வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

நாம் வாழும் இந்த ஏழு கண்டங்களும் நிலையானதாக எப்போதும் இருந்தது இல்லை (படிமவளர்ச்சி) -10

தோழர்களே விலங்கியல் குறித்த 10வது பதிவு


நாம் வாழும் இந்த ஏழு கண்டங்களும் நிலையானதாக எப்போதும் இருந்தது இல்லை
புவியின் மையத்தில் உள்ள வெப்ப அழுத்தத்தால் பூமியின் கண்டத்திட்டுக்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்
இந்த மாற்றம் தான் கடல்களின் நடுவில் பெரும் தீவுகளை உருவாக்குகின்றன
கண்டங்களை பிரிப்பதும் ஒன்று சேர்ப்பதும் எரிமலை வெடிப்பதும் பூகம்பம் ஏற்படுவதும் சுனாமி பேரலைகள் உருவாவதும் இக்கண்ட திட்டுக்கள் நகர்வதாலும் ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும் ஏற்படும் விளைவுகளாகும்
இவை பல நேரங்களில் நமக்கும் உயிரினத்துக்கும் மாபெரும் இழப்புகளை உருவாக்கி இருக்கலாம் ஆனால் பூமியின் இச்செயல் இல்லை என்றால் நிலவைப்போல் பூமியும் இறந்து விட்டதாகவே பொருள்
பூமியின் இந்த மறு சுழற்சிதான் பூமியை உயிருடன் வைத்து இருக்கிறது இந்த சுழற்சி முறைதான் பூமியின் தாவரங்களும் விலங்குகளும் பரிணாம வளர்ச்சியில் சிறந்து விளங்க அடிப்படை காரணமாகும்
பூமியின் இம்மறு சுழற்சி கடலில் நிலப்பரப்புகளையும் நிலப்பரப்புகளில் கடலையும் பாலைவனங்களையும் உருவாக்குகிறது பூமியின் இந்த போக்குதான் தீவுகள் உருவாகவும் மலைகளும் சிகரங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாக காரணமாகும்
இந்த பூமி இதுவரை கணக்கற்ற கண்ட வடிவங்களை அடைந்து இருக்கிறது
அப்படி உருவான ஒரு பெரும் கண்டம் தான் பான்ஞ்சியா கண்டமாகும் இக்கண்டத்தில் பூமியில் இன்று உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இருந்த காலமாகும்
இது உருவானது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இக்காலத்தில் தான் பூமியின் மாபெரும் பல்லிகளான டைனோசர்கள் உருவான காலம்
இக்கண்டம் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகி 17 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பிரிய ஆரம்பித்தது
இக்கண்டத்தில் இந்திய துணைக்கண்டம் என்பது இதன் மையத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் மையத்தில் ஆப்பு போல் இணைந்து இருந்தது
இதில் இன்று இமயமலை இருக்கும் பகுதிகள் கடலால் சூழப்பட்டும் இன்று கடலால் அரபிக்கடல் வங்காள விரிகுடா இருக்கும் பகுதிகள் நிலத்தால் சூழப்பட்டும் இருந்தது
இன்று இமயமலை பகுதிகளை ஆய்வு செய்தால் அதன் ஆழத்தில் பூமியில் ஆரம்பகாலத்தில் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கடல்வாழ் உயிரினங்களும் , அதற்கு அடுத்த நிலையில் இருவாழ்விகளும் சமவெளிகளில் வாழ்ந்த குதிரைகளின் பாசில்களும் கிடைக்கிறது
இந்த துணைக்கண்டத்தின் தெற்கு பகுதியில் பாலூட்டிகளின் பாசில்கள் கிடைக்கிறது
இதன் மையத்திலும் அதாவது மகாராஸ்டிரா ,ராஜஸ்தான் குஜராத், தமிழகம் போன்ற பகுதிகளில் டைனோசர்களின் பாசில்கள் கிடைக்கிறது
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் டினோசர்களின்பெரும் நிலக்கூடுகளும் அதன் முட்டைகளும் மிகப்பெரிய அளவிலான புதைபடிவ பொருட்களாக கிடைத்துள்ளன
இப்படி ஒரு சிறப்புக்குரிய இந்திய துணைக்கண்டம் சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் முற்றிலுமாக பாஞ்சியா கண்டத்தில் இருந்து விலகி வடக்கு நோக்கி நகர ஆரம்பித்து யுரேசிய கண்டத்திட்டுடன் இணைந்தது இந்த இணைவால் உருவான மடிப்பு மலையே இமைய மலையாகும்
இந்திய ஆஸ்திரேலிய கண்டத்திட்டுக்கள் இப்போதும் வடக்கு நோக்கி நகர்வதால் இப்போதும் இமயம் வளர்ந்துகொண்டு இருக்கிறது
ஆஸ்திரேலிய கண்டத்திட்டுக்கள் இந்தோனேசிய கண்டத்திட்டுக்களுடன் மோதி அழுத்துவதால் தான் அப்பகுதிகளில் தொடர் சுனாமி பேரலைகள் ஏற்படுகிறது
எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆசியாவுக்கும் நடுவில் கடலே இருக்காது அது ஆசிய நிலத்தட்டுடன் இணைந்து விடும் வாய்ப்பே அதிகம்
இப்படி ஓயாமல் மாறிவரும் இப்பூமி பந்து அதற்கேற்ப உயிரியல் வாழ்வையும் மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கிறது
இதன் காரணமாக நிலவாழ் உயிரிகள் நீர்வாழ் உயிரியாகவும் நீர் வாழ் உயிரிகள் நிலவாழ் உயிரியாகவும் மாறுகிறது
வடதுருவ குளிர் பிரதேசங்கள் வெப்ப மண்டல பகுதி நோக்கியும் வெப்ப மண்டல பகுதிகள் குளிர்பகுதியை நோக்கியும் தள்ளப்படுகிறது
இவை மட்டும் அல்லாமல் பூமியின் சுழற்சியின் விளைவால் பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பனியுகமும், கோடையுகமும் , உயிரின வாழ்வில் என்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன
இப்போது 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட பனியுகம் முடிந்து கோடையுகம் திரும்பி விட்டது இந்த கோடையும் தொடங்கி 15000 ஆண்டுகள் ஆகிவிட்டது
இந்த கோடையுக தொடக்கத்தில்தான் மனிதன்கற்கருவிகளை கொண்டு வேளாண் தொழிலை தொடங்கினான்
அடுத்தடுத்த பதிவுகளில் பாலூட்டிகளில் இருந்து மனிதனின் தோற்றம் குறித்து பார்க்கலாம்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு
[
](https://www.facebook.com/photo.php?fbid=171213934042013&set=a.104351330728274&type=3&eid=ARBWNb3HMEYJpiX8Tci195FWBjV-3moH6oJ8sQ-NgHvO303OG9kaE9Q5vANUP0jeh-e5q-mcKNT2Vxc6)
[
](https://www.facebook.com/photo.php?fbid=171222567374483&set=gm.353638175584653&type=3&eid=ARC6RjzWrQ2M4Q9J4OjRUG4KKVTF5vUvmHR2SKem1JOo4zyplpvh7kkBp6_mOU1deAECzaCi-WGDk4Iy&ifg=1)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக