அறிவியல் அறிவோம்

உண்மை அறிவியலை அனைவருக்கும் விளக்கவும், தெளிவுபடுத்தவும் பயன்படும் பகுதி

பக்கங்கள்

  • முகப்பு
  • மருத்துவ உலகு
  • தமிழ் மருத்துவம்
  • மூலிகை உலகு
  • மூலிகை மன்னன்
  • வேளாண்மை(மருதம்) அறிவோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்

ஞாயிறு, 31 ஜூலை, 2022

பரிணாமக் கொள்கையில் டார்வினின் முன்னோடி



   July 30, 2022 • Viduthalai

7ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளர்களில் முதலிடம் பெறுபவர் டெஸ்கார்ட்டஸ். 1596-ஆம் ஆண்டு மார்ச் 31 பிறந்த இவர் 1650-ஆம் ஆண்டு பிப்ரவரி 11 மறைந்தார். கத் தோலிக்கராகப் பிறந்த இவர் இயேசு சபை பாதிரியார்களின் பராமரிப்பில் இருந்து கல்வி கற்றார். அதற்கிணங்க தம் வாழ்நாள் முழுவதும் இவர் ஆசாரமான கத்தோலிக் கராகவே இருந்தார்.

என்றாலும், இவரது சிந்தனை வளம் காரணமாக இவரைப் பழிவாங்கி விட் டார்கள் கத்தோலிக்க இயேசு சபைப் பாதிரி கள். இவர் எழுதிய பிரபலமான நூல்கள் இரண்டும் மதச் சபையினால் தடை செய் யப்பட்டன.  இவர் மரணமடைந்து 20 வரு டங்கள் கழிந்த பின்னரும் கூட இவரது தத்துவமும் கருத்துகளும் எல்லா பிரெஞ்சுப் பல்கலைக் கழகங்களிலும் நுழைய விடாமல் அடக்கி ஒடுக்கப் பட்டன என் றாலும் கூட, சிந்தனையாளர் வட்டாரங் களில் இவரது கருத்துகள் செழிப்பாக வளர்ந்து வந்தன. முற்றிலும் ஆச்சார சீலர்களான பல நூறு பாதிரிகள் இவரது புரட்சிக் கருத்துகளைச் சிரமேற்கொண் டொழுகினர். அவர்களையெல்லாம் இக் கருத்துகளைக் கைவிடும்படி மத மேலிடம் விரட்ட வேண்டியதாகி விட்டது!

உண்மையிலேயே இவர் சீரிய பகுத் தறிவாளர் என்பதில் வரலாற்றாசிரியர்கள் கருத்து வேறுபாடு காட்டவில்லை. ஆனால், இவர் பகுத்தறிவாளராக ஏன் வெளிப்படையாக வாழவில்லை? இக் கேள்விதான் பிரச்சினைக்குரியதாக இருந் தது என்றாலும், இதற்கு நல்ல விளக்கம் பின்னர் கூறப்பட்டு விட்டது இந்த விளக்கம் என்ன?

ஏறத்தாழ இவருக்கு சம காலத்தவராக இருந்தவர் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி கலிலியோ இவரைவிட மூத்தவர். விஞ்ஞான அடிப்படையில் சிந்தித்ததற்கு அவர் பெற்ற பரிசுகள் என்ன என்பது டெஸ் கார்ட்டசுக்கு நன்றாகத் தெரியும். எனவே தான், தம்மையும் அப்படிப்பட்ட சித்திர வதைக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதால்தான் பகிரங்கமான பகுத்தறிவா ளராகத் தம்மைக் காட்டிக் கொள்ளவில்லை.

இவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்த பக்கிள் என்ற வரலாற்றாசிரி யரும், ராபர்ட்சன் என்ற வரலாற்றாசிரியரும் இவரைப் பலபடப் புகழ்கின்றார்கள். அய் ரோப்பாவின் அறிவுலகத்தை விடுதலை செய்த மிகப் பெரிய சீர்திருத்தச் செம்மல் என்பதும் நவீன கால விஞ்ஞானத்தையும், தத்துவத்தையும் உண்மையில் நிறுவி யவரே இவர்தான் என்றும் இவருக்குப் புகழ் மாலைகள் சூட்டப்படுகின்றன.

அந்தக் கால கட்டத்தில் மதச் சபைகளின் மூலமாக போப்புகள் மக்கள் மண்டையிலே சுமத்தி வைத்திருந்த தத்துவங்கள் போலி அரிஸ்டாட்டில் தத்துவங்கள் ஆகும். அதோடு பள்ளிக் கூடத்தார் என்ற பெயரி லும் சில போலி சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் மதச் சபையால் பரப்பப் பட்டு வந்தன. இவற்றையெல்லாம் எதிர்த்து நின்ற புரட்சியாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவியர் டெஸ்கார்ட்டஸ் தான்.

அறிவின் அனுபவத்தை அடிப்படை யாகக் கொண்டே எல்லாக் கருத்துகளையும் ஏற்க வேண்டும் அல்லது தள்ள வேண்டும் சும்மா யாரோ பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு எதையும் நம்பக் கூடாது என்ற உயரிய தத்துவத்தை இவர் நாசுக்காக பரப்பி வந்தார். 

இந்த வாழ்க்கை முறைத் தத்துவம் அய்ரோப்பா முழுவதும் பரவியது. நான் சிந்திக்கிறேன். எனவே நான் இருக்கிறேன் என்பது இதன் மொழி பெயர்ப்பு. அதாவது மரபு, சாஸ்திரம், வேதம், முன்னோர் நடப்பு என்ற அடிப்படையில் யாரும் எதையும் நம்பக் கூடாது. அவனவன் தனது சொந்த அறிவில் பட்டதை ஆராய்ந்து அதன் படியே வாழவேண்டும் என்பது.

பிரான்சில் அப்போது செல்வாக்குடன் இருந்த மதப்பிரிவினர் தூய்மையாளர்கள் இவர்கள் மத வாழ்க்கையில் மட்டும்தான் தூய்மையாளர்கள் என்பதில்லை. தனி வாழ்க்கையிலும் தூய்மையான சிந்தனை யாளர்கள்; நாகரிக உணர்ச்சி மிக்கவர்கள், எனவே, விஞ்ஞான ரீதியில் அமைந்த டெஸ்கார்ட்டசின் கருத்துகள் இவர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஜேன்சனிஸ்ட் கள் எனப்பட்ட இந்த தூய்மையாளர்களை இயேசு சபை பாதிரிகளுக்கு அறவே பிடிக்காது. எனவே, தூய்மையாளர்களின் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் இலட்சியமாக விளங்கிய டெஸ்கார்ட்டஸ் மீது பாதிரிகள் பாய்ந்தனர். பிரான்சிலிருந்து டெஸ்கார்ட்டஸ் விரட்டப்பட்டார்.

ஹாலந்துக்குப் போய் குடியேறிய டெஸ்கார்ட்டசுக்கு அங்கும் சரியான சூழ்நிலை இல்லை. எனவே, மறைவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாக சுவீடன் ராணி கிறிஸ்டினா அழைத்தார் என்பதற்காக அந்த நாட்டுக்குப் போனார்.

விஞ்ஞானத்துக்கு டெஸ்கார்ட்டஸ் செய்த தொண்டு மிகவும் இன்றியமையாதது. பரிணாம தத்துவம் பின்னர் டார்வினால் தெளிவாகச் சீரமைக்கப்படுவதற்கு முன் பாக டெஸ்கார்ட்சின் சிந்தனையில் நல்ல வண்ணம் விளக்கம் பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்கது. உலகம் யாராலோ திடீர் என்று சிருஷ்டி செய்யப்பட்டதல்ல. மாறாக படிப்படியாக இயற்கையினால் உருவாக் கப்பட்டது என்பது இவர் கூறிய கருத்து.

அடுத்து உடற்கூறு பற்றிய கருத்து. உடற்கூறு என்பது ஏதோ மாயாதத்துவம் அல்ல; மாறாக மனித உயிர் என்பது இயந் திர சாதன பாணியில் இயங்கும் ஒன்றே என்று உறுதியாகக் கூறினார். இவைதான் அய்ரோப்பாக் கண்டத்தின் நவீனகால விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை யானவை என்று கருதப்படுகிறது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:06 AM
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: டார்வின் முன்னோடி , படிமா வளர்ச்சி , பரிணாமம்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )

வளர்ச்சி

வளர்ச்சி
மனிதன்

அறிவியல்

உலகை ஆள்வது அறிவியலே!
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 ( 4 )
    • ►  மே ( 2 )
    • ►  மார்ச் ( 2 )
  • ►  2024 ( 13 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  அக்டோபர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஜூலை ( 1 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  பிப்ரவரி ( 5 )
  • ►  2023 ( 9 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  மே ( 2 )
    • ►  ஏப்ரல் ( 1 )
    • ►  மார்ச் ( 3 )
    • ►  ஜனவரி ( 2 )
  • ▼  2022 ( 17 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ▼  ஜூலை ( 7 )
      • பரிணாமக் கொள்கையில் டார்வினின் முன்னோடி
      • கனடாவில் மம்மூத் வகை குட்டி யானையின் உடல் கண்டெடுப்பு
      • நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஏன் வெவ்வேறு நிறங்களில்...
      • பெருவெளியில் 13 பில்லியன் ஆண்டு தொலைவில் உள்ள பால்...
      • நிலவில் காலடி எடுத்து வைத்த இணையற்ற நாள்(ஜூலை 21)
      • உலகின் மிகப் பெரிய தாவரம் கண்டுபிடிப்பு!
      • கல்லீரலின் வயது எப்போதும் மூன்று!
    • ►  மே ( 4 )
    • ►  பிப்ரவரி ( 3 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2021 ( 17 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  ஆகஸ்ட் ( 4 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 1 )
    • ►  ஏப்ரல் ( 3 )
    • ►  மார்ச் ( 5 )
    • ►  பிப்ரவரி ( 1 )
  • ►  2020 ( 13 )
    • ►  ஜூலை ( 1 )
    • ►  மே ( 1 )
    • ►  மார்ச் ( 5 )
    • ►  பிப்ரவரி ( 4 )
    • ►  ஜனவரி ( 2 )
  • ►  2019 ( 75 )
    • ►  டிசம்பர் ( 4 )
    • ►  நவம்பர் ( 2 )
    • ►  அக்டோபர் ( 6 )
    • ►  செப்டம்பர் ( 9 )
    • ►  ஆகஸ்ட் ( 18 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 5 )
    • ►  மே ( 8 )
    • ►  ஏப்ரல் ( 5 )
    • ►  மார்ச் ( 6 )
    • ►  பிப்ரவரி ( 5 )
    • ►  ஜனவரி ( 5 )
  • ►  2018 ( 24 )
    • ►  நவம்பர் ( 4 )
    • ►  அக்டோபர் ( 4 )
    • ►  செப்டம்பர் ( 2 )
    • ►  ஜூலை ( 4 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  மார்ச் ( 3 )
    • ►  பிப்ரவரி ( 2 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2017 ( 56 )
    • ►  டிசம்பர் ( 3 )
    • ►  அக்டோபர் ( 3 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஆகஸ்ட் ( 6 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  ஏப்ரல் ( 4 )
    • ►  பிப்ரவரி ( 14 )
    • ►  ஜனவரி ( 19 )
  • ►  2016 ( 49 )
    • ►  டிசம்பர் ( 8 )
    • ►  நவம்பர் ( 5 )
    • ►  அக்டோபர் ( 12 )
    • ►  செப்டம்பர் ( 4 )
    • ►  ஜூன் ( 9 )
    • ►  மே ( 10 )
    • ►  மார்ச் ( 1 )
  • ►  2015 ( 42 )
    • ►  டிசம்பர் ( 12 )
    • ►  நவம்பர் ( 7 )
    • ►  அக்டோபர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 6 )
    • ►  ஆகஸ்ட் ( 1 )
    • ►  ஜூலை ( 8 )
    • ►  ஜூன் ( 1 )
    • ►  மே ( 2 )
    • ►  ஜனவரி ( 4 )
  • ►  2014 ( 11 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  நவம்பர் ( 9 )
    • ►  அக்டோபர் ( 1 )

மொத்தப் பக்கக்காட்சிகள்

Sparkline

பிரபலமான இடுகைகள்

  • கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
    கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன் 1862ஆம் ஆண்டில் ரிச்சர்ட் காட்லிங் என்பவர் மெஷின் கன் எனப்படும் இயந்திரத் துப்பாக...
  • கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
    கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன் சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநா...
  • மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு
    பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விர...
  • கனியின் நிலையை அளக்கும் கருவி
    March 11, 2021  • Viduthalai கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ள னவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப...
  • பால்வெளி மண்டலம்
    பிரபஞ்ச ரகசியத் தொடரில் அவ்வப்போது பால்வெளி மண்டலம் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் பால்வெளி மண்டலம் பற்றி தமிழில் அவ்வளவ...
  • 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்
    குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டு களுக்கு முன்பு, பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்த தற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் ...
  • ஸ்டெம்செல் மூலம் குழந்தை பிறக்கச் செய்யலாம்!
    இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவ தாகக்  ...
  • 500 ஆண்டாக மெருகு குலையாமல் இருக்கும் பெண் மம்மி
    500 ஆண்டிற்கு முந் தைய பெண் மம்மி அர் ஜென்டினாவின் லூலை லிகோ என்ற எரிமலை பகுதியில் ஒரு குகையில் கண்டுபிடிக்கபட்டு உள் ளது. இந்த் பெண்...
  • பார்வையற்றவர்களுக்கு உதவும் பயோனிக் கண்!
    பார்வை என்பது நம் கண்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் ஓர் அற்புத வரம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்குப் பார்வை முக்கியம். இருட்டில் இருந்த...
  • அறிவியல் துளிகள்
    இணையத்தில் அடையாளத் திருட்டும், அதன் மூலம் ஏற்படும் இழப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் புதி...

லேபிள்கள்

  • "ஒளிரும்" பயிர்கள்
  • 3 பேர் மரபணு
  • அட்டை
  • அண்டவியல்
  • அணுக்கள்
  • அய்ன்ஸ்டீன்
  • அழிவு
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிவியல் நாள்
  • அறுவை சிகிச்சை
  • ஆக்சிஜன்
  • ஆசிரியர்
  • ஆயுட்காலம்
  • ஆராய்ச்சி
  • ஆற்றல்
  • இங்கிலாந்து
  • இதயம்
  • இந்தியா
  • இமயமலை
  • இரட்டை கருப்பை
  • இலை
  • இறங்கியவர்
  • இறந்த கணவர்
  • இறைச்சி
  • இன்னொரு பூமி
  • உணவு
  • உயிர்
  • உயிர் அணு
  • உயிர் தோற்றம்
  • உயிர்கள்
  • உயிரினம்
  • உருமலர்ச்சி
  • உருவாக்கம்
  • உறுப்பு
  • எறும்பு
  • ஒளி ஆற்றல்
  • ஒளிப்படம்
  • ஒளிப்படவியல்
  • கடல்
  • கண்
  • கரிம மூலக்கூறு
  • கரிமம்
  • கரு முட்டை
  • கருந்துளை
  • கருவி
  • கருவிகள்
  • கரோனா
  • கல்லீரல்
  • கனி
  • கனிமம்
  • காது
  • காந்த துருவம்
  • காந்தபுலம்
  • காற்று
  • கிரகணம்
  • குகை
  • குகை மனிதன்
  • குழந்தை
  • குளோனிங்
  • கெசு
  • கொசு
  • கொழுப்பு
  • கோழி
  • கோள்
  • கோள்கள்
  • சந்திராயன்
  • சமிக்ஞை
  • சயனைடு
  • சனி
  • சனிக்கோள்
  • சாதனை
  • சூப்பர் எர்த்
  • செ.ர.பார்த்தசாரதி
  • செயற்கை
  • செயற்கைக் கருப்பை
  • செயற்கைகோள்
  • செல்பேசி
  • செவ்வாய்
  • செவ்வாய் கிரகம்
  • ஞாயிறு
  • டார்வின்
  • டார்வின் முன்னோடி
  • டாஸ்மேனிய புலி
  • டைட்டன்
  • டைட்டன் நிலா
  • டைனோசர்
  • டைனோசர் காலம்
  • தங்கம்
  • தடுப்பூசி
  • தயாரிப்பு
  • தாவரங்கள்
  • தாவரம்
  • திசு
  • திமிங்கலம்
  • திராவிட வீராங்கனை
  • திருநங்கை
  • தீவு
  • தைலசைன்
  • தோற்றம்
  • நாசா
  • நாற்றம் உணர் காட்சி
  • நிலவு
  • நிழலில்லா நாள்
  • நிறம்
  • நீர்
  • நீர் மூலக்கூறு
  • நுண்ணுயிர்
  • நெப்டியூன்
  • நேர்காணல்
  • நோபல்
  • நோபல் பரிசு
  • நோபல
  • படி மலர்ச்சி
  • படிம வளர்ச்சி
  • படிமா வளர்ச்சி
  • பரவல்
  • பரிணாம வளர்ச்சி
  • பரிணாமம்
  • பருவநிலை
  • பல்லி
  • பழம்
  • பழம்பொருள்
  • பழைய உயிரினம்
  • பள்ளி
  • பறவை
  • பனிக்கரடி
  • பனியுகம்
  • பாக்டீரியா
  • பார்வை
  • பாறை
  • பிறப்பு
  • புகைப்படம்
  • புதிய கோள்
  • புதியபடம்
  • புதை படிமம்
  • புரோட்டீன்
  • புவி
  • பூச்சி
  • பூமி
  • பெண்
  • பெரிய
  • பெருவெளி
  • பேரடை
  • மகப்பேறு
  • மண்
  • மம்மூத்
  • மயில்
  • மரபணு ஆராய்ச்சி
  • மரபணு மாற்றம்
  • மரம்
  • மருத்துவ கருவி
  • மருத்துவம்
  • மறைவு
  • மனித இனங்கள்
  • மனித இனம்
  • மனித செல்கள்
  • மனிதப் பிரதி
  • மின் அஞ்சல்
  • மின் கடத்தி
  • மீன்
  • முத்து
  • முதல் ஒளி
  • முதல் மனிதர்
  • முதலை
  • மூளை
  • மூன்றாவது புலம்
  • மோதல்
  • யானை
  • யுரேனஸ்
  • ரோபோ
  • லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்
  • வயிறு
  • வளி மண்டலம்
  • விண்கல்
  • விண்கலம்
  • விண்மீன்
  • விண்மீன் கூட்டம்
  • விண்வெளி
  • வீட்டு திரைப்படம்
  • வெள்ளி
  • வெள்ளை காண்டாமிருகம்
  • வெற்றிடம்
  • வேற்றுகிரகம்
  • வைரசு
  • ஜெயலெட்சுமி
  • ஹோமோ சேபிப்பியன்ஸ்
  • Thylacine
Blogger இயக்குவது.