ஞாயிறு, 31 ஜூலை, 2022

பரிணாமக் கொள்கையில் டார்வினின் முன்னோடி

புதன், 27 ஜூலை, 2022

கனடாவில் மம்மூத் வகை குட்டி யானையின் உடல் கண்டெடுப்பு


கனடாவின் வடக்கே உள்ள க்ளோண் டிக் தங்க வயல்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு அரிய வகை குட்டி மம்மூத்தின் உடலை கண்டெடுத்துள்ள னர். இந்த மம்மூத்திற்கு அந்த ஊர் மக்கள் Tr'ondek Hwech'in First Nation  என்று பெயரிட்டனர், அதாவது "பெரிய குழந்தை விலங்கு" என்று பெயர்

மம்மூத்கள் என்பவை இப்போதுள்ள யானைகளின் மூதாதைகள் என்கின்ற னர்,  வரலாற்று ஆய்வாளர்கள். இந்த வகை யானைகள் பனியுகத்தில் வாழ்ந் தவை. இப்போது உள்ள யானைகள் போல் அல்லாமல் மம்மூத் வகை யானை கள் உருவத்தில் மிகப்பெரியதாகவும் மிக நீண்ட தந்தங்களும் உடையவை. இப் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குட்டி மம்மூத் வகை யானைகள், பனியுகத் தில் வாழ்ந்தவை. பனிக்காலம் என்பதால் குளிரை தாங்கும் வண்ணம் இதன் உடலில் கம்பளி போன்ற ரோமங் கள் காணப் படுகின்றன.

மம்மூத்களின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த் தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம் பளி யானைகள் என அழைக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மம் மூத்தானது அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் எல்லையான கனடாவின் யூகோன் பிரதேசத்தில் உள்ள டாசன் நகருக்கு அருகே அகழ்வாராய்ச்சி யின்போது குழந்தை மம்மூத்தின் எச் சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

30,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கம்பளி வகை மம்மூத்களும் இதனுடன் வேறு விலங்குகளான குதிரைகள், சிங்கங் கள் மற்றும் காட்டெருமைகளும் இருந்து உள்ளன என்று தெரிவிக்கின்றன. இந்த மம்மூத் வகை யானை பெண் என்று சொல்கின்றனர். 30,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனி யுகத்தின்போது இறந்திருக் கலாம் என்ற தகவல் வெளியாகி யுள் ளது. 1948ஆம் ஆண்டு அலாஸ்காவின் உட் புறத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் “எஃபி” என்ற பெயருடைய ஒரு பகுதி மம்மூத் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஏன் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன?

செவ்வாய், 26 ஜூலை, 2022

பெருவெளியில் 13 பில்லியன் ஆண்டு தொலைவில் உள்ள பால்வெளி மண்டலங்களின் பிறப்பிடம் இங்கே!! ‘முப்பத்து முக்கோடி தேவர்கள் எங்கே?’

வியாழன், 21 ஜூலை, 2022

நிலவில் காலடி எடுத்து வைத்த இணையற்ற நாள்(ஜூலை 21)

இந்நாள் : நிலவில் காலடி எடுத்து வைத்த இணையற்ற நாள்(ஜூலை 21)

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந் தக் கேள்விக்கு யாராயிருந் தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல் ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண் டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது. அவர், எட்வின் சி ஆல்ட் ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண் கலத்தின் பைலட். ஆல்ட் ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணி புரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ள வர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப் பட்டார். நீல் ஆம்ஸ்ட் ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக் கப்பட்டார். அவர் கோ-பைலட். இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரி யாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாம திக்கவில்லை. சில நொடி கள்தான் தாமதித்திருப் பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட் ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமை யும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரண மாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத் திருக்கும் என்பது மட்டு மல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதா ரணம்.

இனி நிலவை பார்க் கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோ ருமே மிகப்பெரும் சாத னைகளை படைக்கிற வல் லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

பஸ் ஆல்ட்ரின் வாழ்க்கைக் குறிப்பு:

பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட் வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண் வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திர னில் ஏற்றிச் சென்ற அப் பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திர னில் இறங்கிய இரண்டா வது மனிதர் என்ற பெரு மையைப் பெற்றார். விஞ்ஞானப் பட்டதாரி யான ஆல்ட்ரின் 1951'இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானி யாகப் பங்கு ஆற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரி யில் வானியலில் முனை வர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான் படையில் இணைந்து பணியாற்றினார். அக்டோ பர் 1963'இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வ தற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஜூலை 16, 1969'இல் அப்பல்லோ11 விண்கலத் தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக் கிய பயணத்தை ஆரம்பித் தார். சரியாக 02:56 UTC ஜூலை 21(இரவு 10:56 ணிஞிஜி, ஜூலை 20), 1969 இல், ஆம்ஸ்ட்ராங் சந்திர னில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார். பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988'இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்.

சனி, 2 ஜூலை, 2022

உலகின் மிகப் பெரிய தாவரம் கண்டுபிடிப்பு!


ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கடலடியில் முளைத்து செழிக்கும் கடற்புல் தாவரத்தை ஆராய்ந்து வந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில், கடலின் ஆழத்தில் பல சதுர கி.மீ வளர்ந்து நிற்கும் ஒரு வகை புல் புதரின் பல்வேறு பகுதிகளை மாதிரி எடுத்து, மரபணு சோதனை செய்தனர். அபோது தான் அந்த அரிய உண்மை தெரிந்தது.

ஷார்க் வளைகுடா பகுதி என்ற பகுதியில், 200 சதுர கி.மீ., அளவுக்கு கடற்புல் வெளியாக படர்ந்திருக்கும் அத்தனை புல்லுமே, ஒரே விதையிலிருந்து முளைத்தவை. இதனால் தான், உலகின் மிகப் பெரிய தாவரம் என்று விஞ்ஞானிகள் அதை அழைத்தனர். மேலும், இந்த கடற்புல் புதரின் வயது 4,500 ஆண்டுகள் என்பது ஆய்வில் தெரியவந்தது.

கல்லீரலின் வயது எப்போதும் மூன்று!


வேகமாக செல்களை புதுப்பித்துக் கொள்ளக் கூடியது கல்லீரல். இருந்தாலும், வயதானால், புதுப்பிக்கும் திறன் குறையும் என்றே மருத்துவர்கள் கருதினர்.

ஆனால், ஜெர்மனியில் நடந்த ஒரு ஆய்வின்படி, உங்கள் வயது இருபதோ, எண்பதோ எதுவானாலும், உங்கள் கல்லீரலின் வயது மூன்று தான் என்று தெரியவந்துள்ளது!ஜெர்மனியின் டிரெஸ்டனிலுள்ள டெக்னிஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய வழியில் இந்த விடையை கண்டனர்.

கடந்த 1950களில் அணுகுண்டு சோதனைக்குப் பின், கதிரியக்க நச்சு பரவி, பலரது செல்களுக்குள் புகுந்தது. அப்போது வாழ்ந்து மறைந்தோரின் கல்லீரல்களை, விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஆய்வில், 20 முதல் 80 வரை வயதுள்ள பலரது கல்லீரல் செல்களுக்கு வயது 3 ஆண்டுகளாக இருந்தன. இதனால், பெரும்பாலானோரின் கல்லீரல் செல்கள், மூன்று ஆண்டுகள் இருந்து, சிதைவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

மனித உடலில் உள்ள பலவித நச்சுக்களை பிரித்தெடுப்பது தான் கல்லீரலின் பணி. இருந்தாலும், அது வேகமாக செல்களைப் புதுப்பித்துக் கொள்வதன் மூலம், நச்சுக்களின் தாக்குதலை சமாளிக்கிறது. இந்தத் திறன் இருப்பதால் தான், மது, புகை, என்று உட்கொள்ளும் பலரால் உயிரோடு நடமாட முடிகிறது.