வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

உயிரினம் எப்படி தோன்றியது (படிமவளர்ச்சி) - 1&2



இந்த உலகில் உயிரினம் எப்படி தோன்றியது அது கடவுளின் படைப்பா இயற்கையின் உருவாக்கமா ? டார்வினின் பரிணாம விதி சரிதானா ? பிறகு ஏன் இப்போது குரங்குகள் குரங்குகளாகவும் ,மனிதர்கள் மனிதர்களாகவும் இருக்கிறோம்?
மேற்கண்ட தகவல்கள் குறித்து ஒரு அறிவியல் பார்வையை நாம் செலுத்தப்போகிறோம் ஆர்வம் உள்ளவர்கள் பின்தொடருங்கள்
நாம் பொதுவாக விலங்குலகை வகைப்படுத்தும் போது அவற்றை இரண்டாக பிரிக்கிறோம் அது முதுகெலும்பு உள்ளவை ,இல்லாதவை,
இதில் முதுகெழும்பு இருப்பவை வெறும் 10% முதுகு எழும்பு இல்லாதவை மீதி 90%
இந்த முதுகு எழும்பு உள்ள விலங்குலகில் இருந்துதான் நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறோம் எனவே நாம் எடுத்துக்கொள்ளப்போவது முதுகெலும்பு உள்ள விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைத்தான்
இந்த பூமி உருவாகி ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதை யுரேனிய அணுச்சிதைவில் இருந்து வெளிப்படும் கதிவீச்சின் அளவை வைத்து முடிவு செய்கிறார்கள்
ஆனால் முதுகு எலும்பிகள் வெறும் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாகி இருப்பதை விலங்குலகின் பாசில்கள் உறுதி செய்கின்றன
முதலில் விலங்குலம் நீரில் இருந்து தான் உருவாகி இருக்கிறது என்பதை அதன் தொடர் வளர்ச்சி உறுதி செய்கிறது இதை அயோனியாவின் தேலஸ் போன்றவர்கள் கிமு 600களில் அணுமானித்தார்கள்
இந்த அணுமானத்தை உறுதி செய்யும் விதமாக நமக்கு தொடர் ஆதாரங்கள் நீருக்கும் நமக்கும் மீனுக்கும் நமக்குமிருக்கும் தொடர்புகளை உறுதி செய்யும் விதமாக கிடைத்து வருகின்றன அவற்றை பார்க்கலாம்
நாம் விலங்குலகின் அதாவது முதுகு எலும்பு உள்ளவைகள் குறித்து பார்ப்போம் இவை ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது ஆனால் ஆய்வாளர்கள் இதை ஆறாக பிரிக்கிறார்கள்
அதாவது மீன் கள்,இருவாழ்விகள் , ஊர்வண , பறவைகள் , பாலூட்டிகள் இந்த ஐந்து வகைகளுக்கும் தாடைகள் இருக்கிறது இத்துடன் தாடை இல்லாத ஒரு மீன் வகையை நாம் ஆறாவதாக சேர்க்கலாம்,
இந்த தாடை இல்லாத மீன் வகை தான் முதுகு எலும்பு இருப்பவைக்கும் இல்லாதவைக்குமான ஒரு பொது பண்பை கொண்டிருக்கிறது அதாவது பூச்சியினங்களை போல் மேல்தாடை கீழ் தாடை இல்லாமல் உறிஞ்சும் தன்மை கொண்டவை இந்த தாடை இல்லாத மீன்கள்
இந்த தாடை இல்லாத மீன்கள் இன்றும் ஒரு ஒட்டுண்ணியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
சரி முதுகு எலும்பு இல்லாதவைக்கும் இருப்பவைக்கும் என்ன வேறுபாடு முதுகு எலும்பு இல்லாதவகைகளுக்கு எலும்பு பகுதி அதன் உடலின் மேற்புறத்தில் இருக்கும்
நீங்கள் பூச்சிகளை நசுக்கும் போது அவற்றின் மேற்பகுதி கடினமாக இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள் அல்லது வண்டுகள் பறக்கும்போது பார்த்தால் அதன் மேலோடு கடினமானதாகவும் அந்த கடினமான இரண்டு இறகுகளுக்கு அடியில் மென்மையான இரண்டு இறகுகள் இருப்பதை பார்க்கலாம்
இந்த முதுகு ஓடுகளை கொண்ட பூச்சி இனங்களில் இருந்துதான் ஆரம்பகால முதுகு எலும்பிகள் தோன்றின அவைகளுக்கு நுரையீரல்களும் இருந்தன
இந்த ஓடுகளை கொண்ட ஆரம்பகால உயிரிகளில் இருந்துதான் நவின மீன்களும் ஊர்வன கூட்டமும் உருவானது
இது 60 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கம்பேரியன் காலத்தில் தான் பாதுகாப்பு கவசமாக ஓடுகளை கொண்ட உயிரினம் பரவலாக தோன்றின
இந்த ஓடுகளை கொண்ட உயிரினம்தான் இன்றைய மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள் , பாலூட்டிகள் அனைத்துக்குமான பொது மூதாதைகள்
இன்றும் கூட உடம்பின் மேல் ஓடுகளை கவசமாக கொண்ட மீன்கள் இருப்பதை கடல் ஓரங்களில் வசிப்பவர்கள் பார்க்கலாம் நான் அப்படி மீன்களை நேரில் கண்டு சாப்பிட்ட அனுபவமும் உண்டு
இந்த கவச ஓடுகளை கொண்ட பொது மூதைகளில் இருந்து உயிரினம் இரண்டாக பிரிந்தது ஒன்று செவுள்களை கொண்ட நீரில் மட்டுமே வாழும் தகுதி உள்ள மீன்கள் இன்னொன்று நீரிலும் நிலத்திலும் வாழும் திறன் கொண்ட நுரையீரல் வளர்சியையும் கொண்டிருந்த மீன்கள்
இந்த நுரையீரல் மீன்கள் இன்றும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் மட்டும் வாழ்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
அப்படி ஒரு மீனைத்தான் கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள் ஆனால் என்ன அது ஆரம்ப காலத்தில் பெற்று இருந்த மேலோடுகளை இன்று இழந்து விட்டு முதுகு எலும்பியாகமாறி இருக்கிறது
இது நீரிலும் நிலத்திலும் வாழும் திறன் கொண்ட நுரையீரலை கொண்ட மீனாகும்
இன்னொன்று மனிதன் மற்றும் கோழிகளில் கரு வளரும்போது செவுள்கள் உருவாகி மறைகின்றன என்பது நாம் நீர்வாழ் மீன்களின் வம்சாவழிதான் என்ற பழைய அடையாளத்தை நினைவூட்டுகின்றன
தொடரும்

வண்டு இனங்களுக்கு இறக்கைகளுக்கு மேல் கனமான ஒடு போன்ற அமைப்பு இருக்கும் இது அதன் மென்மையான உடலையும் இறகையும் பாதுகாக்கும் அமைப்பாகும் அதைத்தான் கீழே காண்கிறீர்கள் அதாவது உடலுக்கு வெளியே எலும்பமைப்பு
[
](https://www.facebook.com/photo.php?fbid=169234244239982&set=a.104351330728274&type=3&eid=ARB5S2-wFK7zMKevJFdd0g5hoKACPD_iR_WGi0C8nRYpNrMzpJLzMGOxy1e-IVJIjDO3h7NhODupL0AL)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முக நூல் பதிவு , 16.8.19


தோழர்களே விலங்கியல் குறித்த 2வது பதிவு
முதல் விலங்கினங்கள் முதுகெலும்பு அற்றவைகளில் இருந்துதான் முதுகெலும்பு உள்ளவைகளாக மாறின
முதல் நீர்நில வாழ்விகளின் தோல்பகுதிதான் எலும்பு ஓடுகள் கொண்டதாக இருந்தன அதாவது ஆமை ஓட்டைபோல் ,இன்றும் கூட உடல் முழுவதும் ஓடுகளால் மூடப்பட்ட தலையின் முன் பகுதிகளில் இரண்டு கூரான கொம்புகளை கொண்ட மீன்களை நாம் வங்காள விரிகுடா கடல்களில் காணலாம்
இன்று கூட ஆஸ்திரேலிய சதுப்பு வெளிகளில் மட் ஸ்கிப்பர் எனும் நீர் நில வாழ்விகள் மிக அதிகமாக வாழ்வதை நாம் காணலாம் இவை தோல்கள் மூலமாகவும் செவுள்கள் மூலமாகவும் சுவாசிக்க கூடியவை
தரையில் மிகவேகமாக ஓடக்கூடிய இந்த மீன்கள் மண்ணைத்தோண்டி தங்கள் இனப்பெருக்க குழிகளை அமைப்பது வேடிக்கையாக இருக்கும்
முதல் நீர்நில வாழ்வியான நுரையீரல் மீன்கள் தங்கள் தோல்பகுதிகளைகடினமான ஓட்டு அமைப்பால் பெற்று இருந்தன முழுமையான வளர்ச்சி அடையாத நுரையீரல்களையும் முழு வளர்ச்சி அடையாத துடுப்பு போன்ற கால்களையும் கொண்டு இருந்தது இவ்வகை உயிரினம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டது
இந்த கடின ஓடுகளை கொண்ட நுரையீரல் மீன்களின் வம்சாவழியாக உருவானவைதான் உண்மையான இருவாழ்விகள் இவை 370 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானவை
கடினமான தோல் ஓடுகளுக்கு பதிலாக மென்மையான ஈரப்பதம் உள்ள தோல்களின் வழியாக சுவாசிக்கும் திறனை பெற்றும் துடுப்புகளுக்கு பதிலாக நான்கு கால்களையும் இவை பெற்று இருந்தன
தோல் கவச ஓடுகளுக்கு பதிலாக முதுகு எலும்புகளையும் தசைகளால் ஆன கால்களுக்கு மாறாக எலும்புகளால் ஆன கால்களையும் இவை பெற்று இருந்தன
அதேவேளை இந்த இருவாழ்விகள் நீருக்கு அருகாமையில் மட்டுமே வாழும் திறனை பெற்று இருந்தது தமது மென்மையான சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்து இருந்தால்தான் தோல்கள் வழியாக சுவாசிக்க முடியும் நுரையீரல்களோ தனித்து தரையில் வாழும் அளவுக்கு இன்னும் வளர்ச்சி பெறாமல் இருந்தது
குளிர் இரத்தவிலங்குகளான இவைகள் தம் உடம்பின் வெப்பத்தை குறைக்க நீரை சார்ந்தே வாழ் வேண்டி இருந்ததுவெப்பம் குறைந்த காலை மாலை வேளைகளில் இவை நீர் நிலைகளை விட்டு வெளியே
வந்து தமக்கான உணவை வேட்டையாடின
இந்த இருவாழ்விகளில் இருந்துதான் இன்னும் மேம்பாட்டு அடைந்த வலிமையான கால்களையும் சிறந்த நுரையீரல்களையும் தோல்வழியாக சுவாசிக்கும் தேவையை இழந்ததால் பாதுகாப்பான சொரசொரப்பான தோல்களையும் கொண்ட ஊர்வன கூட்டம் உருவாகியது
இந்த ஊர்வனக்கூட்டத்தின் தலை சிறந்த உருவாக்கமாக மிகப்பெரிய பல்லிக்கூட்டமான 40 மீட்டர் உயரம் கொண்ட டைனோசர்களும் இவைகளை ஒத்த 100 அடி நீளம் கொண்ட முதலைகளும்உருவாகின
இந்த டைனோசரின் காலத்தின் மத்தியில்தான் ஊர்வன வற்றில் இருந்து பறக்கும் திறன் கொண்ட பறவைகளின் மூதாதைகள் உருவாக ஆரம்பித்தன
மனிதர்களாகிய நாம் நம்மை உலகின் எஜமானனாக கடவுள் படைத்ததாக நமக்காகவே இபேரண்டம் படைக்கப்பட்டதாக நாம் கற்பனை செய்து கொள்கிறோம்
ஆனால் இந்த பிரபஞ்ச படைப்புகளில் நாம் ஒரு சிறிய உருவாக்கம்தான் டைனோசர்களின் வாழ்வோடு நம் வாழ்வை ஒப்பிட்டால் நமது காலம் ஒரு இரண்டு லட்சம் ஆண்டுகள்தான் அதற்குள் நாம் இப்பூமியின் இயற்கை வளத்தின் பெரும் பகுதிகளை நாசமாக்கி வருகிறோம்
ஆனால் டைனோசர்கள் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகள் இப்பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தின
சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது பாஞ்சியா கண்டத்தில் இருந்து இந்திய துணைக்கண்டம் பிரியும் அதேகாலத்தில் டைனோசர்களும் அழிந்தன
இதற்கு காரணம் ஒரு மிகப்பெரிய விண்கல் தாக்கியதில் அதன் தூசுப்படலம் பூமியை மூடியதால் சூரியனின் வெப்பம் பூமியை அடையாத காரணத்தால் பூமியில் பெரும் பல்லிகளிகளின் இருப்பிடமாக இருந்த பெரும் காடுகள் அழிந்ததால் அவற்றை சார்ந்து வாழ்ந்த பெரும்பல்லிகள் கூட்டமும் அழிந்தன
ஆனால் உண்மையில் அப்பல்லிகள் வாழ்ந்து இருந்தால் பாலூட்டி இனம் என்பதே உருவாக வாய்ப்பில்லாமல் போய் இருக்கும் பாலுட்டிகளில் ஒருவகையான நாமும் இப்பூமியில் உருவாகி மற்ற உயிரினங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிய சாதனைகளை செய்ய நமக்கு வாய்ப்பு இருந்து இருக்காது
இன்று வாழும் முதலைகள் 20 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இப்பூமியில் வாழ்ந்து தம் சந்ததிகளை பாதுகாத்து வருகிறது
உண்மையாகவே முதலைகள் ஒரு அபூர்வ பிறவியாகும் அது பலமணி நேரங்கள் நீருக்கு மேல் வராமல் சுவாசிக்காமல் ஆடாமல் அசையாமல் தனது இரைக்காக நீரில் மிதந்து கொண்டோ நீருக்குஅடியில் பதுங்கி இருக்கவோ அதனால் முடியும்
இன்றைய முதலைகளில் 24 அடி நீளம் கொண்ட முதலைகள் கூட ஆப்பிரிக்க நைல் நதிகளில் வாழ்கின்றன
அமெரிக்க உப்பு நீர் முதலைகள் பல நூறு கிலோமிட்டர் தொலைவில் இருக்கும் தீவிக்கூட்டங்களில் கூட சென்று குடியேறி வாழ்வது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகும்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முக நூல் பதிவு , 17.8.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக