• Viduthalai
நாம் இருக்கும் இந்த புவியில் உயிரினங்களும், தாவர இனங்களும் செழித்து பெருகி இருக்க இயற்கை சூழ்நிலையே காரணமாகும்.
இதில் முதன்மையாக தாவர இனங்கள் வளர்வதற்கு அடிப்படையாக மண் தேவைப்படுகிறது.
புவியில் 118 வகையான தனிமங்களும் மற்றும் அதனால் உண்டான கலவைகளும், சேர்மங்களும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உயிரினங்களா லும், தாவரங்களாலும் உண்டான கரிம சேர்மங்களும் (அமினோ அமிலங்கள்) உள்ளன. இவற்றிற்கு பொது வான அறிவியல் பெயரும் இடப்பட்டுள்ளன.
இவற்றில் நம் புவியில் உள்ள மண்ணும் ஒரு தனிமம் தான்.
தாவரங்கள் வளர்வதற்கு மண் ஏதுவாக இருக்கிறது.
நிலவின் மண்ணை எடுத்து அதில் தாவரங்களை 'நாசா' அறிவியலாளர்கள் வளர்த்து உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.
உண்மையில் தாவரங்கள் வளர மண் தேவையா?
தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மையாகும்.
தாவரங்கள் வளர ஊட்டச்சத்தும் நீரும், காற்றும் சூரிய ஒளியும் மட்டுமே இருந்தாலே போதும். மண் தேவையில்லை.
புவி மண்ணில் மேற்கண்ட அனைத்தும் கிடைப்பதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.
மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்) முறை என்றே ஒரு வேளாண்மை முறை உள்ளது.
இதில் மண்ணை பயன்படுத்துவதில்லை, பெரும் பான்மையாக நீர் தான் பயன்படுகிறது.
அப்படி இருக்கும்போது நிலவில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த 'ரெகோலித்' என்ற ஊட்டச் சத்து இல்லாததாக சொல்லக்கூடும் மண்ணில், தாவரத்தை வளர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.
நிலவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த மண்ணில் ஊட்டச்சத்தும் நீரும் விட்டுதான் நாசா அறிவியலாளர்கள் 'அரபிடோப்சிஸ் தலியானா' என்ற கடுகு வகை செடியை வளர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த வகையான வியப்புக் குரிய செய்தியும் இருப்பதாக தெரியவில்லை! மண் ஒரு பிடிமானப் பொருள் அவ்வளவுதான்! தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மை!
-செ.ர.பார்த்தசாரதி, சென்னை
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக