வெள்ளி, 27 செப்டம்பர், 2019

பிரபஞ்சத்தின் வயது 1140 கோடி ஆண்டுகள்!தலைப்பைப் படித்ததும் முதலில் ஆச்சரியமே மேலோங்கும். ஆனால், இது யாருடைய வயது என்று தெரிந்துகொண்டால் நிச்சயமாக வியப்படையமாட்டீர்கள்.

ஆம்; இது பிரபஞ்சத்தின் வயது.

நாளுக்கு நாள் இப்பிரபஞ்சம் இளமையாகி வருகிறது என்று வேடிக்கையாக சொல் கிறார்கள் விஞ்ஞானிகள்.

விண்மீன்களின் நகர்வு அடிப்படையில் பிரபஞ்சத்தின் வயதை மதிப்பீடு செய்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

அத்துடன் ஹப்புள் கான்ஸ்டன்ட் என்ற முறையும் பயன்படுத்தப் படுத்தப்பட்டது.

இந்த அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்தவர்கள் பிரபஞ்சத்தின் வயதை 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று கணித்தனர்.

அதாவது 1370 கோடி ஆண்டுகள். இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இன்று 11.4 பில்லியன் ஆண்டுகள் என்று பிரபஞ்சத்தின் வயதை லேட்டஸ்ட் ஹப்புள் கான்ஸ்டன்ட் மூலம் கண்டறிந் துள்ளனர்.

அப்படியென்றால் முன்பை விட இரண்டு பில்லியன் ஆண்டுகள் இளமையானது இந்தப் பிரபஞ்சம்.

- விடுதலை நாளேடு, 26. 9. 19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக