சனி, 21 ஆகஸ்ட், 2021

உலக ஒளிப்பட நாள் - ஆக. 19


ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும்.

ஒரு பொருளினால்  அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளிக் கரைசலை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு லென்ஸ்வழியாக சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது.

இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. வணிகம், பொழுதுபோக்கு, விளம்பரம், கல்வி, பதிவுத்துறை அலுவலகங்கள், பத்திரிகைத் துறை, பல் ஊடக கருத்துத் தொகுப்புகள், திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒளிப்படவியலின் பயன்பாடு பெரிதும் உணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.

 1800 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர், தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவி மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளைத் தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி ஒளிப்படம் தயாரித்தார்.

நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார்.  இதுதான் முதல் ஒளிப்படமாக இருந்தது.

இது 1802 இல் உலகிற்கு முழுமையாகவும், தெளிவாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்றைய படங்கள் போல் இல்லாமல் கருமையான நிழல் போன்றே காகிதங்களில் இருக்கும்.

 காகிதத்தில்   ஒரு உருவத்தைக் கொண்டுவர நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ்(Le Gras) பகுதியில்,  ஒரு மலர்தோட்டம் ஒன்றை வீட்டு ஜன்னலில் இருந்து பதிவு செய்தனர் . இதுவே உலகின் முதல்  இயற்கைக் காட்சி கருப்புவெள்ளைப் ஒளிப்படம் ஆகும்  அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவியின் லென்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டது.

டால்போட், ஒளிகசியும் நெகட்டிவ் உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன ஒளிப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகளை அச்சிட காட்சியை மீள் ஒளிப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும். [19] 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் ஒளிப்படக் கருவி மூலம் பல ஒளிப்படங்களைப் பதிவு செய்தார்.

 இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில்  (Lacock Abbey)  ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளின் மிகப் பழைமையான  நெகட்டிவ் ஆகும்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நிலவில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடித்த சந்திரயான்-2


புதுடில்லி, ஆக.15 நிலவில் நீர் மூலக்கூறுகள் இடம்பெற்றி ருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் (இஸ் ரோ) சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ. எஸ். கிரண்குமார் இணைந்து எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திர யான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் சிறீஅரி கோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்கு பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில் நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி தகவல் தொடர்பிலிருந்து விலகியது

எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட் டர்' நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. இந்த ஆர்பிட்டர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. தற்போது இந்த தரவுகள் மூலம் நிலவின் பரப்பில் நீர் மூலக் கூறுகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதுதொடர்பாக நடப்பு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கான வலைதளத் தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஆர்பிட்டரில் இடம்பெற்றிருக் கும் அய்அய்ஆர்எஸ் கருவி எடுத்து அனுப்பியிருக்கும் ஆரம்ப கட்ட புகைப்பட தரவுகளில், இயற்பியல் அடிப்படையிலான வெப்ப திருத்த ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, நிலவின் பரப்பில் 29என் மற்றும் 62 என் இடையேயான அட்சரேகை பகுதியில் ஓஎச் (ஹைட்ராக்ஸில்), எச்2ஓ ஆகிய நீர் மூலக்கூறுகள் பரவலாக இடம்பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது. முன்பு, அதிக அளவில் ஓஹெச் மூலக்கூறுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கண் டறியப்பட்ட நிலவின் உயர் வெப்ப பகுதியைக் காட்டிலும், இப்போது கண்டறியப்பட்டி ருக்கும் தாதுக்கள் நிறைந்த பாறைகளில் அதிக அளவில் ஓஎச், எச்2 ஓ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக் கிறது. நிலவின் சுற்றுப் பாதையில் ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப் பாக செயல்பட்டு வருவதோடு, எடுக்கும் புகைப்படங்களை முன்னர் அனுப்பப்பட்ட சந்திர யான்-1 விண்கலத்துக்குத் தவ றாமல் அனுப்பி வருகிறது என்று ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

மேக வெடிப்பு ஏன் ஏற்படுகிறது?

 

ஜூலை 28 அன்று,  ஜம்மு -காஷ்மீர் கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர் மற்றும் 35-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லைஅண்மையில்ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமான லடாக்உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களிலிருந்து மேக வெடிப்புகள் பதிவாகியுள்ளனஇந்திய இமயமலையில் மேக வெடிப்பு பற்றிய 2017 ஆய்வில்பெரும்பாலான நிகழ்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்தன.

மேக வெடிப்பு என்றால் என்ன?

மேக வெடிப்பு  என்பது ஒரு சிறிய பகுதியில் குறுகிய காலதீவிர மழை நிகழ்வுகள்இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (அய்எம்டிகருத்துப்படிஇது ஒரு புவியியல் பகுதியில் சுமார் 20-30 சதுர கி.மீ பரப்பளவில் எதிர்பாராத மழைப்பொழிவு, 100 மி.மீ / மணிநேரத்திற்கு மேல் இருக்கும்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுகேதார்நாத் பிராந்தியத்தில் மேக வெடிப்புக்குப் பின்னால் உள்ள வானிலை காரணிகளைக் கண்டறிந்ததுவளிமண்டல அழுத்தம்வளிமண்டல வெப்பநிலைமழைப்பொழிவுமேக நீர் உள்ளடக்கம்cloud fractionமேகத் துகள் ரேடியஸ்மேகக் கலவை விகிதம்மொத்த மேகக்கணிகாற்றின் வேகம்காற்றின் திசை மற்றும் மேகமூட்டத்தின் போது ஈரப்பதம் ஆகியவற்றை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர்மேக வெடிப்பின் போது, ​​ஈரப்பதம் மற்றும் அதன் குறைந்த வெப்பநிலை மற்றும் மெதுவான காற்றுடன் அதிகபட்ச மட்டத்தில் இருப்பதாக முடிவுகள் காண்பித்தன. “இந்த சூழ்நிலையின் காரணமாக அதிக அளவு மேகங்கள் மிக விரைவான விகிதத்தில் ஒடுக்கப்பட்டு மேக வெடிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதுபோன்ற மேக வெடிப்புகளை நாம் பார்ப்போமா?

காலநிலை மாற்றம்உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் மேக வெடிப்புகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றனமே மாதத்தில்உலக வானிலை அமைப்புவருடாந்திர சராசரி உலக வெப்பநிலையானது தற்காலிகமாக அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ஒன்றில் குறைந்தபட்சம் தொழில்துறைக்கு முந்தைய நிலைக்கு மேல் 1.5 டிகிரி அய் எட்டுவதற்கு 40 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டதுமேலும், 2021 மற்றும் 2025-க்கு இடையில் குறைந்தது ஒரு வருடத்திற்கு 90 விழுக்காடு நிகழ்தகவு இருப்பதாகவும்இது 2016ஆம் ஆண்டின் மிக உயர்ந்த பதிவை தோற்கடிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடுகிறது.

வெப்பநிலை அதிகரிக்கும் போது வளிமண்டலம் மேலும் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும்இந்த ஈரப்பதம் குறுகிய காலத்திற்கு மிகக் குறுகிய மழை அல்லது அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மலையகப் பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நகரங்களில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும்மேலும்உலகளவில் குறுகிய கால மழைப்பொழிவு தீவிரமாக மாறப்போகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளனகாலநிலை மாற்றம் அல்லது வெப்பமயமாதல்எதிர்காலத்தில் அதிகரித்த அதிர்வெண்ணில் இந்த மேக வெடிப்பு நிகழ்வுகளை நாம் நிச்சயமாகக் காண்போம்” என்று அய்.அய்.டி காந்திநகரில் உள்ள சிவில் இன்ஜினியரிங் மற்றும் எர்த் சயின்ஸைச் சேர்ந்த விமல் மிஸ்ரா விளக்குகிறார்.

மேக வெடிப்புகளை நம்மால் கணிக்க முடியுமா?

இது மிகவும் சவாலான பணி மற்றும் மேக வெடிப்பை மாதிரியாக்குவது மிகவும் கடினம்” என்று மும்பை அய்.அய்.டியில் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த சுபிமல் கோஷ் கூறுகிறார்அவருடைய குழு இந்திய பருவமழை மற்றும் நீர்நிலை காலநிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது.

மாதிரிகள் அந்தத் தீர்மானத்தில் உண்மையில் இயங்காது என்று பாப்கார்ன் உதாரணத்துடன் மேலும் அவர் விரிவாக விளக்குகிறார். “நீங்கள் பாப்கார்னை உருவாக்குகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்சமைக்கும் பானை வெப்பமடைகிறது மற்றும் சோளம் உதிர்கிறதுஎந்த சோளம் முதலில் உதிரும் என்று நான் கேட்டால்உங்களால் பதில் சொல்ல முடியாமல் போகலாம்டிகோட் செய்ய உங்களுக்கு மிகச் சிறந்த தெளிவுத்திறன் ஆய்வுகள் தேவைமேலும்இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு எவ்வளவு சோளம் வரும் என்று நான் உங்களிடம் கேட்டால்நீங்கள் 99 விழுக்காடு சொல்ல முடியும்ஆனால் 10 விநாடிகளுக்குப் பிறகு எத்தனை என்றால் சொல்ல முடியுமாசிறந்த தீர்மானம் மற்றும் சிறந்த நேர அளவிற்கு அதன் பதில் கடினம்இதேபோல்மணிநேர மழை மற்றும் மேக வெடிப்புகளுக்குதீவிரத்தையும் இடத்தையும் உருவகப்படுத்துவது மிகவும் கடினம்” என்று கூறினார்.

புதன், 11 ஆகஸ்ட், 2021

விண்வெளி அறிவியல்: கருந்துளைக்கு பின்னால் ஒளி ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று

 

விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றைச் சுற்றிஅதீத ஒளியுடைய எக்ஸ்-ரே வெளிச்சம் வருவதை அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்கருந்துளை ஒன்றில் இருந்து ஒளி வருவது கண்டறியப்படுவது இதுவே முதல் முறை.

அய்ரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நுஸ்டார்  ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேன் வில்கின்ஸ் தலைமையிலான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கருந்துளைக்கு பின்னால் இருந்து வரும் அதிசயமான 'ஒளி மகுடம்'  குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வின்போது இந்த அறிவியல் அற்புதம் தெரியவந்துள்ளது.

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்பது விண்ணில் இருக்கும் பல விண்வெளி பொருட்களில் ஒன்றாகும்இவை என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன.

இவை அளவுக்கும் அதிகமான ஈர்ப்பு விசையை கொண்டுள்ளதுடன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு வரம்பற்ற (முடிவிலிஅடர்த்தியைக் கொண்டுள்ளன.

கருந்துளைகளின் திணிவும்  அளவிட முடியாத வகையில் அதிகமானது.

இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

கருந்துளைகளின் அதிகமான ஈர்ப்பு விசை காரணமாக இந்தப் பேரண்டத்தில் மிகவும் வேகமாக பயணிக்க கூடிய ஒளி கூட கருந்துளையின் நிகழ்வு எல்லையைக் கடந்து செல்ல முடியாது.

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன?

கருந்துளைக்கு அப்பால் இருந்து ஒளி வருவதைக் காண முடிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

இதனால் கருந்துளைக்கு அப்பால் உள்ள பகுதியில் என்ன உள்ளது என்பதை விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்ந்தறிய வழி பிறந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு எப்படி அறிவியல் பூர்வமாக சாத்தியமானது?

குறிப்பிட்ட கருந்துளையின் அதீதமான ஈர்ப்பு விசை காரணமாக இதைச் சுற்றியுள்ள வெளி வளைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த கருத்துக்கு அப்பாலுள்ள எதிரொளியும்  வளைக்கப் பட்டுள்ளதுஇதனால் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் மற்றும் நுஸ்டார் ஆகிய தொலைநோக்கிகள் நிலையிலிருந்து இதைக் காண முடிந்தது என்று அய்ரோப்பிய விண்வெளி முகமை தெரிவிக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட கருந்துளை எங்கு உள்ளது?

நமது பால்வெளி பேரடைக்கு அருகிலுள்ள  பேரவையின் மய்யத்தில் இந்தக் கருந்துளை அமைந்துள்ளது.

நமது சூரியனின் நிறையைப் போல சுமார் ஒரு கோடி மடங்கு நிறையை உடையது.

இந்தப் பேரடை பூமியிலிருந்து சுமார் 180 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது என்று அய்ரோப்பிய விண்வெளி முகமை தெரிவிக்கிறது.

ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனுக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கும் என்ன தொடர்பு?

அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன்ஈர்ப்பு விசை கருந்துளைகளைச் சுற்றியுள்ள ஒளியை எவ்வாறு வளைக்கும் என்பதைக் கணித்து தமது பொதுச் சார்புக் கோட்பாட்டில் விளக்கியிருந்தார்.

இந்த கண்டுபிடிப்பு ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கணிப்பை மீண்டும் ஒருமுறை மெய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு 'நேச்சர்அறிவியல் சஞ்சிகையில் பதிப்பிடப்பட்டுள்ளதுஇந்தக் குறிப்பிட்ட 'ஒளி மகுடம்எப்படி ஒளி மிகுந்த எக்ஸ்-கதிர்களை வெளியிடுகிறது எனும் புரியாத புதிரை அவிழ்ப்பதற்காக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.