வெள்ளி, 27 செப்டம்பர், 2019

பிரபஞ்சத்தின் வயது 1140 கோடி ஆண்டுகள்!



தலைப்பைப் படித்ததும் முதலில் ஆச்சரியமே மேலோங்கும். ஆனால், இது யாருடைய வயது என்று தெரிந்துகொண்டால் நிச்சயமாக வியப்படையமாட்டீர்கள்.

ஆம்; இது பிரபஞ்சத்தின் வயது.

நாளுக்கு நாள் இப்பிரபஞ்சம் இளமையாகி வருகிறது என்று வேடிக்கையாக சொல் கிறார்கள் விஞ்ஞானிகள்.

விண்மீன்களின் நகர்வு அடிப்படையில் பிரபஞ்சத்தின் வயதை மதிப்பீடு செய்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

அத்துடன் ஹப்புள் கான்ஸ்டன்ட் என்ற முறையும் பயன்படுத்தப் படுத்தப்பட்டது.

இந்த அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்தவர்கள் பிரபஞ்சத்தின் வயதை 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று கணித்தனர்.

அதாவது 1370 கோடி ஆண்டுகள். இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இன்று 11.4 பில்லியன் ஆண்டுகள் என்று பிரபஞ்சத்தின் வயதை லேட்டஸ்ட் ஹப்புள் கான்ஸ்டன்ட் மூலம் கண்டறிந் துள்ளனர்.

அப்படியென்றால் முன்பை விட இரண்டு பில்லியன் ஆண்டுகள் இளமையானது இந்தப் பிரபஞ்சம்.

- விடுதலை நாளேடு, 26. 9. 19

காற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள உணவு



மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அந்த உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என நிலை தற்போது உருவாகியுள்ளது.

பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு, சோலெய்ன் என்ற புதுமையான புரத மாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி மய்யமான நாசாவின் தொழில் நுட்பத்தை பின்பற்றி இந்த சாதனையை சோலார் புட்ஸ் செய்துள்ளது

வழக்கமான தானிய மாவுகளில் இருக்கும் அதே சுவையும், புரதம், கார்போ அய்ட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பு ஆகியவை சோலார் புட்ஸ், காற்று மாசிலிருந்து தயாரிக்கும் சோலெய்ன் புரத்ததிலும் இருக்கிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு. ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவை.

ஆனால், சோலெய்னுக்கு வெறும், 10 லிட்டர் தண்ணீரே போதும். இதனால், பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சோலெய்ன் புரத மாவை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது

- விடுதலை நாளேடு, 26. 9 .19

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஆராய்ச்சி கருவிகள்

1) கண்கள் அதன் இரத்தக்குழாய்கள் பற்றி ஆராய உதவும் கருவி


ஆப்தால் மாஸ்கோப்

2)   மூக்கின் உட்புறம் ஆராய உதவும் கருவி

ரினோஸ் கோப்

3) காதை ஆராய உதவும் கருவி

ஆரோஸ் கோப்

4) உணவுப் பாதையை உள்நோக்கி ஆராயும் கருவி

எண்டோஸ்கோப் (எண்டோ = உள்ளே), (ஸ்கோப்பி = நோக்குதல் அல்லது பார்த்தல்)

5) இரைப்பையை பார்க்க உதவும் கருவி

கேஸ்ட்ரோஸ் கோப்

6) இதயக்குழாய் அடைப்பு நீங்க பயன்படுத்தப்படும் கருவி

ஸ்டென்ட்

7) உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தெளிவாகப் படம் பிடிக்கும் கருவி

ஸ்கேன் (Scan)

8) பூமியின் தன்மையை அளக்கும் கருவி

ரிக்டர் ஸ்கேல்

9) நிலநடுக்கத்தை அளக்கும் கருவி

சீஸ்மோ கிராஃப்

10) தொலைவிலுள்ள பொருள்களின் உயர் வெப்ப நிலையை அளக்கும் கருவி

பைரோமீட்டர்

11) காற்று மண்டலத்தில்

அழுத்தத்தை அளக்கும் கருவி

பாரா மீட்டர்

12) காற்றின் வேகத்தை அளக்கும் கருவி

அனிமா மீட்டர்

13) உயரத்தை அளக்கும் கருவி

ஆல்டி மீட்டர்

14) வெப்பத்தை அளக்கும் கருவி

கலோரி மீட்டர்

15) ஈரப்பதத்தை அளக்கும் கருவி

ஹைக்ரோ மீட்டர்

அதுபோல் மனிதனின் அறிவையும், ஆற்றலையும் அளக்கும் கருவி - ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்போது? யாரால்? - என்ற ஆறு வினாக்களையும் எழுப்பி அறிவியல் அடிப்படையில் விடை காணும் ஆற்றல் படைத்த கருவி பகுத்தறிவு

புல் பூண்டு - ஓரறிவு

நத்தை, சங்கு - ஈரறிவு

எறும்பு, கரையான் - மூவறிவு

ஈ, வண்டு - நான்கறிவு

விலங்குகள், பறவைகள் - அய்ந்தறிவு

மனிதன் மட்டுமே - ஆறறிவு

"மாவும் மாக்களும் அய்யறிவினவே

மக்கள் தாமே ஆறறிவுயிரே"

- தொல்காப்பியம்

அறிதல் (Knowing)

உணர்தல்(Feeling)

விரும்பிச் செய்தல்(Willing)

ஆகிய மூன்றும் அறிவின் கூறுபாடு களாகும்.

மனிதன் ஓர் அறிவு ஜீவி (உயிர்)

Man is a Rational being

பகுத்தறிவு சிந்தனை வீரத்தின் சிறப்பு அம்சமாகும்.

(DISCREASAN IS THE BEST PART OF VALOUR)

-  விடுதலை ஞாயிறு மலர்17.8.19

வியாழன், 5 செப்டம்பர், 2019

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளை நிறமிப் பல்லியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை



உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளை நிறமிப் பல்லியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் நேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள் இந்தச் சாதனையைப் படைத்துள்ள னர். CRISPR  என அழைக்கப்படும் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி கரீபியன் தீவுகளில் காணப்படும் குறிப்பிட்ட வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளைத் தனியாக பிரித்தனர்.

பின்னர் அதில் உள்ள டிஎன்ஏ மூலம் புதிய உயிரினத்தை உருவாக்க சோதனைகள் நடந்து வந்தன. இந்தச் சோதனைகளின் விளைவாக அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமி கொண்ட புதிய பல்லி வகை உருவாக்கப்பட்டது.இந்தப் பல்லியினங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், இதன் மூலம் மனித குலத்தில் மாற்றங்கள் வருமா என்பதை கணிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

- விடுதலை நாளேடு, 5 .9 .19

புதன், 4 செப்டம்பர், 2019

படிவுப்பாறையும் புதை படிமங்களும்

இனிபடிவப்பாறைகளைப் பற்றி ‌காண்போம்#
சில சமயங்களில் வெள்ளக் காலங்களில் நதிகள் அடித்து வரும் பெருமணல்,சிறுமணல், வண்டல் மண் ஆகியன எடைக்கேற்ப படிப்படியாக கீழேபடியும் பொழுது சில உயிரினங்கள் உயிருடனோ இறந்தபிறகோ இத்துகள்களுக்கிடையே அகப்பட்டு கொள்கின்றன.
அவற்றின்‌மீது மண்துகள்கள் படிவதால் எடை கூடுதலாகிறது.
எடைகூடுவதால் அழுத்தம் அதிகரிக்கின்றது.வெப்பமும் அதிகரிக்கிறது‌
வேதியல் மாற்றத்தால் ஒருபொருள் பண்பில் முற்றிலும் வேறுபட்ட பொருளாகிறது.(விறகை எரித்தால் கிடைப்பது கரி.கரிகாகும் விறகுக்கும் பெரும் வேறுபாடு).
மண்துகள்கள் பாறைகளாகின்றன.
இப்பாறைக்கு படிவப்பாறைகள்(Sedimentary) என்று பெயர்.

இந்நிலையில் இப்பாதையில் சிக்குண்ட உயிரினங்களின் உடல்களும் வேதியல் மாற்றத்திற்கும் மாகி பாறைகளில் புதைபடிவங்களாக ஆகின்றன.

மண்ணுக்குள் புதையுண்டு மடிந்து போகும் உயிரினங்கள் அனைத்தும் புதைபடிவங்களாக ஆகிவிடுவதில்லை.
சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் இடங்களில் தான் புதைபடிவங்கள் உருவாகும்.மற்ற இடங்களில் உருவாக.

உயிரினங்களின் கடினப்பாகமாகிய எலும்பு,பல்,ஓடு,மரக்கிளை போன்றவைதான் புதைபடிவங்களாகும்‌.எளிய உயிரினங்கள் புதைபடிவங்களாவது அரிது‌.

1950ஆம் ஆண்டு கணக்கில், அறிவியலாளர்கள் வட அமெரிக்காவின் கொலராடோ நதிப்பகுதியில் பேக்டீரியா,ஆல்கோ போன்றவற்றின் புதைபடிவங்களைத் தோண்டி எடுத்துள்ளனர்.

300கோடிஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பேக்டீரியா,ஆல்கோ ஆகியன போன்ற நுண்ணுயிர்களின் புதைபடிவங்களை(Microscopic Fossils) ஆஸ்திரேலியா,தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்து 60கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒட்டுடலி வகையை சேர்ந்த டிரிலோபைட் (Trilobite) என்னும் கடல்வாழ் உயிரியின் புதைபடிவங்களும் கிடைத்துள்ளன.
ஆய்வின்படி 300கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பேக்டீரியா,ஆல்கே போன்ற எளிய உயிரினங்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும்.

பாறைகளின்வயது#
பூமியிலுள்ள பாறைகளின் அடுக்குகளை நிலவியல் வல்லுநர்கள் பல பிரிவுகளாக பிரித்து அந்தந்த அடுக்குகளின் வயதினை துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர்‌
பூமியின் ஓட்டுப்பகுதியின் அடிப்பகுதியில் காணப்படும் அடுக்குதான் மிகவும் தொன்மையான அடுக்காகும்.முதலில் உண்டான அடுக்காகும்.
அடிஅடுக்கிலிருந்து மேல் நோக்கிப் படிப்படியாக வயதுதான் மிகவும் குறைவு.‌.
மேல்அடுக்குதான் அண்மைக்காலத்தில் தோன்றியதாகும்,இளமையான தாகும்.
அண்மைக்காலத்தில் என்றால் 10ஆண்டுகளுக்கு முன்னர் என்றோ கணக்கிட்டு விடல் கூடாது.
பலகோடி ஆண்டு கணக்கில்தான் கணக்கியல் வேண்டும்.

(அடுத்து பாறைகளின் வயதினைக் கணக்கிடல்).
தொடரும்.........
-  ராஜமோகன் முகநூல் பதிவு, 30.8.19

பாறைகளின் வயதினைக் கணக்கிடல்

பாறைகளின் வயதினைக் கணக்கிடல்#
எலிமெண்ட்(Element)மூலகம்,தனிமம்,என்பது ஒருவகை அணுக்களால் ஆனது.
ஒரு தனிமத்தில் வேறுவகை அணுக்கள் இரா.
வெள்ளி,தங்கம், இரும்பு, யுரேனியம், பொட்டாசியம்,ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்றவை தனிமங்களாகும்.இதுபோன்று நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் உள.

தனிமங்களில் சில,முறையாக கூடுதல் குறைதல் இன்றி எப்பொழுதும் ஒரே சீராக,அளவான கதிர்களை வீசிக்கொண்டே இருக்கின்றன.
இத்தகைய தானியங்களுக்கு'கதிரியக்கத் தனிமங்கள்'(Radio Active Elements) என்று பெயர்.
கதிர்களை வீசும் இந்நிகழ்ச்சி சாதாரண வெப்பநிலை மாற்றத்தாலோ அழுத்தமாற்றத்தாலோ காந்த அலைகளாலோ மின்அலைகளாலோ பாதிக்கபடா.

கதிர்கள் என்பது துகள்களேயாகும்.துகள்களுக்கு எடையுண்டு.எனவே கதர்களை வீசிக்கொண்டே இருக்கும் ஒரு தனிமத்தின் எடை காலப்போக்கில் குறைகின்றது.
சூரியன் கதிர்களை வீசிக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு நொடியும் அது பல லட்சம் டன் எடையை இழந்து கொண்டே இருக்கின்றது.

பாறைகளிலுள்ள கதிரியக்கத் தனிமங்களை(Radio Active Elements)நிலவியல் கடிகாரம்(Geological Clocks)என்றே கூறலாம்.
யூரேனியம்,தோரியம்,பொடாடாசியரூபிடியம்,கார்பன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் கதிரியக்க தனிமங்களாகும்‌.
கதிரியக்கத்தினால் தனிமங்கள் தங்கள் எடையை இழந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு தனிமம் கதிர்வீச்சு முறையால் எடையை இழப்பதால் அது வேறு தனிமமாக மாறுகிறது.
ஆக,ஒரு தனிமத்தின் தற்போதைய எடை,அத்தனிமம் இழந்த எடை ஆகியவற்றை கணக்கிட்டு அந்தத் தனிமம் இருந்த பாறையின் வயதைக் கணக்கிடுகின்றனர்.

யூரேனியம்--ஈயம் முறை#
யூரேனியம்--ஈயம்( Uranium-Lead Method.)என்ற ஒருமுறை இருக்கின்றது.
பாறையில் படிந்துள்ள ஒரு குறிப்பிட்ட எடையுடைய யூரேனியம்,அதன் எடையில் பாதியை இழக்க 450கோடி ஆண்டுகளாகும்.
கனமான யூரேனியம்(U238) கதிர்களை வீசுகின்றது. வீசப்பட்ட கதிர்கள் ஈயமாக ஆகின்றது.
அதாவது கதிரியக்க யுரேனியம் இழக்கும் எடை முழுமனமையாக ஈயமாக உருப்பெற்று பாறையில் இருக்கின்றது.

ஆக,
இப்பொழுது பாறையில் இருக்கும் யூரேனியத்தின் எடையையும் ஈயத்தின் எடையையும் கூட்டினால் தொடக்கத்தில் பாறையிலிருந்த யூரேனியத்தின் எடை கிடைக்கின்றது‌
எனவே,
பாறையில் இப்பொழுது இருக்கும் யூரேனியம்,ஈயம் ஆகிய இரண்டின் எடைகளையும் ஒப்பிட்டு அந்தப் பாறையின் வயதினை துல்லியமாகக் கணக்கிடுகின்றனர்.

ஒரு பாறையில் யூரேனியம் மட்டும் இருந்து ஈயமே இல்லாமல் இருந்தால் அப்பாறை அண்மைக்காலத்தில் தோன்றியது என்று அறிந்து கொள்ளலாம்.

ஒருபாறையின் வயதினைக் கணக்கிட்டுவிட்டால் அப்பாறையிலுள்ள ஃபாசில்களின் வயதினைக் கணக்கிட்டு விட்டதாகவே பொருள்.

எடைகுறைவான யூரேனியம் (U235Light Uranium)தன் எடையில் பாதியை இழக்க 71,30,00000ஆண்டுகளும்

தேரியம் தன் எடையில் பாதியை இழக்க 1,39,00000ஆண்டுகளும்

பொட்டாசியம் (K40)தன் எடையில் பாதியை இழக்க 120கோடி ஆண்டுகளும்

கரி(K14) தன் எடையில் பாதியை இழக்க 5600ஆண்டுகளும் ஆகின்றன எனக் கணக்கிட்டுள்ளனர்.

பொட்டாசியம்-40கதிர்களை வீசும் பொழுது இழக்கும் எடையில் 88சதவீதம் கால்சியமாகவும் 12சதவீதம் ஆர்கான் ஆகவும் மாற்றுகின்றது.

பாறைகளில் பல தனிமங்கள் இருக்கின்றன.
அவை ஒவ்வொன்றும் காலத்தை,பாறையின் வயதைக் காட்டுகின்றன.
இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து சரி செய்து கொள்வதால் காலத்தைக் கணக்கிடுவதில் தவறு ஏற்படாது.

தொடரும் ‌.......

- ராஜமோகன் முகநூல் பதிவு, 30.8.19

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஹோமோ சேப்பியன் ஆக மாறிய மனிதன் (படிமவளர்ச்சி) -17

தோழர்களே விலங்கியல் குறித்த 17ம் பதிவு

மரபியல் அடிப்படையில் பார்த்தால் ஆப்பிரிக்கனும் அமெரிக்கனும், பார்பாணும் தீண்டத்தகாதவனாக சித்தரிக்கப்படுபனும் ஒரே மரபியல் அமைப்பை கொண்டவர்களே

மரபியல் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எதுவும் இல்லை மனிதனிடம் ஏற்பட்ட தனிச்சொத்துடமைதான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என மக்களை பிரித்தது

இன்று உலகம் மனிதகுல சமத்துவத்தை நோக்கி முன்னேறுகிறது எதிர்காலத்தில் எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் மனிதகுலம் தமது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடைந்தே தீர வேண்டும் என்பதே இயற்கையின் சமுதாய பொருளாதாரத்தின் தீர்வாக அமையும் ஆனால் இதற்கு நீண்ட காலம் ஆகும் ஆனால் நிச்சயம் நடக்கும்

சரி நாம் விலங்கியலுக்குள் போவோம்

நியாண்டர்தால் மனிதன் மிக அதிக அளவு மூளைத்திறன் கொண்டவன் அவனின் ஜீன்களை உள்வாங்கியதால்தான் ஐரோப்பியர்கள் திறமை உடையவர்களாக உள்ளனர் என மார்க்சியம் பேசும் சிலரே என்னிடம் விவாதித்தது உண்டு

ஐரோப்பிரின் சாதனைகளை தெரிந்து கொல்ள விரும்புவோர் எனது இந்திய வரலாறு குறித்த பதிவுகளை பாருங்கள்

நியாண்டர்தால் மனிதனின் வாழ்வை சற்று பார்க்கலாம் இவன் ஓரளவு பேசும் திறனையும் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை செய்யும் திறனையும் பெற்று இருந்தான்

நோயை எதிர்க்க பெனிசீலியத் பூஞ்சைகளை பயன்படுத்தினான் நெருப்பை பயன்படுத்தி உணவை வேக வைத்து உண்டான்

சராசரி மனிதர்களை விட பலம் பொருந்திய எலும்புகளை பெற்று இருந்தான் இறந்தவர்களை புதைக்க சடங்கு செய்த முதல் உயிரினம் கற்கருவிகள் எலும்புகள் ஆகியவற்றை பிணத்துடன் வைத்து புதைத்தான்

இவன் இந்த அளவு வளர்ந்து இருந்த போதும் இவனின் ஜீன்கள் நவீன மனிதனுடன் நெருக்கத்தை காட்டவில்லை சிம்பன்சி குரங்குகளுடன் நெருங்கிய தன்மை கொண்ட ஜீன்களையே கொண்டு இருந்தான்

கொரில்லாக்கள் சிம்பன்சிகளுக்கு இருக்கும் 24 ஜோடி குரோமசோம்களே இவனுக்கும் இருந்தது

இவ்வளவு மரபியல் வேறுபாடுகளை கொண்ட இவன் எப்படி நவீன ஆப்பிரிக்க ஹோமோ செபியனுடன் புணர்ந்து இன்றைய ஐரோப்பிய இனம் உருவாகி இருக்க முடியும் வாய்ப்பே இல்லை

ஏன் இவ்வளவு வேறுபாடு மனிதகுல பொது மரபில் இருந்து விலகி 550000 ஆண்டுகளுக்கு பின் வளச்சி அடைந்த ஹோமோ செபியனை சந்திக்கும் போது அவன் மனித தன்மையுடனும் நியாண்டர்தால் குரங்கு தன்மையுடனும் இருந்தார்கள்

எனவே ஹோமோ செபியன் இவனுடன் உறவு கொள்ளவில்லை இவனை வேட்டையாடி உண்டான் என்பதே உண்மை

பிறகு எப்படி இவனின் 1,4% ஜீன்கள் ஐரோப்பியரின் ஜீனுடன் கலந்தது

இது குறித்து ரசியா ஜெர்மனி ,பிரான்ஸ் ,போன்ற ஐரோப்பிய நாடுகள் எங்கும் ஆய்வாளர்கள் ஹோமோசெபியனின் ஜீனுடன் கலந்த நியாண்டர்தாலின் ஜீன்களை தேடினார்கள் எதுவும் ஒத்து வரவில்லை

கடைசியாக குரோட்டியா நாட்டில் உள்ள அல்டாய் மலைப்பகுதியில் நியாண்டர்தால் மற்றும் டெனிசோவன் ஆகியோரின் ஜீன்களை தாங்கி ஹோமோசெபியனாக அதாவது மனிதனாக மாறிய ஒரு பெண்ணின் ஜீன்கள் கொண்ட எலும்புகளை கண்டுபிடித்தார்கள்

இது ஐரோப்பாவில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு அதாவது நவீன ஆப்பிரிக்க ஹோமோசெபியன் நுழைவதற்கு முன் நடந்த நிகழ்வாகும்

அதாவது ஆப்பிரிக்க நவீன ஹோமோ செபியன் ஐரோப்பாவில் நுழைவதற்கு முன்பே அங்கு நியாண்டர்தால் டெனிசோவன் ஆகிய இனங்களின் ஒரு சிறு பிரிவு மனிதனாக மாறி இருந்தது இந்த மனிதனாக மாறிய சிறுகூட்டத்துடன் பாலுறவு கொண்டதன் மூலமே ஆப்பிரிக்க ஹோமோ செபியன் நியாண்டர்தால்களின் குறைந்த அளவிலான ஜீன்களை பெற்றான்

மற்ற நியாண்டர்தால்களை அழித்தான்,இதுபோலவே இந்தியாவிலும் நவீன ஹோமோ செபியன் வருவதற்கு முன்பே நவீன மனிதன் உருவாகி விட்டான் என்பதையே விலுப்புரம் ஓடையில் கிடைத்த 160,000 ஆண்டுகள் பழமையான ஹோமோ செபியன் வகையை சேர்ந்த சிறுமியின் எலும்புகளும் ,மத்திய பிரதேசத்தின் நர்மதை மனிதனின் மண்டை ஓடும் சான்றுகளாகும்

நவீன ஆப்பிரிக்க ஹோமோ செ[பியனுடன் இந்தியா சீனா ஐரோப்பா ,இலங்கை போன்ற பகுதிகளில் ஏற்கனவே மனிதனாக மாறி இருந்த கூட்டம் இணைந்தது

இவ்வளர்ச்சியை எட்டாத ஹோமோஎரக்டசாக இருந்தவர்கள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டார்கள்

ஹோமோ எரக்டசாக ஒரு பிரிவு மாறிய பாது பல பிரிவுகள் பின் தங்கி வளராமல் இருந்தனர் ஹோமோ எரக்டசின் ஒரு பிரிவு மனிதனாக மாறிய பிறகும் பல ஹோமோ எரக்டசுகள் வளர்ச்சி இன்றி இருந்தன

வளர்ந்த கூட்டம் வளராமல் இருந்த கூட்டங்களை வேட்டை ஆடியது

இன்றும் இது நடக்கிறது வளர்ந்த நாடுகள் வளர்ச்சி அடையாத நாடுகளை இன்று சூறையாடுவதைப்போல்

தொடரும்
- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன் முகநூல் பதிவு, 30 .8 .19

[
](https://www.facebook.com/photo.php?fbid=172933727203367&set=gm.357913978490406&type=3&eid=ARAvuRkYTp6feblmkvH4-3oQ4kI0d1X5B-7KWVdubbA68t2ASB16xfUQrU11LwiEI46QgEqp4d3q81uP&ifg=1)

ஹோமோ செபியனாக மாறிய இக்கூட்டங்கள் (படிம வளர்ச்சி) -16

தோழர்களே விலங்கியல் குறித்த 16ம் பதிவு

கடந்த பதிவுகளில் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் உலகம் எங்கும் பரவினான் எனும் கருத்தில் உள்ள முரண்பாடுகளை பார்த்தோம்

இந்த முரண்பாடுகளின் அடிப்படையில் எழுதப்பட்டதே ரசிய நூலான மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் எனும்ரசிய நூலாகும் அது உலகம் எங்கும் பரவலாக மனிதன் தோன்றினான் எனும் கருத்தை முன் வைக்கிறது

அப்படி வெவ்வேறு பகுதிகளில் மனிதன் தோன்றி இருந்தால் அவனின் ஜீன்களில் வேறுபாடு இருந்து இருக்கும் , ஜீன்களில் வேறுபாடு கொண்ட அமெரிக்கனும் ஆப்பிரிக்கனும் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடமுடியாது

இந்திய பெருமுதலாளிகளில் டாடாவின் குடும்பம் கூட பிரெஞ்சு இந்திய கலப்புதான் . குத்துச்சண்டை வீரர் மைக்டைசன் கூட ஆப்பிரிக்க அமெரிக்க கலப்புதான்

இதற்குகாரணம் இன்று உலகம் முழுவதும் வாழும் மனிதக்கூட்டம் ஆரம்பகாலத்தில் ஒரே மரபியல் மூலத்தில் இருந்தே உருவாகி இருக்க முடியும் வெவ்வேறு மரபு பண்புகளை கொண்டவர்களாக இருக்க முடியாது

புலியும் சிங்கமும் கூட பூனைகுடும்ப பேரினத்தை சேர்ந்த சிற்றினங்களே ஆனாலும் இவை ஒன்று சேர்ந்து இனப்பெருக்கம் செய்வதை மரபு பண்புகள் தடை செய்கிறது

மனிதன் புலியையையும் சிங்கத்தையும் இணைத்து உருவாக்கிய லைகர்கள் கூட மலட்டு தன்மை கொண்டதேஅவற்றால் சந்ததிகளை உருவாக்க முடியாது

மனிதன் கூட இன்று பரவலான உலகத்தொடர்புகளை இழந்து விட்டு ஏதோ ஒரு கூட்டம் நீண்ட நெடுங்காலத்துக்கு பிரிந்து தனித்து வாழுமானால் அதன் ஜீன் அமைப்பும் தனித்தன்மை கொண்டதாக மாறி மற்ற மனிதக்கூட்டத்துடன் இணைவதை தடுக்க வாய்ப்பு இருக்கிறது

நல் வாய்ப்பாக அப்படி தனிமை படும் வாய்ப்பு பெரும்பாண்மை மனிதக்கூட்டத்துக்கு ஏற்பட வில்லை

சரிஅப்படி மரபியல் ஒற்றுமை இருக்குமாயின் உலகம்முழுவதும் மனித குலத்தோற்றம் ஒன்றுபோல் இல்லாமால் வெவ்வேறு காலங்களையும் இடங்களையும் கொண்டதாக ஏன் இருக்கிறது

ஏன் என்றால் ஆரம்ப காலத்தில் நிலநடுக்கோட்டின் மைய பகுதிகளில் தான்சானியா, உகாண்டா,எத்தியோப்பியா ,கென்யா,தெற்கு சகாராக்களில் தோன்றிய மனித மூதாதை கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வடக்கு நோக்கி நகர்ந்தது

இக்காலத்தில் தாவரங்கள் பூமியின் வடக்கு பகுதிகளில் செழித்து வளர்ந்தது விலங்குகளும் அந்த தாவரங்களால் ஈர்க்கப்பட்டன மனிதனின் மூதாதையும் குறிப்பாக ஹோமோ செபிலிஸ் வகையும் இந்த தாவர விலங்கியல் உலகை பிந்தொடர்ந்து வட துருவத்தை நோக்கி நகர்ந்தது

இந்த நகர்வு 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லாமல் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும்

ஏனென்றால் நில நடுக்கோட்டில் இருந்து சிவாலிக் சீனப்பகுதிகள் மிக அதிக தூரத்தை கொண்டவை இவ்வளவு தூரத்தை கால்நடையாக நடந்து செல்ல வழித்தடங்கள் ஏதும் அக்காலத்தில் கிடையாது

விலங்குகளை பிந்தொடர்ந்து ஆஅங்காங்கே பல ஆயிரம் ஆண்டுகள் தங்கி மிக மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சிவாலிக் பகுதிகளை அடைந்து இருக்கவேண்டும்

இந்திய துணைக்கண்டத்தையும் சீனத்தையும் ஹோமோ ஹெபிலிஸ் அடைந்து அது படிப்படியாக ஹோமோ எரக்டஸ் ஆகவும் நவீன ஹோமோ செபியனாகவும் மாறி இருக்கவேண்டும்

அதேவேளை ஆப்பிரிக்காவில் இருந்த ஹோமோ ஹெபிலிஸ்களும் ஹோமோ எரக்டசாக மாறி அதில் ஒருபிரிவான நியாண்டர்தால்களும் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பாவை அடைந்தனர்

இந்த நியாண்டர்தால் கூட்டத்தில் இருந்து சைபீரிய பகுதியில் உள்ள குகைகளில் வாழ்ந்த டெனிசோவன் எனும் கூட்டம் பிரிந்து அது தனி வகையாக மாறியது

இந்த டெனிசோவனின் ஜீன்களின் நியாண்டர்தால்களின் தாய்வழி ஜீன்களும் கலந்து காணப்படுகிறது

இந்த டெனிசோவன் ஜீன்கள் இந்தோனேசியா ,சுமத்ரா, ஜாவா ,ஆஸ்திரேலிய பூர்வ குடிகளிடமும் காணப்படுகிறது

இப்படி பரவி பரிணாம வளர்ச்சியில் ஹோமோ செபியனாக மாறிய இக்கூட்டங்கள் 1 லட்சம் அல்லது இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய நவீன மனிதனுடன் கலந்து இப்போதைய மனிதக்கூட்டம் உருவானது

தொடரும்

- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன் முகநூல் பதிவு, 29.8.19

Image may contain: 1 person