செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நிலவில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடித்த சந்திரயான்-2


புதுடில்லி, ஆக.15 நிலவில் நீர் மூலக்கூறுகள் இடம்பெற்றி ருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் (இஸ் ரோ) சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ. எஸ். கிரண்குமார் இணைந்து எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திர யான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் சிறீஅரி கோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்கு பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில் நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி தகவல் தொடர்பிலிருந்து விலகியது

எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட் டர்' நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. இந்த ஆர்பிட்டர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. தற்போது இந்த தரவுகள் மூலம் நிலவின் பரப்பில் நீர் மூலக் கூறுகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதுதொடர்பாக நடப்பு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கான வலைதளத் தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஆர்பிட்டரில் இடம்பெற்றிருக் கும் அய்அய்ஆர்எஸ் கருவி எடுத்து அனுப்பியிருக்கும் ஆரம்ப கட்ட புகைப்பட தரவுகளில், இயற்பியல் அடிப்படையிலான வெப்ப திருத்த ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, நிலவின் பரப்பில் 29என் மற்றும் 62 என் இடையேயான அட்சரேகை பகுதியில் ஓஎச் (ஹைட்ராக்ஸில்), எச்2ஓ ஆகிய நீர் மூலக்கூறுகள் பரவலாக இடம்பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது. முன்பு, அதிக அளவில் ஓஹெச் மூலக்கூறுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கண் டறியப்பட்ட நிலவின் உயர் வெப்ப பகுதியைக் காட்டிலும், இப்போது கண்டறியப்பட்டி ருக்கும் தாதுக்கள் நிறைந்த பாறைகளில் அதிக அளவில் ஓஎச், எச்2 ஓ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக் கிறது. நிலவின் சுற்றுப் பாதையில் ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப் பாக செயல்பட்டு வருவதோடு, எடுக்கும் புகைப்படங்களை முன்னர் அனுப்பப்பட்ட சந்திர யான்-1 விண்கலத்துக்குத் தவ றாமல் அனுப்பி வருகிறது என்று ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக