அறிவியல் அறிவோம்

உண்மை அறிவியலை அனைவருக்கும் விளக்கவும், தெளிவுபடுத்தவும் பயன்படும் பகுதி

பக்கங்கள்

  • முகப்பு
  • மருத்துவ உலகு
  • தமிழ் மருத்துவம்
  • மூலிகை உலகு
  • மூலிகை மன்னன்
  • வேளாண்மை(மருதம்) அறிவோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
பருவநிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருவநிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

பருவநிலை மாற்றம் காரணமாக 3 கோடி ஆண்டுக்கு முன்னரே 65 விழுக்காடு உயிரின‌ங்கள் அழிவு: புதிய ஆய்வில் தகவல்



    October 12, 2021 • Viduthalai

துபாய், அக். 12- பருவநிலை மாற்றம் என்பது தற்கால பிரச்சினை அல்ல. பூமி உருவான காலத்திலிருந்தே பெரிய அளவிலான‌ பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக உயிரினங்களும் அழிவுக்கும் மாற்றத்திற்கும் உள் ளாகியுள்ளன. பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் இருந்து 65 சதவீதம் பாலூட்டி இனங்கள் அழிந்தது என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

உலகில் அழிந்து போன உயிரினங்கள் குறித்து பல்லாண்டு காலமாக  ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற் றும் எகிப்தின் ஆராய்ச்சியாளர் களை உள்ளடக்கிய இந்த குழு, பாலூட்டி குழுக்களின் புதைபடி வங்களை  ஆய்வு செய்தனர். இதில் அய்னோடோண்ட்ஸ் என்று அழைக்கப்படும் அழிந்துபோன மாமிச உண்ணிகள், செதில் வால் அணில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும்  மனிதக் குரங்குகள் உள் ளிட்ட பல்வேறு உயிரினங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். புதை படிவங்களாக கிடைத்த பாலூட் டிகளின் பற்கள் ஆய்வுக்கு வெகு வாக‌ உதவியது. அதன் மூலம் அவை எதை உணவாக உட் கொண்டது என்பது பற்றியும் எந்தமாதிரியான உணவு என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக காலத் திற்கு ஏற்ப எலிகள் மாறுதலடைந்து அவற்றின் பற்களிலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளது.

இயோசீன் மற்றும் ஒலிகோசீன் என்று அழைக்கப்படும் புவியியல் காலங்களுக்கு இடையில் சுமார் 3 கோடி ஆண்டுக்கு முன்னர் ஏற் பட்ட கால நிலை மாற்றத்தால் உலகின் மிகப் பெரிய அளவில் பாலூட்டி இனங்கள் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சம யத்தில்  பூமி கடும் குளிர்ச்சியடைந் தது பனிப்படலங்கள் விரிவடைந் தன, கடல் மட்டம் குறைந்தது, உயர்ந்த மரங்கள் அடங்கிய‌ காடு கள் அழிந்தது, கார்பன் டை ஆக் சைடு மிக அரிதான ஒன்றாகி விட் டது. அச்சமயத்தில் அய்ரோப்பா மற்றும் ஆசியாவில் உயிர் இனங் களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அழிந்துவிட்டன.

ஆப்பிரிக்க பாலூட்டிகள் சில உயிர் தப்பியிருந்தது. 65 சதவீத பாலூட்டி இனங்கள் அழிந்து உள்ளன. இந்த‌ ஆய்வின் இணை ஆசிரியர் கெசஷாம் சல்லம் கூறுகையில், ‘‘முந்தைய  காலநிலை மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் தற்போதைய காலத்திற்கு மிக முக்கியமானதாகும். இதன் மூலம் தற்போதைய‌ காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் அமைப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி எளிதாக அறிய முடியும். இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்’’ என்றார்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:46 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அழிவு , உயிரினம் , பருவநிலை

ஞாயிறு, 1 மார்ச், 2020

பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.

மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ்.ஆனால் அது கடந்த காலங்களில் குறைவாகவும், அதிகமாகவும் இருந்து வந் துள்ளது.

பருவநிலையில் இயற்கையாகவே மாற் றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன் னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.

சூரியனின் ஆற்றலில் குறிப்பிட்ட பங்கை பூமியின் வளிமண்டலம் எவ்வாறு உட்கிர கித்து கொள்கிறது என்பதை விளக்கும் பசுமை இல்ல விளைவுடன் இது இணைத்து பார்க்கப்படுகிறது.

பூமியின் நிலப்பரப்பிலிருந்து மீண்டும் விண்வெளிக்கு திரும்ப அனுப்பப்படும் சூரிய னின் ஆற்றல், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு அனைத்து திசைகளிலும் மீண்டும் உமிழப்படுகிறது.

இதன் காரணமாக, பூமியின் வளிமண்ட லத்தை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமியிலுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இந்த செயல்முறை மட்டும் தொடர்ந்து நடைபெறவில்லை என்றால், பூமியின் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு மனிதர்கள் உள்ளிட்ட உயிரி னங்கள் எதுவும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இயற்கையாக சூரிய ஆற்றலை கொண்டு பூமியின் வளிமண்டலத்தில் நடக்கும் செயல் முறையோடு, பூமியின் நிலப்பரப்பில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்தின் மூலம் வெளியிடப்படும் வாயுக்களும் கூடுதலாக இணைந்து அதிகளவிலான ஆற் றல், பசுமை இல்ல விளைவின்போது சிதறடிக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பருவநிலை மாற்றத்திற்கான

ஆதாரம் என்ன?

தொழிற்புரட்சி பரவலாவதற்கு முன்ன தாக இருந்ததை விட தற்போது பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதி கரித்துள்ளதாக உலக வானிலை மய்யம் கூறுகிறது.

பூமியின் மிகவும் வெப்பம் மிக்க ஆண்டு களின் பட்டியலில் முதல் 20 இடங்களை, கடந்த 22 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளே ஆக்கிரமித்துள்ளன. 2015 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளும் அதில் அடக்கம்.

2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டு காலத்தில் உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டர் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.

நீரின் வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே இது போன்ற மாற்றங்களுக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது.

இருப்பினும், பனிப்பாறைகள் உருகுவதே கடல்நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணமாக தற்போது பார்க்கப்படுகிறது. துருவ பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருகின்றன.

1979 முதல் இதுவரையிலான கால கட்டத்தில் துருவ பகுதியில் உள்ள கடலில் உள்ள பனிப்பாறைகளின் இருப்பில் கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது.

மேற்கு அண்டார்டிக்காவில் பனிக் கட்டிகள் உருகி வருவதையும் செயற்கைக் கோள் தரவு காட்டுகிறது. சமீபத்திய ஆய்வில் கிழக்கு அண்டார்டிகாவும் தனது பனிப்பாறைகளை இழக்கத் தொடங்கியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மாறிவரும் காலநிலை ஏற்படுத்தும் தாக் கங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிலும் காணப்படுகின்றன. தாவரங்கள் முன்ன தாகவே பூ விடுவது மற்றும் பழம் விளையும் பருவம்/ காலம் மற்றும் விலங்குகளின் வாழிடங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

- விடுதலை நாளேடு 20 2 20

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:47 PM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பருவநிலை

வியாழன், 3 அக்டோபர், 2019

பருவநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்



கடந்த வாரம் காலநிலை எப்படியிருந்தது என்று அறிய வேண்டுமானால் கூகுளில் தட்டினால் போதும். கடந்த மாதம், கடந்த ஆண்டும் இந்த தேதி காலநிலையைக் கூட கூகுள் தேடிக்கண்டுபிடித்துத் தந்துவிடும்.

ஆனால், 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் கால நிலை எப்படியிருந்தது என்பதை அறிய கூகுளால் முடியாது.  மரத்தால் முடியும். ஆம்; 800 ஆண்டுகளாக இங்கிலாந்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் ஓக் மரம் பருவநிலை எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதன் வளையங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலமாக பருவநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை துல்லியமாக சொல்லிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆராய்ச்சி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த போராடும் போ ராளிகள் மத்தியில் பெரும் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. இந்த மரம் எனக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத் திருக்கிறது... என்கின்றனர் ஆய்வாளர்கள்.

- விடுதலை நாளேடு, 3.10.19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:52 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பருவநிலை , மரம்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துகள் ( Atom )

வளர்ச்சி

வளர்ச்சி
மனிதன்

அறிவியல்

உலகை ஆள்வது அறிவியலே!
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 ( 1 )
    • ▼  ஜனவரி ( 1 )
      • ஆண் துணை இல்லாமலும் இனப்பெருக்கம் செய்யும் கரப்பான...
  • ►  2025 ( 20 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  நவம்பர் ( 2 )
    • ►  அக்டோபர் ( 7 )
    • ►  செப்டம்பர் ( 2 )
    • ►  ஆகஸ்ட் ( 1 )
    • ►  ஜூலை ( 3 )
    • ►  மே ( 2 )
    • ►  மார்ச் ( 2 )
  • ►  2024 ( 13 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  அக்டோபர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஜூலை ( 1 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  பிப்ரவரி ( 5 )
  • ►  2023 ( 9 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  மே ( 2 )
    • ►  ஏப்ரல் ( 1 )
    • ►  மார்ச் ( 3 )
    • ►  ஜனவரி ( 2 )
  • ►  2022 ( 17 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஜூலை ( 7 )
    • ►  மே ( 4 )
    • ►  பிப்ரவரி ( 3 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2021 ( 17 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  ஆகஸ்ட் ( 4 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 1 )
    • ►  ஏப்ரல் ( 3 )
    • ►  மார்ச் ( 5 )
    • ►  பிப்ரவரி ( 1 )
  • ►  2020 ( 13 )
    • ►  ஜூலை ( 1 )
    • ►  மே ( 1 )
    • ►  மார்ச் ( 5 )
    • ►  பிப்ரவரி ( 4 )
    • ►  ஜனவரி ( 2 )
  • ►  2019 ( 75 )
    • ►  டிசம்பர் ( 4 )
    • ►  நவம்பர் ( 2 )
    • ►  அக்டோபர் ( 6 )
    • ►  செப்டம்பர் ( 9 )
    • ►  ஆகஸ்ட் ( 18 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 5 )
    • ►  மே ( 8 )
    • ►  ஏப்ரல் ( 5 )
    • ►  மார்ச் ( 6 )
    • ►  பிப்ரவரி ( 5 )
    • ►  ஜனவரி ( 5 )
  • ►  2018 ( 24 )
    • ►  நவம்பர் ( 4 )
    • ►  அக்டோபர் ( 4 )
    • ►  செப்டம்பர் ( 2 )
    • ►  ஜூலை ( 4 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  மார்ச் ( 3 )
    • ►  பிப்ரவரி ( 2 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2017 ( 56 )
    • ►  டிசம்பர் ( 3 )
    • ►  அக்டோபர் ( 3 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஆகஸ்ட் ( 6 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  ஏப்ரல் ( 4 )
    • ►  பிப்ரவரி ( 14 )
    • ►  ஜனவரி ( 19 )
  • ►  2016 ( 49 )
    • ►  டிசம்பர் ( 8 )
    • ►  நவம்பர் ( 5 )
    • ►  அக்டோபர் ( 12 )
    • ►  செப்டம்பர் ( 4 )
    • ►  ஜூன் ( 9 )
    • ►  மே ( 10 )
    • ►  மார்ச் ( 1 )
  • ►  2015 ( 42 )
    • ►  டிசம்பர் ( 12 )
    • ►  நவம்பர் ( 7 )
    • ►  அக்டோபர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 6 )
    • ►  ஆகஸ்ட் ( 1 )
    • ►  ஜூலை ( 8 )
    • ►  ஜூன் ( 1 )
    • ►  மே ( 2 )
    • ►  ஜனவரி ( 4 )
  • ►  2014 ( 11 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  நவம்பர் ( 9 )
    • ►  அக்டோபர் ( 1 )

மொத்தப் பக்கக்காட்சிகள்

Sparkline

பிரபலமான இடுகைகள்

  • கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
    கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன் 1862ஆம் ஆண்டில் ரிச்சர்ட் காட்லிங் என்பவர் மெஷின் கன் எனப்படும் இயந்திரத் துப்பாக...
  • கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
    கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன் சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநா...
  • மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு
    பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விர...
  • கனியின் நிலையை அளக்கும் கருவி
    March 11, 2021  • Viduthalai கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ள னவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப...
  • பால்வெளி மண்டலம்
    பிரபஞ்ச ரகசியத் தொடரில் அவ்வப்போது பால்வெளி மண்டலம் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் பால்வெளி மண்டலம் பற்றி தமிழில் அவ்வளவ...
  • 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்
    குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டு களுக்கு முன்பு, பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்த தற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் ...
  • ஸ்டெம்செல் மூலம் குழந்தை பிறக்கச் செய்யலாம்!
    இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவ தாகக்  ...
  • 500 ஆண்டாக மெருகு குலையாமல் இருக்கும் பெண் மம்மி
    500 ஆண்டிற்கு முந் தைய பெண் மம்மி அர் ஜென்டினாவின் லூலை லிகோ என்ற எரிமலை பகுதியில் ஒரு குகையில் கண்டுபிடிக்கபட்டு உள் ளது. இந்த் பெண்...
  • அறிவியல் துளிகள்
    இணையத்தில் அடையாளத் திருட்டும், அதன் மூலம் ஏற்படும் இழப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் புதி...
  • பார்வையற்றவர்களுக்கு உதவும் பயோனிக் கண்!
    பார்வை என்பது நம் கண்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் ஓர் அற்புத வரம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்குப் பார்வை முக்கியம். இருட்டில் இருந்த...

லேபிள்கள்

  • "ஒளிரும்" பயிர்கள்
  • 3 பேர் மரபணு
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அட்டை
  • அண்டவியல்
  • அணுக்கள்
  • அய்ன்ஸ்டீன்
  • அழிவு
  • அளவு
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிவியல் நாள்
  • அறுவை சிகிச்சை
  • ஆக்சிஜன்
  • ஆசிரியர்
  • ஆயுட்காலம்
  • ஆராய்ச்சி
  • ஆற்றல்
  • இங்கிலாந்து
  • இதயம்
  • இந்தியா
  • இமயமலை
  • இரட்டை கருப்பை
  • இலை
  • இறங்கியவர்
  • இறந்த கணவர்
  • இறைச்சி
  • இன்னொரு பூமி
  • இனப்பெருக்கம்
  • உணவு
  • உயிர்
  • உயிர் அணு
  • உயிர் தோற்றம்
  • உயிர்கள்
  • உயிரினம்
  • உருகாத தங்கம்
  • உருமலர்ச்சி
  • உருவாக்கம்
  • உறுப்பு
  • எகிப்து
  • எறும்பு
  • ஒளி ஆற்றல்
  • ஒளிப்படம்
  • ஒளிப்படவியல்
  • கட்டுரை
  • கடல்
  • கண்
  • கரப்பான் பூச்சி
  • கரிம மூலக்கூறு
  • கரிமம்
  • கரு
  • கரு முட்டை
  • கருந்துளை
  • கருவி
  • கருவிகள்
  • கரோனா
  • கல்லீரல்
  • கனி
  • கனிமம்
  • காது
  • காந்த துருவம்
  • காந்தபுலம்
  • காலக்கணக்கு
  • காற்று
  • கிரகணம்
  • கீரிப்பிள்ளை
  • குகை
  • குகை மனிதன்
  • குழந்தை
  • குளோனிங்
  • கெசு
  • கொசு
  • கொழுப்பு
  • கோழி
  • கோள்
  • கோள்கள்
  • சண்டை
  • சந்திராயன்
  • சமிக்ஞை
  • சயனைடு
  • சனி
  • சனிக்கோள்
  • சாதனை
  • சூப்பர் எர்த்
  • செ.ர.பார்த்தசாரதி
  • செயற்கை
  • செயற்கைக் கருப்பை
  • செயற்கைகோள்
  • செல்பேசி
  • செவ்வாய்
  • செவ்வாய் கிரகம்
  • ஞாயிறு
  • ஞாயிறு மலர்
  • டார்வின்
  • டார்வின் முன்னோடி
  • டாஸ்மேனிய புலி
  • டைட்டன்
  • டைட்டன் நிலா
  • டைனோசர்
  • டைனோசர் காலம்
  • தங்கம்
  • தடுப்பூசி
  • தயாரிப்பு
  • தாவரங்கள்
  • தாவரம்
  • திசு
  • திமிங்கலம்
  • திராவிட வீராங்கனை
  • திருநங்கை
  • தீ
  • தீவு
  • தைலசைன்
  • தோலின் செல்
  • தோற்றம்
  • நாசா
  • நாற்றம் உணர் காட்சி
  • நிலவு
  • நிழலில்லா நாள்
  • நிறம்
  • நீர்
  • நீர் மூலக்கூறு
  • நுண்ணுயிர்
  • நெப்டியூன்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நோபல்
  • நோபல் பரிசு
  • நோபல
  • படி மலர்ச்சி
  • படிம வளர்ச்சி
  • படிமம்
  • படிமா வளர்ச்சி
  • பரவல்
  • பரிணாம வளர்ச்சி
  • பரிணாமம்
  • பருவநிலை
  • பல்லி
  • பழம்
  • பழம்பொருள்
  • பழைய உயிரினம்
  • பள்ளி
  • பறவை
  • பனிக்கரடி
  • பனியுகம்
  • பாக்டீரியா
  • பாம்பு
  • பார்வை
  • பால்வெளி
  • பாறை
  • பிறப்பு
  • புகைப்படம்
  • புதிய கோள்
  • புதிய மனித இனம்
  • புதிய மூதாதை
  • புதியபடம்
  • புதை படிமம்
  • புரோட்டீன்
  • புவி
  • பூச்சி
  • பூமி
  • பெண்
  • பெரிய
  • பெருவெளி
  • பேச்சாற்றல்
  • பேரடை
  • மகப்பேறு
  • மண்
  • மம்மூத்
  • மயில்
  • மரணமும்
  • மரபணு ஆராய்ச்சி
  • மரபணு மாற்றம்
  • மரம்
  • மருத்துவ கருவி
  • மருத்துவம்
  • மறைவு
  • மனித இனங்கள்
  • மனித இனம்
  • மனித உறுப்புகள்
  • மனித செல்கள்
  • மனிதப் பிரதி
  • மனிதன்
  • மின் அஞ்சல்
  • மின் கடத்தி
  • மீன்
  • முத்து
  • முதல் ஒளி
  • முதல் மனிதர்
  • முதலை
  • முதுமையும்
  • மூளை
  • மூன்றாவது புலம்
  • மோதல்
  • யானை
  • யுரேனஸ்
  • ரோபோ
  • லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்
  • வயிறு
  • வளி மண்டலம்
  • விண்கல்
  • விண்கலம்
  • விண்மீன்
  • விண்மீன் கூட்டம்
  • விண்வெளி
  • வீட்டு திரைப்படம்
  • வெப்பம்
  • வெள்ளி
  • வெள்ளை காண்டாமிருகம்
  • வெளி
  • வெற்றிடம்
  • வேற்றுகிரகம்
  • வைரசு
  • ஜெயலெட்சுமி
  • ஸ்பேஸ்
  • ஹோமோ சேபிப்பியன்ஸ்
  • ஹோமோ நலேடி
  • Thylacine
Blogger இயக்குவது.