திங்கள், 29 மே, 2023

மனிதப் பிரதி எடுத்தல் (குலோன்) ஆபத்தை உருவாக்குமா?

  

மனிதப் பிரதி எடுத்தல் (குலோன்) ஆபத்தை உருவாக்குமா?


.com/


நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந் துகொண்டு இருக்கிறோம், மனித இனம் அதிவேகமான அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.  இந்த தொழில் நுட்பம் மனிதர்களுக்கு பல் வேறு வழிகளில் அமைதியான வாழ்க்கை யைத் தருகிறது, ஆனால் இந்த அறிவியல் தொழில்நுட்பத்தில் இன்றளவும் மனித இனத்தை பிரதிஎடுத்தல் எனப்படும் குளோ னிங் தொடர்பாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்.


 நாம் தற்போது இந்த உயிர்பிரதி எடுத்தல் முறையில் மனிதர்களுக்குத் தான் சில விதிமுறைச் சிக்கல்கள், பல்வேறு மரபணுவிதி முரண்பாடுகள் உள்ளன. ஆனால்  உயிர் பிரதி எடுத்தல் முறையில் ஆடு, பசு, நாய் மற்றும் சமீபத்தில் சீனா குரங்குகளைக் கூட உயிர்பிரதி எடுத்தல் முறையில் உருவாக்கி விட்டது.  ஆனால் இதே போன்று மனித உயிர் பிரதிஎடுத்தல் எளிதானதல்ல.


நம்முள் சில கேள்விகள் எழலாம் அதா வது உண்மையிலேயே மனிதப் பிரதிஎடுத்தல் சிக்கலான ஒன்றா? அல்லது நாம் மனிதர் களைத் தவிர இதர உயிரினங்களில் மட்டுமே இந்த சோதனையைச் செய்துகாட்டும் நிலை உள்ளதா? என்று கேட்கலாம்.


 முதலில் சில கேள்விகளுக்கு பதிலைத் தேடுவோம், பலர் தற்போது உயிர்பிரதி எடுத்தல் குறித்து தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். மரபணுப் பிரதி எடுத்தல் என்பது பெற்றோர்களில் அடையாளத்தை அழிப்பது அல்ல, இதிலும் அறிவியல் இரண்டு கருத்துக்களை கொண்டுள்ளது.


  முக்கியமாக உயிர்ப்பிரதி எடுத்தல் என்பது ஒரே மாதிரியாக மற்றொன்றை உரு வாக்குவது ஆகும். அதாவது  கருமுட்டையில் இருந்து நேரடியாக பிரதி எடுப்பது இது நடக்குமா என்றால் ஆம் இதுவரை பல உயிர்பிரதி எடுத்தல் ஒரு உயிரின் அதாவது தாயின் கருமுட்டையை மட்டுமே வைத்து அதில் உள்ள செல்களைக் கொண்டு உயிரை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் ஆண் பெண் உயிரினச்சேர்க்கை அதாவது இரண்டு வேறுபட்ட மரபணுக்களைக் கொண்டு உருவானதுதான் மனித உயிரினம். இவ்வாறு பெறும் மரபணு உண்மையானது ஆகும். ஆனால் இந்த விதியிலிருந்து மாறுபட்டு மரபணுப் பிரதியை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.


 முக்கியமாக மனித உயிர்பிரதி எடுத்தல் என்பது பெற்றோரின் மரபணுக்கலப்பில் வேறு வேறு சூழலில் இணைந்து உருவானது, இது மனித இனத்தின் தனித்தன்மையை பாதிக்காது. 


ஒரே மனிதர் அதாவது தாயின் கருமுட் டையும் தாயின் உடல்செல்லும் இணைந்து மனிதர் உருவாகும் போது அங்கு முழுமை பெற்ற மனிதத்தன்மை  குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.  இங்கு டி என் ஏ தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு உரு வாகும் இது எதிர்கால மனித இனத்திற்கே பேராபத்தாக அமையும். குளோன் மூலம் உருவான பல உயிர்கள் ஆடு, மாடு, குரங்கு, பன்றி, கரடி உள்ளிட்ட பல மலட்டுத்தன்மை உடையதாகவும், தன்னை ஒத்த பிற உயிர்களுடன் இணக்கமாக இல்லாமலும் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.


இது மரபணுக்களின் மூலம் ஏற்படும் சிக்கல் ஆகும். அதே நேரத்தில் குழந்தைகள் வளரும் விதம் பல்வேறு சூழல்களில் கற்றுக் கொள்வது போன்றவற்றின் மூலம் குழந்தை களின் குணத்தின் தன்மையை மாற்ற முடியும் என்றும் கருதப்படுகிறது.  மனிதப் பிரதி எடுத் தல் என்பது ஒரு தாயிடமிருந்து உருவாக்குவது அதாவது ஒத்த குணங்களைக் கொண்ட மரபணுக்களின் பிரதிமட்டுமே, இதில் அதிக விபரங்கள் இருக்க வாய்ப்பில்லை.


 இது தொடர்பாக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி இந்தச் சிக்கலைத் தீர்க்கும் நடைமுறைக் குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும் கொள்கை ரீதியிலான பல்வேறுச் சிக்கல் களும் இதில் உள்ளது. இங்கு முக்கியமாக நமக்கு தெரியவேண்டியது என்னவென்றால் உயிரினங்கள் அனைத்திற்கு வாழ்வதற்கான உரிமைகள் உண்டு. ஆனால் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் தனித்து உயிர்வாழும் தன்மை சீரழிந்துவிடக்கூடாது. மேலும் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாகும் குழந்தை தன்னை தனித்தன்மையானவர் என்று கருதாதவாறு இருக்கவேண்டும், ஒருவேளை மனிதப்பிர தியின் மூலம் உருவாகும் குழந்தை தன்னை தனித்தன்மையானவர் என்று உணர்ந்து கொண்டால்?


 அல்லது மனிதப்பிரதி என்பது உடலுறுப் புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு உயிரின மாக சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டால்?


மனிதப்பிரதி மூலம் உருவாகும் உயிரி னங்கள் மருத்துவமனை என்னும் சிறைச் சாலைக்குள் வளர்க்கப்படும் ஆய்வு உயிரி னமாக இருந்து அவற்றில் உடல் உறுப்புக் களை  விற்பனைக்காக வளர்க்கப்படும் அபா யமும் உள்ளது.


 முக்கியமாக  மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாக்கப்படும் மனிதர்கள் ஆரோக்கிய மானவர்களாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. மனிதர்கள் அல்லாத இதர உயிர் பிரதிகள் ஏன் உருவாக்கினோம் என்றால் அவைகளின் மூளைத்திறன் மிகக்குறைவான தாக உள்ளது அவற்றை நாம் எளிதாக பராமரிக்க முடியும், ஆனால் மனிதப்பிரதிகள் மூலம் ஆரோக்கியமற்ற மனித இனத்தை நாம் உருவாக்குதல் மிகவும் தவறானதாகும்.


 நீங்கள் உங்களைப் போலவே அல்லது உங்கள் நண்பர்களைப் போலவே ஓர் உயிரை விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் அந்த பிரதி நண்பரோ அல்லது உங்கள் பிரதியோ ஆரோக்கியமற்ற வாழ்க்கையை அபாயகரமான வாழ்நிலைச்சூழலில் அவர் கள் வாழ்வார்கள். இதை நாம் தெரிந்தே ஓர் உயிரைப் படைக்க துணை போக மாட்டோம். உயிரினங்கள் அனைத்திற்கும் வாழும் உரிமை உள்ளது, முக்கியமாக ஆரோக் கியமான சூழலில் வாழும் உரிமை உள்ளது.


 மனிதர்ப்பிரதி என்பது ஒரு நல்ல உயிரியல் சோதனை அல்ல, எதிர்காலத்தில் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாகும் மனிதர்களால் ஏற்படும் சிக்கல்கள், மனித இனத்திற்கே அபாயகரமான சூழலை உருவாக்கிவிடும் ஆபத்து உள்ளது. ஆகவே  முக்கியமாக மனிதர்களாகிய நாம் இயற்கை கொடுத்த உயிரின பரிணாமத்தின் பாதையி லேயே செல்வோம். மனிதப்பிரதி என்ற ஒன்றின் மூலம் மனித இனத்தை அழிவில் தள்ளாமல் பாதுகாப்போம்.

3 பேர் மரபணுக்களுடன் உருவான குழந்தை

 

 3

பிரிட்டனில் முதன்முறை யாக 3 பேரின் மரபணுக் களுடன் (டி.என்.ஏ.க்களுடன்) ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தீர்க்க முடியாத மைட்டோ காண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி  தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை. மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாத வை. குழந்தை பிறந்த சில நாட் களில் அல்லது சில மணி நேரத்தில் கூட மரணம் நேரிடலாம். சில குடும்ப ங்கள் பல குழந்தைகளை இதனால் இழந்துள்ளன. அத்தகைய பெற் றோர் ஆரோக்கியமான குழந்தை யைப் பெற்றெடுக்க இந்த தொழில்நுட்பம் மட்டுமே ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

ஆற்றல் மய்யம் - மைட்டோகாண்ட்ரியா 

செல்லின் ஆற்றல் மய்யங்கள்  எனப்படும் மைட்டோகாண்ட்ரி யாக்கள் நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன. அவை  உணவை நாம் பயன்படுத்துவதற்கான ஆற்றலாக மாற்றும் வேலையைச் செய்கின்றன. குறைபாடுள்ள மைட்டோ காண்ட்ரியாக்கள் உணவை ஆற்ற லாக மாற்றத் தவறுகின்றன. இத னால் உடல் இயங்கத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் மூளை பாதிப்படையும்; இதயம் முடங்கிப் போகும்; கண் பார்வையிழக்கும்; தசைகள் வலுவிழக்கும். மரபுவழி நோயான இது தாயிடம் இருந்தே குழந்தைக்கு கடத்தப்படும். ஆகவே, மைட்டோ காண்ட்ரியா கொடை சிகிச்சை என்பது சோதனைக்குழாய் குழந்தையின் இன்னொரு வடிவமே. அதில் ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து பெறப் பட்ட கருமுட்டையில் உள்ள மைட்டோகாண்ட்ரியா பயன்படுத்தப்படுகிறது.

மைட்டோகாண்ட்ரியா கொடை

மைட்டோகாண்ட்ரி யாக்கள் அவற்றிற்கென சொந்த மரபணு  குறியீடுகள் அதாவது டி.என்.ஏ. வை பெற்றுள்ளன. ஆகவே, இந்த முறையில் பிறக்கும் குழந்தை, தாய், தந்தை மற்றும் கருமுட்டை கொடையாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டி.என்.ஏ.க்களைப் பெற்றிருக்கும். பெற்றோரின் மரபணு சங்கிலியில் செய்யப்பட்ட இந்த மாற்றம், நிரந்தரமாக அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் வழிவழியாக கடத்தப்படும். தாய், தந்தை தவிர்த்து, மூன்றா வது நபர் அதாவது, கருமுட்டை கொடையாக அளிக்கும் பெண்ணின் டி.என்.ஏ. முழுக்கமுழுக்க மைட்டோ காண்ட்ரியா உருவாக்கம் தொடர்பான தாக மட்டுமே இருக்கும். குழந்தை யின் தோற்றம், குணநலன்கள் போன்ற மற்ற தன்மைகளை தீர்மா னிப்பதில் அதற்கு எந்தவொரு பங்கும் இருக்காது.

இதுதான் முதல் குழந்தையா?

இந்த தொழில்நுட்பம் நியூ  காஸில் நகரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. இதனைப் பயன்படுத்தி குழந் தைகளை உருவாக்க வழி வகை செய்து பிரிட்டனில் 2015-ஆம் ஆண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன.ஆனாலும், பிரிட்டன் அடுத்த கட்டத்தை நோக்கி உடனே பயணப்படவில்லை. 2016-ஆம்  ஆண்டு அமெரிக்காவில் ஜோர்டான்  குடும்பம் ஒன்று இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டது. 2023 ஏப்ரல் 20-ஆம்  தேதிப்படி, அய்ந் துக்கும் குறைவான குழந்தைகள் புதிய தொழில்நுட் பத்தைப் பயன்படுத்தி பிறந்திருப்பதாக மனித கருவுறுதல் மற்றும் கருவியல் ஆணையம் (பிஸிணிகி) கூறுகிறது. இந்த சிகிச்சையைப் பெற்றுக் கொண்ட குடும்பங்கள் அடையாளம் காணப்படுவதைத் தடுக்கவே  துல்லியமான விவரங்களை வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘தி கார்டியன்’ பத்திரிகை கேள்வி  எழுப்பிய போது இந்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. “பிரிட்டனில் முதன் முறையாக, கொடையாக பெறப்பட்ட மைட்டோகாண்ட் ரியாக்க ளுடன் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்துள்ளன. மைட்டோகாண்ட்ரியா கொடையின் விளைவுகளை முழுமையாக ஆய்வு செய்து அதனை படிப்படி யாக நெறிப்படுத்துவதே அடுத்த கட்டமாக இருக்கலாம்,” என்கிறார் ப்ராக்ரஸ் எஜூகேஷனல் டிரஸ்ட் இயக்குநர் சாரா நார்க்ராஸ்.

ஆபத்தும் உண்டு

ஆனால் நியூ காஸில் மருத்து வக் குழு தொடர்ந்து மவுனம் காக்கிறது. ஆகவே, இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததா? இல்லையா? என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. “மைட்டோகாண்ட்ரியா பதிலீடு தெரபி தொழில்நுட்பம் எவ்வ ளவு சிறப்பாக செயல்பட் டது? குழந்தைகள் மைட்டோ காண்ட்ரியல் நோயில்லாமல் இருக்கிறார்களா? பிற்காலத்தில் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும்.” என்று பிரான்சிஸ் கிரிக் ஆய்வு நிறுவன பேராசிரியர் ராபின் லவெல்-பேட்ஜ் கூறுகிறார். தொழில்நுட்ப ரீதியாக “தலை கீழ் மாற்றம்” ஏற்படும் அபாயமும் உண்டு. அதாவது, ஏதேனும் குறை பாடுள்ள மைட்டோகாண்ட்ரியா குழந்தைக்கு கடத்தப்பட்டால், அது எண்ணிக்கையில் பெருகி இந்த நோயை உரு வாக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இங்கிலாந்தில் ஏற்கெனவே ஒருமுறை செய்யப்பட்ட ஆய்வில், ஒவ் வோர் ஆண்டும் 150  குழந்தைகள் வரை இந்த குறை பாட்டுடன் பிறக்கக்கூடும் என்று தெரியவந்தது.

 நன்றி: ஜேம்ஸ் கல்லேகர்

'தீக்கதிர்', 11.5.2023