ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

ஆரம்பகால இருவாழ்விகளும் ஊர்வனக்கூட்டமும் (உயிர்களின் படிம வளர்ச்சி) -3



ஆரம்பகால இருவாழ்விகள் 37 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருவாழ்விகளின் உயரிய தன்மையை பெற்று இருந்த போதும் இவைகளின் சிறப்பே தோல்வழியாக சுவாசித்தலும் குறையுடைய நுரையீரல்களும் இவற்றை நீர் நிலைகளில் இருந்து தூரமாக செல்ல அனுமதிக்க வில்லை
ஏனென்றால் ஈரப்பதம் இல்லாவிட்டால் தோல் வறண்டு விடும் செவுள்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்
இந்த ஆதி மூதாதைகளின் வழியில் இன்னும் சிறப்பு பெற்ற சிறந்த நுரையீரல்களை பெற்ற நிலப்பரப்பில் எங்கும் செல்லும் திறனுடன் உருவானதுதான் ஊர்வனவாகும்
இந்த ஊர்வன க்கூட்டம் ஒரே தன்மை கொண்டதாக இல்லாமல் பல்வேறு வகைகளாக பிரிந்தன
இதில் சினாப்சைடா எனும் ஊர்வனக்கூட்டம் பாலூட்டிகளின் பண்புகளை கொண்டதாக இருந்தது
டயாப்சைடா எனும் கூட்டம் ஊர்வன வகைகள் மற்றும் பறவைகளின் முன்னோடியாக இருந்தது
இந்த டயாப்சைடா பிரிவில் இருந்து தோன்றியதே அர்ச்சோசவுரியா எனும் முதலை தொகுதியின் முன்னோர்கள் ஆவார்கள்
டையாப்சய்டாவில் இருந்து பிரிந்த ஆர்தினிசியா எனும்பிரிவில் இருந்து டைனோசர்களும் அதில் பிளவு ஏற்பட்டு சவுரிசியா எனும் பறவைகளின் முன்னோர்களும் உருவானார்கள்
டைனோசர்கள் அழிந்த பின்புதான் அல்லது அதில் ஒரு பிரிவுதான் நவீன பாலூட்டிகளும் பறவைகளும் என நம்பி வந்த உயிரியல் வல்லுனர்களின் நம்பிக்கை புதிதாக கிடைத்த சினாப் சைடுகளின் பாசில்கள் குழப்பியது
இதில் பலர் டார்வினின் இயற்கை தேர்வை பரிணாம வளர்ச்சியை கேள்விக்குள்ளாக ஆரம்பித்தனர் அது தவறு என்றும் விவாதித்தனர்
நாம் இவர்களுடன் விவாதிப்பதன் வாயிலாக டார்வினின் இயற்கை தேர்வை பரிணாம விதியை இன்னும் ஒரு உயர்ந்த மட்டத்துக்கு எடுத்தெச்செல்ல முடியும்
பொதுவாக முதலாளிய பிற்போக்காளர்களும் மதவாத சிந்தனையாளர்கலும் இயற்கையின் வரலாற்றை உயிரின வரலாற்றை சமூக வரலாற்றை அதன் ஒழுங்கு முறையான விதிகளை மறுக்கவே முயல்கிறார்கள்
\
காரணம் நம்மால் எதையும் தீர்மானகரமாக புரிந்து கொள்ள முடியாது அவை அவை தான் தோன்றித்தனமாக அல்லது இறைவனின் விருப்பத்துக்கு ஏற்ப படைக்கப்படுகிறது என நிறுவ முயல்கிறார்கள்
இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் யாரும் ஆய்வுகளின் பல்வேறு கூறுகளை தொகுத்து ஒரு விலங்குலக வரலாற்று தொகுப்பையோ மனித சமூக தொகுப்பையோ உருவாக்கமுடியாது
இயற்கையை ஒரு முழுமையாகவும் அதன் பல்வேறு கூறுகளை பிரித்தும் கோர்த்தும் ஒரு முழுமையை உருவாக்கமுடியா விட்டால் அந்த கோட்பாடு முழுமை பெறாது
இப்படி முழுமை பெற்றகோட்பாடுகள் ஆளும் வர்க்கத்துக்கு தேவை அற்றது ஏனென்றால் அவை அறிவை சமூக மாற்றத்துக்கு அல்லாமல் லாபத்துக்காவே பயன்படுத்துகிறார்கள்
ஆனால் நாம்சமூக மாற்றத்தை இலக்காக கொண்டிருப்பதால் நமக்கு ஒரு முழுமையான அறிவியல் தத்துவம் தேவையாக இருக்கிறது எனவே நாம் தத்துவ துறைகளில் ஒரு முழுமையை அதாவது அனைத்தையும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைத்து ஒரு முழுமையாக புரிந்து கொள்ள முயல்கிறோம்
இந்த முழுமையான புரிதல் தான் அனைத்தையும் மாற்றி அமைக்க முடியும் எனும் நம்பிக்கையை உறுதியை நமக்கு வழங்குகிறது
எனவே நாம் டார்வினின் பரிணாம விதியின் சிறப்பை அதன் அனைத்தும் தழுவிய தன்மையை உயர்த்திப்பிடிக்கிறோம் அதை பாதுகாப்பதும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதும் நமது கடமையாகும்
இப்படத்தில் காணப்படும் விலங்குகள் சினப்சைட் எனும் ஊர்வனவாகும் இவை ஊர்வனவாக இருந்தாலும் பாலூட்டிகளுடன் நெருங்கிய தன்மையை கொண்டவை
டார்வினின் பரிணாம விதி எப்போதும் பொருந்தும் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்
தொடரும்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக