ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை ( படிம வளர்ச்சி) -4

R Chandrasekaran R Chanrasekaran
18.8.19 முகநூல் பதிவு


தோழர்களே விலங்கியலின் தோற்றம் குறித்த நான்காவது பதிவு
பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை என்பதை சற்று பார்க்கலாம்
நாமும் மற்ற பாலூட்டும் விலங்குகளை போலவே குட்டி போட்டு பாலூட்டும் தன்மையை கொண்டவர்கள் பாலூட்டிகள் அனைத்தும் வெப்ப ரத்த வகையை சேர்ந்தவை
ஆம் பாலூட்டிகளின் ரத்த அளவின் வேறுபாட்டை அதாவது உடலின் வெப்பத்தை நாம் நுரையீரல்கலின் மூலமும் தோல்களில் உள்ள வியர்வை சுரப்பிகளின் மூலமும் சரி படுத்திக்கொள்கிறோம்
உரோமம் கொண்ட பாலூட்டிகள்: நுரையீரலின் மூலமும் அல்லது வாய்வழியாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன
உதாரணமாக நாய்களை கவனித்தால் கோடைகாலங்களில் அது எப்போதும் நாக்கை தொங்க விடுவதையும் வாய் வழியாக இரைப்பு ஏற்படுத்துவதையும் பார்க்கலாம் காரணம் அதற்கு வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால்நாக்கின் வழியாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன
[
இதில் ஊர்வன் வேறுபடும் அவை வெப்பம் அடைந்தால் நீரில் இறங்கி தமது வெப்பத்தை தணித்துக்கொள்ளும் குளிர் ஏற்பட்டால் வெயிலில் படுத்து உடல்சூட்டை உருவாக்கிக்கொள்ளும் எனவே இவற்றை குளிர் ரத்த பிராணிகள் என்று அழைக்கிறோம்]
அது போல் மனித குரங்குகளுக்கும் மனிதனுக்கும் மிக நெருங்கிய தோற்றமும் ஜெனடிக் தொடர்பும் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே
அதுபோல் நம் வாயின் இருபுறமும் இருக்கும் கோரை பற்கள் இப்போதும் லேசாக தனித்தன்மையுடன் இருப்பதையும் அதைகூர்ந்து பார்த்தால் வேட்டை விலங்குகளின் கோரைபற்களை ஒத்ததாக இருப்பதையும் காணலாம்
அதுபோல் மனிதக்குழந்தையின் கரு வளர்ச்சியின் போது அது வாலுடன் இருப்பதையும் அதற்கு செவுல்கள் உருவாகி மறைவதையும் காணமுடியும்
இதுபோல் இன்று வாழும் மனிதன் மற்றும் பாலூட்டிகளுக்கும் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த பாலூட்டிகளின் மூதாதைக்கும் மரபுத்தொடர்பு நிலவுவதையும் சமீப கால ஆய்வுகள் உறுதி செய்கிறது
இவை எல்லாம் விலங்கு உலகுக்கும் நமக்குமான தொடர்புகளை உறுதி செய்கிறது
இவை எல்லாம் எப்படி பரிணாம விதியை உறுதி செய்கிறது?
பரிணாம விதியை டார்வின் உருவாக்கினாரா? இல்லை கண்டு பிடித்தார்.
உயிரினங்கள் எப்படி பல்கி பெருகுகிறது அவற்றில் சில அழிகிறது சில மேம்பட்ட வளர்ச்சியை அடைகிறது இதன் காரணம் என்ன?
பரிணாம வளர்ச்சி என்பது சில காலத்துக்கு மட்டுமே உரியதா? அல்லது அது எக்காலத்துக்கும் பொருந்துமா?
அப்படியானால் இன்று ஏன் குரங்குகள் மனிதனாக மாறவில்லை நாம் பார்க்கும் விலங்குகள் அப்படியேதானே இருக்கின்றன?
வலிமையானது வாழும் என்றார் டார்வின் ?[ அப்படி டார்வின் கூறவில்லை இந்த வார்த்தை ஐரோப்பியர்கள் டார்வினியத்தை புரட்டி திருத்தி ஜெர்மானிய ஆரிய கோட்பாட்டை நிறுவ ஜெர்மானியர்கள் செய்தது]
வலிமையானது வாழும் என்று டார்வின் எங்கும் கூறவில்லை கூறப்போனால் டார்வினின் பரிணாம விதியின் படி பார்த்தால் வலிமையானது விரைவில் அழியும் வாய்ப்பே அதிகம்.
டைனோசர்கள் மிக வலிமையானதுதான் டைனோசர்களின் காலத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் 20 கோடி ஆண்டுகள் அவை இப்பூமியை ஆண்டன. பின் ஏன் எவை எந்த சந்தடியும் இன்றி அழிந்தன?
டார்வினின் பரிணாமவிதியை மிக சரியாக நாம் புரிந்து கொண்டால் நமக்கு மேற்கண்ட கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும்
பெருவாரியாக நாம் அனைவரும் மார்க்சியத்தையோ பெரியாரின் கருத்துக்களையோ, உயிரியல் வரலாறு சார்ந்த உண்மைகளையோ தப்பும் தவறுமாக புரிந்து கொள்வதால் அடிக்கடி தடுமாறுகிறோம்
சரி தவறாகவும் தவறு சரியாகவும் நமக்கு தோன்றுகிறது
நமது நாடு ஏறத்தாழ 500 ஆண்டுகளாக ஒருசீரான வளர்ச்சியை அடையாத காரணத்தால் இங்கு பிற்போக்கு தனமே மேலோங்கி இருக்கிறது
இதன்காரணமாக நவின அறிவியல் சார்ந்த ஜனநாயக கண்ணோட்டம் என்பது இல்லாமல் சாதிய மதவாத கருத்துக்கள் நம்மை ஆள்வதால் நமது பொது அறிவு மிகவும் பின் தங்கி போய்விட்டது
இபோக்குகளை நாம் முறியடிக்க வேண்டுமானால் அறிவியல் சார்ந்த உண்மைகளை கற்பதும் அந்த உண்மைகளின் அடிப்படையில் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதும் வேண்டும்
கீழே உள்ள படம் நான்கு கால்கள் கொண்ட திமிங்கிலம் இது தரையில் நடக்கவும் தண்ணீரில் நீந்தவும் திறமை கொண்ட திமிங்கலத்தின் மூதாதை இதன்காலம் 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது
தொடரும்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக