செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

நீலத்திமிங்கிலத்தையும் அது குறித்த டார்வினின் கருத்தையும் பார்க்கலாம் (படிம வளர்ச்சி) - 5

தோழர்களே விலங்கியல் குறித்த 5வது பதிவுகடந்த பதிவில் நீலத்திமிங்கிலத்தின் மூதாதை யான நீர்நில வாழ் விலங்கின் கம்யூட்டர் படத்தை பிரசுரித்து இருந்தேன்
இதில் நீலத்திமிங்கிலத்தையும் அது குறித்த டார்வினின் கருத்தையும் பார்க்கலாம்
நீலத்திமிங்கிலம் என்பது இந்த பூமியிலேயே மிகப்பெரிய பாலூட்டியாகும் இதன் எடை இரண்டு லட்சம் கிலோகிராம் ஆகும்
இதன் இதயம் ஒரு பெரிய காரின் அளவு கொண்டது இதன் நாக்கின் நிறை 4000 கிலோவாகும் இது மொத்தத்தில் மிகப்பெரிய நிலவாழ் உயிரியான ஆப்பிரிக்க ஆண்யானைகளைபோல் 40 மடங்கு எடையை கொண்டது
இது ஒரு பாலூட்டி என்பது நீண்ட காலமாக மனிதர்கள் அறிந்ததே சார்லஸ் டார்வினும் இது குறித்த நீண்ட ஆய்வுகள் செய்தார்
கடைசியில் அமெரிக்க கரடி வகைதான் நீலத்திமிங்கிலத்தின் முதாதை என நம்பி 1856 களில் எழுதி இருந்தார் இக்கருத்து பரவலாக எடுபடாமல் போகவே தனது அடுத்த வெளியீட்டில் இந்த கருத்தை நீக்கி இருந்தார்
ஆனால் உண்மையில் டார்வின் வந்த முடிவு மிக சரியானதுதான் அவர் தேர்ந்து எடுத்த விலங்குதான் தவறாகி விட்டது
நீலத்திமிங்கிலம் ஒரு பாலூட்டி அதுநிலவாழ் விலங்கி;ல் இருந்தே நீர்வாழ் விலங்காக மாறியிருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தே இருந்தது ஆனால் நமது புரிதலுக்கு ஆதாரம் வேண்டுமே
அது நீண்ட காலமாக கிடைக்க வில்லை கடந்த 15ஆண்டுகளாக ஆய்வாளர்களின் நீண்ட தேடுதலுக்கு பிறகு விடுபட்டு போன தொடர்புகள் படிப்படியாக கிடைத்தன
இதற்கான ஆதாரம் முதலில் காஸ்மீரில் கிடைத்தது இதன் பற்களையும் இதன் எலும்புகளையும் ஆய்வு செய்த போது இது மிக நீண்ட காலத்தை நீரில் செலவு செய்யும் விலங்கினம் என்பது உறுதியானது
இதன் தொடர்ச்சிகள் தெற்கு ஆசியாவில் பரவலாக கிடைத்தன இவை நீர்யானையை ஒத்த ஒரு சிறு விலங்காகும்
இதற்கு அடுத்த சிறப்பான பாசில் பெரு நாட்டின் பசி[பிக் கடற்பகுதியில் கிடைத்தது இந்த விலங்கை ஆய்வாளர்கள் நடக்கும் திமிங்கிலம் என அழைத்தார்கள் கடந்த கட்டுரையை படித்த தோழர்கள் அந்த விலங்கின் உடல் அமைப்பை உற்று நோக்க கோறுகிறேன்
இப்படி மனிதன் தான் ஏற்கனவே புரிந்து வைத்து இருந்த திமிங்கலத்தை சான்றுகளுடன் நிறுபிக்க நீண்ட காலம் ஆனது
ஆனால் இந்த மாற்றத்தை திமிங்கலம் அடைய 5 கோடி ஆண்டுகள் ஆனது
இப்படியாக திமிங்கலத்தை பற்றிய டார்வினின் கருத்து நிலை நிறுத்தப்பட்டது
சரி பரிணாம வளர்ச்சிக்கு வருவோம்.
பரிணாம வளர்ச்சி என்றால் எப்போதும் உயிரினங்கள் மாறிக்கொண்டே இருப்பதா?
ஒரு விலங்கு எப்படி மாற வேண்டும் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கிறது குறிப்பிட்ட அந்த விலங்குகள் அல்ல,
இப்போது ஆர்டிக் பகுதியை எடுத்துக்கொள்வோம் அங்கு பனிக்காலத்தில் அப்பகுதி முழுவதுமே வெண்மையாக காட்சி அளிக்கும்
அங்கு ஒரு வெண்கரடியும் ஒரு கருப்பு கரடியும் வாழ்வதாக வைத்துக்கொண்டால் எது தனது வாழ்வை தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம்
வெண் கரடிக்கு தான் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் ஏனென்றால் எதிரிகளின் கண்ணுக்கு தெரியாமல் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் மறைந்து நின்று வேட்டையாடவும் அது வெண்மையாக இருக்கவேண்டும்
இதில் இயற்கை தேர்வு என்ன செய்கிறது?முதலில் இயற்கையின் சுற்று சூழல் மாறுகிறது இந்த மாற்றம் அங்கு வாழும் உயிர்களையும் அதற்கு ஏற்ப மாறும்படி நிர்பந்தம் செய்கிறது
ஆர்டிக்கின் சூழலுக்கு ஏற்ப கருப்பு கரடி வெண்மையாக மாறியே ஆகவேண்டும் இல்லை என்றால் கருப்புக்கரடிக்கூட்டம் எதிரிகளால் எளிதில் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படும் இரை விலங்குகளும் கருப்புகரடிகளுக்கு அகப்படாது
பச்சோந்திகளை எடுத்துக்கொள்வோம் அது மிகமெதுவாக நகரும் ஒரு உயிரினம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் அது வாழ்கிறது
அதற்கு எந்த வலிமையும் இல்லை ஆனால் தன்னை சுற்றி உள்ள சூழலுக்கு ஏற்ப அது தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது
அதாவது இயற்கையின் விருப்பத்துக்கு ஏற்ப அது தன்னை மார்றிக்கொண்டு இருக்கிறது
பரிணாம வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருப்பது அல்ல
சூழலுக்கு தகவமைவதே தன்னை சார்ந்து எப்படி பட்ட உயிரினம் வாழ்வேண்டும் என்பதை இயற்கையே முடிவு செய்கிறது என்பதே இயற்கை தேர்வாகும்
தொடரும்
- ஆர். சந்திரசோகரன் ஆர். சந்திரசேகரன் முகநூல் பதிவு, 19.8.19
Image may contain: water and outdoor

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக