ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தேடுபொறியை உருவாக்கி 16 வயது இந்திய வம்சாவளி மாணவர் சாதனை



நியூயார்க், ஆக. 23_- இணையதள தேடுபொறி யின் ஜாம்பவானாக குறிப் பிடப்படும் கூகுளைவிட 47 சதவீதம் துல்லியமாக தகவல்களை பரிமாறும் புதிய தேடுபொறியை உரு வாக்கி இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சாதனை படைத்து உள்ளார்.
கனடா நாட்டின் குடி மகனான, அன்மோல் துக்ரேல் (வயது 16) எனும் மாணவர் உருவாக்கி யுள்ள இந்த தேடுபொறி, கூகுளைக் காட்டிலும் துல்லியமாக இருப்பதாக அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்தி ரிகை புகழாரம் சூட்டி யுள்ளது.
பத்தாம் வகுப்பு முடித் திருந்த நிலையில், கூகுள் இணையத்தில் நடத்தப் பட்ட உலகளாவிய அறி வியல் கண்காட்சிக்காக அன்மோல், தான் உரு வாக்கிய புதிய தேடு பொறியை சமர்ப்பித் திருந்தான். உலகின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் 13 முதல் 18 வயதுடைய மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
சில மாதங்களிலேயே தனது தேடுபொறியை வடிவமைத்ததாகவும், வெறும் 60 மணி நேரங் களில் அதற்கான கோடிங்கை தயார் செய்ததாகவும் அன்மோல் தெரிவித்தார். பொதுவான தேடுபொறி களைவிட 21 சதவிகிதம் துல்லியமாக இருக்கும் இவரது படைப்பு, கூகு ளைக் காட்டிலும் 47 சத விகிதம் துல்லியமானதாக உள்ளது.
கணினி கோடிங்கினை மூன்றாம் வகுப்பின்போதே பயின்ற அன்மோல், தற் போது டேக்கோகேட் என்னும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரு கிறார். ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயில முடிவு செய்துள்ளார்.
ஏனெனில், புதிதாக ஒரு விஷயத்தை செய்து விட்டால், அதற்குமேல் கற்க ஏதுமில்லை என நாம் எண்ணிவிடக் கூடாது என்கிறார் அன்மோல். இவர் சமீபத்தில், இரு வாரங்கள் பெங்களூருவில் உள்ள அய்ஸ்கிரீம்லேப் மென்பொருள் நிறுவனத் தில் இண்டர்ன்ஷிப்புக் காக இந்தியா வந்திருந் தார் என்பது குறிப்பிடத் தக்கது

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக