டைனோசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டைனோசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 நவம்பர், 2023

14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினத்தின் கால்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு


13
லண்டன், நவ. 17- டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இகுனாடோன்ஷியன் வகையைச் சேர்ந்தது என நிபுணர்கள் தெரிவிக் கின்றனர்

கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள பல தீவுகளில் ஒன்று பிர வுன்சீ தீவு (Brownsea Island). இங்குள்ள இயற்கை வனாந்திரப் பகுதியில் ஒரு டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 140 மில்லியன் ஆண்டுகள் பழைமை உடையது என தெரிய வந்திருக்கிறது. இதனை இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. அந்த தீவிலுள்ள பிரவுன்சீ கேஸில் (Brownsea Castle) பகுதியில் ஒரு வனத்துறை அதிகாரி சென்று கொண்டிருந்த போது கண்டுபிடித்திருக்கிறார்.

வியாழன், 3 அக்டோபர், 2019

பறக்கும் டைனோசர்!

பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சீனக் காடுகளில் வேட்டையாடும் பிராணி ஒன்று வாழ்ந்து வந்தது.

விநோதமான, சிறிய உருவமுள்ள அந்த உயிரினத்துக்கு வவ்வாலைப் போல பறக்கும் திறன் உண்டு!

ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்துக்கு அதனால் சுலபமாகத் தாண்ட முடியும். சமீபத்தில் அந்தப் பிராணியின் புராதன எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த எலும்புக்கூடுகள் டைனோசரின் குடும்பத் தைச் சேர்ந்தது என்று தெரிய வந்திருக்கிறது.

சுமார் 20 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிற டைனோ சர்களின் முதல் எலும்புக்கூடே பத்தொன் பதாம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப் பட்டது. தவிர, டைனோசர்களில் ஆயிரத் துக்கு மேற் பட்ட வகைகள் இருந்திருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் இது என்று விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

 - விடுதலை நாளேடு, 3.10.19