செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பாறையின் வயதும் காலக் கணக்கீடும்

பூமியை தோண்டிக்கொண்டே சென்றால் ஆழம் செல்லச்செல்ல அடியிலுள்ள பாறைகள் பழமையானவையாக இருக்கின்றன.
ஆழத்திற்கேற்ப பாறைகளின் வயதும் என்பது தெரிகிறது.
ஆழத்திலுள்ள புதைபடிவங்கள்தான் ஃபாசில்கள்தான் காலத்தால் முற்பட்டவை என்பதும் பாறைகளின் ‌மேல் அடுக்குகளில் இருக்கும் ஃபாசில்கள் காலத்தால் பிற்பட்டவை என்பதும் தெளிவாகும்.

பாறையும் பிரிவுகள்#
நிலவியல் வல்லுநர்கள் பாறைகளின் ‌வயதினை பாறைகள் உண்டாகிய காலத்தினை யுகங்களை அளவாகச் கொண்டு சில யுகங்களாகப் பிரித்துள்ளனர்.
யுகப்பிரிவுகளின் அடிப்படையில்தான் பாறைகளின் வயதினைக் காண்கின்றனர்.
ஃபாசில்களின் வயதினையும் கணக்கிடுகினாறனர்.
(Geological Time Scale).

1.இன்றைய நாளிலிருந்து சுமார் 6.5கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வரை புதுயுகமாகும்.(Genozoic).

2.6.5கோடியிலிருந்து 24.5கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வரை நடுயுகமாகும்(Mesozoic).
நடுயுகக்காலம் 24.5--6.5=18 கோடி ஆண்டுகளைக் கொண்டது.

3.24.5கோடி ஆண்டிலிருந்து 57 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வரை தொல்யுகமாகும்.
57--24.5=32.5கோடி ஆண்டுகளைக்கொண்டது (Paleozoic).

4.57கோடியிலிருந்து 250கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வரை தொல்யுகத்திற்கு முந்திய யுகமாகும்.(Proterozoic).

5.250கோடியிலிருந்து 470கோடிஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆதியுகமாகும்.
பூமிதிடநிலையைப் பெறும் முகமாகவும்(Archaezoic).

மிகப்பழமையான பாறைகளின் ‌வயது 370கோடி ஆண்டுகளாகும்.
இதற்கு முன்னர் ‌பாறைகள் தோன்றவில்லை.
பூமியின் ‌வயது 470கோடி ஆண்டுகளாகும் (2000வருடத்தின் படி).
பூமி 470வது கோடி ஆண்டில்தான்,தன் முழுமையான உருவத்தை அடைந்தது ‌.

(ஆத்திக அன்பர்களும் போலி நாத்திகவாதிகள் பெயரில் உலாத்தும் குவாட்டர் மூளைக்காரர்களும் தயவு செய்து இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் யுகங்களுடன்
ஒரு சதுர்யுகத்தில் மொத்தம் 43,20,000மானுட ஆண்டுகள் உள்ளன.
இதில் கிருதயுகம் 17,28,000ஆண்டுகளும்,
திரேதாயுகம் 12,96,000ஆண்டுகளாகும்,
துவாபாரயுகம் 8,64,000ஆண்டுகளாகும்,
கலியுகம் 4,32,000ஆண்டுகளாகும் என்ற புளித்தும் பொய்த்தும்போன புராண சான்றுகளை எடுத்துக்கொண்டு வரவேண்டாம்).

தொடரும்.........

ராஜமோகன் முகநூல் பதிவு, 3.9.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக