புதன், 28 ஆகஸ்ட், 2019

மனித குல மூதாதைகளில் ஹோமோ செபிலிஸ் (படிமவளர்ச்சி) -14

தோழர்களே விலங்கியல் குறித்த 14ம் பதிவு


நமது மனித குல மூதாதைகள் குரங்கில் இருந்து பிரிந்து பல்வேறுபரிணாம வடிவங்களை அடைந்தே இன்றுநாமாக உருவாகி இருக்கிறோம்
பொதுவாக மனிதனை தவிர்த்த மனித மூதாதைகளை ஹோமினின் என்று அழைக்கிறார்கள் இந்த ஹோமினிகளின் பாசில்கள் மிக அதிகமாக கிடைத்து இருக்கிறது
இந்த பாசில்கள் கிடைத்த இடம் அந்த பாசில்களின் உருவ அமைப்பு ஆகிய ஒவ்வொன்றையும் கணக்கில் கொண்டு அதற்கேற்ற அடையாள பெயர்களை வைத்துள்ளார்கள்,
அதற்குள் சென்றால் நமக்கு நிறைய குழப்பம் ஏற்படும் எனவே நாம் மூன்று வகையான முன்னோர்களையே இப்பதிவுகளில் எடுத்துக்கொள்ளப்போகிறோம்
1 ஹோமோ செபிலிஸ்
2 ஹோமோ எரக்டகஸ்
3 ஹோமோ செபியன் அதாவது நாம்
முதலில் ஹோமோ ஹெபிலிசை பார்ப்போம் இந்த கூட்டம் ஏறத்தாழ 25 லட்சம் ஆண்டுகளில் இருந்து 15 லட்சம், ஆண்டுகள் வரை வாழ்ந்த மனித குலத்தின் முன்னோர் ஆவர்
இவர்கள்தான் முதலில் இந்தியாவின் வடபுலத்தில் குடியேறியவர்களாக இருக்கவேண்டும் ஏனென்றால் இந்தியாவின் சிவாலிக் பகுதிகளில் காணப்பட்ட கற்கருவிகள் 20 லட்சத்தில் இருந்து 28 லட்சம் ஆண்டுகளை சேர்ந்தது
ஆகவே தான் ஹோமோ ஹெபிலிஸ்தான் இந்தியாவில் குடியேறி இருக்க வேண்டும் என அனுமானிக்கிறோம்
இக்காலத்தில் ஹோமோ எரக்டகஸ் தோன்ற வில்லை
இவர்களின் அதாவது ஹோமோஹெபிலிசின் உடல் சார்ந்த பாசில்கள் எதுவும் ஆப்பிரிக்காவுக்கு வெளியில் கிடைக்க வில்லை
ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா,தான்சானியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா , ஆகிய நாடுகளில் இவர்களின் எலும்புகள் , பற்கள் மண்டை ஓடுகள் , கற்கருவிகள் என நிறைய சான்றுகள் கிடைத்துள்ளன
இவர்களின் எடை சரசரியாக55கிலோ, உயரம் 4,5 அடி,மனித மண்டையோட்டை ஒத்த உருண்ட மண்டையோடு,குரங்குகளைபோல் இல்லாமல் மனிதனை ஒத்த உள்ளடங்கிய நெற்றி,
மண்டையோட்டின் அமைப்பை வைத்து பார்க்கும் போது மொழிசார்ந்த வளர்ச்சிக்கான இடது பகுதி நன்கு வளர்ச்சி அடைந்து இருந்தது
பேச்சு திறனுக்கான மூளையின் பகுதிகள் வளர்ந்து இருந்தன
கோரை பற்களின் அமைப்பு விலங்குகளை போல் அல்லாமல் மனிதனின் பல்லைப்போல் சிறிதாக இருந்தது
பற்கள் மற்றும் தாடையின் அமைப்பு அரை வட்டமாக நம்மைபோல் ஓரளவு சீராக இருந்தத
கைகளின் திறன் சிறப்படைந்து இருந்தது
துல்லியமாக கற்களை சுழற்சி வீசும் திறனை கைகள் பெற்று இருந்தன நம்மைபோல் குரங்குகளால் கைகளை துல்லியமாக பயன்படுத்த முடியாது
பெரிய தலை குட்டையான கழுத்துக்கள் ,
குரங்குகளுக்கு இருப்பதை போல் அல்லாமல் குட்டையான பாதம் கட்டை விரல் மனிதனை ஒத்து இருந்தது
கண்களின் அமைப்பும் விலங்குகளைபோல் உட்குழிந்ததாக இல்லாமல் மனிதக்கண்களை ஒத்து இருந்தது
இவர்கள் மிகுதியாக தாவர உணவுகளையும் சிறிய அளவில் மாமிசமும் உட்கொண்டனர் ஏனென்றால் மாமிச உணவு கிடைப்பது மிகவும் கடினமானதாக இருந்தது
தொடரும்
- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன் முகநூல் பதிவு, 27.8.19
[
](https://www.facebook.com/photo.php?fbid=172283597268380&set=a.104351330728274&type=3&eid=ARAHZodZ0TwIy_Jx8l4OK5MZDOloBY9Jeg7cw31SL96Z9wwNF-VwQ7m4xPJm3Ca1uXmT2TRoKObtFg5P)
[
](https://www.facebook.com/photo.php?fbid=172287897267950&set=gm.356269768654827&type=3&eid=ARBpajfO0MrDRa8b--Ch1xBuUZwEN_Mfwz1Cw6qzI2nshBn28qmyCUohg0UVBzaZg0iyRu-sLpnfZteq&ifg=1)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக