செவ்வாய், 29 செப்டம்பர், 2015

2500 ஆண்டு பழைமையான மனித மூளை கண்டுபிடிப்பு
2500 ஆண்டு பழைமையான மனித மூளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 2008ஆம் ஆண்டில் போர்க் பகுதியில் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. அதில் மூளை பத்திரமாக இருந்தது.
இந்த மூளையை 34 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த மண்டை ஒடு தாடையுடனும், முதுகெலும்பு ஒட்டிய நிலையிலும் உள்ளது.
சமீபத்தில் கிடைத்த தகவல்படி அந்த மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளை 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மனித தோற்றத்தை 4 லட்சம் ஆண்டுகள் முன்னகர்த்தும் தாடை எலும்பு
எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆதிமனிதனின் கீழ்த்தாடை என்று கருதப்படும் புதைபொருள், ஆதிமனிதன் இந்த பூமியில் தோன்றிய கால கட்டத்தை நான்கு லட்சம் ஆண்டுகள் முன்னகர்த்தி யிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை காலமும் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் ஆதிமனிதர்கள் சுமார் 24 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி னார்கள் என்று கணக்கிட்டு வந்தார்கள்.
ஆனால் அந்த கணக்கை தற்போது நான்கு லட்சம் ஆண்டுகள் முன்னுக்குத்தள்ளியிருக்கிறது எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் தாடை எலும்பு ஒன்று.
அதாவது இந்த புதிய தாடை எலும்பின் அடிப்படையில் கணக்கிடும்போது, மனித இனம் சுமார் 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
-விடுதலை,12.3.15

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

அதென்ன? ரோச்சி எல்லை!ஒரு கோளினுடைய துணைக் கோளானது, அந்த கோளைக் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நெருங்க முடியும் என்பதை 1850ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு கணிதவியல் அறிஞர் எட்வர்டு ரோச்சி இதை கணிதவியல் ரீதியாக நிரூபித்தார். இது ரோச்சி எல்லை என அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு கோளிற்கும் ரோச்சி எல்லை உண்டு. அது அந்தந்தக் கோளின் சுற்றுவட்டத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும். சனிக் கோளின் ரோச்சி எல்லை அதன் மய்யத்தி லிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த தூரத்தைக் கடந்து உள்ளே செல்லும் துணைக் கோள்கள் வெடித்துச் சிதறி, ஒரு வட்டத்தை உருவாக்கு கின்றன. ஆனால் புவியிலிருந்து செல்லும் செயற்கைக் கோள்களுக்கு ரோச்சி எல்லை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,20.2.14
நாம் பேசும் பேச்சு, இசை போன்றவற்றை மின்காந்த அலைகளாக மாற்றி, அவற்றை வான்வெளியில் செலுத்தும் பணியை வானொலி நிலையம் மேற்கொள்கிறது. அப்படி வான்வெளியில் செலுத்தப்படும் மின்காந்த அலைகள், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் உடையதாக இருக்கும்.
வானொலிப் பெட்டியில் உள்ள டயலை இந்தக் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் வைத்தால், வானில் வரும் அந்தக் குறிப்பிட்ட மின்காந்த அலைகளைப் பெற்று, அவற்றை மீண்டும் ஒலி அலைகளாக மாற்றித் தருகிறது வானொலிப்பெட்டி. வானொலி மின்காந்த அலைகள், எஃப்.எம். மற்றும் ஏ.எம். என்ற இரண்டு முறைகளில் ஒலிபரப்பப்படுகின்றன. இன்று பெரு நகரங்கள் பலவற்றில் புதிதாக முளைத்திருக்கும் தனியார் வானொலிகள் அனைத்துமே எஃப்.எம். என்ற வகையில் அடங்கும். இதைப் `பண்பலை வானொலி' என்று அழைப்பர். இது சில கிலோ மீட்டர்களுக்குள் மட்டுமே இயங்கக் கூடியது. ஒரு நகரத்தை ஒட்டிய பகுதிக்குள் மட்டும்தான் ஒலிபரப்ப முடியும்.
ஏ.எம். வகை வானொலி யில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, மீடியம் வேவ். இது மாநிலத்தின் எல்லைகள் வரை செல்லக்கூடியது. மற்றொன்று, ஷார்ட் வேவ். இது பல நாடுகளையும் தாண்டிச்சென்று ஒலிபரப்பக் கூடியது. இன்று செயற்கைக்கோள்களின் உதவியுடன் டிஜிட்டல் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. இவை துல்லியமான ஒலியுடையவை. செயற்கைக்கோளின் உதவியால் இயங்குவதால், உலகத்தின் எந்த மூலையிலும் இவற்றைக் கேட்டு மகிழலாம்.
-விடுதலை,1.1.11


மண்ணுக்குள் இருந்து விலங்கு கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களில் ஆய்வை மாசா சு செட் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எரிக் ஆலம் மற்றும் லாரன்ஸ் டேவிட் தலைமை யிலான குழுவினர் மேற் கொண்டனர். அதிலிருந்து மரபணு மூலக் கூறுகளை எடுத்து பூமியில் உயிரினங்கள் எப்போது தோன்றின என ஆராய்ச்சி செய்தனர். அதன் படி 280 கோடி முதல் 330 கோடி ஆண்டுகளுக்கு இடையே உயிரினங்கள் தோன்றியிருக்ககூடும். அப்போது தற்போதுள்ள 27 சதவிகித மரபணுக் குடும்பங்கள் உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். உயிரி ரசாயன முறை ஏற்பட்டு உயிரியல் பணி நடைபெற சூரிய ஒளிசக்தி முக்கியப் பங்கு வகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
 -விடுதலை,23.12.10

அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் படிமங்கள்


அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூச்சிகளின் படிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள் ளார்கள். இது இந்தியாவைப் பற்றிய பூகோள அமைப்பின் கணிப்பையே மாற்றலாம் என கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இருந்து 30கி.மீ. தொலைவில் இருக்கும் வஸ்தன் என்னும் பழுப்பு நிலக்கரி சுரங்கம் உள்ளது.இதை ஆராய்ச்சியாளர்கள் கோம்பே பகுதிகளாக உலக பூகோள அமைப்பில் பிரித்து வைத்துள்ளனர். இங்கு இந்தியா, ஜெர்மனி மற்றும் அமெரிக் காவைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு ஒன்று 50 மில்லி யன் (அய்ந்து கோடி) வருடங்கள் முந்தைய மரப் பிசின் களில் எறும்பு, தேனீக்கள், கரையான் செல்கள், சிலந் திகள் மற்றும் தேள்கள் ஆகியவற்றின் முழு உடல்கள் எந்த ஒரு சேதாரமும் இன்றி காணப்படுகின்றன. இதுபோல ஏற்கெனவே சில பூச்சிகள் உக்ரைன், பிரான்ஸ், பல்டிக் போன்ற இடங்களிலும் கிடைத் துள்ளன. ஆனால் தற்போது கிடைத்துள்ள படிமங் களில் அதிகம் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்காவில் இருந்து வரும்  ஆராய்ச்சி ஏட்டில் நாளை வெளிவர இருக்கிறது. இது முழு பூச்சிகளின் உடல்கள் எங்களுக்கு கிடைத்தது பெரிய ஆச்சரியம் என்று ஜெர்மனி ஆராய்ச்சியாளர் ருஸ்ட் கூறியுள்ளார். இந்தப் பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சி இந்தியாவில் பூகோள அமைப்பின் கணிப்பை மாற்றும் என நம்பப்படுகிறது, காரணம் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து ஒரு கொடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்திய நிலப்பகுதி பிரிந்து, அய்ம்பது லட்சம் வருடங்களுக்கு முன் ஆசிய நிலப்பகுதிகளில் சேர்ந்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ள நிலையில் காம்பே பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூச்சிகள் வடக்கு அய்ரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ட்ரோபிகல் அமெரிக்காவை சேர்ந்த பூச்சிகளின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. லக்னோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த சாஹ்னி என்ற அழிந்த உயிரினங்களின் படிமங்களை பற்றி ஆராயும் பேராசிரியர் அய்ந்து வருடங்களுக்கு முன் தன் சக பேராசிரியர்களுடன் எறும்பு, தட்டான் போன்ற சில பூச்சிகளை இங்கு கண்டுபிடித்துள்ளார். மேலும் இங்கு ஆராய மற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் துணை தேவைப்பட்டது. அவரது முயற்சியால் இன்று இந்தப் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் 700 மேற்பட்ட பூச்சிகளின் படிமங்களைக் கண்டு பிடித்துள்ளார்.
-விடுதலை,30.12.10

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தேடுபொறியை உருவாக்கி 16 வயது இந்திய வம்சாவளி மாணவர் சாதனைநியூயார்க், ஆக. 23_- இணையதள தேடுபொறி யின் ஜாம்பவானாக குறிப் பிடப்படும் கூகுளைவிட 47 சதவீதம் துல்லியமாக தகவல்களை பரிமாறும் புதிய தேடுபொறியை உரு வாக்கி இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சாதனை படைத்து உள்ளார்.
கனடா நாட்டின் குடி மகனான, அன்மோல் துக்ரேல் (வயது 16) எனும் மாணவர் உருவாக்கி யுள்ள இந்த தேடுபொறி, கூகுளைக் காட்டிலும் துல்லியமாக இருப்பதாக அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்தி ரிகை புகழாரம் சூட்டி யுள்ளது.
பத்தாம் வகுப்பு முடித் திருந்த நிலையில், கூகுள் இணையத்தில் நடத்தப் பட்ட உலகளாவிய அறி வியல் கண்காட்சிக்காக அன்மோல், தான் உரு வாக்கிய புதிய தேடு பொறியை சமர்ப்பித் திருந்தான். உலகின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் 13 முதல் 18 வயதுடைய மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
சில மாதங்களிலேயே தனது தேடுபொறியை வடிவமைத்ததாகவும், வெறும் 60 மணி நேரங் களில் அதற்கான கோடிங்கை தயார் செய்ததாகவும் அன்மோல் தெரிவித்தார். பொதுவான தேடுபொறி களைவிட 21 சதவிகிதம் துல்லியமாக இருக்கும் இவரது படைப்பு, கூகு ளைக் காட்டிலும் 47 சத விகிதம் துல்லியமானதாக உள்ளது.
கணினி கோடிங்கினை மூன்றாம் வகுப்பின்போதே பயின்ற அன்மோல், தற் போது டேக்கோகேட் என்னும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரு கிறார். ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயில முடிவு செய்துள்ளார்.
ஏனெனில், புதிதாக ஒரு விஷயத்தை செய்து விட்டால், அதற்குமேல் கற்க ஏதுமில்லை என நாம் எண்ணிவிடக் கூடாது என்கிறார் அன்மோல். இவர் சமீபத்தில், இரு வாரங்கள் பெங்களூருவில் உள்ள அய்ஸ்கிரீம்லேப் மென்பொருள் நிறுவனத் தில் இண்டர்ன்ஷிப்புக் காக இந்தியா வந்திருந் தார் என்பது குறிப்பிடத் தக்கது