புதன், 28 ஆகஸ்ட், 2019

ஹோமோ எரக்டகஸ் என்றால் குரங்கு மனிதன் என்று பொருள் (படிமவளர்ச்சி) -15

தோழர்களே விலங்கியல் 15ம் பதிவு 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நாம் கடந்த பதிவில் ஹோமோ ஹெபிலிசை பற்றி பார்த்தோம் இப்போது பார்ப்பது ஹோமோ எரக்டகஸ்
ஹோமோ எரக்டகஸ் என்றால் குரங்கு மனிதன் என்று பொருள் இம்மனிதக்கூட்டமூதாதையின் பாசில்கள் முதலில் இந்தோனோசியாவின் ஜாவாவில் 1892,ல்கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் தெனாப்பிரிக்கா , தான்சானியாவின் ஓல்டுவாய் ஜார்ஜ் ,போன்ற பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது
இதில் மிகப்பழமையானது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட சீன மனிதனின் பாசில்களாகும் காலம் 2,1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பானது மற்றவை 1,8,2 மில்லியன் காலத்தை சேர்ந்ததாகும்
ஆப்பிரிக்காவில் மனிதன் தோன்றினான் என்றால் ஆப்பிரிக்காவுக்கு முன்பாக சீனத்துக்கு எப்படி வந்தான்
இந்தியாவின் வடதுருவத்துக்கு 2,8மில்லியன் ஆண்டுக்கு முன்பாக எப்படி வந்தான் அப்படியானால் ஆசியாவில் மனிதன் தோன்றினானா?
இக்கேள்விகளுக்கான விடையை இன்னும் சில புதிர்களுக்கு பின்பு அவிழ்ப்போம்
1982 அருண் சாணக்கியா எனும் ஆய்வாளர் மத்திய பிரதேசத்தின் நர்மதை நதிக்கரயில் ஒரு மனித மண்டையோட்டை கண்டு பிடித்தார் அது ஹோமோ எரக்டசாக இருக்கவேண்டும் அதன்காலம் 6லட்சம் ஆண்டுகள் என தீர்மானித்தார்
இந்தகண்டுபிடிப்பை அமெரிக்க, பிரான்ஸ் ஆய்வுக்குழுக்கள் மேலும் ஆய்வு செய்து அது ஹோமோ எரக்டஸ் இல்லை ஹோமோ செபியன் என முடிவுசெய்தார்கள் அதன்காலத்தை 3லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் ஆண்டு என்று முடிவு செய்தார்கள்
மேலும் தமிழகத்தின் விலுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓடை எனும் ஊரில் ஒரு சிறுமியின் மண்டை ஓடு கிடைத்தது இதன்காலம் ஒரு லட்சத்து அறுபது ஆண்டுகளுக்கு முந்தியது
இது ஹோமோ செபியன் எனும் மனித வகையை சேர்ந்தது
மேலும் தமிழகத்தின் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர்மாவட்டத்தில் உள்ள அத்திரம் பாக்கத்தில் பனிக்காலத்தின் தொடக்கத்தில் அதாவது 15ல் இருந்து 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக மனிதனின் மூதாதைகள் வாழ்ந்த அடையாளங்களை சாந்தி பப்புவா எனும் ஆய்வாளர் கண்டு பிடித்து இருக்கிறார்
மேலும் இப்பகுதியில் கொற்றவை ஆற்றுக்கரைகளில் [ இன்று குசஸ்தலை ஆறு] மத்திய கற்கால மக்கள் 375000 ஆண்டுகளில் இருந்து 172 000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததை கிடைத்த கற்கருவிகளும் விலங்குகளின் எலும்புகளும் உறுதி செய்துள்ளன
பொதுவாக சிவாலிக் மலைப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் 2,8 மில்லியன் ஆண்டுக:ள் 2 மில்லியன் ஆண்டுகள் ,மத்திய பிரதேசம் மகாராஸ்டிரா, பகுதிகளில் 14 லட்சம் , 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான கற்கருவிகள் கிடைத்துள்ளன
சீனாவில் 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான பாசில்கள்கிடைத்து இருக்கிறது
தமிழகத்தில் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான கற்கருவிகள் கிடத்து இருக்கிறது
இவற்றை எல்லாம் வைத்து என்ன முடிவுக்கு வருவது மனிதனின் தொட்டில் ஆப்பிரிக்காவா? ஆசியாவா? என்ற குழப்பம் ஏற்படுவது இயல்புதான்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவில் இருந்துதான் ஹோமோ செபியன் எனும் மனிதன் உலகம் முழுவதும் பரவினான் எனும் கருத்தை மேற்கண்ட சான்றுகள் மறுக்கிறதா?
கால்டுவெல் போன்றோர் தமிழக பூர்வ குடிகள் ஆரியர்கள் ஈரானில் இருந்து வந்ததைப்போல் ஈரானுக்கு அருகில் இருந்த ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கதைகள் உண்மையா?
அல்லது சிந்து சமவெளி நாகரீகத்தை சேர்ந்த தமிழ்க்குடிகளை ஆரியர்கள் விரட்டி அடித்தார்கள் போன்ற கதைகளுக்கு புதைபடிவ சான்றுகளிடம் விளக்கம் கிடைக்குமா என வரும் பதிவுகளில் பார்க்கலாம்
தொடரும்
- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன்,  முகநூல் பதிவு, 28.8.19
[
](https://www.facebook.com/photo.php?fbid=172517403911666&set=a.104351330728274&type=3&eid=ARDcBkHKYeTv0oRPnloSCwmgkY2zDclGK_8fOpQQEmgXFEzKPxfXcAXkbBzLXY1yeGFEpQYhWHFmzWfU)

மனித குல மூதாதைகளில் ஹோமோ செபிலிஸ் (படிமவளர்ச்சி) -14

தோழர்களே விலங்கியல் குறித்த 14ம் பதிவு


நமது மனித குல மூதாதைகள் குரங்கில் இருந்து பிரிந்து பல்வேறுபரிணாம வடிவங்களை அடைந்தே இன்றுநாமாக உருவாகி இருக்கிறோம்
பொதுவாக மனிதனை தவிர்த்த மனித மூதாதைகளை ஹோமினின் என்று அழைக்கிறார்கள் இந்த ஹோமினிகளின் பாசில்கள் மிக அதிகமாக கிடைத்து இருக்கிறது
இந்த பாசில்கள் கிடைத்த இடம் அந்த பாசில்களின் உருவ அமைப்பு ஆகிய ஒவ்வொன்றையும் கணக்கில் கொண்டு அதற்கேற்ற அடையாள பெயர்களை வைத்துள்ளார்கள்,
அதற்குள் சென்றால் நமக்கு நிறைய குழப்பம் ஏற்படும் எனவே நாம் மூன்று வகையான முன்னோர்களையே இப்பதிவுகளில் எடுத்துக்கொள்ளப்போகிறோம்
1 ஹோமோ செபிலிஸ்
2 ஹோமோ எரக்டகஸ்
3 ஹோமோ செபியன் அதாவது நாம்
முதலில் ஹோமோ ஹெபிலிசை பார்ப்போம் இந்த கூட்டம் ஏறத்தாழ 25 லட்சம் ஆண்டுகளில் இருந்து 15 லட்சம், ஆண்டுகள் வரை வாழ்ந்த மனித குலத்தின் முன்னோர் ஆவர்
இவர்கள்தான் முதலில் இந்தியாவின் வடபுலத்தில் குடியேறியவர்களாக இருக்கவேண்டும் ஏனென்றால் இந்தியாவின் சிவாலிக் பகுதிகளில் காணப்பட்ட கற்கருவிகள் 20 லட்சத்தில் இருந்து 28 லட்சம் ஆண்டுகளை சேர்ந்தது
ஆகவே தான் ஹோமோ ஹெபிலிஸ்தான் இந்தியாவில் குடியேறி இருக்க வேண்டும் என அனுமானிக்கிறோம்
இக்காலத்தில் ஹோமோ எரக்டகஸ் தோன்ற வில்லை
இவர்களின் அதாவது ஹோமோஹெபிலிசின் உடல் சார்ந்த பாசில்கள் எதுவும் ஆப்பிரிக்காவுக்கு வெளியில் கிடைக்க வில்லை
ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா,தான்சானியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா , ஆகிய நாடுகளில் இவர்களின் எலும்புகள் , பற்கள் மண்டை ஓடுகள் , கற்கருவிகள் என நிறைய சான்றுகள் கிடைத்துள்ளன
இவர்களின் எடை சரசரியாக55கிலோ, உயரம் 4,5 அடி,மனித மண்டையோட்டை ஒத்த உருண்ட மண்டையோடு,குரங்குகளைபோல் இல்லாமல் மனிதனை ஒத்த உள்ளடங்கிய நெற்றி,
மண்டையோட்டின் அமைப்பை வைத்து பார்க்கும் போது மொழிசார்ந்த வளர்ச்சிக்கான இடது பகுதி நன்கு வளர்ச்சி அடைந்து இருந்தது
பேச்சு திறனுக்கான மூளையின் பகுதிகள் வளர்ந்து இருந்தன
கோரை பற்களின் அமைப்பு விலங்குகளை போல் அல்லாமல் மனிதனின் பல்லைப்போல் சிறிதாக இருந்தது
பற்கள் மற்றும் தாடையின் அமைப்பு அரை வட்டமாக நம்மைபோல் ஓரளவு சீராக இருந்தத
கைகளின் திறன் சிறப்படைந்து இருந்தது
துல்லியமாக கற்களை சுழற்சி வீசும் திறனை கைகள் பெற்று இருந்தன நம்மைபோல் குரங்குகளால் கைகளை துல்லியமாக பயன்படுத்த முடியாது
பெரிய தலை குட்டையான கழுத்துக்கள் ,
குரங்குகளுக்கு இருப்பதை போல் அல்லாமல் குட்டையான பாதம் கட்டை விரல் மனிதனை ஒத்து இருந்தது
கண்களின் அமைப்பும் விலங்குகளைபோல் உட்குழிந்ததாக இல்லாமல் மனிதக்கண்களை ஒத்து இருந்தது
இவர்கள் மிகுதியாக தாவர உணவுகளையும் சிறிய அளவில் மாமிசமும் உட்கொண்டனர் ஏனென்றால் மாமிச உணவு கிடைப்பது மிகவும் கடினமானதாக இருந்தது
தொடரும்
- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன் முகநூல் பதிவு, 27.8.19
[
](https://www.facebook.com/photo.php?fbid=172283597268380&set=a.104351330728274&type=3&eid=ARAHZodZ0TwIy_Jx8l4OK5MZDOloBY9Jeg7cw31SL96Z9wwNF-VwQ7m4xPJm3Ca1uXmT2TRoKObtFg5P)
[
](https://www.facebook.com/photo.php?fbid=172287897267950&set=gm.356269768654827&type=3&eid=ARBpajfO0MrDRa8b--Ch1xBuUZwEN_Mfwz1Cw6qzI2nshBn28qmyCUohg0UVBzaZg0iyRu-sLpnfZteq&ifg=1)

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

ஹோமொ ஹெபிலிஸ் என்ற இனம் தோற்ற காலம் (படிமவளர்ச்சி) -13

தோழர்களே விலங்கியல் குறித்த 13ம் பதிவு


இயற்கையே தன்னை சுற்றி எப்படிப்பட்ட உயிரினம் வாழ்வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது இதுவே டார்வினின் இயற்கை தேர்வு என்று கடந்த பதிவுகளில் கூறி இருந்தேன்
இந்த பூமி கடந்த 450 கோடி ஆண்டுகளாக கடுமையான வெப்பம் கொண்டதாகவும் இந்த வெப்பம் படிப்படியாக குறைந்தும் வந்தது
சுமார் 80 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பனியுகம் ஆரம்பித்தது அந்த பனியுகம் சுமார் 20 கோடி ஆண்டுகள் நீடித்தது இதற்கான துல்லியமான காரணம் எனக்கு தெரியவில்லை ஆய்வாளர்கள் கூறும் காரணமும் திருப்தியாக இல்லாத காரணத்தால் அது குறித்து இங்கு விவாதிக்க வில்லை
ஆனால் கிமு 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பூமியில் கடுமையான வெப்பம் அதிகரித்தது இதன் காரணம் பூமியில் அபரிதமான கார்பன் டைஆக்சைட் அதிகரித்ததே கரணமாகும்
இக்காலத்தில் கடல்களும் நீர்நிலைகளும் வற்ற ஆரம்பித்தது இக்காலத்தில்தான் கடல்வாழ் நீர்வாழ் உயிரினங்கள் இருவாழ்விகளாகவும் அவற்றில் இருந்து ஊர்வனவும் தோன்றி பெருகின
பாலூட்டிகள் தோன்றிய காலமும் 6கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக வெப்பமாகவே இப்பூமி இருந்தது
இந்த வெப்பத்தில் இருந்துவிடுபடவே திமிங்கிலம் டால்பின் , கில்லர் வேல் போன்ற நான்குகால் பாலூட்டிகள கடல்வாழ் உயிரியாக மாறி இருக்க வேண்டும்
ஏனென்றால் இதே காலத்தில் கடும் குளிராக இன்று இருக்கும் வட துருவத்தில் பனை மரங்கள் போன்ற வெப்பமண்டல தாவரங்கள் பல்கி பெருகின அப்படிபெருகிவாழ்ந்த பனை மரத்தில் பாசில்கள் தான் கீழே படத்தில் இருப்பது இது அமெரிக்க மியூசியத்தால் பாதுகாக்கப்படுகிறது
5கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டல தாவரங்கள் மட்டும் இல்லை வெப்பமண்டல விலங்குகளும் வட துருவத்தில் வாழ்ந்தன அவை அலிகேட்டர் எனும் முதலைகள் சுறாக்கள் , நீர்யானைகள் போன்றவை
இந்தவெப்பக்காலம் கடந்த இருபது லட்சம் ஆண்டுகள் வரை நீடித்தது இக்காலத்தில்தான் பாலூட்டிகள் பல்கிபெருகின பலூட்டிகளில் ஒரு இனமான குரங்குகளும் அவற்றின் வழித்தோன்றலான மனித குலத்தின் முன்னோர்களும் தோன்றிய காலமாகும்
இப்பூமி கடந்த காலங்களில் இன்று இருப்பது போல் அமைதியாக இல்லை அது எப்போதும் கண்ட திட்டு நகர்வுகளையும் அதன் விளைவாக பூகம்பம் எரிமலை வெடிப்புகள் ஆகியவை எப்போதும் நிகழ்வதாக இருந்தது.
இந்த எரிமலை வெடிப்புகள் எப்போதும் அக்கினிகுழம்புகளையும் சாம்பலையும் பாறைகளையும் வானில் வீசி எறிந்த காரணத்தால் கார்பன் டை ஆக்சைட் வான் பரப்பில் பரவி புவியின் வெப்பத்தை மிக அதிகமாக உருவாக்கி வந்தன
இப்படி பட்ட காலத்தில்தான் புவியின் மையக்கோட்டுப்பகுதியில் குறிப்பாக தான்சானியா , காங்கோ பகுதிகளில் தோன்றிய மனித குலத்தின் மூதாதைகள்[ இவர்கள் ஹோமோ ஹெபிலிஸ் ஆக இருக்கவேண்டும் ] அதிக வெப்பம் காரணமாக வெப்பம் குறைவாக இருந்த பூமியின் வடபுலத்தை நோக்கிநகர்ந்து இருக்கவேண்டும்
ஹோமொ ஹெபிலிஸ் என்ற இனம் கற்கருவிகளையும் எலும்புகளையும் கம்புகளையும் பயன்படுத்த தெரிந்த ஆனால் உருவாக்கத்தெரியாத மனிதர்களின் முன்னோர் ஆவர்
இவர்கள் தமது கடைசி காலத்தில் கற்கருவிகளை உருவாக்க ஆரம்பித்தனர் இவர்கள் உருவாக்கிய கற்கருவிகளே 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் உருவாக்கிய முதல் கற்கருவிகள் ஆகும் இதுவே வரலாற்றில் புராதன கற்காலம் என அழைக்கப்படுகிறது
இந்த மனித மூதைகளின் மூளை 700 கிராம் இருந்ததுஇவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியே ஹோமோ எரக்டகஸ் எனும் தீயை பயன்படுத்தவும் உருவாக்கவும் தெரிந்த மனிதனின் மூதாதை ஆவர் இவர்களின் கற்கருவிகலும் மூளையும் ஹோமோ ஹெபிலிசை விட வளர்ச்சி பெர்றதாகும் இவர்களின் மூளையின் அளவு 1000 கிராம் ஆகும்
இவர்கள் இறைச்சியை வேக வைத்து உண்டனர் எனவே அதிக இறைச்சியை உன்ண முடிந்ததால் இவர்களின் மூளையும் மிகவேகமாக வளர்ந்தது
இவர்கள் பலவகைகளில் மனிதனை போன்று இருந்தாலும் சிம்பன்சி கொரிலாக்களுக்கு இருப்பதைபோலவே இவர்களின் செல்களும் 24 குரோமோசோம்களை கொண்டதாக இருந்தது
இந்த ஹோமோ எரக்டகஸ் இனமே மனித மூதாதைகளில் பூமியில் மிக அதிக காலம் வாழ்ந்த இனமாகும்
ஹோமோஎரக்டகசுக்கு முந்திய ஹோமோ ஹெபிலிஸ் இனமே சுமார் 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலநடுக்கோட்டின் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வடக்கு நோக்கி இடம்பெயர்ந்த விலங்குகளை பின்பற்றி இன்றைய காஷ்மீர் பகுதிகளில் உள்ள சிவாலிக் மலைப்பகுதிகளில் குடியேறினர்
ஏன் ஹோமோ ஹெபிலிஸ் என்று கூறுகிறேன் என்றால் ஹோமோ எரக்டகஸ் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானார்கள்
சான்றுகளை அடுத்த பதிவில் காணலாம்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன்ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 26.8.19
[
](https://www.facebook.com/photo.php?fbid=172062603957146&set=pcb.172070577289682&type=3&__tn__=HH-R&eid=ARCOmdoWzoGCgZPHyzCOv8oUHmK62pVLNuLWmx2GP97KXEaqpHXVA6Z_TfHjhHtqWmo-1jh59P7e25Lk)

நவீன பாலூட்டிகளின் தோற்றம்16 கோடி ஆண்டுகளுக்கு முன் (படிமவளர்ச்சி) -12

தோழர்களே நவீன பாலூட்டிகளின் தோற்றம்16 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதைபுதை படிவ சான்றுகள் உறுதி செய்கின்றன
விலங்கியல் குறித்த 12வது பதிவு


இந்த பாலூட்டிகளின் உருவம் மிகவும் சிறியதாகவும் ,இவை சிறு பூச்சிகளை உண்ணும் அளவுக்கு உருவ அமைப்பு கொண்டதாகவும் இருந்தது
இந்த சிறிய உருவ அமைப்புதான் 65 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் விழுந்து பெரும்நாசத்தை விளைவித்து விண் கல்லின் தாக்கத்தில்டைனோசர் கூட்டத்தை பூண்டோடு அழித்த நிகழ்வில் இருந்து தப்பி வாழ வழி செய்தது
மேற்கண்ட சிறிய உதாரணம் போதும் வலியது வாழும் என்ற கூற்றை பொய்யாக்க.
ஆனால் இப்பாலூட்டிகள் ஆஸ்திரேலிய கங்காருக்களைப்போல் மார்சுபியர்ஸ் வகையை சேர்ந்தவை அதாவது குட்டியை ஈன்று அவை நன்கு வளரும் வரைவயிற்றில் ஒரு பைபோன்ற அமைப்பில் பாதுகாத்து வளர்ப்பதாகும்
இந்த பாலூட்டிகள் தான் இன்றைய பாலூட்டிகளின் பொது மூதாதை என நம்புகிறார்கள் ஆனால் இது நம்பும் படி இல்லை
இயற்கையில் எங்கும் பரிணாம வளர்ச்சியில் ஒரேவகை விலங்குகள் மட்டும் உருவாது இல்லை
குறிப்பாக நீரில் இருந்து இருவாழ்விகளோ ஊர்வனவோ தோன்றும்போது அவை ஒரேவகையாக இருக்கவில்லை பல்வேறு வகையாகவும் பல் வேறு பண்புகளை கொண்டதாகவுமே பல்கி பெருகின
எனவே பாலூட்டிகள் அனைத்தும் ஒரேவகையான விலங்கில் இருந்து தோன்றின என்பது நம்புவதற்கு கடினமானது புதிய ஆதாரங்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படலாம் என நம்புகிறேன்
படத்தில் காணப்படும் சிங்கம் 1கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய சிங்கம் ,இவை பல்வேறு மாற்றங்களை இக்காலத்தில் அடைந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இக்கால சிங்கங்களுக்கு இடம் விட்டு நகர்ந்தன
சாதாரண குரங்கு வகைகள் சுமார் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றின
இந்த சாதாரண குரங்குகளில் இருந்து பபூன் போன்ற பெரும் குரங்குகள் இரண்டு கோடி ஆண்டுக்கு முன் பிரிந்தன .
இந்த பெரும் குரங்கு வகைகளில் இருந்து பிரிந்தவைதான் கொரில்லா, கிப்பான் , உராஙுடான்,கொரில்லா சிம்பன்சி போன்றவை
இந்த பெரு மனித குரங்குகளுக்கும் ஆரம்பகாலத்தில் உருவான வால் அமைப்பு கொண்ட குரங்குகளுக்கும் மரபியல் தொடர்ச்சி நிலவுவதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன
இந்த கொரில்லா வகை குரங்குகளும் சிம்பன்சி வகை குரங்குகளும் ஏறத்தாழஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்தனர்
இந்த சிம்பன்சி கூட்டத்தில் இருந்து மனிதனின் மூதாதைகள் சுமார் 70லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்தார்கள் என்பதை பாசில்கள் உறுதி செய்கிறது ஆனால்?
மரபியல் ஆய்வுகள் 40 லட்சம்ஆண்டுகளுக்கு முன்புதான் சிம்பன்சி குரங்கில் இருந்து மனிதனின் மூதாதை பிரிந்ததாக காட்டுகிறது
ஆய்வாளர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளானார்கள் மீண்டும்பலர் குரங்குகளின் வாழ்வை ஆய்வு செய்தார்கள்
அதில் ஒரு புதிய விசயத்தை கண்டு பிடித்தார்கள் அது பபூன் போன்ற குரங்குகள் தங்கள் கூட்டத்திலிருந்து 30 அல்லது 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த குரங்குகள் கூட்டத்துடன் பாலியல் உறவு கொண்டு தம் சந்ததிகளை உருவாக்கும் வழக்கத்தை கொண்டு இருக்கின்றன என்ற உண்மையை கண்டுபிடித்தார்கள்
இதுபோலவே மனிதனின் மூதாதைகளும்சிம்பன்சி கூட்டத்தில் இருந்து பிரிந்த போதும் அவற்றுடன் நிண்ட நெடுங்காலம் பாலியல் தொடர்புகளை கொண்டிருக்கவேண்டும் எனும் முடிவுக்கு வந்தார்கள்
இப்படியாக மனித மண்டையோட்டு எலும்புகள் நமக்கு அறிவித்த காலத்துக்கும் ஜீன் ஆய்வுகள் நமக்கு அறிவித்த வேறுபட்ட கால அளவுக்கான முரண்பாடு சரி செய்யப்பட்டது
கொரில்லாவின் ஜீன் தொகுதி நமது உடம்பில் அரை சதவீதமும் அதாவது சிம்பன்சியின் ஜீன்கள் ஒரு சதவீதமும் நம் உடலில் கலந்துள்ளன
மொத்தமாக மனிதனின் 300 கோடி டிஎன்,ஏ தொகுதியில் கொரிலாவின் டிஎன் ஏ ஒன்றைகோடியும் சிம்பன்சியின் டி என் ஏ மூன்று கோடியும் கலந்து காணப்படுகிறது
குரங்குகளுக்கும் நமக்கும் தோற்ற வகையில் மட்டும் இல்லை ஜீன் தொடர்பும் இருக்கிறது
இவை எல்லாம்கண்டு பிடிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிறது ஆனால் இவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்ல ஆளும் வர்க்கம் அணுமதிப்பது இல்லை
அப்படியே கொண்டுசென்றாலும் அதை புரிந்து கொள்ள முடியாத ஒரு அருவமான கல்வியாக கொண்டுசெல்கிறது
உயிரியலில் உயர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கே இவை புரிவதில்லை என்பதுதான் கொடுமை
தொடரும்
-ஆர். சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 25.8.19

சனி, 24 ஆகஸ்ட், 2019

இயற்கையின் நிர்பந்தத்தை ஏற்று உயிரினமும் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது (படிமவளர்ச்சி) - 11

தோழர்களே விலங்கியல் குறித்த 11ம்பதிவு


எப்போதும் மாறி வரும் இந்த பூமி அதன் மாற்றங்களுடன் சேர்ந்து அதை சார்ந்து வாழும் உயிரினங்களையும் அதனுடன் சேர்ந்து மாற நிர்பந்திக்கிறது
இந்த இயற்கையின் நிர்பந்தத்தை ஏற்று உயிரினமும் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது
இதன் அடிப்படையில் பரிணாம மாற்றம் என்பது ஒரு விட்டு விட்டு தாவிச்செல்லும் ஒரு தொடர் நிகழ்வாகும்
நாம் ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளின் போக்கை பார்த்து பரிணாம விதியை கேள்வி எழுப்புகிறோம்
ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புலிகளோ சிங்கங்களோ யானைகளோ இன்று இல்லை இன்று இருக்கும் சிங்கம் புலி யானை இவை எல்லாம் இந்த பத்தாயிரம் ஆண்டுகளில் பரிமாண வளர்ச்சி அடைந்தவை.
பெரும் தந்தங்களையும், சடைமுடிகளையும் கொண்ட பிரமாண்டமான மாமதம் எனும் யானைகள் இன்று ஒன்று கூட இல்லை இவை பனியுகத்தின் குளிரை தாங்கும் திறன் பெற்றவையாக இருந்தன
பூமியின் வெப்பம் அதிகரித்ததும் முடிகளை உதிர்த்து விட்டு வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட புதியவகை யானைக்கூட்டங்கள் தோன்றின
மயிரடந்த கால்நடைகளும் இன்று இல்லை பெரும் வால் பற்களை கொண்ட புலி சிங்கங்களும் இல்லை இவற்றின் இடத்தை சிறிய வலிமையான கோரைப்பற்களை உடைய வலிமையும் வேகமும் கொண்ட இன்றைய சிங்கம் புலிகள் பிடித்துக்கொண்டன
மனிதனும் இப்பத்தாயிரம் ஆண்டுகளில் படிப்படியாக தனது மிருக குணத்தில் இருந்தும் உடல் அமைப்புகளிலும் மிகவும் மாறி வருகிறான்
மனிதனின் உடல் எங்கும் பரவிக்காணப்படும் மயிரடர்த்தி இன்று குறைந்து விட்டது நிழலிலும் பாதுகாப்பான அறைகளிலும் இருக்கும் மனிதன் பளப்பளப்பான உடலை பெற்று வருகிறான்
ஆரோக்கியமான உணவையும் அதிக இறைச்சியையும் உண்ணும் மேற்கு ஐரோபியர்கள் நல்ல உயரத்தையும் வலிமையான பளபளப்பான உடலையும் பெற்று இருக்கிறார்கள்
இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் ,தென் அமெரிக்கர்கள் ஆகிய மக்களில் பெரும்பாண்மையினர் இன்னும் ஆரோக்கியமான வாழ்வை பெறாத காரணத்தால் உருவில் சிறுத்தும் பளிச்சென்றதோற்றத்தை பெறாமலும் இருக்கிறார்கள்
இந்த பின் தங்கிய நிலப்பகுதிகளில் சமூகம் சீரான வளர்ச்சி அடையாத காரணத்தால் சாதி மத இனக்குழுக்களின் பின் தங்கிய ஆதிக்கம் காணப்படுகிறது
நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் மீண்டும் மீண்டும் நடக்கும் திருமணங்கள் ,பரம்பரை நோய்களை மீண்டும் மீண்டும் உயிர்பிக்கின்றன அதிகரிக்கின்றன பரவலாக்குகின்றன
அதேவேளை நாம் ஆரோக்கியமற்ற சந்ததிகளை உருவாக்கி வருகிறோம் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் நெருங்கிய ரத்த உறவு மணங்களை புறக்கணித்து விட்டதால் அவர்கள் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குகிறார்கள்
இந்தியா போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் ஒரு உயிர் கொல்லி நோயாக பரவி வருகிறது சர்க்கரை ,ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் இல்லாத குடும்பம் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை
இவை எல்லாம் பரிணாம வளர்ச்சியில் நாம் ஒரு தற்காலிக தேக்கத்தை அடைந்து இருப்பதை காட்டுகிறது
பரிணாம வளர்ச்சியில் இயற்கை தேர்வு மட்டும் அல்ல குழுக்களின் மக்கள் கூட்டங்களின் சமூக செயல்பாடுகளும் தலையிடுகின்றன என்று கடந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்
யாரெல்லாம் தமது ரத்த உறவுகளின் எல்லைகளை தாண்டி தமது சந்ததிகளை உருவாக்குகிறார்களோ அவர்கள் பரிணாம வளர்ச்சியின் சாதகமான அம்சங்களை உள்வாங்கிக்கொள்கிறார்கள்
மற்றவர்கள் தேங்கி தம் சந்ததிகளை வாழத்தகுதி அற்றவர்களாக மாற்றுகிறார்கள்
இதில் இயற்கை யாரை தேர்வு செய்யும்பரந்த மரபியல் பண்புகளை பெற்றவர்களே வாழும் திறனை பெற்றவர்களாவும் தனிமைப்படுத்திக்கொள்பவர்கள் வாழும் தகுதியை இழப்பவர்களாகவும் மாறுகிறார்கள்
எனவே நமது பரம்பரை மரபியல் நோய்களை ஒழித்து நமது மரபை வாழும் தகுதியுள்ளதாக மாற்ற வேண்டுமானால் சாதி மறுப்பு திருமணங்கள் இன்று தேவையான ஒன்று சாதியை உடைப்பதும் அதை அழிப்பதும் நம் வாழும் திறனைஅதிகரிக்கும் உறுதி செய்யும்
தொடரும்
- ஆர் .சந்திரசேகரன் ஆர். சந்திரசேகரன் முகநூல் பதிவு, 24.8.19
No photo description available.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

நாம் வாழும் இந்த ஏழு கண்டங்களும் நிலையானதாக எப்போதும் இருந்தது இல்லை (படிமவளர்ச்சி) -10

தோழர்களே விலங்கியல் குறித்த 10வது பதிவு


நாம் வாழும் இந்த ஏழு கண்டங்களும் நிலையானதாக எப்போதும் இருந்தது இல்லை
புவியின் மையத்தில் உள்ள வெப்ப அழுத்தத்தால் பூமியின் கண்டத்திட்டுக்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்
இந்த மாற்றம் தான் கடல்களின் நடுவில் பெரும் தீவுகளை உருவாக்குகின்றன
கண்டங்களை பிரிப்பதும் ஒன்று சேர்ப்பதும் எரிமலை வெடிப்பதும் பூகம்பம் ஏற்படுவதும் சுனாமி பேரலைகள் உருவாவதும் இக்கண்ட திட்டுக்கள் நகர்வதாலும் ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும் ஏற்படும் விளைவுகளாகும்
இவை பல நேரங்களில் நமக்கும் உயிரினத்துக்கும் மாபெரும் இழப்புகளை உருவாக்கி இருக்கலாம் ஆனால் பூமியின் இச்செயல் இல்லை என்றால் நிலவைப்போல் பூமியும் இறந்து விட்டதாகவே பொருள்
பூமியின் இந்த மறு சுழற்சிதான் பூமியை உயிருடன் வைத்து இருக்கிறது இந்த சுழற்சி முறைதான் பூமியின் தாவரங்களும் விலங்குகளும் பரிணாம வளர்ச்சியில் சிறந்து விளங்க அடிப்படை காரணமாகும்
பூமியின் இம்மறு சுழற்சி கடலில் நிலப்பரப்புகளையும் நிலப்பரப்புகளில் கடலையும் பாலைவனங்களையும் உருவாக்குகிறது பூமியின் இந்த போக்குதான் தீவுகள் உருவாகவும் மலைகளும் சிகரங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாக காரணமாகும்
இந்த பூமி இதுவரை கணக்கற்ற கண்ட வடிவங்களை அடைந்து இருக்கிறது
அப்படி உருவான ஒரு பெரும் கண்டம் தான் பான்ஞ்சியா கண்டமாகும் இக்கண்டத்தில் பூமியில் இன்று உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இருந்த காலமாகும்
இது உருவானது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இக்காலத்தில் தான் பூமியின் மாபெரும் பல்லிகளான டைனோசர்கள் உருவான காலம்
இக்கண்டம் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகி 17 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பிரிய ஆரம்பித்தது
இக்கண்டத்தில் இந்திய துணைக்கண்டம் என்பது இதன் மையத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் மையத்தில் ஆப்பு போல் இணைந்து இருந்தது
இதில் இன்று இமயமலை இருக்கும் பகுதிகள் கடலால் சூழப்பட்டும் இன்று கடலால் அரபிக்கடல் வங்காள விரிகுடா இருக்கும் பகுதிகள் நிலத்தால் சூழப்பட்டும் இருந்தது
இன்று இமயமலை பகுதிகளை ஆய்வு செய்தால் அதன் ஆழத்தில் பூமியில் ஆரம்பகாலத்தில் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கடல்வாழ் உயிரினங்களும் , அதற்கு அடுத்த நிலையில் இருவாழ்விகளும் சமவெளிகளில் வாழ்ந்த குதிரைகளின் பாசில்களும் கிடைக்கிறது
இந்த துணைக்கண்டத்தின் தெற்கு பகுதியில் பாலூட்டிகளின் பாசில்கள் கிடைக்கிறது
இதன் மையத்திலும் அதாவது மகாராஸ்டிரா ,ராஜஸ்தான் குஜராத், தமிழகம் போன்ற பகுதிகளில் டைனோசர்களின் பாசில்கள் கிடைக்கிறது
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் டினோசர்களின்பெரும் நிலக்கூடுகளும் அதன் முட்டைகளும் மிகப்பெரிய அளவிலான புதைபடிவ பொருட்களாக கிடைத்துள்ளன
இப்படி ஒரு சிறப்புக்குரிய இந்திய துணைக்கண்டம் சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் முற்றிலுமாக பாஞ்சியா கண்டத்தில் இருந்து விலகி வடக்கு நோக்கி நகர ஆரம்பித்து யுரேசிய கண்டத்திட்டுடன் இணைந்தது இந்த இணைவால் உருவான மடிப்பு மலையே இமைய மலையாகும்
இந்திய ஆஸ்திரேலிய கண்டத்திட்டுக்கள் இப்போதும் வடக்கு நோக்கி நகர்வதால் இப்போதும் இமயம் வளர்ந்துகொண்டு இருக்கிறது
ஆஸ்திரேலிய கண்டத்திட்டுக்கள் இந்தோனேசிய கண்டத்திட்டுக்களுடன் மோதி அழுத்துவதால் தான் அப்பகுதிகளில் தொடர் சுனாமி பேரலைகள் ஏற்படுகிறது
எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆசியாவுக்கும் நடுவில் கடலே இருக்காது அது ஆசிய நிலத்தட்டுடன் இணைந்து விடும் வாய்ப்பே அதிகம்
இப்படி ஓயாமல் மாறிவரும் இப்பூமி பந்து அதற்கேற்ப உயிரியல் வாழ்வையும் மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கிறது
இதன் காரணமாக நிலவாழ் உயிரிகள் நீர்வாழ் உயிரியாகவும் நீர் வாழ் உயிரிகள் நிலவாழ் உயிரியாகவும் மாறுகிறது
வடதுருவ குளிர் பிரதேசங்கள் வெப்ப மண்டல பகுதி நோக்கியும் வெப்ப மண்டல பகுதிகள் குளிர்பகுதியை நோக்கியும் தள்ளப்படுகிறது
இவை மட்டும் அல்லாமல் பூமியின் சுழற்சியின் விளைவால் பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பனியுகமும், கோடையுகமும் , உயிரின வாழ்வில் என்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன
இப்போது 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட பனியுகம் முடிந்து கோடையுகம் திரும்பி விட்டது இந்த கோடையும் தொடங்கி 15000 ஆண்டுகள் ஆகிவிட்டது
இந்த கோடையுக தொடக்கத்தில்தான் மனிதன்கற்கருவிகளை கொண்டு வேளாண் தொழிலை தொடங்கினான்
அடுத்தடுத்த பதிவுகளில் பாலூட்டிகளில் இருந்து மனிதனின் தோற்றம் குறித்து பார்க்கலாம்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு
[
](https://www.facebook.com/photo.php?fbid=171213934042013&set=a.104351330728274&type=3&eid=ARBWNb3HMEYJpiX8Tci195FWBjV-3moH6oJ8sQ-NgHvO303OG9kaE9Q5vANUP0jeh-e5q-mcKNT2Vxc6)
[
](https://www.facebook.com/photo.php?fbid=171222567374483&set=gm.353638175584653&type=3&eid=ARC6RjzWrQ2M4Q9J4OjRUG4KKVTF5vUvmHR2SKem1JOo4zyplpvh7kkBp6_mOU1deAECzaCi-WGDk4Iy&ifg=1)

ஒருவகை குரங்கின் வம்சாவழி எப்படி மனிதனாக மாறியது இதில் இயற்கை தேர்வின் பங்கு என்ன ? (படிமவளர்ச்சி) -9

தோழர்களே விலங்கியல் குறித்த ஒன்பதாவது பதிவு


பெருங்கடல்கள் கடல்வாழ் உயிரிகளும் ,பனிப்பிரதேசங்களில் வாழும் விலங்குகள் உருவாக பனிப்பிரதேசங்களும், பாலைவன உயிர்கள் உருவாக காரணமான பாலவனங்களும்நமக்கு இயற்கை தேர்வு முறை இருப்பதை உணர்த்துகின்றன இதுவே டார்வினின் இயற்கை தேர்வு குறித்த அவரின் கருத்தின் அடிப்படையாகும்
ஒருவகை குரங்கின் வம்சாவழி எப்படி மனிதனாக மாறியது இதில் இயற்கை தேர்வின் பங்கு என்ன ?
இதுவரை மரங்களில் வாழ்ந்த குரங்குகள் தரைக்கு வந்து வேர்கள் கிழங்குகள் பூச்சி புழுக்களை தோண்டி உண்ண ஆரம்பித்ததால் அவை முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தி படிப்படியாக ம் இன்றைய மனிதனாக மாறியது என்பதே பொதுவாக அனைவரும் கூறும் கருத்து
சரி காடுகளில் மரங்களில் வாழ்ந்த குரங்குகள் ஏன் தரைக்கு வர வேண்டும் இதில் இயற்கை தேர்வின்பங்கு என்ன என்பது குறித்து யாரும் ஒரு தெளிவானமுடிவை முன் வைக்க வில்லை.
ஆனால் குரங்கு மனிதனாக மாறிய அம்சத்தில் இயற்கை தேர்வின் பாத்திரம் சிறப்பாக பங்காற்றி இருக்கிறது என்பதை நாம் மனிதக்குரங்கில் இருந்து மனிதன் உருவான காலத்தை ஆய்வு செய்தால் அதை கண்டு பிடித்து விடலாம்
பொதுவாக நாம் பாலை வனங்களை பற்றி ஓரளவுதெரிந்து வைத்து இருக்கிறோம். சகாரா,கோபி, தார், நபீப்,அர்சோனா, அரேபிய பாலவனங்களை பற்றி எல்லாம் ஓரளவு நமக்கு தெரியும்
ஆனால் இப்பாலைவனங்கள் எப்படி வந்தன இவ்வளவு பெரிய மணல் மேடுகள் எப்படி உருவாகின என நாம் யோசிக்க மாட்டோம் யோசித்தாலும் விடை தெரியாது
சகாரா பாலவனம் ஏறத்தாழ ஒரு கோடி சதுர கிலோ மீட்டரை கொண்டதாகும் உலகின் பாலைவங்கள் அனைத்திலும் இதுதான் பெரியது
சமீபத்திய ஆய்வுகள் இப்பாலைவனம் ஒருகாலத்தில் கடலாக இருந்ததையும் அதில் ஆறு அடி நீளமுள்ள கேட் பிஸ் எனும் கெழுத்தி மீன்களும் ,35 அடி நீளமுள்ள கடல் பாம்புகளும் இன்னும்பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கிடைத்து இருக்கிறது
சுமார் ஒரு கோடி ஆண்டுகளில் இருந்து 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இக்கடல் பரப்பு கண்ட திட்ட நகர்வுகளினால் மாற்றம் அடைந்து பாலவனங்களாக மாறியதை சமிபத்திய ஆய்வுகள் உறுதி செய்கிறது
இந்த மாற்றங்கள் சகாராவில் மட்டும் அல்லாமல் அரேபிய சீன பகுதிகளிலும் பெரும் சுற்று சூழல் மாற்றங்களை ஏற்படுத்தியது
இக்காலத்தில் தாவரங்கள் விலங்குகள் போன்றவை பழைய முறையில் இல்லாமல் பெரும் சிக்கல்களை சந்தித்தன
கடல்கள் பாலையாகவும் , நிலப்பரப்புக்கள் கடலாகவும் , காடுகள் இருந்த இடம் சமவெளிகளாவும் மாறியது
இதமாக ,குளிராக இருந்த பகுதிகள் வெப்பமாகவும் வெப்பமான புவியியல் பகுதிகளில் குளிருமாக மாறியது
இந்த சூழல் மாற்றம்தான் பழைய உலக விலங்குகளை புதிதாக மாற வேண்டும் அல்லது அழிய வேண்டும் எனும் புறநிலை நிர்பந்தம் ஏற்பட்ட காலத்தில்தான் சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் முதல் மனிதனின் மூதாதை உருவானான்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஆப்பிரிக்காவில் இருந்து நவீன மனிதன் உலகம் எங்கும் பரவ ஆரம்பித்தான் எனும் பாதி உண்மையை கொண்ட கதைகளை திருத்தி நான் ஒரு புதிய கதையை உங்கள் முன் வைப்பேன்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு

புதன், 21 ஆகஸ்ட், 2019

இயற்கை தேர்வு எப்படி செயல்படுகிறது (படிம வளர்ச்சி) -7

தோழர்களே இது விலங்கியல் குறித்த ஏழாவது பதிவு

இயற்கை தேர்வு எப்படி செயல்படுகிறது என்பதை குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
இயற்கை சூழலே தனக்கான உயிரியல் அமைப்பையும் உருவாக்கிக்கொள்கிறது அப்படியானால் இயற்கைக்கு அறிவு உண்டா ? அது சிந்திக்கிறதா?இல்லை நிச்சயமாக அப்படி இல்லை.
ஒரு சிறிய எதார்த்த கற்பனை செய்வோம் மாபெரும் பசிபிக்கடலின் நடுவில் எரிமலை வெடிப்புகளால் ஒருபெரிய தீவுக்கூட்டம் ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம் .
இங்கு மிகப்பெரிய காடுகளும் ,பலவகை கனிகளை கொடுக்கும் மரங்கள் உருவானால் இயல்பாக பறவைகள் தேடி வந்து குடியேறும்,பழங்களை உண்ணும் பறவைகளை தேடி ஊண் உண்ணும் பறவைகளும் தேடிவரும்
கடல் வாழ் உயிரிகளும் ஆமை கடல் சிங்கம் போன்றவையும் இனப்பெருக்கத்துக்காகவும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இத்தீவுகளில் குடியேறும்.
இக்கடல் சிங்கங்களை வேட்டையாட சுறாக்களும் , கில்லர் திமிங்கலங்களும் வரும்,இக்கில்லர் திமிங்கலங்களுக்கு கடல் ஓரங்களில் நல்ல உணவு கிடைத்தால் அவை தரைவரை கூட வர முயற்சி செய்கிறது.
இதுவே பல லட்சம் ஆண்டுகள் தொடரும் போது கில்லர் திமிங்கலங்களோ சுறாக்களோ நிலம் மற்றும் நீர் இரண்டு பகுதிகளிலும் வாழும் திறனை அடைகின்றன
கடலை விட தரைப்பகுதிகளில் அதிக உணவு கிடைத்தால் அது காலப்போக்கில் தரைவாழ் உயிரினமாக மாறும்
முதலில் இயற்கையின் ஒரு பகுதி மாறுகிறது மாறிய இயற்கை தன் சூழலுக்கு ஏற்ப விலங்குகளை மாற்றி அமைக்கிறது இதுவே இயற்கை தேர்வாகும்
இதை நான் வெறும் கற்பனையில் கூறவில்லை கில்லர் திமிங்கலங்கள் பெங்குவின்களையும் சீல்களையும் வேட்டையாட தரைப்பகுதிகளில் ஊர்ந்து வரும் ஆற்றலை பெற்று இருக்கின்றன .
4000 கிலோ எடை கொண்ட கில்லர்கள் அரை அடி ஆழத்தில் இருக்கும் சீல்களைகூட வேட்டை ஆடுகின்றன
அதுபோல் அமெரிக்காவின் ஜார்கியா பகுதிகளில் வாழும் டால்பின்கள் சிறு மீன்கூட்டங்களை பிடிக்க கூட்டாக சேர்ந்து கடல் நீரை கரையை நோக்கி அலைகளைப்போல் தள்ளுகின்றன இந்த செயற்கை அலைகளால் கடற்கரையில் தள்ளப்படும் மீன்களை தரையில் ஊர்ந்து வந்து பிடித்துக்கொள்கின்றன
இது போன்ற டால்பின் கூட்டங்களை உலகின் வேறு எங்கும் பார்க்க முடியாது இப்போக்கு இப்படியே நீடித்தால் டால்பின்களின் ஒரு கூட்டம் தரை வாழ் விலங்காக பிறிதொரு காலத்தில் மாறக்கூடும்
இன்னொரு உதாரணத்தை பார்ப்போம் செழிப்பான ஒரு நிலப்பகுதி பாலையாக மாறி விட்டால் பழைய முறையில் அங்கு வாழ்ந்த விலங்குகள் இப்போதும் வாழ முடியாது .
அவை வெப்பமற்ற இரவில் வேட்டையாடவும் , தனது உடலின் நீர் வற்றிப்போகாத அளவில் தனது தோல்களை சொரசொரப்பானவையாக மாற்றிக்கொள்ள வேண்டும் ,நீர் குடிப்பதையும் நீரை சேமித்துக்கொள்வதையும் உறுதி செய்யும் உடல் அமைப்பை பெற வேண்டும் .
இப்படி மாறிய இயற்கை சூழல் தனக்கான உயிர் வகையையும் மாற்றி அமைக்கிறது
சதுப்பு நிலங்கள் தனக்கான சதுப்பு நில உயிர்களையும் பாலைகள் அதற்கேற்ற உயிர்வகை களையும் பெருங்கடல்கள் அதற்கான உயிர் கோளத்தையும் உருவாக்கிக்கொள்கிறது
இது திட்டமிடப்படாமல் இயல்பாக நடப்பதாகும் மாறும் உயிருக்கும் அதை மாற நிர்பந்திக்கும் இயற்கைக்கும் இது குறித்த எந்த சிந்தனைமுறையும் இருக்காது
இன்னும் அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்
[
](https://www.facebook.com/photo.php?fbid=170538334109573&set=a.104351330728274&type=3&eid=ARBI7q8ba1Gkn4w_8GbYs4Q350bGO14MvJ0ResSl5YwpgY-kwEMhAtOAR9PrhkMIHogsQCgwM59mp6G6)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170546360775437&set=gm.352019889079815&type=3&eid=ARBZ_VkFyA-WVKkLh1fnUz9peXZ1oFe5fNoRve-u0o0Hp4rvco443mhVeFJsuC2uMY723mBH59A67VwT&ifg=1)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 20.8.19

இயற்கை தேர்வின் மூலமும் வேறு சூழல்களும் புதிய வகை இனங்களை தோற்றுவிக்கும் ( படிம வளர்ச்சி) - 8

தோழர்களே விலங்கியல் குறித்த எட்டாவது பதிவு
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


பரிணாமவளர்ச்சி என்பது அடிப்படையில் இயற்கை தேர்வின் மூலம் நடந்தாலும் வேறு சூழல்களும் புதிய வகை இனங்களின் தோற்றத்துக்கு காரணமாகின்றன
விலங்குகள் கூட்டத்தின் தனித்த செயல்பாடுகளும் இதில் தலையிடுகின்றன.
கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் விலங்குகள் இவை நல்ல கவர்ச்சிகரமான நிறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் போது மட்டுமே பெண்பறவைகள் இவற்றை ஏற்கும்
ஆண் மயில்களின் வலிமையான கவர்ச்சிகரமான தோற்றம் பெண் மயில்களை கவரும்
சில பறவை கூட்டங்களில் ஆண் பறவைகள் சிறப்பான கூடுகளை உருவாக்கும் திறமை பெற்று இருந்தால் அவற்றுக்கு பெண் பறவைகள் முன் உரிமை வழங்கும்
பாலூட்டிகளில் வலிமை வாய்ந்த ஆண் விலங்குகளே பாலுறவில் ஈடுபடும் வாய்ப்பை பெறும் பெண் விலங்குகள் தமதுசந்ததியை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டாலே அதன் வாரிசுகள் இப்பூமியில் வாழும்
இப்படி இருப்பவைகளில் சிறப்பு தகுதி கொண்டவைகளே விலங்குலகின் உற்பத்தியாளர்களாக மாறுகிறார்கள்
தகுதி அற்றவைகள் புறக்கணிக்கப்பட்டு அதன் சந்ததி பூமியில் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது
புதிய சூழலுக்கு வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொள்ள திறமை கொண்ட உயிரினங்களே தம் வாழ்வை பாதுகாத்துக்கொள்ள முடியும் தனது சந்ததிகளை உருவாக்க முடியும்
இவை இல்லாமல் தனிமை படுத்தப்படும் விலங்குகள் புதிய இனங்களாக மாறுகிறது அதாவது வேறு நிலவழி நீர்வழி தொடர்பை இழந்த விலங்குகளின் ஜீன்களில் உள்ள புறக்கணிக்கப்பட்ட ஜீன்களின் அடங்கு அல்லீல்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்யும் போது இந்த அடங்கு அல்லீல்கள் வெளிப்பட்டு புதிய சிற்றினங்களை உருவாக்குகின்றன
ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் இது உலகின் நான்காவது பெரிய தீவு உலகில் உள்ள ஓணான்களில் 75 % வாழ்கிறது இங்கு விதம் விதமாக ஓணான்களை காண முடியும் காரணம் இனப்பெருக்க தனிமைப்படல்
ஒரு உயிரினம் பரவலான இனப்பெருக்க வாய்ப்புகளை பெறும்போது அவை சிறப்பான ஜீன் தொகுதிகளை அதிகம் கொண்ட சந்ததிகளை உருவாக்குகிறது
அப்படி வாய்ப்புகளை இழந்த உயிரினங்கள் உயிரினங்களால் தேவை அற்றவை என ஒதுக்கப்பட்ட ஜீன்களை மீண்டும் உற்பத்தி செய்கின்றன இவை அவ்விலங்குகள் போதுமான திறன் இன்றி நோய் எதிர்ப்பு திறன் இல்லாத வாழத்தகுதி அற்ற உயிரினத்தொகுதிகளை உருவாக்குகின்றன
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம் சுமத்ராபகுதியில் இருக்கும் ஒருதனிமை பட்ட தீவில் வாழும் மக்கள் கூட்டம் தங்களுக்குள்ளேயே திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் இந்த தீவில் வாழும் அனைவருமே நிறகுருடுகள் இவர்களில் யாருக்கும் வண்ணங்களை பகுத்து பார்க்க முடியாது
உயிரினங்கள் மிக பரந்த அளவில் இனப்பெருக்க வாய்ப்புகளை பெறும்போது மிக சிறப்பான ஜீன் தொகுதிகளை தமது சந்ததிக்கு வழங்குகிறார்கள் குறுகிய வட்டத்தில் இனப்பெருக்கம் நடக்கும் போது பலவினமான நோயுற்ற ஜீன் தொகுதிகளை வழங்குகிறார்கள்
மீண்டும் மீண்டும் ரத்த உறவுகளுக்குள் நடக்கும் இனப்பெருக்க உறவுகள் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்காமல் நோய் தொடர்ச்சி கொண்ட ஜீன்களை தொடர்ந்து தமது சந்ததிகளுக்கு கடத்துகிறார்கள்
சர்க்கரை நோய் கொண்ட இருவேறு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் திருமண உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குபாரம்பரிய சர்க்கரை நோய் தொடரும் வாய்ப்புகள் குறைவு
அதேவேளை ரத்த உறவு கொண்ட சர்க்கரை நோய் கொண்ட குடும்பங்களில் உருவாகும் சந்ததிகள் சர்க்கரை நோயை அதிகபட்ச அளவில் உற்பத்தி செய்கிறார்கள்
இதற்கு காரணம் ஜீன்கள் பாதிக்கப்பட்ட குறைபாடு உடைய ஜீன்களை செயலற்ற தாக மாற்றுகிறது அந்த ஜீன்களின் இடத்தை நிறைவு செய்ய போதுமான புதிய ஜீன்கள் இல்லாத நிலையில் பழைய ஜீன்களே உயிர் பெறுகிறது
எனவே சாதி மறுப்பு திருமணங்கள் உண்மையாகவே ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கும். சொந்த சாதிக்குள் நடக்கும் திருமணங்கள் பரம்பரை நோய்களை பாதுகாத்து அதை வாரிசுகளுக்கும் வழங்கும்
மீண்டும் சந்திப்போம்
[
](https://www.facebook.com/photo.php?fbid=170668990763174&set=a.104351330728274&type=3&av=100034602217599&eav=AfaJYwLY8C0HvFOEOlEJSYfSTfe5f87JyzFXhrzI_ERt0clVuEmoQaCwi5Xm1l3AhkY&eid=ARDwe4Bgtk5VMCbSodjeAwY8U_dX4WLboWL_PvCc7LMPnvw9BeZ-qFGHXx7Gh7MRq9S3m_vWx_SGzXIQ)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170676604095746&set=gm.926315557711066&type=3&eid=ARBuL8YFAmQztgdAwbbqQRxC0vlyinwQQaKSBy_Ov71oTemqEXVxH5vM4r4CoD0gQrhiiiE43iIyOOy9&ifg=1)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170676974095709&set=gm.352328139048990&type=3&eid=ARCu8vSH4YM_1XRkb1Rzr9OBoHtR3bfyZMDP6toz6VedP5tU8ytE3xkzmKStLBLk33iq3t5qYX6y4Fsf&ifg=1)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 21.8.19

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஆர்கா என அழைக்கப்படும் கில்லர் வேல்[kilerwhale] (படிம வளர்ச்சி) -6

தோழர்களே படத்தில் இருப்பது ஆர்கா என அழைக்கப்படும் கில்லர் வேல்[kilerwhale] உலகில் உள்ள விலங்கினங்களில் அதி புத்திசாலி இது டால்பினின் நெருங்கிய இனமாகும்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: சமுத்திரம், தண்ணீர், வெளிப்புறம் மற்றும் இயற்கை


இது ஆண் 17 வருடங்களும் பெண் 29 வருடங்களும் வாழக்கூடியது இது ஒரு பாலூட்டி ஆனால் நீலத்திமிங்கலத்தின் குடும்பத்தை சேர்ந்தவை அல்ல இதன் மூதாதை யின் பாசில்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டன
சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நிலவாழ் உயிரினமாக இருந்தது 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நீர் நில வாழ் உயிரியாக மாறியதை இதன் பாசில்கள் உறுதி செய்கிறது
இது முதலையை போல் நீரில் மறைந்து இருந்து வேட்டையாடிய போதும் நிலத்தில் நன்கு நடக்கும் திறனையும் பெற்று இருந்ததை இதன் பாசில்கள் உறுதி செய்கிறது
இந்த கில்லர் வேல் என்பது கூட்டாக வாழ்வதற்கும் கூட்டாக சேர்ந்து வேட்டையாடுவதற்கும் உதாரணமாக திகழ்கிறது
இது கடல் சிங்கம் எனப்படும் சீல்களை பிரதான உணவாக கொள்கிறது கடலின் மிக பயங்கரமான மிகப்பெரிய வெள்ளை சுறாக்கள் கூட கில்லர் திமிங்கலம் இருக்கும் பகுதிக்கு வருவதில்லை
பார்க்க மிக சாதுவாக இருக்கும் இவைகள் மிக கொடூரமான வேட்டையாடிகள்
டால்பின்களைபோலவே மனிதனிடம் நெருங்கிப்பழகும் பண்பை பெற்று இருப்பதால் இவற்றை வைத்து நிறைய வெளிநாடுகள் நிகழ்ச்சிகள் செய்து வருமானம் ஈட்டுகின்றன
இவற்றின் சுற்றுலா நிகழ்வு ஒன்றை பார்த்தாலே இவற்றின் அறிவின் ஆழம் நமக்கு புரியும்
இவை பனிப்பாறைகளில் மறையும் சீல்களை வேட்டையாட கூட்டாக சேர்ந்து செயற்கை அலைகளை உருவாக்கும் திறமை பெற்றவை
வெள்ளை சுறாக்களையும் வேட்டையாடும், நீலத்திமிங்கலத்தின் குட்டிகளை கூட வேட்டையாடி விடுகின்றன
இவற்றின் ஆணின் நிறை 3600 கிலோவில் இருந்து 5500 கிலோவரை இருக்கும் பெண் 1500 முதல் 3000 கிலோவரை இருக்கும்
இவை ஒரு பாலூட்டி என்பதும் ஒருகாலத்தில் நிலவாழ் விலங்காக இருந்தது என்பதற்கும் இன்று ஏகப்பட்ட சான்றுகளை ஆய்வாளர்கள் சேகரித்து இருக்கிறார்கள்
ஏன் அப்போது மாறிய விலங்குகள் இப்போது மாற வில்லை என நீங்கள் கேட்பது புரிகிறது
ஒரு விலங்கு பரிணாம வளர்ச்சியின் மூலம் ஒன்று வேறு ஒன்றாக மாற கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும்
இந்தமாற்றங்களை நாம் நேரில் கண்டு உணர முடியாது பல லட்சம் ஆண்டுகள் கடந்த பின்பு நம்மை திரும்பி பார்த்தால் நாமே நம்ப மாட்டோம்
ஒரு 40,000ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் இருந்ததை போலவா இன்று இருக்கிறான் நாம் முட்டியில் தவழ்ந்ததை போல் எந்த குழந்தையாவது இன்று முட்டி போட்டு தவழ்வதை பார்க்க முடிகிறதா?
அல்லது இன்று குழந்தைகளுக்கு இருக்கும் செல்போன் அறிவு நமக்கு இருக்கிறதா?
கண்முன்ன்னால் பரிணாம வளர்ச்சி நம்மை விட நிறத்திலும் குணத்திலும் உயரத்திலும் அறிவிலும் சிறந்த ஒரு புதிய சந்ததியாக நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் உருவாகி வருவது உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா?
நாம் எவ்வளவுதான் அறிவாளிகளாக இருந்தாலும் இன்றைய குழந்தைகளின் சிறப்பு தன்மைகளை நாம் அடைய முடியாத தொலைவில் இருக்கிறோம் என்பதை காணுங்கள் பரிணாமவிதியின் செயலை உணருங்கள்
சரி கூடுதலாக இயற்கை தேர்வைகாணலாம் ,
இன்று கடல் இருக்கும் இடத்தில் தரையும் தரை இருக்கும் இடத்தில் கடலும் தங்கள் இடங்களை மாற்றிக்கொண்டால் என்ன நிகழும்?
வலிமையான ஆஜானுபாகவான விலங்குகள் எல்லாம் நீலத்திமிங்கலம் ஒட்டக சிவிங்கிகள் யானை போன்ற வலிமை பொருந்திய பெரு விலங்குகள்தான் முதலில் அழியும் ஏனென்றால் இவற்றால் தங்கள் வாழ்வை உடனடியாக மாற்றி அமைத்துக்கொள்ள முடியாது
அதே வேளை நீர் நிலம் சார்ந்து வாழும் முதலைகள், நீர்யானைகள் தவளைகள் மட்கிப்பர் எனப்படும் சதுப்பு நில மீன்கள் தம்மை நிலவாழ் அல்லது நீர்வாழ் உயிரியாக மாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகம்
.
இதில் வலிமையானது வாழும் என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?இயற்கையின் கட்டளையை ஏற்று மாறிக்கொள்ளும் விலங்கே பெரிதானாலும் சிறிதானாலும் வாழும்
இந்த திடீர் அல்லது படிப்படியான மாற்றம்தான் விலங்குகளை புதிய மாறியுள்ள அதாவது இவ்வளவு காலமும் நிலவாழ் உயிரியாக இருந்ததை நீர்வாழ் உயிரியாக மாறும் படி மாறிய இயற்கை நிர்பந்தம் செய்கிறது
இந்த புற நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு தங்களை மாற்றிக்கொள்ளும் விலங்குகள் வாழ்கிறது
மாற்றிக்கொள்ள முடியாத விலங்குகள் அழிகிறது இதுதான் டார்வினின் இயற்கை தேர்வு தொடர்ந்து பார்ப்போம்
6வது பதிவு
- ஆர். சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 20.8.19

நீலத்திமிங்கிலத்தையும் அது குறித்த டார்வினின் கருத்தையும் பார்க்கலாம் (படிம வளர்ச்சி) - 5

தோழர்களே விலங்கியல் குறித்த 5வது பதிவுகடந்த பதிவில் நீலத்திமிங்கிலத்தின் மூதாதை யான நீர்நில வாழ் விலங்கின் கம்யூட்டர் படத்தை பிரசுரித்து இருந்தேன்
இதில் நீலத்திமிங்கிலத்தையும் அது குறித்த டார்வினின் கருத்தையும் பார்க்கலாம்
நீலத்திமிங்கிலம் என்பது இந்த பூமியிலேயே மிகப்பெரிய பாலூட்டியாகும் இதன் எடை இரண்டு லட்சம் கிலோகிராம் ஆகும்
இதன் இதயம் ஒரு பெரிய காரின் அளவு கொண்டது இதன் நாக்கின் நிறை 4000 கிலோவாகும் இது மொத்தத்தில் மிகப்பெரிய நிலவாழ் உயிரியான ஆப்பிரிக்க ஆண்யானைகளைபோல் 40 மடங்கு எடையை கொண்டது
இது ஒரு பாலூட்டி என்பது நீண்ட காலமாக மனிதர்கள் அறிந்ததே சார்லஸ் டார்வினும் இது குறித்த நீண்ட ஆய்வுகள் செய்தார்
கடைசியில் அமெரிக்க கரடி வகைதான் நீலத்திமிங்கிலத்தின் முதாதை என நம்பி 1856 களில் எழுதி இருந்தார் இக்கருத்து பரவலாக எடுபடாமல் போகவே தனது அடுத்த வெளியீட்டில் இந்த கருத்தை நீக்கி இருந்தார்
ஆனால் உண்மையில் டார்வின் வந்த முடிவு மிக சரியானதுதான் அவர் தேர்ந்து எடுத்த விலங்குதான் தவறாகி விட்டது
நீலத்திமிங்கிலம் ஒரு பாலூட்டி அதுநிலவாழ் விலங்கி;ல் இருந்தே நீர்வாழ் விலங்காக மாறியிருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தே இருந்தது ஆனால் நமது புரிதலுக்கு ஆதாரம் வேண்டுமே
அது நீண்ட காலமாக கிடைக்க வில்லை கடந்த 15ஆண்டுகளாக ஆய்வாளர்களின் நீண்ட தேடுதலுக்கு பிறகு விடுபட்டு போன தொடர்புகள் படிப்படியாக கிடைத்தன
இதற்கான ஆதாரம் முதலில் காஸ்மீரில் கிடைத்தது இதன் பற்களையும் இதன் எலும்புகளையும் ஆய்வு செய்த போது இது மிக நீண்ட காலத்தை நீரில் செலவு செய்யும் விலங்கினம் என்பது உறுதியானது
இதன் தொடர்ச்சிகள் தெற்கு ஆசியாவில் பரவலாக கிடைத்தன இவை நீர்யானையை ஒத்த ஒரு சிறு விலங்காகும்
இதற்கு அடுத்த சிறப்பான பாசில் பெரு நாட்டின் பசி[பிக் கடற்பகுதியில் கிடைத்தது இந்த விலங்கை ஆய்வாளர்கள் நடக்கும் திமிங்கிலம் என அழைத்தார்கள் கடந்த கட்டுரையை படித்த தோழர்கள் அந்த விலங்கின் உடல் அமைப்பை உற்று நோக்க கோறுகிறேன்
இப்படி மனிதன் தான் ஏற்கனவே புரிந்து வைத்து இருந்த திமிங்கலத்தை சான்றுகளுடன் நிறுபிக்க நீண்ட காலம் ஆனது
ஆனால் இந்த மாற்றத்தை திமிங்கலம் அடைய 5 கோடி ஆண்டுகள் ஆனது
இப்படியாக திமிங்கலத்தை பற்றிய டார்வினின் கருத்து நிலை நிறுத்தப்பட்டது
சரி பரிணாம வளர்ச்சிக்கு வருவோம்.
பரிணாம வளர்ச்சி என்றால் எப்போதும் உயிரினங்கள் மாறிக்கொண்டே இருப்பதா?
ஒரு விலங்கு எப்படி மாற வேண்டும் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கிறது குறிப்பிட்ட அந்த விலங்குகள் அல்ல,
இப்போது ஆர்டிக் பகுதியை எடுத்துக்கொள்வோம் அங்கு பனிக்காலத்தில் அப்பகுதி முழுவதுமே வெண்மையாக காட்சி அளிக்கும்
அங்கு ஒரு வெண்கரடியும் ஒரு கருப்பு கரடியும் வாழ்வதாக வைத்துக்கொண்டால் எது தனது வாழ்வை தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம்
வெண் கரடிக்கு தான் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் ஏனென்றால் எதிரிகளின் கண்ணுக்கு தெரியாமல் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் மறைந்து நின்று வேட்டையாடவும் அது வெண்மையாக இருக்கவேண்டும்
இதில் இயற்கை தேர்வு என்ன செய்கிறது?முதலில் இயற்கையின் சுற்று சூழல் மாறுகிறது இந்த மாற்றம் அங்கு வாழும் உயிர்களையும் அதற்கு ஏற்ப மாறும்படி நிர்பந்தம் செய்கிறது
ஆர்டிக்கின் சூழலுக்கு ஏற்ப கருப்பு கரடி வெண்மையாக மாறியே ஆகவேண்டும் இல்லை என்றால் கருப்புக்கரடிக்கூட்டம் எதிரிகளால் எளிதில் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படும் இரை விலங்குகளும் கருப்புகரடிகளுக்கு அகப்படாது
பச்சோந்திகளை எடுத்துக்கொள்வோம் அது மிகமெதுவாக நகரும் ஒரு உயிரினம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் அது வாழ்கிறது
அதற்கு எந்த வலிமையும் இல்லை ஆனால் தன்னை சுற்றி உள்ள சூழலுக்கு ஏற்ப அது தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது
அதாவது இயற்கையின் விருப்பத்துக்கு ஏற்ப அது தன்னை மார்றிக்கொண்டு இருக்கிறது
பரிணாம வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருப்பது அல்ல
சூழலுக்கு தகவமைவதே தன்னை சார்ந்து எப்படி பட்ட உயிரினம் வாழ்வேண்டும் என்பதை இயற்கையே முடிவு செய்கிறது என்பதே இயற்கை தேர்வாகும்
தொடரும்
- ஆர். சந்திரசோகரன் ஆர். சந்திரசேகரன் முகநூல் பதிவு, 19.8.19
Image may contain: water and outdoor

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை ( படிம வளர்ச்சி) -4

R Chandrasekaran R Chanrasekaran
18.8.19 முகநூல் பதிவு


தோழர்களே விலங்கியலின் தோற்றம் குறித்த நான்காவது பதிவு
பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை என்பதை சற்று பார்க்கலாம்
நாமும் மற்ற பாலூட்டும் விலங்குகளை போலவே குட்டி போட்டு பாலூட்டும் தன்மையை கொண்டவர்கள் பாலூட்டிகள் அனைத்தும் வெப்ப ரத்த வகையை சேர்ந்தவை
ஆம் பாலூட்டிகளின் ரத்த அளவின் வேறுபாட்டை அதாவது உடலின் வெப்பத்தை நாம் நுரையீரல்கலின் மூலமும் தோல்களில் உள்ள வியர்வை சுரப்பிகளின் மூலமும் சரி படுத்திக்கொள்கிறோம்
உரோமம் கொண்ட பாலூட்டிகள்: நுரையீரலின் மூலமும் அல்லது வாய்வழியாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன
உதாரணமாக நாய்களை கவனித்தால் கோடைகாலங்களில் அது எப்போதும் நாக்கை தொங்க விடுவதையும் வாய் வழியாக இரைப்பு ஏற்படுத்துவதையும் பார்க்கலாம் காரணம் அதற்கு வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால்நாக்கின் வழியாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன
[
இதில் ஊர்வன் வேறுபடும் அவை வெப்பம் அடைந்தால் நீரில் இறங்கி தமது வெப்பத்தை தணித்துக்கொள்ளும் குளிர் ஏற்பட்டால் வெயிலில் படுத்து உடல்சூட்டை உருவாக்கிக்கொள்ளும் எனவே இவற்றை குளிர் ரத்த பிராணிகள் என்று அழைக்கிறோம்]
அது போல் மனித குரங்குகளுக்கும் மனிதனுக்கும் மிக நெருங்கிய தோற்றமும் ஜெனடிக் தொடர்பும் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே
அதுபோல் நம் வாயின் இருபுறமும் இருக்கும் கோரை பற்கள் இப்போதும் லேசாக தனித்தன்மையுடன் இருப்பதையும் அதைகூர்ந்து பார்த்தால் வேட்டை விலங்குகளின் கோரைபற்களை ஒத்ததாக இருப்பதையும் காணலாம்
அதுபோல் மனிதக்குழந்தையின் கரு வளர்ச்சியின் போது அது வாலுடன் இருப்பதையும் அதற்கு செவுல்கள் உருவாகி மறைவதையும் காணமுடியும்
இதுபோல் இன்று வாழும் மனிதன் மற்றும் பாலூட்டிகளுக்கும் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த பாலூட்டிகளின் மூதாதைக்கும் மரபுத்தொடர்பு நிலவுவதையும் சமீப கால ஆய்வுகள் உறுதி செய்கிறது
இவை எல்லாம் விலங்கு உலகுக்கும் நமக்குமான தொடர்புகளை உறுதி செய்கிறது
இவை எல்லாம் எப்படி பரிணாம விதியை உறுதி செய்கிறது?
பரிணாம விதியை டார்வின் உருவாக்கினாரா? இல்லை கண்டு பிடித்தார்.
உயிரினங்கள் எப்படி பல்கி பெருகுகிறது அவற்றில் சில அழிகிறது சில மேம்பட்ட வளர்ச்சியை அடைகிறது இதன் காரணம் என்ன?
பரிணாம வளர்ச்சி என்பது சில காலத்துக்கு மட்டுமே உரியதா? அல்லது அது எக்காலத்துக்கும் பொருந்துமா?
அப்படியானால் இன்று ஏன் குரங்குகள் மனிதனாக மாறவில்லை நாம் பார்க்கும் விலங்குகள் அப்படியேதானே இருக்கின்றன?
வலிமையானது வாழும் என்றார் டார்வின் ?[ அப்படி டார்வின் கூறவில்லை இந்த வார்த்தை ஐரோப்பியர்கள் டார்வினியத்தை புரட்டி திருத்தி ஜெர்மானிய ஆரிய கோட்பாட்டை நிறுவ ஜெர்மானியர்கள் செய்தது]
வலிமையானது வாழும் என்று டார்வின் எங்கும் கூறவில்லை கூறப்போனால் டார்வினின் பரிணாம விதியின் படி பார்த்தால் வலிமையானது விரைவில் அழியும் வாய்ப்பே அதிகம்.
டைனோசர்கள் மிக வலிமையானதுதான் டைனோசர்களின் காலத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் 20 கோடி ஆண்டுகள் அவை இப்பூமியை ஆண்டன. பின் ஏன் எவை எந்த சந்தடியும் இன்றி அழிந்தன?
டார்வினின் பரிணாமவிதியை மிக சரியாக நாம் புரிந்து கொண்டால் நமக்கு மேற்கண்ட கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும்
பெருவாரியாக நாம் அனைவரும் மார்க்சியத்தையோ பெரியாரின் கருத்துக்களையோ, உயிரியல் வரலாறு சார்ந்த உண்மைகளையோ தப்பும் தவறுமாக புரிந்து கொள்வதால் அடிக்கடி தடுமாறுகிறோம்
சரி தவறாகவும் தவறு சரியாகவும் நமக்கு தோன்றுகிறது
நமது நாடு ஏறத்தாழ 500 ஆண்டுகளாக ஒருசீரான வளர்ச்சியை அடையாத காரணத்தால் இங்கு பிற்போக்கு தனமே மேலோங்கி இருக்கிறது
இதன்காரணமாக நவின அறிவியல் சார்ந்த ஜனநாயக கண்ணோட்டம் என்பது இல்லாமல் சாதிய மதவாத கருத்துக்கள் நம்மை ஆள்வதால் நமது பொது அறிவு மிகவும் பின் தங்கி போய்விட்டது
இபோக்குகளை நாம் முறியடிக்க வேண்டுமானால் அறிவியல் சார்ந்த உண்மைகளை கற்பதும் அந்த உண்மைகளின் அடிப்படையில் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதும் வேண்டும்
கீழே உள்ள படம் நான்கு கால்கள் கொண்ட திமிங்கிலம் இது தரையில் நடக்கவும் தண்ணீரில் நீந்தவும் திறமை கொண்ட திமிங்கலத்தின் மூதாதை இதன்காலம் 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது
தொடரும்

ஆரம்பகால இருவாழ்விகளும் ஊர்வனக்கூட்டமும் (உயிர்களின் படிம வளர்ச்சி) -3ஆரம்பகால இருவாழ்விகள் 37 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருவாழ்விகளின் உயரிய தன்மையை பெற்று இருந்த போதும் இவைகளின் சிறப்பே தோல்வழியாக சுவாசித்தலும் குறையுடைய நுரையீரல்களும் இவற்றை நீர் நிலைகளில் இருந்து தூரமாக செல்ல அனுமதிக்க வில்லை
ஏனென்றால் ஈரப்பதம் இல்லாவிட்டால் தோல் வறண்டு விடும் செவுள்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்
இந்த ஆதி மூதாதைகளின் வழியில் இன்னும் சிறப்பு பெற்ற சிறந்த நுரையீரல்களை பெற்ற நிலப்பரப்பில் எங்கும் செல்லும் திறனுடன் உருவானதுதான் ஊர்வனவாகும்
இந்த ஊர்வன க்கூட்டம் ஒரே தன்மை கொண்டதாக இல்லாமல் பல்வேறு வகைகளாக பிரிந்தன
இதில் சினாப்சைடா எனும் ஊர்வனக்கூட்டம் பாலூட்டிகளின் பண்புகளை கொண்டதாக இருந்தது
டயாப்சைடா எனும் கூட்டம் ஊர்வன வகைகள் மற்றும் பறவைகளின் முன்னோடியாக இருந்தது
இந்த டயாப்சைடா பிரிவில் இருந்து தோன்றியதே அர்ச்சோசவுரியா எனும் முதலை தொகுதியின் முன்னோர்கள் ஆவார்கள்
டையாப்சய்டாவில் இருந்து பிரிந்த ஆர்தினிசியா எனும்பிரிவில் இருந்து டைனோசர்களும் அதில் பிளவு ஏற்பட்டு சவுரிசியா எனும் பறவைகளின் முன்னோர்களும் உருவானார்கள்
டைனோசர்கள் அழிந்த பின்புதான் அல்லது அதில் ஒரு பிரிவுதான் நவீன பாலூட்டிகளும் பறவைகளும் என நம்பி வந்த உயிரியல் வல்லுனர்களின் நம்பிக்கை புதிதாக கிடைத்த சினாப் சைடுகளின் பாசில்கள் குழப்பியது
இதில் பலர் டார்வினின் இயற்கை தேர்வை பரிணாம வளர்ச்சியை கேள்விக்குள்ளாக ஆரம்பித்தனர் அது தவறு என்றும் விவாதித்தனர்
நாம் இவர்களுடன் விவாதிப்பதன் வாயிலாக டார்வினின் இயற்கை தேர்வை பரிணாம விதியை இன்னும் ஒரு உயர்ந்த மட்டத்துக்கு எடுத்தெச்செல்ல முடியும்
பொதுவாக முதலாளிய பிற்போக்காளர்களும் மதவாத சிந்தனையாளர்கலும் இயற்கையின் வரலாற்றை உயிரின வரலாற்றை சமூக வரலாற்றை அதன் ஒழுங்கு முறையான விதிகளை மறுக்கவே முயல்கிறார்கள்
\
காரணம் நம்மால் எதையும் தீர்மானகரமாக புரிந்து கொள்ள முடியாது அவை அவை தான் தோன்றித்தனமாக அல்லது இறைவனின் விருப்பத்துக்கு ஏற்ப படைக்கப்படுகிறது என நிறுவ முயல்கிறார்கள்
இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் யாரும் ஆய்வுகளின் பல்வேறு கூறுகளை தொகுத்து ஒரு விலங்குலக வரலாற்று தொகுப்பையோ மனித சமூக தொகுப்பையோ உருவாக்கமுடியாது
இயற்கையை ஒரு முழுமையாகவும் அதன் பல்வேறு கூறுகளை பிரித்தும் கோர்த்தும் ஒரு முழுமையை உருவாக்கமுடியா விட்டால் அந்த கோட்பாடு முழுமை பெறாது
இப்படி முழுமை பெற்றகோட்பாடுகள் ஆளும் வர்க்கத்துக்கு தேவை அற்றது ஏனென்றால் அவை அறிவை சமூக மாற்றத்துக்கு அல்லாமல் லாபத்துக்காவே பயன்படுத்துகிறார்கள்
ஆனால் நாம்சமூக மாற்றத்தை இலக்காக கொண்டிருப்பதால் நமக்கு ஒரு முழுமையான அறிவியல் தத்துவம் தேவையாக இருக்கிறது எனவே நாம் தத்துவ துறைகளில் ஒரு முழுமையை அதாவது அனைத்தையும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைத்து ஒரு முழுமையாக புரிந்து கொள்ள முயல்கிறோம்
இந்த முழுமையான புரிதல் தான் அனைத்தையும் மாற்றி அமைக்க முடியும் எனும் நம்பிக்கையை உறுதியை நமக்கு வழங்குகிறது
எனவே நாம் டார்வினின் பரிணாம விதியின் சிறப்பை அதன் அனைத்தும் தழுவிய தன்மையை உயர்த்திப்பிடிக்கிறோம் அதை பாதுகாப்பதும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதும் நமது கடமையாகும்
இப்படத்தில் காணப்படும் விலங்குகள் சினப்சைட் எனும் ஊர்வனவாகும் இவை ஊர்வனவாக இருந்தாலும் பாலூட்டிகளுடன் நெருங்கிய தன்மையை கொண்டவை
டார்வினின் பரிணாம விதி எப்போதும் பொருந்தும் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்
தொடரும்

பருமனான உடலை குறைக்கும் பாக்டீரியாக்கள்!

மனிதர்களின் உடல் நலமாக இருக்க, வயிற்றில் வாழும் பல்லாயிரம் வகை நல்ல நுண்ணுயிரிகள் உதவுகின்றன. அவற்றில், சில பாக்டீரியா வகைகள் இருந்தால், உடல் பருமன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை இருக்கும் என்பதை, சமீபத்தில், 'சயின்ஸ்' இதழில் வெளியான ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள யூடா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், சோதனைக்குள்ளாகும் ஆய்வக எலிகள், பருமனாக இருப்பதை கவனித்தனர். இது ஏன் என்று ஆராய்ந்த போது, அவற்றின் வயிற்றில், 'குளோஸ்ட் ரிடியா' என்ற வகை பாக்டீரியாக்கள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த வகை பாக்டீரியாக்கள் வயிற்றில் இருக்கும் எலிகள், ஆரோக்கியமான எடை யுடன் இருப்பதையும் அவர்கள் உறுதிப் படுத்தினர்.குளோஸ்ட்ரிடியா பாக்டீரி யாக்கள், எலிகளின் வயிற்றில் வினைபுரிந்து, கொழுப்பை நன்கு செரிமானம் ஆகும்படி செய்கின்றன. இதனால், அவை இருக்கும் எலிகள் பருமனாவதில்லை என்பதோடு, எலிகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அவை வலுவாக்குகின்றன.
அதேபோல, பருமனாக இருக்கும் மனிதர்களின் வயிற்றிலும் குளோஸ்ட்ரிடியா பாக்டீரியாக்கள் இருப்பதை, மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதற்காக, குளோஸ்ட் ரிடியா பாக்டீரியாக்களை மனிதர்கள் வயிற் றில் செலுத்துவதை விட, அவை கொழுப்பை எப்படி கையாள்கின்றன, என்ன வினை புரிந்து நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகின்றன என்பதை கண்டறிந்தால், அந்த வினைகளை உண்டாக்கும் மருந்துகளை தந்து, மனிதப் பருமனை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பை அதிகரிக்க முடியும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- விடுதலை நாளேடு, 15.8.19

நுண் துகள்களால் உருவாகும் முத்து!

சிப்பி என்பது நன்னீர் மற்றும் கடல் நீர் ஆகிய இரண்டிலும் காணப்படும் இருவோட்டுடலி வகுப்பைச் சேர்ந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பி களின் ஓடு இரு பகுதிகளால் ஆனது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக் கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். நீரில் இருக்கும்போது உள்ளிழுத்துக்கொள்கிறது சிப்பி. அதன் பருவகாலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இடும். முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசிமுனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது. இரண்டு வாரங்களில் நீந்தத் தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும்.
ஆபரணங்களில் மின்னும் மிக நல்ல முத்துக்கள் சிப்பிகளிலிருந்தே எடுக்கப்படுகின்றன. முத்து இருவாயில் () மெல்லுடலி உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக் குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அந்த நுண்துகள்களின் மீது பூசப்படுகின்றது. இச்செயல்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதிப்புவாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. சிலர் தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கட லில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருக் கின்றனர். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங் களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன.
சிப்பிகள் உலகின் பல பகுதி மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும்.
இதில் புரதச்சத்தும் குறைந்த கொழுப்பும் உள்ளதால் உடல்நலனுக்கு ஏற்றது.
 - விடுதலை நாளேடு,15.8.19

சனி, 17 ஆகஸ்ட், 2019

அணுக்களின் வேறுப்பட்ட சிறப்பு தன்மைகள்


📷
தோழர்களே அணுவை பற்றிய 6வது பதிவு அணுக்களை வகைப்படுத்தும் மெண்டலீப் அட்டவணை என்பது மிக மிக சிறப்பான ஒரு வடிவமைப்பு
இதில் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் வரிசைப்படுத்தி இருக்கிறார்கள் இந்த ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு காரணம் உண்டு
இதில் வாயுக்கள் ,உலோகம் ,அலோகம் உலோகப்போலிகள், கதிர்வீச்சை வெளியிடும் தனிமங்கள் என்று ஒவ்வொரு வகையையும் பிரித்துக்காட்டுகிறார்கள்
இந்த வரிசைகளை ஆய்வு செய்தால் மனித உழைப்பை எண்ணி பிரமித்து போக வேண்டிய அளவுக்கு இந்த வரிசைபடுத்தலில் செய்திகள் இருக்கிறது
இந்த மெண்டலீப் அட்டவணையில் முதல் இடத்தில் இருப்பது ஹைட்ரஜன் ஆகும் இயற்கை தனிமங்களில் கடைசியில் இருப்பது யுரேனியம் ஆகும்
ஒரு கைட்ரஜன் அணுவை விட 238 மடங்கு ஒரு யுரேனியம் அணு அதிக எடை கொண்டது ஆனால் வெறும் மூன்றில் இருந்து நான்கு மடங்கு மட்டுமே அளவில் பெரியது என்றால் ஆச்சரியம்தானே
இப்படி நெருக்கமாக இருக்க காரணம் யுரேனியத்தை சுற்றும் 92 எலக்ட்ரான்களும் அதன் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு மிக நெருக்கமாக அழுத்தப்படுகிறது
இந்த நிலையின் காரணமாகவே ஒரு ஹைட்ரஜன் அணுவைப்போல் எலக்ட்ரான்கள் ஒரே வட்டப்பாதையில் மையத்தை சுற்றி சுழல்வது இல்லை,
அப்படி வட்டமாக சுற்றினால் எலக்ட்ரான்கள் மையத்துடன் தமக்கு உள்ள உறவை இழந்து விடும் அணுக்கள் தமது நேர்மின்னோட்ட ஆற்றலுக்கு ஏற்ப எலட்ரான்களை பிடித்து வைத்துக்கொள்ள முடியாது
எனவே அதிக எலட்ரான்களும் இருக்கவேண்டும் அனைத்தும் மையத்துடன் நெருங்கிய உறவை பேண வேண்டும் என்றால் எலட்ரான்கள் வட்டமாக சுற்றக்கூடாது
எனவே எலக்ட்ரான்களின் ஒவ்வொரு கூடும் தம்மை மைய்த்தடன் நெருக்கமாக இணைக்கூடிய சுற்றும் பாதைகளை தேர்வு செய்து சுற்றி வருகின்றன
இவற்றை ஆய்வாளர்கள் நான்காக வகைப்படுத்தி இருக்கிறார்கள் அது SPDF எனும் நான்கு வழிகளாகும்
S என்பது வட்டப்பாதையாகும் Pஎன்பது இருகோண வழியாகவும் Dஎன்பது நாற்கோண வழியாகவும் F என்பது அறுங்கோண வழியாகவும் அணுக்களின் மையத்தை சுற்றும் வழியாக அமைகின்றன
இதில் ஹைட்ரஜன் ஒரே ஒரு எலக்ட்ரானை பெற்று இருப்பதால் அது வட்டப்பாதயில் சுழல்கிறது
ஆக்சிஜன் 8 எலக்ட்ரான்களை பெற்று இருப்பதால் அதன் எலக்ட்ரான் கள் S அதன் முதல் வட்டமாகவும் P இரண்டாம் வட்டம்என்ற இரண்டு வழிகளில் ஆக்சிஜனின் மையத்தை சுற்றி வருகின்றன
ஹீலியம் இரண்டு எலக்ட்ரான்களை மட்டுமே கொண்டு இருப்பதால் அதற்கு முதல் வட்டமான S வட்டமே போதுமானது
யுரேனியம் ஏழு எலக்ட்ரான் அடுக்குகளை பெற்று இருப்பதால் SPDF எனும் நான்கு முறைகளையும் அதன் எலக்ட்ரான்கள் பயன்படுத்துகின்றன
எனவேதான் ஒவ்வொரு அணுவும் மின் ஆற்றலில், நிறையில், மற்ற அணுக்களுடன் இணைந்துஇயங்குவது ஆகிய அனைத்திலும் ஒவ்வொரு சிறப்பு தன்மையை பெற்று திகழ்கிறது
இந்த அணுக்களின் சிறப்பு தன்மைதான் கோடான கோடி பொருட்கள் இப்பிரபஞ்சம் முழுவதுதும் பரவிக்கிடக்க காரணமாகும் இந்த சிறப்பு தன்மை இல்லை என்றால் வெறும் 92 இயற்கைபொருட்களுக்கு மேல் எதுவும் இருந்து இருக்காது
நாம் காணக்கூடிய வண்ணங்கள் சாயங்கள் ,வேறுப்பட்ட பொருட்கள் தங்க வெள்ளி தண்ணிர் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் உருவாக்குவது அணுக்களின் வேறுப்பட்ட சிறப்பு தன்மைகளின் சிறப்பே காரணம்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

உயிரினம் எப்படி தோன்றியது (படிமவளர்ச்சி) - 1&2இந்த உலகில் உயிரினம் எப்படி தோன்றியது அது கடவுளின் படைப்பா இயற்கையின் உருவாக்கமா ? டார்வினின் பரிணாம விதி சரிதானா ? பிறகு ஏன் இப்போது குரங்குகள் குரங்குகளாகவும் ,மனிதர்கள் மனிதர்களாகவும் இருக்கிறோம்?
மேற்கண்ட தகவல்கள் குறித்து ஒரு அறிவியல் பார்வையை நாம் செலுத்தப்போகிறோம் ஆர்வம் உள்ளவர்கள் பின்தொடருங்கள்
நாம் பொதுவாக விலங்குலகை வகைப்படுத்தும் போது அவற்றை இரண்டாக பிரிக்கிறோம் அது முதுகெலும்பு உள்ளவை ,இல்லாதவை,
இதில் முதுகெழும்பு இருப்பவை வெறும் 10% முதுகு எழும்பு இல்லாதவை மீதி 90%
இந்த முதுகு எழும்பு உள்ள விலங்குலகில் இருந்துதான் நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறோம் எனவே நாம் எடுத்துக்கொள்ளப்போவது முதுகெலும்பு உள்ள விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைத்தான்
இந்த பூமி உருவாகி ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதை யுரேனிய அணுச்சிதைவில் இருந்து வெளிப்படும் கதிவீச்சின் அளவை வைத்து முடிவு செய்கிறார்கள்
ஆனால் முதுகு எலும்பிகள் வெறும் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாகி இருப்பதை விலங்குலகின் பாசில்கள் உறுதி செய்கின்றன
முதலில் விலங்குலம் நீரில் இருந்து தான் உருவாகி இருக்கிறது என்பதை அதன் தொடர் வளர்ச்சி உறுதி செய்கிறது இதை அயோனியாவின் தேலஸ் போன்றவர்கள் கிமு 600களில் அணுமானித்தார்கள்
இந்த அணுமானத்தை உறுதி செய்யும் விதமாக நமக்கு தொடர் ஆதாரங்கள் நீருக்கும் நமக்கும் மீனுக்கும் நமக்குமிருக்கும் தொடர்புகளை உறுதி செய்யும் விதமாக கிடைத்து வருகின்றன அவற்றை பார்க்கலாம்
நாம் விலங்குலகின் அதாவது முதுகு எலும்பு உள்ளவைகள் குறித்து பார்ப்போம் இவை ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது ஆனால் ஆய்வாளர்கள் இதை ஆறாக பிரிக்கிறார்கள்
அதாவது மீன் கள்,இருவாழ்விகள் , ஊர்வண , பறவைகள் , பாலூட்டிகள் இந்த ஐந்து வகைகளுக்கும் தாடைகள் இருக்கிறது இத்துடன் தாடை இல்லாத ஒரு மீன் வகையை நாம் ஆறாவதாக சேர்க்கலாம்,
இந்த தாடை இல்லாத மீன் வகை தான் முதுகு எலும்பு இருப்பவைக்கும் இல்லாதவைக்குமான ஒரு பொது பண்பை கொண்டிருக்கிறது அதாவது பூச்சியினங்களை போல் மேல்தாடை கீழ் தாடை இல்லாமல் உறிஞ்சும் தன்மை கொண்டவை இந்த தாடை இல்லாத மீன்கள்
இந்த தாடை இல்லாத மீன்கள் இன்றும் ஒரு ஒட்டுண்ணியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
சரி முதுகு எலும்பு இல்லாதவைக்கும் இருப்பவைக்கும் என்ன வேறுபாடு முதுகு எலும்பு இல்லாதவகைகளுக்கு எலும்பு பகுதி அதன் உடலின் மேற்புறத்தில் இருக்கும்
நீங்கள் பூச்சிகளை நசுக்கும் போது அவற்றின் மேற்பகுதி கடினமாக இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள் அல்லது வண்டுகள் பறக்கும்போது பார்த்தால் அதன் மேலோடு கடினமானதாகவும் அந்த கடினமான இரண்டு இறகுகளுக்கு அடியில் மென்மையான இரண்டு இறகுகள் இருப்பதை பார்க்கலாம்
இந்த முதுகு ஓடுகளை கொண்ட பூச்சி இனங்களில் இருந்துதான் ஆரம்பகால முதுகு எலும்பிகள் தோன்றின அவைகளுக்கு நுரையீரல்களும் இருந்தன
இந்த ஓடுகளை கொண்ட ஆரம்பகால உயிரிகளில் இருந்துதான் நவின மீன்களும் ஊர்வன கூட்டமும் உருவானது
இது 60 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கம்பேரியன் காலத்தில் தான் பாதுகாப்பு கவசமாக ஓடுகளை கொண்ட உயிரினம் பரவலாக தோன்றின
இந்த ஓடுகளை கொண்ட உயிரினம்தான் இன்றைய மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள் , பாலூட்டிகள் அனைத்துக்குமான பொது மூதாதைகள்
இன்றும் கூட உடம்பின் மேல் ஓடுகளை கவசமாக கொண்ட மீன்கள் இருப்பதை கடல் ஓரங்களில் வசிப்பவர்கள் பார்க்கலாம் நான் அப்படி மீன்களை நேரில் கண்டு சாப்பிட்ட அனுபவமும் உண்டு
இந்த கவச ஓடுகளை கொண்ட பொது மூதைகளில் இருந்து உயிரினம் இரண்டாக பிரிந்தது ஒன்று செவுள்களை கொண்ட நீரில் மட்டுமே வாழும் தகுதி உள்ள மீன்கள் இன்னொன்று நீரிலும் நிலத்திலும் வாழும் திறன் கொண்ட நுரையீரல் வளர்சியையும் கொண்டிருந்த மீன்கள்
இந்த நுரையீரல் மீன்கள் இன்றும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் மட்டும் வாழ்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
அப்படி ஒரு மீனைத்தான் கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள் ஆனால் என்ன அது ஆரம்ப காலத்தில் பெற்று இருந்த மேலோடுகளை இன்று இழந்து விட்டு முதுகு எலும்பியாகமாறி இருக்கிறது
இது நீரிலும் நிலத்திலும் வாழும் திறன் கொண்ட நுரையீரலை கொண்ட மீனாகும்
இன்னொன்று மனிதன் மற்றும் கோழிகளில் கரு வளரும்போது செவுள்கள் உருவாகி மறைகின்றன என்பது நாம் நீர்வாழ் மீன்களின் வம்சாவழிதான் என்ற பழைய அடையாளத்தை நினைவூட்டுகின்றன
தொடரும்

வண்டு இனங்களுக்கு இறக்கைகளுக்கு மேல் கனமான ஒடு போன்ற அமைப்பு இருக்கும் இது அதன் மென்மையான உடலையும் இறகையும் பாதுகாக்கும் அமைப்பாகும் அதைத்தான் கீழே காண்கிறீர்கள் அதாவது உடலுக்கு வெளியே எலும்பமைப்பு
[
](https://www.facebook.com/photo.php?fbid=169234244239982&set=a.104351330728274&type=3&eid=ARB5S2-wFK7zMKevJFdd0g5hoKACPD_iR_WGi0C8nRYpNrMzpJLzMGOxy1e-IVJIjDO3h7NhODupL0AL)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முக நூல் பதிவு , 16.8.19


தோழர்களே விலங்கியல் குறித்த 2வது பதிவு
முதல் விலங்கினங்கள் முதுகெலும்பு அற்றவைகளில் இருந்துதான் முதுகெலும்பு உள்ளவைகளாக மாறின
முதல் நீர்நில வாழ்விகளின் தோல்பகுதிதான் எலும்பு ஓடுகள் கொண்டதாக இருந்தன அதாவது ஆமை ஓட்டைபோல் ,இன்றும் கூட உடல் முழுவதும் ஓடுகளால் மூடப்பட்ட தலையின் முன் பகுதிகளில் இரண்டு கூரான கொம்புகளை கொண்ட மீன்களை நாம் வங்காள விரிகுடா கடல்களில் காணலாம்
இன்று கூட ஆஸ்திரேலிய சதுப்பு வெளிகளில் மட் ஸ்கிப்பர் எனும் நீர் நில வாழ்விகள் மிக அதிகமாக வாழ்வதை நாம் காணலாம் இவை தோல்கள் மூலமாகவும் செவுள்கள் மூலமாகவும் சுவாசிக்க கூடியவை
தரையில் மிகவேகமாக ஓடக்கூடிய இந்த மீன்கள் மண்ணைத்தோண்டி தங்கள் இனப்பெருக்க குழிகளை அமைப்பது வேடிக்கையாக இருக்கும்
முதல் நீர்நில வாழ்வியான நுரையீரல் மீன்கள் தங்கள் தோல்பகுதிகளைகடினமான ஓட்டு அமைப்பால் பெற்று இருந்தன முழுமையான வளர்ச்சி அடையாத நுரையீரல்களையும் முழு வளர்ச்சி அடையாத துடுப்பு போன்ற கால்களையும் கொண்டு இருந்தது இவ்வகை உயிரினம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டது
இந்த கடின ஓடுகளை கொண்ட நுரையீரல் மீன்களின் வம்சாவழியாக உருவானவைதான் உண்மையான இருவாழ்விகள் இவை 370 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானவை
கடினமான தோல் ஓடுகளுக்கு பதிலாக மென்மையான ஈரப்பதம் உள்ள தோல்களின் வழியாக சுவாசிக்கும் திறனை பெற்றும் துடுப்புகளுக்கு பதிலாக நான்கு கால்களையும் இவை பெற்று இருந்தன
தோல் கவச ஓடுகளுக்கு பதிலாக முதுகு எலும்புகளையும் தசைகளால் ஆன கால்களுக்கு மாறாக எலும்புகளால் ஆன கால்களையும் இவை பெற்று இருந்தன
அதேவேளை இந்த இருவாழ்விகள் நீருக்கு அருகாமையில் மட்டுமே வாழும் திறனை பெற்று இருந்தது தமது மென்மையான சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்து இருந்தால்தான் தோல்கள் வழியாக சுவாசிக்க முடியும் நுரையீரல்களோ தனித்து தரையில் வாழும் அளவுக்கு இன்னும் வளர்ச்சி பெறாமல் இருந்தது
குளிர் இரத்தவிலங்குகளான இவைகள் தம் உடம்பின் வெப்பத்தை குறைக்க நீரை சார்ந்தே வாழ் வேண்டி இருந்ததுவெப்பம் குறைந்த காலை மாலை வேளைகளில் இவை நீர் நிலைகளை விட்டு வெளியே
வந்து தமக்கான உணவை வேட்டையாடின
இந்த இருவாழ்விகளில் இருந்துதான் இன்னும் மேம்பாட்டு அடைந்த வலிமையான கால்களையும் சிறந்த நுரையீரல்களையும் தோல்வழியாக சுவாசிக்கும் தேவையை இழந்ததால் பாதுகாப்பான சொரசொரப்பான தோல்களையும் கொண்ட ஊர்வன கூட்டம் உருவாகியது
இந்த ஊர்வனக்கூட்டத்தின் தலை சிறந்த உருவாக்கமாக மிகப்பெரிய பல்லிக்கூட்டமான 40 மீட்டர் உயரம் கொண்ட டைனோசர்களும் இவைகளை ஒத்த 100 அடி நீளம் கொண்ட முதலைகளும்உருவாகின
இந்த டைனோசரின் காலத்தின் மத்தியில்தான் ஊர்வன வற்றில் இருந்து பறக்கும் திறன் கொண்ட பறவைகளின் மூதாதைகள் உருவாக ஆரம்பித்தன
மனிதர்களாகிய நாம் நம்மை உலகின் எஜமானனாக கடவுள் படைத்ததாக நமக்காகவே இபேரண்டம் படைக்கப்பட்டதாக நாம் கற்பனை செய்து கொள்கிறோம்
ஆனால் இந்த பிரபஞ்ச படைப்புகளில் நாம் ஒரு சிறிய உருவாக்கம்தான் டைனோசர்களின் வாழ்வோடு நம் வாழ்வை ஒப்பிட்டால் நமது காலம் ஒரு இரண்டு லட்சம் ஆண்டுகள்தான் அதற்குள் நாம் இப்பூமியின் இயற்கை வளத்தின் பெரும் பகுதிகளை நாசமாக்கி வருகிறோம்
ஆனால் டைனோசர்கள் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகள் இப்பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தின
சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது பாஞ்சியா கண்டத்தில் இருந்து இந்திய துணைக்கண்டம் பிரியும் அதேகாலத்தில் டைனோசர்களும் அழிந்தன
இதற்கு காரணம் ஒரு மிகப்பெரிய விண்கல் தாக்கியதில் அதன் தூசுப்படலம் பூமியை மூடியதால் சூரியனின் வெப்பம் பூமியை அடையாத காரணத்தால் பூமியில் பெரும் பல்லிகளிகளின் இருப்பிடமாக இருந்த பெரும் காடுகள் அழிந்ததால் அவற்றை சார்ந்து வாழ்ந்த பெரும்பல்லிகள் கூட்டமும் அழிந்தன
ஆனால் உண்மையில் அப்பல்லிகள் வாழ்ந்து இருந்தால் பாலூட்டி இனம் என்பதே உருவாக வாய்ப்பில்லாமல் போய் இருக்கும் பாலுட்டிகளில் ஒருவகையான நாமும் இப்பூமியில் உருவாகி மற்ற உயிரினங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிய சாதனைகளை செய்ய நமக்கு வாய்ப்பு இருந்து இருக்காது
இன்று வாழும் முதலைகள் 20 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இப்பூமியில் வாழ்ந்து தம் சந்ததிகளை பாதுகாத்து வருகிறது
உண்மையாகவே முதலைகள் ஒரு அபூர்வ பிறவியாகும் அது பலமணி நேரங்கள் நீருக்கு மேல் வராமல் சுவாசிக்காமல் ஆடாமல் அசையாமல் தனது இரைக்காக நீரில் மிதந்து கொண்டோ நீருக்குஅடியில் பதுங்கி இருக்கவோ அதனால் முடியும்
இன்றைய முதலைகளில் 24 அடி நீளம் கொண்ட முதலைகள் கூட ஆப்பிரிக்க நைல் நதிகளில் வாழ்கின்றன
அமெரிக்க உப்பு நீர் முதலைகள் பல நூறு கிலோமிட்டர் தொலைவில் இருக்கும் தீவிக்கூட்டங்களில் கூட சென்று குடியேறி வாழ்வது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகும்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முக நூல் பதிவு , 17.8.19

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

73 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போலவே உள்ள 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்புபூமியை போலவே உள்ள 3 புதிய கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத் தகுந்த அளவிற்கு இந்த 3 கிரகங்களிலும் தட்பவெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரியனை நேரடியாக சுற்றி வரும் புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய 4 கோள்களை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, அய்ரோப்பியா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மய்யங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சூரிய குடும்பத்திற்கு வெளியே மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்ட நாசா அதற்காக டெஸ் எனப்படும் வெளிக்கோள்களை ஆய்வு செய்யும் செயற்கைக் கோளை கடந்த ஆண்டு விண்ணிற்கு அனுப்பியது. ஓராண்டு ஆய்விற்கு பிறகு பூமியை போன்று புதிதாக 3 கிரகங்கள் இருப்பதை இந்த செயற்கை கோள்கள் கண்டு பிடித்துள்ளது.  -

TOI-270 B, C,D என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகங்கள் பூமியின் அளவை விட 3. 5 எடை அளவு அதிகம் கொண்டது என தெரியவந்துள்ளது.

மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத்தகுந்த  அள விற்கு இந்த 3 கிரகங் களிலும் தட்ப வெப்பம் உள்ளதாகவும் தெரியவந்துள் ளது. இந்த செயற்கைகோள் மூலம் வானம் போன்ற படலங்கள் தென்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் 3 கிரகங்களில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை காண முடிகிறது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிரகங்களின் மேற்பரப்பு தண்ணீர் இருக்கும் அளவிற்கு குளிர்ச்சியாக இருப்பதாகவும், அய்ட்ரொஜன், அமோ னியா, ஹீலியம் போன்ற வாயுக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன.

வழக்கமாக பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என கணக்கிடப்பட்டு வரும் நிலையில், பூமியை இந்த புதிய 3 கிரகங்கள் 3 முதல் 11 நாட்களில் சுற்றி வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த 3 கிரகங்கள் இருப் பதாகவும் இது குறித்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 1.8.19