சனி, 2 ஜூலை, 2022

கல்லீரலின் வயது எப்போதும் மூன்று!


வேகமாக செல்களை புதுப்பித்துக் கொள்ளக் கூடியது கல்லீரல். இருந்தாலும், வயதானால், புதுப்பிக்கும் திறன் குறையும் என்றே மருத்துவர்கள் கருதினர்.

ஆனால், ஜெர்மனியில் நடந்த ஒரு ஆய்வின்படி, உங்கள் வயது இருபதோ, எண்பதோ எதுவானாலும், உங்கள் கல்லீரலின் வயது மூன்று தான் என்று தெரியவந்துள்ளது!ஜெர்மனியின் டிரெஸ்டனிலுள்ள டெக்னிஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய வழியில் இந்த விடையை கண்டனர்.

கடந்த 1950களில் அணுகுண்டு சோதனைக்குப் பின், கதிரியக்க நச்சு பரவி, பலரது செல்களுக்குள் புகுந்தது. அப்போது வாழ்ந்து மறைந்தோரின் கல்லீரல்களை, விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஆய்வில், 20 முதல் 80 வரை வயதுள்ள பலரது கல்லீரல் செல்களுக்கு வயது 3 ஆண்டுகளாக இருந்தன. இதனால், பெரும்பாலானோரின் கல்லீரல் செல்கள், மூன்று ஆண்டுகள் இருந்து, சிதைவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

மனித உடலில் உள்ள பலவித நச்சுக்களை பிரித்தெடுப்பது தான் கல்லீரலின் பணி. இருந்தாலும், அது வேகமாக செல்களைப் புதுப்பித்துக் கொள்வதன் மூலம், நச்சுக்களின் தாக்குதலை சமாளிக்கிறது. இந்தத் திறன் இருப்பதால் தான், மது, புகை, என்று உட்கொள்ளும் பலரால் உயிரோடு நடமாட முடிகிறது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக