செவ்வாய், 29 செப்டம்பர், 2015

2500 ஆண்டு பழைமையான மனித மூளை கண்டுபிடிப்பு




2500 ஆண்டு பழைமையான மனித மூளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 2008ஆம் ஆண்டில் போர்க் பகுதியில் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. அதில் மூளை பத்திரமாக இருந்தது.
இந்த மூளையை 34 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த மண்டை ஒடு தாடையுடனும், முதுகெலும்பு ஒட்டிய நிலையிலும் உள்ளது.
சமீபத்தில் கிடைத்த தகவல்படி அந்த மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளை 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மனித தோற்றத்தை 4 லட்சம் ஆண்டுகள் முன்னகர்த்தும் தாடை எலும்பு
எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆதிமனிதனின் கீழ்த்தாடை என்று கருதப்படும் புதைபொருள், ஆதிமனிதன் இந்த பூமியில் தோன்றிய கால கட்டத்தை நான்கு லட்சம் ஆண்டுகள் முன்னகர்த்தி யிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை காலமும் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் ஆதிமனிதர்கள் சுமார் 24 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி னார்கள் என்று கணக்கிட்டு வந்தார்கள்.
ஆனால் அந்த கணக்கை தற்போது நான்கு லட்சம் ஆண்டுகள் முன்னுக்குத்தள்ளியிருக்கிறது எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் தாடை எலும்பு ஒன்று.
அதாவது இந்த புதிய தாடை எலும்பின் அடிப்படையில் கணக்கிடும்போது, மனித இனம் சுமார் 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
-விடுதலை,12.3.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக