நிறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 மே, 2025

பறவைகள் (நிறத்தை) பகுத்துப் பார்க்கும்!


விடுதலை நாளேடு
அறிவியல் அரங்கம்

 தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தன. சுவீடனைச் சேர்ந்த லண்ட் பல்கலைக்கழகம் அதற்கான விடைகளைக் கண்டுபிடித்துள்ளது.

லாண்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் டான் எரிக் நில்சன், “மனிதர்களின் பார்வை சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களை கொண்டது. பறவைகளுக்கு இவற்றோடு கூடுதலாக புறஊதா நிறங்களையும் காண முடியும். உதாரணத்திற்கு, அடர்த்தியான வனத்தில் நம்மால் பச்சை நிறத்தில் மட்டுமே இலைகளை மட்டுமே காண முடியும். ஆனால் பறவைகளால், இலைகளின் மேற்புறம் மங்கலான பச்சையையும், கீழ்புறம் அடர்த்தியான பச்சையையும் வேறுபடுத்திக் காண முடியும். இதன் மூலம் தன் உணவுகளைச் சேகரிப்பதில் தொடங்கி, லாகவமாகப் பறப்பது வரை தன்னைக் கட்டமைத்துக் கொள்கின்றன. இப்படி வேறுபட்ட வண்ணங்களில் பறவைகளால் பார்க்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை” என்றார்.

இந்த ஆராய்ச்சிக்காகவே பிரத்யேக கேமராவை லண்ட் விஷன் குரூப் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம், பறவைகள் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த விலங்குகளின் திறனையும் கண்டறிய முடியுமா. நமது கற்பனைக்கும் எட்டாத நிறங்களில் விலங்குகள் உலகைக் காண்கின்றன என்று லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வியக்கிறார்கள்.

வெள்ளி, 20 மே, 2022

கொசுக்களுக்கு நிறம் பிரிக்கத் தெரியுமா?


மனித வாடையை முகர்ந்துவிட்டால்கொசுக்கள் அருகே வந்து கடிக்கத் தோதான இடம் பார்க்கும்இது அறிவியல்பூர்வமான உண்மைமனித மூச்சில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு வாடைதான் கொசுக்களுக்கு அழைப்பிதழ்ஆனால்தற்போது வாசிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூடுதல் தகவலையும் கண்டறிந்துள்ளனர்.

அதாவதுமனித மூச்சிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடின் வாடையை கண்டுகொண்ட பிறகுஅவை சுற்றிலும் நோட்டம் பார்க்கின்றனஅப்போது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்பதை தேடுகின்றனஅப்படி தட்டுப்பட்டதும்அதை நெருங்கி தங்கள் ரத்தப் பசியை தீர்க்க முயல்கின்றன.ஆய்வகங்களில் பல நிறங்களில் பொருட்களை வைத்தபோதும்கொசுக்கள் இந்த இரு நிறமுள்ள பொருட்களையே நாடுவதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

இது ஏன் என்று ஆராய்ந்தபோதுமனிதர்கள் எந்த நிறத் தோலை உடையவர்களாக இருந்தாலும்அவர்களது தோலிலிருந்து சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஒளி அலைகள் பிரதிபலிக்கின்றனமுதலில் கார்பன் - டை - ஆக்சைடு வாடை அந்த இடத்திலிருந்து வரவேண்டும்.

அடுத்து அந்த இடம் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்க வேண்டும்அப்படி இருந்தால்கொசுக்களுக்கு சாப்பாட்டு மணி அடிக்கப்படுவதாகவே பொருள்.

மற்ற பூச்சிகளுக்கு இதேபோல நிறப் பாகுபாடு பற்றிய அறிவு உண்டா எனவிஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.