வியாழன், 21 ஜூலை, 2022
நிலவில் காலடி எடுத்து வைத்த இணையற்ற நாள்(ஜூலை 21)
வெள்ளி, 20 மே, 2022
நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!
May 17, 2022 • Viduthalai
நாம் இருக்கும் இந்த புவியில் உயிரினங்களும், தாவர இனங்களும் செழித்து பெருகி இருக்க இயற்கை சூழ்நிலையே காரணமாகும்.
இதில் முதன்மையாக தாவர இனங்கள் வளர்வதற்கு அடிப்படையாக மண் தேவைப்படுகிறது.
புவியில் 118 வகையான தனிமங்களும் மற்றும் அதனால் உண்டான கலவைகளும், சேர்மங்களும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உயிரினங்களா லும், தாவரங்களாலும் உண்டான கரிம சேர்மங்களும் (அமினோ அமிலங்கள்) உள்ளன. இவற்றிற்கு பொது வான அறிவியல் பெயரும் இடப்பட்டுள்ளன.
இவற்றில் நம் புவியில் உள்ள மண்ணும் ஒரு தனிமம் தான்.
தாவரங்கள் வளர்வதற்கு மண் ஏதுவாக இருக்கிறது.
நிலவின் மண்ணை எடுத்து அதில் தாவரங்களை 'நாசா' அறிவியலாளர்கள் வளர்த்து உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.
உண்மையில் தாவரங்கள் வளர மண் தேவையா?
தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மையாகும்.
தாவரங்கள் வளர ஊட்டச்சத்தும் நீரும், காற்றும் சூரிய ஒளியும் மட்டுமே இருந்தாலே போதும். மண் தேவையில்லை.
புவி மண்ணில் மேற்கண்ட அனைத்தும் கிடைப்பதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.
மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்) முறை என்றே ஒரு வேளாண்மை முறை உள்ளது.
இதில் மண்ணை பயன்படுத்துவதில்லை, பெரும் பான்மையாக நீர் தான் பயன்படுகிறது.
அப்படி இருக்கும்போது நிலவில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த 'ரெகோலித்' என்ற ஊட்டச் சத்து இல்லாததாக சொல்லக்கூடும் மண்ணில், தாவரத்தை வளர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.
நிலவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த மண்ணில் ஊட்டச்சத்தும் நீரும் விட்டுதான் நாசா அறிவியலாளர்கள் 'அரபிடோப்சிஸ் தலியானா' என்ற கடுகு வகை செடியை வளர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த வகையான வியப்புக் குரிய செய்தியும் இருப்பதாக தெரியவில்லை! மண் ஒரு பிடிமானப் பொருள் அவ்வளவுதான்! தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மை!
-செ.ர.பார்த்தசாரதி, சென்னை
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021
நிலவில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடித்த சந்திரயான்-2
புதுடில்லி, ஆக.15 நிலவில் நீர் மூலக்கூறுகள் இடம்பெற்றி ருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் (இஸ் ரோ) சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ. எஸ். கிரண்குமார் இணைந்து எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திர யான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் சிறீஅரி கோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்கு பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில் நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி தகவல் தொடர்பிலிருந்து விலகியது
எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட் டர்' நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. இந்த ஆர்பிட்டர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. தற்போது இந்த தரவுகள் மூலம் நிலவின் பரப்பில் நீர் மூலக் கூறுகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதுதொடர்பாக நடப்பு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கான வலைதளத் தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஆர்பிட்டரில் இடம்பெற்றிருக் கும் அய்அய்ஆர்எஸ் கருவி எடுத்து அனுப்பியிருக்கும் ஆரம்ப கட்ட புகைப்பட தரவுகளில், இயற்பியல் அடிப்படையிலான வெப்ப திருத்த ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, நிலவின் பரப்பில் 29என் மற்றும் 62 என் இடையேயான அட்சரேகை பகுதியில் ஓஎச் (ஹைட்ராக்ஸில்), எச்2ஓ ஆகிய நீர் மூலக்கூறுகள் பரவலாக இடம்பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது. முன்பு, அதிக அளவில் ஓஹெச் மூலக்கூறுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கண் டறியப்பட்ட நிலவின் உயர் வெப்ப பகுதியைக் காட்டிலும், இப்போது கண்டறியப்பட்டி ருக்கும் தாதுக்கள் நிறைந்த பாறைகளில் அதிக அளவில் ஓஎச், எச்2 ஓ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக் கிறது. நிலவின் சுற்றுப் பாதையில் ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப் பாக செயல்பட்டு வருவதோடு, எடுக்கும் புகைப்படங்களை முன்னர் அனுப்பப்பட்ட சந்திர யான்-1 விண்கலத்துக்குத் தவ றாமல் அனுப்பி வருகிறது என்று ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன், 10 அக்டோபர், 2019
சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு
பாரீஸ், அக். 9- சூரியக் குடும் பத்தைச் சேர்ந்த சனி கிரகத் தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்து டன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண் ணிக்கை 82-ஆக உயர்ந்துள் ளது. இதையடுத்து, அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபி டரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.
இதுகுறித்து பிரான்சி லுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களின் அமைப் பில் விஞ்ஞானிகள் சமர்ப் பித்துள்ள அறிக்கையில், புதிதாகக் கண்டறியப்பட்ட 1 நிலா சனி கிரகத்தைச் சுற்றி வர 3 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
- விடுதலை நாளேடு, 9.10. 19
புதன், 29 மே, 2019
நிலவு உருவானபோதுதான் பூமிக்கு நீர் கிடைத்தது ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
பிராங்போர்ட், மே 23- நிலவு உருவானபோதுதான் பூமியின் உயிர் ஆதாரமான நீர் கிடைத் ததாக, ஜெர்மனி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவு கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, நேச்சர் அஸ்ட் ரானமி அறிவியல் இதழில் வெளியான, அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:
அண்டவெளியில் இதுவரை அறியப்பட்ட கிரகங்களிலேயே பூமியில் மட்டும்தான் உயிரி னங்கள் இருக்கின்றன. பூமி யில் உயிரினங்கள் தோன்றிய தற்கு, இந்த கிரகத்தில் மிக அதிக அளவில் நீர் இருப்பது தான் முக்கியக் காரணம் ஆகும்.
சூரியக் குடும்பத்தில் சூரி யனுக்கு பக்கத்தில் இருக்கும் பிற கிரகங்களைப் போல் பூமியும் உலர்ந்த கிரகமாகவே இருந்திருக்க வேண்டும்.
எனினும், 440 கோடி ஆண் டுகளுக்கு முன்னர், செவ்வாய் கிரகத்தின் அளவு கொண்ட தெயியா என்ற பொருள் பூமி மீது மோதியதால்தான் பூமிக்கு நீர் கிடைத்ததாக ஜெர்மனியின் மன்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.
பூமியில் தெயியா மோதிய போது ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்றாகத்தான் நிலவு உருவா னது. மற்ற கிரகங்களுக்கு உள்ள நிலவுகளை விட தெயியா மோதலால் ஏற்பட்ட பூமியின் நிலவு பெரிய அளவில் இருந்த தால், அது பூமியின் சுழற்சியை உறுதிப்படுத்தி வருகிறது.
இதுவரை, நிலவு உருவாக் கத்துக்குக் காரணமான தெயியா பொருள், சூரியனுக்கு அருகி லிருந்து வந்தது என்று கருதப் பட்டது.
எனினும், மன்ஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சூரிய னுக்கு அப்பால் உள்ள, நீர் நிறைந்த கோள்கள் கொண்ட பகுதியிலிருந்து வந்த பொரு ளாக இருக்கும் என்று கண்ட றியப்பட்டுள்ளது.
இதன் மூலம், பூமிக்கு அதிக அளவு நீர் கிடைப்பதற் குக் காரணமாக, நிலவை உரு வாக்கிய தெயியா விளங்கியது.
அந்த வகையில், பூமிக்கு நிலவுதான் உயிரூட்டியதாகக் கூற முடியும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- விடுதலை நாளேடு 23. 5 .2019

