்துள்ளது என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை ‘ஸாம்பி’ புழு என்று சிலர் அழைத் தாலும், அறிவியல் ரீதியாக இந்த புழு உயிரிழக்கவில்லை என்றும், அதன் உடலியல் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

- விடுதலை நாளேடு,24.04.26

ஓர் அறிவியல் தகவல்! 1.3 கி.மீ ஆழத்தில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய வினோத உயிரினம் அறிவியல் விதிகளை மாற்றியமைக்கும் டெவில் வா

 


பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான எல்லை எது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவுகிறது.

தென்னாப்பிரிக்காவின் ஆழமான தங்கச் சுரங்கங்களில், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.3 கிலோமீட்டர் கீழே கண்டறியப்பட்டுள்ள விந்தையான உயிரினம் அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அறிவியலாளர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், பல மில்லியன் ஆண்டுகள் பழைமையான பாறை இடுக்குகளில் தேங்கியிருந்த தண்ணீரில் இந்த உயிரினத்தைக் கண்டறிந்துள்ளனர்.

ஹேலிசபலோபஸ் மெபிஸ்டோ (Halicephalobus mephisto) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினம், அரிசி தானியத்தை விட சிறியது மற்றும் இதற்கு கண்கள் கிடையாது.

2011-ஆம் ஆண்டில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த உயிரினத்தை ஆராய்ச்சி யாளர்கள் ‘டெவில் வார்ம்’ (Devil Worm) என்று அழைக்கின்றனர்.

பொதுவாக இவ்வளவு ஆழமான பகுதிகளில் பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரினங்கள் மட்டுமே வாழ முடியும் என்று கருதப்பட்டது.

ஆனால், வெளிச்சம் இல்லாத, மிகக் குறைந்த ஆக்சிஜன் கொண்ட, அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் நிறைந்த இந்த ஆழமான பகுதியில் ஒரு பல செல் உயிரினம் (Multicellular organism) வாழ்வது அறிவியல் விதிகளைத் தகர்த்துள்ளது. இந்த உயிரினம் அங்குள்ள பாக்டீரியாக்களை உணவாகக் உட்கொண்டு உயிர்வாழ்கிறது.

2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்த புழுவின் உடலில் அதிகப்படியான வெப்பம் மற்றும் மன அழுத்தத்தைத் தாங்கி உயிர்வாழ உதவும் சிறப்பு மரபணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், இதன் உடலில் உள்ள ‘சைட்டோக்ரோம் சி ஆக்ஸிடேஸ்’ (Cytochrome c oxidase) என்ற புரதம், ஒரு உயிரியல் சென்சார் போல செயல்பட்டு, சுற்றுச்சூழலில் ஏற்படும் திடீர் வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப இந்த உயிரினம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள உதவுகிறது.

பூமியில் உயிரினங்கள் வாழ் வதற்கான எல்லை எது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவுகிறது.

பூமியின் ஆழத்தில் இத்தகைய சிக்கலான உயிரினங்கள் வாழ முடியும் என்றால், இதே போன்ற கடினமான சூழல் கொண்ட மற்ற கோள்கள் அல்லது நிலவுகளிலும் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

-விடுதலை நாளேடு, 09.05.26

புதன், 21 ஜனவரி, 2026

ஆண் துணை இல்லாமலும் இனப்பெருக்கம் செய்யும் கரப்பான் பூச்சி !

 'பாலுறவு!'


 பாலுறவு என்பது மிகவும் சிக்கலான நடவடிக்கை யாகும். எனினும் பெரும் பாலான உயிரினங்கள் மிக எளிமையாக -பாலுறவு ஈடுபாடு இல்லாமலே நகலக்கம் எனப்படும் குளோனிங் முறையில் உற்பத்திப் பெருக்கம் செய்து தள்ளுகின்றன எனப் பெரும்பாலோர் கருதக் கூடும். பார்க்கப் போனால் பாலியல் தொடர்பற்ற உற் பத்தி என்பது உயிரினங்களைப் பொறுத்தவரை மிகவும் அரிது. ஒரு முறை பாலுறவில் ஈடுபட்டுவிட்டால், பின்னர் பாலுறவற்ற உற்பத்திக்கு மீள்வது மிகக் கடினம் என்று  பாட்ரிகா ஜே.மூர் போன்ற மான்செஸ்டர் பல்கலை வல்லுநர்கள் அறி வுறுத்துகின்றனர்.


 மரபணு மாறுபாடுகள் காரணமாக பாலுணர்வு எழுகிறது என்பது வழிவழிவந்த ஞானமாகும்.  பாலுறவு அற்ற அற்ற உற்பத்தியினால் எழும் வாய்ப்புக் குன்றவுகளால்கூட பாலுணர்வு முகிழக்கூடும்.


 அதாவது மரபணுக்களை நீர்த்துப் போகச் செய்யாது என்பது பாலுறவு அற்ற உற் பத்தியின் பயனுறு அம்சமாகும்


 இந்தப் பிரச்சினையில் ஒரு பிடிமானத்தைப் பெறுவது இன்று சிக்கலாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக செடிப் பேன்கள் பாலுறவு இன்றியே உற்பத்தி பெருக்கத்தில் வழைமையாக ஈடுபடுகின்றன.


 சில உயிரினங்கள் பாலுறவின் மூலமும் சில பாலுறவு இல்லாமயேயும் உற்பத்திப் பெருக்கம் செய்வது எப்படி என்பது இன்னும் புரிந்து கொள்ள முடியாத கடும் புதிர் தான். உற்பத்திப் பெருக்க முறைகளில் ஈடு படுகின்றன என்பது ஏற்கனவே நாம் அறிந்திருக்கிற சிக்கலான செய்தி


 உயிரினம் ஒன்று, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பாலுறவு கொண்டும் பாலுறவு இல்லாமலும் உற்பத்திப் பெருக்கம் செய்து கொள்கின்றன என அறியும்போது நமது வியப்பு பன்மடங்காகிறது.



உயிர் தத்துவமும் வளர்ச்சியும் என்ற புதிய இதழிழ் ஒன்றில், வல்லுநர் மூலம் அவரது சகாக்களும் சோதனைச் சாலை கரப்பான்களிடத்தில் ஒரு தன்மையைக் கண்டு பிடித்து எழுதியிருக்கின்றனர். வழைமையாக இவை பாலுறவில் ஈடுபட்டுதான் உற்பத்திப் பெருக்கம் செய்கின்றன. 


 

ஆனால் ஆண் காப்பான்களுக்குத் தட்டுப்பாடு - பற்றாக்குறை ஏற்படும் போது, ​​பெண் கரப்பான்கள் பாலுறவுக் கூட்டற்ற இளப்பெருக்கம் முறையில் உற்பத்திப் பெருக்கம் செய்து கொள்கின்றனவாம்.  இந்த முறையில் ஆணின் உதவியின்றியே அனைத்தும் பெண் சுரப் பான்கள் உற்பத்தியைப் பெருக்கும் ஆற்றல் படைத்தனவாம்.


 உயிரினப் பெருக்கம் தொடர்பான அதிசயக் கனவாக இது தெரிந்தபோதிலும், பத்து பெண் கரப்பான்களுக்கு நான்கு என்ற கணக் கில் மட்டுமே இந்த வசதியைப் பெற்றவை.


 பாலுறவுடன் கூடிய உற்பத்திப் பெருக்கத்தைப் போலவே, மிக எளிதாக உற்பத்தியும் உள்ளது என்பது பாலுறவு கூட்டற்ற உற்பத்தியுள்ளது. என்பது

மற்றொரு சிறப்பாககும்.  ஆனால்,ஒரு முறை பாலுறவுக் கூட்டற்ற உற்பத்தி ஏற்பட்டுவிட்டால்.  மீண்டும் பாலுறவு உற்பத்தி என்பது கடிதிலும் கடிதாகிப் போகுமாம்.


 பெண் கரப்பானிடத்தில் சினை படாத முட்டைகளுக் கும் அதாவது ஆணின் உதவி வின்றிக் கருவாகாத முட்டைகளின் எண்ணிக்கை.  ஆணின் உதவியே தேவைப்படாத முட்டைகளின் எண் னணிக்கைக்கும்  பெருத்த வேறுபாடு நிலவுகின்றது.  தொழில் நுட்பரீதியாகப் பாக்கும்

போது, ​​விந்து அல்லது முட்டை செல்கள் உற்பத்தி யாகும்போது, ​​கரு முனை அணுக்களில் அணு இயக்க மாற்றுக் கூறு நடைபெறுகிறது.


 சாதாரணமாக.  கருமுட்டை செல் ஒன்றில் பாதியளவு முதிர்வுக் குரோ மோசோம்கள் இடம் பெற்றுள்ளன.  விந்து செல் ஒன்றை இது சந்திக்கும் போது, ​​முழு எண்ணிக்கையிலான குரோமோசோம்கள் (இளக்கீற்று) மீண்டும் பெறப்படுகின்றன.


 கருமுறை அணு இயக்க மாற்றம் என்பது இரண்டு கட்டமான நிகழ்வாகும்.  செல் பிரிவு விந்துவையும் கரு முட்டை செல்களையும் உற்பத்தி செய்வதாகும் இப் போதுதான் இவை பாதியாகக் குறைகின்றன.  இங்கு தான் குளறுபடிகளே ஏற் பட்டு விந்து கருமுட்டை செல்கள் ஏற்றத் தாழ்வாக உருவாகின்றன அல்லது பாதிக்கும் குறை வான பங்களிப்பில் இனக் கீற்றுகள் முகிழ்கின்றன.


 பெண் கரப்பான்களைப் பொறுத்தவரை, கருமுறை அணு இயக்க மாற்றம் தவறாகப் போய் கருமுட்டை செல்கள் முழுமையான இனக் கீற்றுகளோடு உற்பத்தியா கிறது.  குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இவை கருவுயிர்களாக மேம்படுகின்றன.  ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றுக்கு இரண்டு மடங்கு நிகழ்வுச் சாத்தியமற்றவை.  முதலாவதாக,


 கருமுறை அணு இயக்க மாற்றத்தில் சில தவறுகள் ஏற்பட்டு முதிர்ந்த இனக் கீற்றுகள் போதிய எண்ணிக் கையில் உருவாக வேண்டும்.  இரண்டாவதாக, அசாதாரண முட்டைக்கரு செல் ஒன்று மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பைப் பெற வேண்டும்.  எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், பாலுறவு டன் கூடிய உற்பத்திப் பெருக்கம் நிகழ்ந்த பின்னர், பாலுற வற்ற உற்பத்திக்கு பல்வேறு அரிய நிகழ்வுகள் ஒரேயடியாக நடைபெற வேண்டும்.


 பெண் சுரப்பான்கள் உற் பத்திப் பெருக்கம் தொடர் பான தனது நிலைகளை உடலுறவு - உடலுறவற்ற என்று மாற்றிக் கொள்ளும் வசதி படைத்தவை என்றா லும், அடிக்கடி இந்த மாற்றங் களில் ஈடுபடத் துணிவ தில்லை.  எனவே, பாலுற வற்ற உற்பத்திப் பெருக்கம் என்பது மிகக் கடினமானது என்றே நிலைநாட்டப்படுகிறது..


- விடுதலை ஞாயிறு மலர்,27.2.2000